Sunday, May 22, 2011

ஓப்பன் ஆஃபிஸ்-கால்க்-42டேட்டாபைலட் தொடர்ச்சி


சென்றதொடரில் கூறியவாறு செயல்படுத்தி அட்டவணையின் தரவுகளை டேட்டா பைலட்டாக உருமாற்றம் செய்து பெற்றாலும் ஒருசில தரவுகள் மட்டும் நமக்கு புரியும்படியாக இருககாது உதாரணமாக கிமீ வீதம் வாடகை (Kms ,rate)அட்டவணையை டேட்டாபைலட்டாக  உருமாற்றம் செய்தால்  நமக்கு  பயனேதுமில்லை  தொடர்ந்து அதன் நெடுவரிசையிலோ அல்லது கிடைவரிசையிலோ குழுவாக உருமாற்றம் செய்தால் மட்டுமே புரிந்துகொள்ள ஏதுவாக இரு்ககும் அதற்காக அந்த டேட்டாபைலட்டில் இடம் சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => Group and Outline =>Group =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துகஅல்லது விசைப்பலகையிலுள்ள F12 என்ற விசையை அழுத்துக. உடன் Grouping என்ற (படம்-42-1)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில் இயல்புநிலையில இருப்பதை ஏற்றுக்கொண்டு Group by என்ற உரைபெட்டியில் மட்டும் 10 என குறிப்பி்டடு ok என்ற பொத்தானை சொடுக்குக  உடன் டேட்டாபைலட்டானது1-10 11-20 21-30  … 71-80 என்றவாறு குழுவாக மாறிவிடும்  
                                                                      படம்-42-1
 டேட்டாபைலட்டின் தரவின் வகைகள் உரையாக இருந்தால்இவ்வாறு தானாகவே குறிப்பிட்ட இடைவெளியில் குழுவாக உருவாகாது அந்நிலையில் எந்தெந்த தரவின் வகையை எந்தெந்த குழுவில் சேர்க்கவேண்டுமென நாமே வரையறுக்கவேண்டும் அவ்வாறான உரைகளில் ஓரே குழுவின் கீழ்வகைபடுத்தவேண்டியவைகளை தெரிவு செய்து கொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => Group and Outline => Group => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது விசைப்பலகையிலுள்ள F12 என்ற விசையை அழுத்துக. உடன் Grouping என்ற (படம்-42-2)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றும் அதில்Group by  என்பதன் கீழுள்ள தேவையான  வானொலிபொத்தானை தெரிவுசெய்துகொண்டுஇதற்கருகிலுள்ள உரைபெட்டியின் வாய்ப்புகளில் தேவையானதை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக
                          (படம்-42-2)
 டேட்டாபைலட்டின் அட்டவணையில் இடம்சுட்டியைவைத்துசுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Start என்றகட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Data Pilot என்ற உரையாடல்பெட்டியில் Layout என்பதன்கீழுள்ள  வரிசைபடுத்திட விழையும் புலத்தை தெரிவுசெய்து சுட்டியை இருமுறை சொடுக்குக உடன் விரியும் Data Field என்ற (படம்-42-3)உரையாடல்பெட்டியில்  Options என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Data Field Options என்ற உரையாட ல்பெட்டியில் sort by என்பதன்கீழுள்ள கீழிறங்கு பட்டியலின் வாய்ப்புகளை நாம்விரும்பிய வண்ணம் தெரிவுசெய்துகொண்டு ஏதேனும் தரவுகளை மறைக்க வேண்டுமெனில் hide items  என்பதன்கீழுள்ள வாய்ப்புகளை நாம்விரும்பிய வண்ணம் தெரிவுசெய்துகொண்டுok என்ற பொத்தானை சொடுக்குக இதன்பின்னர் தரவுபுலத்தில்(datafield) உள்கூடுதல்(subtotal) வேண்டுமெனில்  data fieldஐ  தெரிவுசெய்து சுட்டியை இருமுறை சொடுக்குக உடன்Data Field  என்ற (படம்-42-3)உரையாடல்பெட்டியில்subtotalஎன்பதன் கீழுள்ள வாய்ப்புகளில் தேவையானதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக
                                                               படம்-42-3
   இவ்வாறு குழுவாக வரிசைபடுத்தபட்ட தரவுகளில் விவரம் எதுவும் தேவையெனில்
டேட்டாபைலட்டின் அட்டவணையில் இடம்சுட்டியைவைத்து கொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => Group and Outline => Show Details=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Show Details. என்ற (படம்-42-4)உரையாடல்பெட்டியில் தேவையான வகையை தெரிவுசெய்துok என்ற பொத்தானை சொடுக்குக
                                                                  படம்-42-4
 இந்த விவரம் மறைவதற்கு மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => Group and Outline => Hide Details =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
 குறிப்பிட்ட நெடுவரிசையின் தரவுகள் நாம் குறிப்பிடும்நிபந்தனைகளுக்கு உட்பட்டு வடிகட்டி பிரதிபலி்க்கசெய்வதற்காக டேட்டாபைலட்டின் மேலே வலதுபுறமூலையிலுள்ள Filter என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் விரியும் Filter என்ற(படம்-42-5) உரையாடல்பெட்டியில் வடிகட்டவிரும்பும்  புலவகையையும் அதற்கான நிபந்தனைகளையும் தெரிவுசெய்துok என்ற பொத்தானை சொடுக்குக
                                                                   படம்-42-5
 இவ்வாறு டேட்டா பைலட் உருவாக்கிய பிறகு இதற்கான அட்டவணையின் தரவுகளை மாறுதல் செய்தால் அம்மாறுதலும் இந்த டேட்டா பைலட்டிலும் கொண்டுவருவதற்கு  
அவ்வப்போது மேலே கட்டளை பட்டையிலுள்ள Data => DataPilot => Refresh=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
                          படம்-42-6
இவ்வாறுடேட்டா பைலட்டில் பெறபட்ட தரவுகளை மற்ற கணக்கீடுகளுக்கு பயன்படுத்துவதற்கு GETPIVOTDATA என்ற செயலி பயன்படுகின்றது =GETPIVOTDATA('Sum - விற்பனைகூடுதல் ரூ.';F79) என்றவாறு(படம்-42-6) சூத்திரத்தை பயன்படுத்தி தேவையான மண்டலங்களின் மொத்தவிற்பனையைமட்டும் பெறுவதற்கு f78,f79,f80,f81 என்றவாறு செல்எண்களை மட்டும் நமக்குத்தேவையானவாறு குறிப்பிட்டால் போதும்.