Sunday, November 18, 2012

ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா-தொடர்-பகுதி-77- ஒரு அறிமுகம்


ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ்  என்பது ஓப்பன் ஆஃபிஸில் கணித சமன்பாடுகளை எழுதி,பதிப்பித்திட உதவும் ஒரு துனை பயன்பாடாகும் அதாவது இது பெரும்பாலும் ஒரு உரை ஆவணத்தில் மட்டுமல்லாது மற்றவகையான ஆவணங்களிலும் அல்லது கணிதத்திற்கென்றே உள்ள தனிப்பட்ட ஆவணங்களிலும் கணிதசமன்பாடுகளின் பதிப்பானாக செயல்படுகின்றது  இதனை ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் உட்பகுதியில் பயன்படுத்தினால் அது ஒரு தனிப்பட்ட பொருளாக உருவாகிவிடுகின்றது
 இதனை  செயல்படுத்திட வழக்கமான நம்முடைய உரை ஆவணமான ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் திரையின் மேலே கட்டளை பட்டையில் Insert => Object => Formula =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் கணிதசமன்பாடுகளின் பதிப்பு திரையானது கீழ்பகுதியில் உருவாகி அதனோடுகூடவே  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையும் (படம்-1) தோன்றிடும் 
77-1
தனியாக வேண்டுமெனில் ஓப்பன் ஆஃபிஸின் ஆரம்பத்திரையில் Formula என்ற வாய்ப்பை மட்டும் தெரிவுசெய்து சொடுக்குக   உடன் untitiled1-open office.org maths  என்ற கணிதசமன்பாடுகளின் பதிப்பு திரையானது  உருவாகி அதனோடுகூடவே  Elements என்ற மிதக்கும்  சிறுசாளரத்திரையும் (படம்-2)தோன்றிடும்
77-2
அதுமட்டுமல்லாது அவ்வாவணத்தில்  கணித வாய்ப்பாட்டினை உருவாக்குவதற்கான ஒருசிறிய பெட்டி ஒன்றும் தோன்றிடும்   அதில் இந்த கணிதபதிப்பு திரையானது கணிதசமன்பாடுகளை பிரதிபலிக்ககூடியஒரு மார்க்அப் மொழியை பயன்படுத்தி கொள்கின்றது
  உதாரணமாக %beta என்பது கிரேக்க எழுத்தான  beta ( B ).என்பதை உருவாக்குகின்றது  அதாவது இந்த மார்க் அப் மொழியானது ஆங்கிலத்தில்   a over b   என்பது   a/b  என்பதை குறிப்பதாக கொண்டு அதற்கேற்ப திரையில் கணிதசமன்பாட்டினை (மதிப்பை) பிரதிபலிக்கசெய்யும்
 இந்த  கணித சமன்பாட்டின் பதிப்புத்திரையில்  பின்வரும் மூன்று வழிகளில் ஒரு கணித சமன்பாட்டினை உருவாக்கிட முடியும் 
1 Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையில் உள்ள நாம் உருவாக்கிட விரும்பும் கணிதசமன்பாட்டிற்கேற்ற குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல்
2   திரையின் கீழ்பகுதியிலுள்ள கணிதசமன்பாடு பதிப்புத்திரையில்  இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை  சொடுக்கியவுடன் விரியும் சூழ்நிலை பட்டியிள் உள்ளீடு செய்யவிரும்பும் கணித சமன்பாட்டிற்கு தேவையான குறியீட்டின் வகையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் துனை பட்டியில் தேவையான  குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல்
3  மார்க்அப் மொழியின் சிறு பெட்டியில் கணித வாய்ப்பாட்டினை நேரடியாக  உள்ளீடு செய்தல்
1 Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் வாயிலாக  5×4 என்றவொரு கணித சமன்பாட்டினை உருவாக்குதல்
77-3
.பொதுவாக இந்த Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையானது  குறியீட்டுகளின் வகை(categories) என்ற மேல்பகுதியும் நாம் தெரிவுசெய்வதற்கேற்ற தொடர்புடைய குறியீடுகள்  (Symbols)உள்ள கீழ்பகுதியும்(படம்-3) சேர்ந்ததாகும்   இந்த Elements என்ற மிதக்கும் சிறுசாளரத் திரையை மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Elements=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக மறையவும் தோன்றிடவும் செய்யமுடியும் 
77-4
இந்த  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் மேல்பகுதியான குறியீட்டுகளின் வகை(categories)களில் இயல்புநிலையில் unary/binary operators என்பது தெரிவு செய்யப் பட்டிருக்கும் தேவையெனில் நாம் விரும்பும் வேறு வகையை தெரிவுசெய்தவுடன்  தொடர்புடைய குறியீடுகளானது    குறியீடுகள்  (Symbols)உள்ள கீழ்பகுதியில் தோன்றிடும் பின் கீழ்பகுதியில்  multiplication என்றவாறு(படம்-3) அல்லது நாம் விரும்பும் கணித குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன்   திரையின் கீழ் பகுதியிலுள்ள கணிதபதிப்புத்திரையில்  <?> times <?>  என்றவாறு மார்க் மொழியும்  மேலே உரைஆவணத்திரையில்   ×என்றவாறு  சிறு பெட்டியும் (படம்-4)தோன்றிடும்  கணிதபதிப்புத்திரையில்  <?>  என்பவைகளில் தேவையான எண்களை உள்ளீடு செய்க உடன்அந்த மதிப்புகள் மேலே உரையாவணத்தில் பெட்டிக்கு பதிலாக(படம்-4) பிரதிபலிப்பதை காணலாம் 
 கணித வாய்ப்பாட்டில்பயன்படுத்தப்படுகின்ற  ( α ,β ,µ )என்பன போன்ற  கிரேக்க எழுத்துகள்   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையிலோ அல்லது வலதுபுறம் சொடுக்குவதன்மூலம் விரியும் குறுக்குவழிபட்டியிலோ  இருக்காது  ஆயினும் இந்த மார்க் அப்  மொழிப் பெட்டியில் %என்ற குறியீட்டினை உள்ளீடுசெய்தபின் தொடர்ந்து ஆங்கிலத்தின் சிறிய எழுத்தில் அல்லது ஆங்கிலத்தின்பெரிய எழுத்துகளில்  %alpha என உள்ளீடு செய்தால் α என்றும் %ALPHAஎனஉள்ளீடுசெய்தால்  A என்றும் தொடர்புடைய கிரேக்ககுறியீடுகள் தோன்றிடும்
 இவ்வாறு தட்டச்சு செய்வதற்கு கடினமாக இருந்தால் மேலே கட்டளைபட்டையில் Tools => Catalog=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும்  Symbols என்ற உரையாடல் பெட்டியில் symbol set என்பதன் கீழுள்ள கீழிறங்கு பெட்டியில் Greek என்பதை தெரிவுசெய்தவுடன் விரியும் (படம்-5)பட்டியலில் தேவையான கிரேக்க குறியீட்டினை தெரிவுசெய்து insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
77-5
கிரேக்க எழுத்தான பை(pi.)யின் மதிப்பை உள்ளீடுசெய்தல்
 படிமுறை-1  %என்ற குறியீட்டினையும் தொடர்ந்து  pi என உள்ளீடுசெய்க உடன் என்ற கிரேக்ககுறியீடு திரையில் பிரதிபலிக்கும்
 படிமுறை-2 மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Elements=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி  Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையை தோன்றசெய்க
படிமுறை-3 = என்பது  உறவுக்குறியீடாகும் அதனால்   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் மேல்பகுதியிலுள்ள  Relationsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
 படிமுறை-4 பிறகு   Elements என்ற மிதக்கும் சிறுசாளரத்திரையின் கீழ்பகுதியிலுள்ள  a=b என்பதை தெரிவுசெய்து சொடுக்குக
 படிமுறை-5  உடன் கணித வாய்ப்பாட்டின் பதிப்புத்திரையானது %pi<?> simeq <?>. என்றவாறு பிரதிபலிக்கும்
படிமுறை-6 அதிலுள்ள  <?>என்ற மார்க்அப்மொழி குறியீடுகளை நீக்கம் செய்திடுக
படிமுறை-7 பின் இந்த வாய்ப்பாட்டின் இறுதியில் 3.14159   என்றவாறு மதிப்பை உள்ளீடு செய்க உடன்   உரைபதிப்புத்திரையில்  ≃3.14159 என்றவாறு (படம்--6 )பிரதிபலிப்பதை காணலாம்
77-6