Thursday, April 25, 2013

ஓப்பன் ஆஃபிஸ்-89 மேக்ரோவை உருவாக்கி பயன்படுத்துதல்

பிற்காலத்தில் பயன்படுத்தலாம் என சேமித்து வைத்துள்ள வரிசையான கட்டளைவரிகள் அல்லது விசைப்பலகையின் விசையை அழுத்துவதால் செயற்படுத்தப்படும் செயல்கள் ஆகியவையே மேக்ரோ ஆகும்.  இந்த ஓப்பன் ஆஃபிஸின் மேக்ரோவானது  மிகச்சாதாரண மானதும் சிக்கலானமானதுமான தானியங்கி செயல்களை நெகிழ்வு தன்மையுடன் அனுமதிக்கின்றது. பொதுவாக ஒரேமாதிரியான திரும்ப திரும்ப செய்யக்கூடிய செயல்களை செயற்படுத்துவதற்காக மட்டும் இந்த மேக்ரோ பயன்படுகின்றது . 
  இந்த ஓப்பன் ஆஃபிஸின் மேக்ரோவானது வழக்கமாக பேஸிக்மொழி என அழைக்கபடும் ஸ்டார் பேஸிக்கின் மொழியில் எழுதபடுகின்றது புதியவர்கள் கூட இந்த  பேஸிக்மொழியை மிகச்சுலபமாக அறிந்துகொண்டு மிகஎளிதாக மேக்ரோவை எழுதமுடியும் பெரும்பாலும் புதியவர்கள் இதில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட மேக்ரோ பதிவாளர் வாயிலாக   அல்லது விசைப்பலகையின் விசையை அழுத்துவதால் செயற்படுத்தப்படும் செயல்கள் ஆகியவைகளை பதிவுசெய்து மேக்ரோவாக  சேமித்துகொண்டு பின்னர் செயற்படுத்தமுடியும் பெரும்பாலான ஓப்பன் ஆஃபிஸின் மேக்ரோவானது கட்டளைகளை செயற்படுத்துவதற்காக அனுப்புதல் என்ற கொள்கைக்கு ஏற்ப ஒத்தியங்குகின்றது
 பொதுவாக நாம் நகலெடுத்தல் அல்லது வெட்டுதல்  பின்னர் ஒட்டுதல் ஆகிய செயல்களின் கட்டளைகள் கிளிப்போர்டு என்ற பகுதியில் சேமிக்கபட்டு பின்னர் அதேசெயலை தேவைப்படும் போதெல்லாம் செயற்படுத்துவதற்கேதுவாக தயார்நிலையில் உள்ளன  அதேபோன்றே திரும்ப திரும்ப செய்யபடும் செயல்களை முதலில் அதனை ஒருமுறை மட்டும் செயற்படுத்தி பதிவுசெய்து சேமித்துகொண்டு பின்னர் அதனை இயக்கி செயற்படுத்திடமுடியும்  அதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள Tools => Macros => Record Macro=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்     89.1.1                  
 
Record எனும் சிறு சாளரம் திரையில் தோன்றி

நாம் செய்யும் செயலை மேக்ரோவாக பதிவுசெய்ய தயாராக நிற்கும் உடன் .குப்பன் என்ற வாறு ஏதேனும் சில எழுத்துகளை அல்லது சொற்களை தட்டச்சு செய்து stop recording எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் இந்த மேக்ரோவை சேமித்து ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியை படம்-1-ல் உள்ளவாறு திரையில் பிரதிபலிக்க செய்க
படம்-1
பின்னர் save macro என்ற நூலக உள்ளடக்கங்களுக்குள் my macros என்பது இருக்கும் அதன்கீழ் standardஎன்பதும் இருக்கும்   வலதுபுறமுள்ள new moduleஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் new moduleஎன்ற சிறு உரையாடல்  பெட்டியில்  module1  என்று இயல்புநிலையில் இருக்கும் அதற்கு Recordedஎன்றவாறு ஒரு பெயரை உ்ள்ளீடுசெய்து  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக அவ்வாறே   ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியின் வலதுபுறத்தில் உள்ள  macro name என்பதற்கு Enter My Name என்றவாறு ஒரு பெயரை  உ்ள்ளீடுசெய்து  Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த மேக்ரோவை சேமித்து கொள்க. இப்போது இந்த உரையாடல் பெட்டியில் மேக்ரோவின் பெயரானது படம்-2-ல் உள்ளவாறுEnter My Name என்று இருக்கும்
படம்-2
பின்னர் மேலே கட்டளை பட்டையில் Tools => Macros => Run Macro =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி படம்-2-ல் உள்ளவாறு ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro name என்பதின்கீழ் இருக்கும் நாம் உருவாக்கிய  EnterMyName என்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதே மேக்ரோவை வேறு வழியிலும் செயற்படுத்திடமுடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையில் Tools => Macros => Organize Macros  =>  OpenOffice.org Basic =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி படம்-2-ல் உள்ளவாறு ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro name என்பதின்கீழ் இருக்கும் நாம் உருவாக்கிய  EnterMyName என்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-3
பின்னர்  நாம் எழுதாமலேயே தானாகவே உருவாகியஇந்த மேக்ரோ கட்டளை தொடரானது  எவ்வாறு இருக்கும் என திரையில் நம் கண்களால் காண மேலே கட்டளை பட்டையில் Tools => Macros => Organize Macros  =>  OpenOffice.org Basic =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி  ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro name என்பதின்கீழ் இருக்கும் நாம் உருவாக்கிய  EnterMyname என்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  படம்-3-ல் உள்ளவாறு mymacros&Dialog standard openoffice.orgBasic என்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றிடும் அதில் EnterMyname எனும் மேக்ரோவின் கட்டளைவரிகளானது பின்வரும்  EnterMyname எனும் மேக்ரோ நிரல்தொடர்-1-ல் உள்ளவாறு  கட்டளைவரிகள் இருக்கும்.
 EnterMyname எனும் மேக்ரோ நிரல்தொடர்-1.
REM ***** BASIC *****
Sub Main
End Sub
sub EnterMyName
rem -------------------------------------------------------------
rem define variables
dim document as object
dim dispatcher as object
rem -------------------------------------------------------------
rem get access to the document
document = ThisComponent.CurrentController.Frame
370 Getting Started with OpenOffice.org 3
dispatcher = createUnoService("com.sun.star.frame.DispatchHelper")
rem -------------------------------------------------------------
dim args1(0) as new com.sun.star.beans.PropertyValue
args1(0).Name = "Text"
args1(0).Value = ".குப்பன்"
dispatcher.executeDispatch(document, ".uno:InsertText", "", 0, args1())
end sub
இந்த கட்டளைவரிகளை எழுதுவதற்காக நாம் எந்தவொரு சிறப்பு பயிற்சியும் எடுத்து கொள்ள வில்லை மிகச்சாதாரணமாக நாம் செய்யும் செயலை  Tools => Macros => Record Macro=> என்ற வாறு கட்டளைகளை செயற்படுத்தி பதிவுசெய்துகொண்டபின் இந்த மேக்ரோவிற்கு ஒரு பெயரிட்டு சேமித்தோம் அவ்வளவுதான் இதேபோன்றே நாம் விரும்பும் திரும்ப திரும்ப செய்யும் செயல்களை  மேக்ரோவாகா பதிவுசெய்து பெயரிட்டு சேமித்துகொண்டுசெயற்படுத்தி பயன்படுத்தி கொள்க .

ஓப்பன் ஆஃபிஸ் -88


ஓப்பன் ஆஃபிஸின் கூடுதல் வசதிகளை கடந்த ஓப்பன் ஆஃபிஸ் -87-ல் பார்த்து வந்தோம் இந்த தொடரில் ஓப்பன் ஆஃபிஸில் உள்ள மேலும் கூடுதல் வசதிகளை பற்றிகாண்போம்  ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களில் உள்ள இணைய இணைப்பிற்கான இணைய முகவரியின் எழுத்துகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தொடர்புடைய இணைய பக்கம் திறப்பதற்கான இணைய இணைப்பின் தொடர்பை உடன் வழங்கவேண்டும்    அதற்காக தேவையான இணைய முகவரியின் சொற்களை  தட்டச்சு செய்தபின் உள்ளீட்டு விசையை அழுத்துக  உடன் அவ்வெழுத்துகளின் வண்ணம் வெளிர்நீலத்திலும் அடிக் கோடிட்டும் மீத்தொடுப்பை அங்கீகரித்து மாறிவிடும்  அவ்வாறு மாறவில்லை யெனில் மேலே கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளில்  Tools => AutoCorrect =>Options =>URL Recognition=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக   உடன் AutoCorrect என்ற உரையாடல் பெட்டியானது திரையில் தோன்றிடும் அதில் option என்ற தாவியின் திரையை தோன்ற செய்க இந்த AutoCorrect என்ற உரையாடல் (படம்-1) பெட்டியின் option என்ற தாவியின் திரையில் URL Recognition என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
படம்-1
அதற்கு பதிலாக மேலே கருவிகளின்பட்டியில் உள்ள    
     என்ற மீத்தொடுப்பிற்கான  உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளில்
Insert  => Hyperlink => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக  உடன்  Hyperlink  என்ற உரையாடல் பெட்டி(படம்-2) திரையில் தோன்றிடும்
 அதில் இடதுபுற பலகத்தில் இயல்புநிலையில் http:// எனத்தொடங்கும் இணைய முகவரியை அங்கீகரிக்கும்  Internet: என்பது தெரிவுசெய்யபட்டிருக்கும் .மேலும் இதிலுள்ள  Mail & News என்ற வாய்ப்பு மின்னஞ்சல் முகவரியை குறிப்பது ஆகும்  Document என்பது அதே ஆவணத்தில் அல்லது அடுத்த ஆவணத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதற்கான மீ்த்தொடுப்பாகும் NewDocumentஎன்பது புதிய ஆவணத்தை உருவாக்குவதற்கான மீத்தொடுப்பாகும் 
படம்-2
  இந்த Hyperlink  என்ற உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில்  Internet என்ற வாய்ப்பு தெரிவு செய்யபட்டிருந்தால்  இதன் வலதுபுற பலகத்தில் அதற்கானதிரைத் தோற்றம் மாறி அமையும் அதில் hyperlinktype என்பதன் கீழ்   Web, FTP ,Telnetஆகியவற்றில்  எந்த வகை இணைப்பு என அதற்கான வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு target என்ற உரைபெட்டியில் சரியான இணைய முகவரியை தட்டச்சு செய்து கொள்க.
 இடதுபுறபலகத்தில்  Mail & News என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால்  வலதுபுற பலகத்தில்  Mail , News என்பதன்கீழ் தேவையான வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு Receiver என்ற உரைபெட்டியில் அதற்கான முகவரியையும் subject  என்ற உரைபெட்டியில்  அதற்கான விவரத்தையும் உள்ளீடுசெய்துகொள்க.
 இடதுபுறபலகத்தில்  Documents என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால்  இதன் வலதுபுற பலகத்தில்  Documents என்பதன்கீழ்  path என்ற உரைபெட்டியின் அருகிலுள்ள File என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி யவுடன் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் அந்த கோப்பு இருக்கும் இடத்தை தெரிவு செய்து கொண்டு Target in Documents என்பதன்கீழ் target  என்ற உரைபெட்டியில்  அதற்கான விவரத்தை உள்ளீடுசெய்துகொள்க.
 இடதுபுறபலகத்தில்  New Documents என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால்  வலதுபுற பலகத்தில்  New Documents என்பதன்கீழ்  Edit now, Edit later ஆகிய வானொலி பொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து கொண்டு File என்ற உரைபெட்டியின் அருகிலுள்ள File என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி யவுடன் விரியும் உரையாடல் பெட்டியில் அந்த கோப்பு இருக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு File type    என்ற உரைபெட்டியில்  நகரும் பொத்தானை பிடித்து நகர்த்தி text documents ,spread sheet போன்றவற்றில்  ஒன்றை  தெரிவுசெய்து கொள்க.
இறுதியாக  இந்த அனைத்து வாய்ப்புகளிவும் Applyஎன்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக பின் closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த hyperlinkஎன்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக .
இந்த மீத்தொடுப்பை தேவையானால் மாற்றியமைத்திட இடம்சுட்டியை அந்த சொற்களின் மீது வைத்து மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit=>Hyperlink=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் விரியும் hyperlink  என்ற உரையாடல் பெட்டியில் தேவையானவாறு மாறுதல்களை செய்தபின்Applyஎன்ற பொத்தானை தெரிவுசெய்து  சொடுக்குக பின் closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த hyperlinkஎன்ற உரையாடல் பெட்டியை மூடிவிடுக .
 மேலே இதுவரை பார்த்து வந்தது ஒப்பன் ஆஃபிஸின் பொதுவான செயலாகும் ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தை இணைய பக்கமாக உருமாற்றம் செய்திட  மேலே கட்டளைபட்டையிலுள்ள view =>web layout=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் திரைதோற்றம் ஆனது  இணைய பக்கம் போன்று மாறியமையும்  இந்த ஆவணத்தினை இணையபக்கமாக சேமித்திட  மேலே கட்டளைபட்டையிலுள்ள file=>save as=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன்  தோன்றிடும் save as என்ற உரையாடல் பெட்டியில்  save as type என்ற உரை பெட்டியில் html documents (.html) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
 ஒன்றிற்கு மேற்பட்ட தொடர்ச்சியான பக்கங்களை இணைய பக்கங்களாக சேமித்திட  மேலே கட்டளை பட்டையிலுள்ள File=>Send=>create html documents=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் தோன்றிடும் name and path of the html documents  என்ற உரையாடல் பெட்டியில் save as type என்ற உரைபெட்டியில் html documents (.html) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
 
படம்-3
 இணைய பக்கத்தை உருவாக்குவதற்கான வழிகாட்டியின் துனையை பின்பற்றி ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் ஒருஇணைய பக்கத்தை உருவாக்குவதற்காக  மேலே கட்டளைபட்டையிலுள்ள File=>wizards=>webpage=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் தோன்றிடும் web wizards  என்ற (படம்-3)உரையாடல் பெட்டியில்   தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் அடுத்ததிரையிலும் அவ்வாறே   தேவையான விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கொண்டே இந்த உரையாடல் பெட்டியில் கூறும் வழிமுறைகள பின்பற்றி வருக இறுதியாக அனைத்தும் சரியாக இருக்கின்றது என திருப்தியுற்றால்  இந்த கோப்பினை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு Finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
 இவ்வாறு உருவாக்கிய இணைய பக்கத்தை மாறுதல் செய்வதற்காக  மேலே கட்டளைபட்டையிலுள்ள view=>html source=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக  அல்லது மேலே கருவிகளின் பட்டையிலுள்ள html sourceஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் தோன்றிடும் திரையில் தேவையானவாறு மாறுதல் கள் செய்து கொள்க.
ஓப்பன் ஆஃபிஸின் கால்க் என்ற பயன்பாட்டில்  இதனை இணைய பக்கமாக மாற்றிட மேலே கட்டளைபட்டையிலுள்ள file=>save as=> என்றவாறு கட்டளை களை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன்  தோன்றிடும் save as என்ற உரையாடல் பெட்டியில்  save as type என்ற உரைபெட்டியில் html documents (.html) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
 அல்லது மேலே கட்டளைபட்டையிலுள்ள File=>wizards=>webpage=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் தோன்றிடும் web wizards  என்ற (படம்-3)உரையாடல்  பெட்டியில்    வழிகாட்டி கோரும் விவரங்களை உள்ளீடு செய்து கொண்டே இந்த வழிகாட்டி கூறும் வழிமுறைகளை பின்பற்றி வந்த பின் இறுதியாக  அனைத்தும் சரியாக இருக்கின்றது என திருப்தியுற்றால்  இந்த கோப்பினை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு Finishஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
 ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் என்ற பயன்பாட்டில் ஆவணத்தை இணைய பக்கமாக உருமாற்றம் செய்திடுவதற்காக  மேலே கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளில் file  => Export=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக  உடன்  Export என்ற உரையாடல் பெட்டியில்  இதற்கான பெயரை உள்ளீடு செய்து கோப்புகளின் வகைகளில் HTML Documents என்றவாறு தெரிவுசெய்து கொண்டு save என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  Documents =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக  உடன்   HTML Export    என்ற (படம்-4)உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் அடுத்ததிரையிலும் அவ்வாறே   தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிகொண்டே இந்த வழிகாட்டி  கூறும் வழிமுறைகளை பின்பற்றி கொண்டே  வருக  இறுதியாக அனைத்தும் சரியாக இருக்கின்றது என திருப்தியுற்றால்  இந்த கோப்பினை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   உடன் name HTML Design என்ற சிறு உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் கோப்பின்பெயரை உள்ளீடு செய்துகொண்டு save  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-4
 படம் வரைந்து அதனை திருத்தம் செய்திட உதவும் ஓப்பன் ஆஃபிஸின் ட்ரா  ஆவணத்தை இணைய பக்கமாக உருமாற்றம் செய்திடுவதற்காக  மேலே கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளில் file  => Export=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக  உடன்  தோன்றிடும் Export என்ற உரையாடல் பெட்டியில்  இதற்கான பெயரை உள்ளீடு செய்து கோப்புகளின் வகைகளில் HTML Documents என்றவாறு தெரிவுசெய்து கொண்டு save என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  Documents =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக  உடன்   HTML Export wizard   என்ற உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் அடுத்ததிரையிலும் அவ்வாறே   தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிகொண்டே வருக இந்த வழிகாட்டித்திரையின் எந்த நிலையிலும் create  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் இந்த படத்திற்கான மீத்தொடுப்பு உருவாகிவிடும்

ஓப்பன் ஆஃபிஸ் -87-

நாம் இதுவரையில் முந்தை.ய தொடர்களில் ஆவணங்களை கையாள ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ,விரிதாளை கையாள ஓப்பன் ஆஃபிஸின் கால்க், படவில்லையை கையாள ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் , படங்களை கையாள ஓப்பன் ஆஃபிஸின் ட்ரா, கணக்கீடு களை கையாள ஓப்பன் ஆஃபிஸின் மேத், தரவுதளமாக ஓப்பன் ஆஃபிஸின் பேஸ் ஆகியபயன்பாடுகளை பார்த்து வந்தோம் 
 இந்த தொடரில் மேலே கூறிய ஓப்பன் ஆஃபிஸில்  பயன்படுத்தபடும் கூடுதலான வசதிகளை  பற்றி காணலாம்     இதுவரை முந்தைய  தொடர்களில் கூறியவாறு ஓப்பன் ஆஃபிஸில் உருவாக்கபட்ட கோப்புகளை அச்சிட விரும்புவோம் இந்நிலையில் அனைத்து பயன்பாடுகளிலும்  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து file=>print=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும்   print என்ற உரையாடல் பெட்டி ஒவ்வொரு பயன் பாட்டிற் கேற்ப சிறிது மாறுபடும்   அச்சுபொறியின் பெயர், எத்தனை நகல் என்பன போன்ற பொதுவான விவரங்களுடன் அந்தந்த பயன்பாடுகளுக்கேற்ப மேலும் தேவையான விவரங்களை தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அச்சிட்டுகொள்க.
 இந்த அச்சிடும் பணியை விரைவாக செய்திட வேண்டும்எனில் மேலே கட்டளை பட்டையிலுள்ள printer -இன் (படம் -87-1) உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் நேரடியாக நடப்பில் திறந்திருக்கும் கோப்பானது இயல்புநிலை அமைவை கொண்டு அச்சிட்டுவிடும்
 
படம் -87-1
நம்முடைய ஆவணத்தை பார்வையிட விரும்பும் பார்வையாளர்களின் கணினியில் நாம் பயன்படுத்திடும் ஓப்பன் ஆஃபிஸ் பயன்பாடு இல்லாவிட்டாலும்  நம்முடைய ஆவணத்தை அவர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக அக்கோப்பினை பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்து அனுப்பிட விரும்புவோம் அந்நிலையில்  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து file=>Export as pdf=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும்   pdf options என்ற (படம் -87-2 )உரையாடல் பெட்டியில்  General,Inial view,user interface,links ,security ஆகிய ஐந்து தாவி பொத்தான்களின் பக்கங்கள் உள்ளன  அந்தந்த பக்கங்களுக்கு சென்று தேவையான வாய்ப்புகளை  தெரிவுசெய்துகொள்க
  மிகமுக்கியமாக Export bookmarksஎன்ற வாய்ப்பானது கோப்பிலுள்ள விவரங்களை பகுதி பகுதியாக பிரித்திருக்கும் நிலையில் குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல் வதற்கு அந்த பகுதியின் பெயரானது அட்டவணையாக பட்டியலிடப்பட்டு அந்த அட்டவணையில் குறிப்பிட்ட பகுதியின் பெயரை தெரிவுசெய்து சொடுக்கினால்  குறிப்பிட்டபகுதிக்கு நேரடியாக செல்வதற்கான வழிமுறைகளை  உருவாக்கு கின்றது . 
 ,Export automatically inserted blank pages என்ற வாய்ப்பானது புத்தகங்களில் வலதுபுறம் 1,3,5 என்றுஒற்றை படைவரிசையிலும்  இடதுபுறம் 2,4,6 என்று இரட்டைபடை வரிசையிலும் பக்கங்களை உருவாக்க பயன்படுகின்றது.
 
படம் -87-2
இதுமட்டுமின்றி நம்முடைய பிடிஎஃப் கோப்பினை அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பார்வையிடமுடியும் என்ற நிலையை உருவாக்கிட இதே உரையாடல் பெட்டியின் security  என்ற தாவிபொத்தானின் பக்கத்தில்  Set open password,set a password for permissions ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் படம் 87.3 இல் உள்ளவாறு தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையான கடவுச்சொற்களை உள்ளீடுசெய்து  ok என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. இறுதியாக pdf options என்ற (படம் -87-2 )உரையாடல் பெட்டியில் Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்   நடப்பில் திறந்திருக்கும் கோப்பானது பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்துவிடும்
 
படம் -87-3
 இதே செயலை விரைவாக செய்திட  மேலே கட்டளை பட்டையிலிலுள்ள இதற்கான (படம் -87-4) உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நேரடியாக நடப்பில் திறந்திருக்கும் கோப்பானது இயல்புநிலை அமைவை கொண்டு பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்துவிடும்
 
படம் -87-4
  இதுமட்டுமின்றி மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து file=> Export=> என்றவாறு கட்டளைகளை செயற் படுத்தியவுடன் தோன்றிடும்Export  என்ற உரையாடல் பெட்டியின் மூலம்   XHTML. BibTeX (.bib), LaTeX 2e (.tex),Macromedia Flash (.swf). என்பன போன்ற வகை கோப்புகளையும் உருவாக்கமுடியும் .
  அடுத்ததாக ஓப்பன் ஆஃபிஸில் உருவாக்கபடும் ஆவணத்தை நேரடியாக மின்னஞ்சல்  அனுப்பிவைத்திடுவதற்காக
 
படம் -87-5
மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து File => Send => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்  விரியும் சிறு கட்டளைபட்டியில்  documents as E-mail,E-mail ascOpen documents,E-mail as Microsoft word,E-mail as pdf என்பன போன்ற (படம் -87-5)பல்வேறு வாய்ப்புகளின் கட்டளைகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் மின்னஞ்சல் பெறுபவரின் முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்து  கொள்க இந்நிலையில்  ஓப்பன் ஆஃபிஸின் மெயில் மெர்ஜ் எனும் வசதியை பயன்படுத்தி கொள்க
  இதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து Tools => Mail Merge Wizard =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்  Mail Merge Wizard எனும் வழிகாட்டி திரையில் (படம் -87-6)தோன்றிடும் இந்த வழிகாட்டி கூறும் வழிமுறைகளை next ,next என்றவாறு பொத்தான்களை  தெரிவுசெய்து சொடுக்கியவாறு  பின்பற்றி மின்னஞ்சலை உருவாக்கி அனுப்பி வைத்திடுக 

படம் -87-6
பொதுவாக நாம்  அனுப்பிடும் ஆவணங்கள் நம்முடைய கையொப்பமுடன் இருந்தால் மட்டுமே அதனை நம்பகமான ஆவணமாக கொள்ளமுடியும் அதற்காக  மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து File => Digital Signatures => என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக உடன்  விரியும்  உரையாடல் பெட்டியில்  தேவையானவாறு நம்முடைய கையெழுத்தை  சேர்த்தபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க .  இவ்வாறான கையெழுத்துடன் கூடிய ஆவணமானது நிலைபட்டியில் 
      என்றவாறு உருவபொத்தானுடன் தோன்றிடும்.