Saturday, February 1, 2014

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் -105 –தொடர்ச்சி


ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் com.sun.star.awt.UnoControlFixedLineஎன்ற கட்டுப்பாட்டின் மூலம் ஒரு உரையாடல் பெட்டியில் தேவையான கோடு ஒன்றினை உருவாக்கமுடியும், அவ்வாறே com.sun.star.awt.UnoControlDateFieldஎன்ற கட்டுபாடானது ஒருஉரைபுலத்தினை விரிவாக்கம் செய்து நாம் உள்ளீடு செய்திடும் நடப்பு நாளினை YYYYMMDD என்ற வடிவமைப்பில் ஏற்றுக் கொள்ளுமாறும் இதில் கீழிறங்கு பட்டியலை உருவாக்கி அவற்றிலிருந்து தெரிவுசெய்துகொள்ளுமாறும் செய்யமுடியும்,

மேலும் com.sun.star.awt.UnoControlNumericField என்ற கட்டுப்பாட்டின் மூலம் எண்களையும் பின்ன எண்களையும் உள்ளீடு செய்திட அனுமதிக்கலாம் அதுமட்டுமின்றி com.sun.star.awt.UnoControlFormattedField என்ற கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிட்ட புலம் எந்தவகையான வடிவமைப்பில் வேண்டுமென முடிவுசெய்திடலாம் முடிவாக com.sun.star.awt.UnoControlFileControl என்ற கட்டுப்பாடு மேலேகூறிய உரைபுலத்தில் கூடுதலான முன்கூட்டியே கட்டமைக்கபட்ட பொத்தான்களுடனான கோப்பு கட்டுபாடாக பணிபுரிகின்றது அதாவது இந்த பொத்தானை சொடுக்கினால் நாம் இதுவரை உரைபெட்டிகளின் மூலம் பெறப்பட்ட தரவுகளை சேமிக்கவேண்டி உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடசெய்கின்றது

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை பயன்படுத்தும்போது உரையாடல் பதிப்பு பெட்டியொன்று திரையில் தோன்றிடும் இது நாம் உருவாக்கிடும் புதியதான உரையாடல்பெட்டியை வடிவமைத்திடும் கருவியாக பயன்படுகின்றது இதில்com.sun.star.awt.XDialogProvider API என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி BeanShell, JavaScript, Java, OpenOffice.org Basic ஆகிய மொழிகளில் உருவாக்கபடும் மேக்ரோவின் வாயிலாக இந்த உரையாடல்பெட்டியை வடிவமைத்திட பயன்படும் உரையாடல் பதிப்பு பெட்டியை நினைவகத்தில் மேலேற்றி திரையில் தோன்றிட செய்கின்றது. மேலும் Java Swing என்ற உறுப்பினை பயன்படுத்தியும் இயக்க நேரத்தில் ஒரு உரையாடல்பெட்டியை உருவாக்கிடமுடியும் இதற்காக முதலில் com.sun.star.awt.UnoControlDialogModel என்ற கட்டுபாட்டின் மூலம் ServiceManager எனும் சேவைமேலாளரின் வாயிலாக ஒரு உரையாடல் பெட்டியை இயக்கநேரத்தில் உருவாக்கிடமுடியும்

பின்னர் அவ்வுரையாடல் பெட்டியின் இடவமைவு ,தலைப்பு போன்றவைகளை com.sun.star.beans.XPropertySet என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி அமைத்திடுக இந்நிலையில் மிகசிக்கலான அமைவிற்கு com.sun.star.beans.XMultiPropertySet என்றகட்டுபாட்டினை பயன்படுத்திகொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது இதனோடு "PositionX", "PositionY", "Width", "Height", "Name", "TabIndex", "Step" and "Tag" ஆகியவற்றின் பண்பியல்புகளை பயன்படுத்தி ஒரு கட்டுபாட்டு மாதிரியை உருவாக்கியபின்னர் com.sun.star.container.XNameContainer என்ற கட்டுபாட்டின் மூலம் ஒரு கட்டளை பொத்தான், அதன் பெயர், இடவமைவு, அளவு ஆகியவற்றினை முடிவுசெய்துஅமைத்துகொள்க இறுதியாக நாம்உருவாக்கிய உரையாடல் பெட்டியை com.sun.star.awt.XDialog interface. என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி திரையில் பிரதிபலிக்கசெய்க.

நிரல் தொடர்-105-1

public void trigger(String sEvent) { if (sEvent.equals("execute")) { try { createDialog(); } catch (Exception e) { throw new com.sun.star.lang.WrappedTargetRuntimeException(e.getMessage(), this, e); } } }

மேலே காணும் நிரல் தொடர்வழிமுறையின்வாயிலாக com.sun.star.task.XJobExecutor என்ற கட்டுபாடானது ஒருபயனாளர் எத்தனைமுறை கட்டளைபொத்தானை சொடுக்கினார் என கவணித்தல் செய்கின்றது இதே செயலை பின்வரும் எளிய மேக்ரோவரிகளும் செய்கின்றன

Sub Main Dim oJobExecutor oJobExecutor = CreateUnoService("com.sun.star.examples.SampleDialog") oJobExecutor.trigger("execute") End Sub

வருங்காலத்தில் இயக்கநேரத்திலும் உரையாடல் பெட்டியொன்று தானாகவே உருவாகி செயல்படுமாறான வழிமுறையுடன் இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் வாயிலாக வழங்கவிருக்கின்றனர் என்றசெய்தியை மனதில் கொள்க.