Monday, March 17, 2014


அறிவிப்பு

அன்புடையீர்,

இன்று முதல் இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன். இதன் மூலம்,

இந்த வலைப்பதிவின் உள்ளடக்கத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். திருத்தி மேம்படுத்தலாம். விற்கலாம்.

முழுக்கட்டுரையாக இன்னொரு தளத்தில் இடலாம். அச்சிட்டோ, ஒலிப்பதிவாகவோ, EPUB, PDF, MOBI போன்ற வடிவங்களிலோ பகிரலாம்

இவற்றைச் செய்ய என்னுடைய முன் ஒப்புதல் தேவையில்லை. ஆனால், அவ்வாறு பயன்படுத்தும் போது, நீங்கள் வெளியிடும் உள்ளடக்கமும் மேற்கண்ட அனைத்து உரிமங்களையும் அதனைப் பயன்படுத்துபவருக்குத் தர வேண்டும். உள்ளடக்கத்தின் மூலமாக இந்த இணையத்தளத்தின் முகவரியையும் கட்டுரையையும் குறிப்பிட வேண்டும். இணையத்தை அணுகவல்ல ஊடகமாக இருப்பின், சொடுக்கவல்ல இணைப்பு ஒன்றைத் தருவதும் வரவேற்கப்படுகிறது.

அன்புடன்,

ச.குப்பன்

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்- 108


ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் குறிமுறை வாயிலாக ஒரு ஆவணத்தை திறப்பதற்கு பின்வரும் செயலிகள் பயன்படுகின்றன

function

fnOpenDoc(sFile)

sURL = ConvertToURL(sFile)

fnOpenDoc = StarDesktop.loadComponentFromURL(sURL, "_blank", 0, Array())

end function

அதற்கு பதிலாக இதே ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் பின்வரும் குறிமுறை வாயிலாக நடப்பிலுள்ள வார்ப்புருவிலிருக்கும் கோப்பு ஒன்றினை அது எந்தஇடத்திலிருக்கின்றதுஎன்ற வழியைமட்டும் குறிப்பிட்டு திறக்கமுடியும். அவ்வாறு திறப்பதற்கு முடியவில்லை என்றால் அதற்கான செய்தியை திரையில் காண்பித்துவிடும்.

Dim PathService as Object

Dim TemplatePath as String ' The path list

Dim SCPos as Integer ' The position of the next semi-colon

Dim MyTemplatePath as String ' The URL for the user template

' substitute your template name here

const TemplateName = "MyTemplate.ott"

' This seems to be the place in which OO stores user templates

const UserTemplateDirectory="/user/template"

PathService=CreateUNOService("com.sun.star.util.PathSettings")

TemplatePath=PathService.Template

MyTemplatePath=""

do while len(TemplatePath) >0

SCPos=InStr (TemplatePath,";")

if SCPos>0 then

MyTemplatePath=Left(TemplatePath, SCPos-1)

else

MyTemplatePath=TemplatePath

end if

' NOTE: as well as file URLs there are some others which should be ignored

if InStr(myTemplatePath,"file:///")=1 And _

Right(myTemplatePath,14) = UserTemplateDirectory then

exit do

end if

TemplatePath=mid(TemplatePath, SCPos+1, len(TemplatePath)-SCPos)

MyTemplatePath=""

loop

if MyTemplatePath<>"" then

TemplatePath=ConverttoURL(TemplateName)

MyTemplatePath=MyTemplatePath & "/" & TemplateName

InvoiceDoc=StarDesktop.LoadComponentfromURL(MytemplatePath, "_blank", 0, Array())

else

MsgBox "Cannot find the template directory"

end if

இவ்வாறு தெரிவுசெய்து வெவ்வேறு கோப்புகளை திறக்கும்போது நடப்பிலுள்ள தெரிவுசெய்யபட்ட கோப்பு மட்டும் எது என அறிந்துகொள்ள பின்வரும் குறிமுறைகள் உதவுகின்றன

sub main

BasicLibraries.loadLibrary("XrayTool")

if fnWhichComponent(thisComponent) = "Text" then

oCurSelection = thisComponent.getCurrentSelection()

'xray oCurSelection

if oCurSelection.supportsService("com.sun.star.text.TextRanges") then

msgbox "There are " & oCurSelection.getCount() & _

" selections in the current text document."

end if

end if

end sub

இந்த குறிமுறைவரிகளை கொண்டுநடப்பிலுள்ள கோப்புகளை ஓப்பன் ஆஃபிஸ் இல்லாது வேறுவகையில் திறக்க முயற்சிக்கும்போது முடியாமல் கணினியின் இயக்கம் தடுமாறும் அவ்வாறு தடுமாறாமல் வேறு மொழிகளின் மூலமாகவும் இதே குறிமுறைவரிகளை கொண்டு நடப்பிலுள்ள கோப்புகளை திறப்பதற்கு அதற்கான பண்பியல்புகளை மட்டும் பின்வருமாறு மாற்றியமைத்துகொள்க

sub main

BasicLibraries.loadLibrary("XrayTool")

if fnWhichComponent(thisComponent) = "Text" then

oCurSelection = thisComponent.getCurrentSelection()

if oCurSelection.supportsService("com.sun.star.text.TextRanges") then

nCount = oCurSelection.Count

'xray oCurSelection.getByIndex(0)

'Warning: The insertion point will have the same action applied twice

'in this case it doesn't matter, but in others it might.

for i = 0 to nCount - 1

oCurSelection.getByIndex(i).setPropertyValue("CharStyleName", "Strong Emphasis")

next

end if

end if

end sub

இவ்வாறு நம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஓப்பன் ஆஃபிஸினுடைய ரைட்டர் ஆவணம் ஒன்றை திறந்தபின் அதிலுள்ள குறிப்பிட்ட பத்தியை அனுகி திறப்பதற்கு பின்வரும் குறிமுறைவரிகள் பயன்படுகின்றன

' Create enumeration object

oTextElementEnum = thisComponent.getText().createEnumeration()

'or thisComponent.getCurrentSelection().getByIndex(i).createEnumeration()

' loop over all text elements

while oTextElementEnum.hasMoreElements()

oTextElement = oTextElementEnum.nextElement

if oTextElement.supportsService("com.sun.star.text.TextTable") then

MsgBox "The current block contains a table."

end if

if oTextElement.supportsService("com.sun.star.text.Paragraph") then

MsgBox "The current block contains a paragraph."

end if

wend

அவ்வாறு திறந்து அந்த கோப்பின் ஆவணத்தை அனுகிடும்போது அதில் குறிப்பிட்ட பெயரை அனுகிட பின்வரும் குறிமுறைவரிகள் பயன்படுகின்றன

mNames = thisComponent.getSheets.getElementnames

for i = lbound(mNames) to ubound(mNames)

msgbox mNames(i)


பின்வரும்குறிமுறைகள் ஒரு ஆவணத்தில் புதிய உரைசுட்டியை உருவாக்கி நாம் அனுகிய அதே பகுதியில் சுட்டிகாட்டிடுமாறும் அதனை எங்கு வேண்டுமானாலும் நகர்த்த தயாராக இருக்குமாறும் செய்யபட்டுள்ளது

oVC = thisComponent.getCurrentController.getViewCursor

oCursor = oVC.getText.createTextCursorByRange(oVC)

oCursor.gotoStartOfSentence(false)

oCursor.gotoEndOfSentence(true)

msgbox oCursor.getString

பின்வரும்குறிமுறைகள் அதே ஆவணத்தில் புதிய உரைசுட்டிக்கு பதிலாக செவ்வக பெட்டியை நாம் அனுகிய அதே பகுதியில் உருவாக்கிட பயன்படுகின்றன

dim aPoint as new com.sun.star.awt.Point

dim aSize as new com.sun.star.awt.Size

aPoint.x = 1000

aPoint.y = 1000

aSize.Width = 10000

aSize.Height = 10000

oRectangleShape = thisComponent.createInstance("com.sun.star.drawing.RectangleShape")

oRectangleShape.Size = aSize

oRectangleShape.Position = aPoint

thisComponent.getDrawPages.getByIndex(0).add(oRectangleShape)


மேற்கண்டவாறு நாம் உருவாக்கும் புதிய ஆவணத்தினை கையாளுபவரையும் கவணித்தல் செய்பவரையும் கொண்டுவருவதற்கு பின்வரும்குறிமுறைவரிகள் பயன்படுகின்றன.

global IannzExampleKeyHandler

sub SetupKeyHandler

oController = thisComponent.currentController

IannzExampleKeyHandler = CreateUnoListener("KeyHandler_","com.sun.star.awt.XKeyHandler")

oController.addKeyHandler(IannzExampleKeyHandler) ' Register the listener

end sub

sub RemoveKeyHandler

thisComponent.currentController.removeKeyHandler(IannzExampleKeyHandler)

end sub

sub KeyHandler_disposing

end sub

function KeyHandler_keyReleased(oKeyEvent as new com.sun.star.awt.KeyHandler) as boolean

KeyHandler_keyReleased = False

end function

function KeyHandler_keyPressed(oKeyEvent as new com.sun.star.awt.KeyHandler) as boolean

KeyHandler_keyPressed = false 'Let other listeners handle the event

if oKeyEvent.modifiers = com.sun.star.awt.KeyModifier.MOD2 then 'Control key was pressed

if oKeyEvent.keyCode = com.sun.star.awt.Key.Q then

msgbox "Alt + Q was pressed"

KeyHandler_keyPressed = true 'Don't let other listeners process this event

end if

end if

end function

இதுவரை நாம் கடந்த 108 தொடரின் வாயிலாக ஓப்பன் ஆஃபிஸ் பற்றி அதில் ஆவணங்களை உருவாக்க பயன்படும் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர், கணக்கீடுகள் செய்வதற்கான ஓப்பன் ஆஃபிஸ் கால்க், படவில்லை காட்சியை பயன்படுத்தி கொள்ள ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ், ஓவியம் அல்லது படம் வரைவதற்கான ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா, கணித சூத்திரங்களை கையாள ஓப்பன் ஆஃபிஸ் ஃபார்முலா, தரவுகளை கையாளுவதற்கான ஓப்பன் ஆஃபிஸ் பேஸ், பொதுவான பிடிஎஃப் ஆக கோப்பினை உருமாற்றுவது இணைய பக்கத்தை உருவாக்குவது ஆகிய தேவைகளுக்கான பொதுபயன்பாடு , இந்த பயன்பாடுகளின் தானியங்கி செயலை செய்வதற்கான கட்டளை குறிமுறைவரிகளை உருவாக்கிட ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் என தெரிந்துகொண்டோம்.

இந்த தொடர்களை படிப்பவர்கள் தங்களுடைய தேவைகளுக்கு எம்எஸ் ஆஃபிஸ் எனும் கட்டணம் செலுத்தி பெறவேண்டிய தனியுடைமை பயன்பாட்டிற்கு மாற்றாக அல்லது பதிலாக அதே வாய்ப்புகளுடனும் வசதிகளுடனும் கூடுதலான வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்க தயாராக உள்ள கட்டணம் எதுவும் செலுத்தவேண்டிய அவசியமே இல்லாத ஓப்பன் ஆஃபிஸை பயன்படுத்தவேண்டும் என்ற பேரவாவே இந்த தொடர்கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் இந்த ஓப்பன் ஆஃபிஸானது எந்தவொரு இயக்கமுறைமையிலும் இயங்கும் திறன்கொண்டது. அதுமட்டுமின்றி இது ஒரு திறமூல பயன்பாடாக விளங்குகின்றது அதனால் தேவையெனில் இந்த ஓப்பன் ஆஃபிஸினுடைய மூலக்குறிமுறைகளை பெற்று நாம் விரும்பிய கூடுதல் வசதிகளை வழங்குமாறு நாமே மாற்றியமைத்து கொள்ளமுடியும் அல்லது இதற்கென உள்ள தன்னார்வ குழுவிடம் நம்முடைய தேவையை அறிவித்தால் அடுத்து வெளியிடும் பதிப்பில் அந்த வசதியுடன்சேர்த்து வெளியிடபடும் என்பதையும் கருத்தில் கொள்க.

. இந்த தொடரை படித்திடும் அனைவரும் இந்த ஓப்பன்ஆஃபிஸ் பயன்பாட்டினை தத்தமது தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தி பயனடையுங்கள் என கூறி விடைபெறும்

ச.குப்பன்

ஓப்பன் ஆஃபிஸ் –பேஸிக்-107


ஓப்பன் ஆஃபிஸின் பேஸிக் குறிமுறைவரிகளானது நூலகங்களுக்குள் தகவமைப்பு கூறாக(module) தேக்கிவைக்க படுகின்றது.இவ்வாறான ஒரு நூலகமானது மற்றவர்களுடன் பங்கிட்டு கொள்ளுமாறும், நடப்பு பயனாளர் பயன்படுத்தி கொள்ளுமாறும், நடப்பு ஆவனத்திற்குள் பயன்படுமாறும் இருக்கும் அதனால் இதிலிருந்து நாம் விரும்பிய குறிமுறைவரிகளை நகலெடுத்து கொள்ளவோ வேறு இடத்திற்கு நகர்த்தவோ செய்யலாம் இந்த நூலகங்கள் எந்த கோப்பகத்திற்குள் உள்ளது என Tools => Options=> OpenOffice.org => Paths => BASIC.=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக அறிந்து கொள்ளமுடியும் இந்த நூலகங்களுக்குள் ஒரு தகவமைப்புகூறின்(module) அதிகபட்ச எண்ணிக்கை16000 (modules)உம் அதன் கொள்ளளவானது 64kb ஆகும்.

முதன் முதல் இந்த ஒருங்கிணைந்த குறிமுறை சூழலை நாம் அனுகிட Tools => Macros => Organize macros => OpenOffice.org Basic=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. பின்னர் தோன்றிடும் திரையில்புதிய குறிமுறைவரிகளின் பெயராக வழக்கமானHelloWorld என்றவாறு அமைத்துகொண்டும் Standard என்றவாறு தெரிவுசெய்து அமைத்து கொண்டும் New என்றவாறு பெயரிட்டுகொள்க பொதுவாக இந்த குறிமுறைவரிகளானது பின்வருமாறு இருக்கும்

REM*****BASIC*****

Sub Main

End Sub

Sub HelloWorld

End Sub

இந்நிலையில் இடம்சுட்டியானது Sub HelloWorldஎன்ற வரியின் தொடக்கத்தில் இருக்கும் அடுத்தகாலியான வரிக்கு இடம்சுட்டியை நகர்த்திசென்று msgbox "Hello World!" என்றவாறு தட்டச்சு செய்திடுக பின்னர் மேக்ரோவினுடைய கருவிகளின்பட்டையிலுள்ள Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது கட்டளை பட்டையில் Tools => Macro => Run Macro=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒரு சிறிய செய்திபெட்டியில் Hello World! என்றவாறான செய்தி திரையில் பிரதிபலிக்கும்.

இந்த குறிமுறைவரிகளாது மிகச்சரியாக செயல்படுகின்றது என அறிந்தவுடன் மேலே செந்தரசெயல்பட்டையிலுள்ள save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்துகொள்க அல்லது OpenO ffice.org இலிருந்து வெளியேறினால் தானாகவே இந்த குறிமுறைவரிகளானதுசேமித்துகொள்ளும்.

மேலும் இந்த குறிமுறைவரிகளில் String,Boolean,Float,Double,Long,Currency Integer,Array,என்பன போன்ற மாறிகளை பயன்படுத்தி நாம் விரும்பும் விளைவுகளை பெற்றிடமுடியும் அதனை தொடர்ந்து

sub HelloWorld

dim i as integer 'This line is optional

for i = 0 to 2

next i

end sub

என்றவாறு மேலே கூறிய மாறிகளில் ஒன்றை பயன்படுத்தி அந்த HelloWorld என்பதன் குறிமுறைவரிகளை மாற்றியமைத்துகொள்ளமுடியும் பொதுவாக ஒருமைக்ரோசாப்ட்டின் ஆஃபிஸ் பயன்பாடு போலல்லாது இந்த ஓப்பன் ஆஃபிஸானது ஒரே பயன்பாட்டிற்குள் பல்வேறு பயன்பாடுகளும் பயன்படுத்த ஏதுவாக தயாராக இருக்கும். அதாவது நாம் வழக்கமாக மைக்ரோசாப்ட் பயன்பாடு போன்று ஒவ்வொரு பயன்பாட்டினையும்

oDoc = StarDesktop.loadComponentFromURL("private:factory/swriter", "_blank", 0, Array())

என்றவாறான கட்டளை வரிகளின் மூலம் புதிய ஆவணத்தை உருவாக்கமுடியும்.

oDoc = StarDesktop.loadComponentFromURL("private:factory/scalc", "_blank", 0, Array())

என்றவாறான கட்டளை வரிகளின் மூலம் புதிய விரிதாளை உருவாக்கமுடியும். இவ்வாறு ஒவ்வொரு பயன்பாட்டினையும் தனித்தனியான குறிமுறைவரிகளின்மூலம் உருவாக்குவதற்கு பதிலாக மிகசுலபமாக,

function fnNewDoc(sDocType as string)

fnNewDoc = StarDesktop.loadComponentFromURL("private:factory/" & sDocType , "_blank", 0, Array())

end function

என்றவாறான சாதாரான செயலிகளின் வரிகளை அமைத்துகொண்டபின்னர்,

oDoc = fnNewDoc("swriter")

oDoc = fnNewDoc("scalc")

oDoc = fnNewDoc("simpress")

oDoc = fnNewDoc("sdraw")

oDoc = fnNewDoc("smath")


என்றவாறு மற்ற பயன்பாடுகளையும் ஒரே பயன்பாட்டின் திரையிலிருந்து மற்ற பயன்பாடுகளை உருவாக்கிடமுடியும். இதனை தொடர்ந்து இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள விழைபவர்கள் பின்வரும் இணைய முகவரிக்கு சென்று அறிந்துகொள்க

http://api.openoffice.org/docs/common/ref/com/sun/star/frame/XComponentLoader.html .

Sunday, March 9, 2014

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-106


பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் அனைத்து தரவுகளும் XML –ன் வடிவமைப்பில் தேக்கிவைக்கபடுகின்றன. XML –ன் வெவ்வேறுவகைகளில் உள்ள libraries.dtd, module.dtd., dialog.dtd என்பனபோன்ற DTD என்றபின்னொட்டுடன்கூடிய கோப்புகளுக்குள் இவைகளை வைத்து பயன்படுத்தி கொள்ளபடுகின்றது கூடுதலாக கடவுச்சொற்களுடன் இவை பாதுகாப்பாக தேக்கிவைக்கபடுகின்றன. மேலும் script.xlc , dialog.xlc ஆகிய library container indexஆக இவைகள்தேக்கி வைக்கபடுகின்றன இவைகளின் xlc என்ற பின்னொட்டில் உள்ள lc எனும்இரு எழுத்துகளும் library container என்பதை குறிக்கின்றன. OpenOffice.org ஐ நிறுவுகை செய்திடும்போது கோப்புகளை தேக்கிவைக்கபடும் இடமும் autopilot libraries என்பவை தேக்கி வைக்கபடும் ஒரேநினைவகஇடமாகும் அதனால் இதனுடைய மூலக்குறிமுறைவரிகளை யார்வேண்டுமானாலும் படித்துவிடலாம் என பயந்துவிடாதீர்கள் இவைகள் கடவுச்சொற்களுடன் மட்டுமே தேக்கிவைக்க படுகின்றன என்ற செய்தியை மனதில் கொள்க.

autopilot .xlb libraries ஆனது user/basic/*.xlc என்ற கோப்பிற்குள் பதிவுசெய்யபடுகின்றன ஆனால் இவை share/basic என்ற இடத்தில் தேக்கிவைக்கபடுகின்றன அதனால் ஒரு network ஐ நிறுவுகையின்போதுகூட இதனை நீக்கம் செய்திடவோ தற்காலிகமாக இதன்செயலை நிறுத்தம் செய்திடவோமுடியும்

அதுமட்டுமின்றி குழப்பமில்லாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக xlb , xba ஆகிய வெவ்வேறு பின்னொட்டு பெயர்களுடனும் SmallDialog,BigDialog ஆகிய வேவ்வேறு தனித்தனி துனை கோப்பகத்திற்குள்ளும் இவை தேக்கிவைக்கபடுகின்றன. Basic libraries மட்டும் கடவுச்சொற்களுடன் தேக்கிவைக்கபடுகின்றன. நூலகபயன்பாடுகள் நேரடியாக கோப்பு அமைவிற்குள் தேக்கிவைக்கபட்டால் இந்தஆவணநூலகமானது ஆவணத்தின் கட்டுகோப்பிற்குள் தேக்கிவைக்கின்றது. இந்த ஆவணங்களில் Basic library container, dialog library container ஆகிய இரண்டும் தனித்தனியே துனைக்கோப்பகத்திற்குள் தேக்கிவைக்கபடுகின்றன இந்நிலையில் கடவுச்சொற்களுடன் உள்ளகோப்புகள் அதே பெயரில் ஓரேஇடத்தில் தேக்கிவைக்கபட்டாலும் கடவுச்சொற்களுடன் கூடிய கோப்பானது கூடுதலாக code.bin என்ற வகை கோப்புடன் சேர்த்து தேக்கிவைக்கபடுகின்றது பொதுவாக OpenOffice.org ஐ நிறுவுகை செய்திடும்போது Basic libraries ஐ இதனுடன் சேர்த்திட முதலில் *.oxt என்ற பின்னொட்டு கோப்பு கட்டுகளாக ஆக்கிடுக பின்னர் Tools => Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் Extension Manager என்ற திரையில் Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு நாம் விரும்பும் extension package ஐ தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இவ்வாறு நிறுவுகை செயததை நீக்கம் செய்வதற்காக Tools => Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் Extension Manager என்ற திரையில் நாம் விரும்பும் extension package ஐ தெரிவுசெய்துகொண்டு Remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. ஒரு விரிவாக்க கட்டுகளின் (extension package (*.oxt) )கோப்பானது ஒரு சுருக்கி கட்டபட்ட Basic libraries ஆகியவையடங்கிய சுருக்குகோப்பாகும். இந்த கோப்புகட்டினுடைய கோப்பகமானது uno-packages என இயல்புநிலையில் இருக்கும் இதனை சென்றடைவதற்கான வழியாக /share, அல்லது /user அல்லது /program. என இருக்கும் அவ்வாறே tool logs என்பதனுடைய செயல்களனைத்தும் /log.txt என்பதற்குள் இருக்கும் கோப்புகளை பயன்படுத்திடும்போது பிழைஏதேனும் உருவானால் tool logs ஆனது பின்புலத்தில் பார்த்து கொள்ளும். தற்காலிக நினைவகத்தை கையாளும் போது ஏற்படும் சிரமத்தை unopk ஐ மறுநிறுவுகை செய்து சரிசெய்துகொள்க

Saturday, February 1, 2014

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் -105 –தொடர்ச்சி


ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் com.sun.star.awt.UnoControlFixedLineஎன்ற கட்டுப்பாட்டின் மூலம் ஒரு உரையாடல் பெட்டியில் தேவையான கோடு ஒன்றினை உருவாக்கமுடியும், அவ்வாறே com.sun.star.awt.UnoControlDateFieldஎன்ற கட்டுபாடானது ஒருஉரைபுலத்தினை விரிவாக்கம் செய்து நாம் உள்ளீடு செய்திடும் நடப்பு நாளினை YYYYMMDD என்ற வடிவமைப்பில் ஏற்றுக் கொள்ளுமாறும் இதில் கீழிறங்கு பட்டியலை உருவாக்கி அவற்றிலிருந்து தெரிவுசெய்துகொள்ளுமாறும் செய்யமுடியும்,

மேலும் com.sun.star.awt.UnoControlNumericField என்ற கட்டுப்பாட்டின் மூலம் எண்களையும் பின்ன எண்களையும் உள்ளீடு செய்திட அனுமதிக்கலாம் அதுமட்டுமின்றி com.sun.star.awt.UnoControlFormattedField என்ற கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிட்ட புலம் எந்தவகையான வடிவமைப்பில் வேண்டுமென முடிவுசெய்திடலாம் முடிவாக com.sun.star.awt.UnoControlFileControl என்ற கட்டுப்பாடு மேலேகூறிய உரைபுலத்தில் கூடுதலான முன்கூட்டியே கட்டமைக்கபட்ட பொத்தான்களுடனான கோப்பு கட்டுபாடாக பணிபுரிகின்றது அதாவது இந்த பொத்தானை சொடுக்கினால் நாம் இதுவரை உரைபெட்டிகளின் மூலம் பெறப்பட்ட தரவுகளை சேமிக்கவேண்டி உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடசெய்கின்றது

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை பயன்படுத்தும்போது உரையாடல் பதிப்பு பெட்டியொன்று திரையில் தோன்றிடும் இது நாம் உருவாக்கிடும் புதியதான உரையாடல்பெட்டியை வடிவமைத்திடும் கருவியாக பயன்படுகின்றது இதில்com.sun.star.awt.XDialogProvider API என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி BeanShell, JavaScript, Java, OpenOffice.org Basic ஆகிய மொழிகளில் உருவாக்கபடும் மேக்ரோவின் வாயிலாக இந்த உரையாடல்பெட்டியை வடிவமைத்திட பயன்படும் உரையாடல் பதிப்பு பெட்டியை நினைவகத்தில் மேலேற்றி திரையில் தோன்றிட செய்கின்றது. மேலும் Java Swing என்ற உறுப்பினை பயன்படுத்தியும் இயக்க நேரத்தில் ஒரு உரையாடல்பெட்டியை உருவாக்கிடமுடியும் இதற்காக முதலில் com.sun.star.awt.UnoControlDialogModel என்ற கட்டுபாட்டின் மூலம் ServiceManager எனும் சேவைமேலாளரின் வாயிலாக ஒரு உரையாடல் பெட்டியை இயக்கநேரத்தில் உருவாக்கிடமுடியும்

பின்னர் அவ்வுரையாடல் பெட்டியின் இடவமைவு ,தலைப்பு போன்றவைகளை com.sun.star.beans.XPropertySet என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி அமைத்திடுக இந்நிலையில் மிகசிக்கலான அமைவிற்கு com.sun.star.beans.XMultiPropertySet என்றகட்டுபாட்டினை பயன்படுத்திகொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது இதனோடு "PositionX", "PositionY", "Width", "Height", "Name", "TabIndex", "Step" and "Tag" ஆகியவற்றின் பண்பியல்புகளை பயன்படுத்தி ஒரு கட்டுபாட்டு மாதிரியை உருவாக்கியபின்னர் com.sun.star.container.XNameContainer என்ற கட்டுபாட்டின் மூலம் ஒரு கட்டளை பொத்தான், அதன் பெயர், இடவமைவு, அளவு ஆகியவற்றினை முடிவுசெய்துஅமைத்துகொள்க இறுதியாக நாம்உருவாக்கிய உரையாடல் பெட்டியை com.sun.star.awt.XDialog interface. என்ற கட்டுபாட்டினை பயன்படுத்தி திரையில் பிரதிபலிக்கசெய்க.

நிரல் தொடர்-105-1

public void trigger(String sEvent) { if (sEvent.equals("execute")) { try { createDialog(); } catch (Exception e) { throw new com.sun.star.lang.WrappedTargetRuntimeException(e.getMessage(), this, e); } } }

மேலே காணும் நிரல் தொடர்வழிமுறையின்வாயிலாக com.sun.star.task.XJobExecutor என்ற கட்டுபாடானது ஒருபயனாளர் எத்தனைமுறை கட்டளைபொத்தானை சொடுக்கினார் என கவணித்தல் செய்கின்றது இதே செயலை பின்வரும் எளிய மேக்ரோவரிகளும் செய்கின்றன

Sub Main Dim oJobExecutor oJobExecutor = CreateUnoService("com.sun.star.examples.SampleDialog") oJobExecutor.trigger("execute") End Sub

வருங்காலத்தில் இயக்கநேரத்திலும் உரையாடல் பெட்டியொன்று தானாகவே உருவாகி செயல்படுமாறான வழிமுறையுடன் இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் வாயிலாக வழங்கவிருக்கின்றனர் என்றசெய்தியை மனதில் கொள்க.

Sunday, December 22, 2013

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-104


ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் கட்டளைவரிகளை தொடர்ந்து செயல்படுமாறு இணைத்திடுகின்ற புரியாக்குதலும்(threading), செயல்களை மறுஅட்டவணை படுத்துதலும் (rescheduling) சிறிது வித்தியாசமான செயலாகும். ஏனெனில் இது இயக்க நேரத்தில் மட்டும் செயல்களை அட்டவணைபடுத்திடுவதற்கான வசதியை வைத்துள்ளது. மேலும் மூலக்குறிமுறைகளையும் உரையாடல் பெட்டிகளுக்கான கட்டளை வரிகளையும் மேம்படுத்தபட்ட நூலகத்தை நிருவகித்தலின்மூலம் பராமரிக்கின்றது இந்த மேம்படுத்தபட்ட நூலகத்தை நிருவகித்தலின் பொதுவான கட்டமைப்பானது Library container , Library , Library elements ஆகியமூன்று நிலைகளில் உள்ளன


அதிலும் Basic library container என்பது மூலக்குறிமுறைகளை மட்டும் dialog library container என்பது உரையாடல் பெட்டிகளுக்கான கட்டளைவரிகளைமட்டும் கொண்டுள்ளன. இதிலுள்ள முன்கூட்டியே கட்டமைக்கபட்ட BasicLibraries. DialogLibraries ஆகிய பண்பியல்புகளின் மூலம் இதனை அனுகி திருத்தம் செய்யலாம் இந்த பேஸிக்ஆனது இயங்க துவங்கும்போது நூலகத்தின் Standard என்பது மட்டும் எப்போதும் நினைவகத்தில் மேலேற்றம் செய்யபட்டிருக்கும் மற்றவை தேவைப்படும்போதும் மட்டும் மேலேற்றம் செய்து பயன்படுத்தி கொள்ளும் createLibrary() என்ற கட்டளைவரியின் வாயிலாக புதிய நூலகதாங்கி (library container) உருவாக்கபடும் அவ்வாறே நடப்பிலுள்ள நூலகதாங்கி (existing library container) யானது createLibraryLink()என்ற கட்டளைவரியின் வாயிலாக இணைத்து வேறு library container உருவாக்கபடும் உரையாடல் பெட்டியும் ,உரையாடல் பெட்டியின் கட்டுப்பாடும் model, view, controller ஆகிய மூன்று முக்கியதருக்க வகைகளில் Toolkit controls என்பதன் வாயிலாக கட்டுபடுத்தபடுகின்றது

மேற்கூறியவாறு உரையாடல் பெட்டியை வடிவமைத்து உருவாக்கியபின் அவ்வுரையாடல் பெட்டியை நம்முடைய பயன்பாட்டில் கொண்டுவரமுடியும் அதனை கட்டுபாட்டு பெட்டியாக எப்போதுவேண்டுமானாலும் மாற்றிகொள்ளமுடியும் மேலும் அதனுடைய பண்பியல்புகளையும் மாற்றியமைக்கமுடியும் அதுமட்டுமல்லாது கூடுதலான பக்கங்களை அதில் சேர்க்கமுடியும் மேலும் அதில் (இந்தமேக்ரோவில்)

oDialogModel = oDialog.getModel()

oButtonModel = oDialogModel.getByName("CommandButton1")

oButtonModel.setPropertyValue("Label", "My Label")

என்றவாறான கட்டளைவரிகளின் வாயிலாக பொத்தன்களையும்(Buttons)

oImageControlModel = oDialog.Model.ImageControl1

oImageControlModel.ImageURL =

"file:///D:/Office60/share/gallery/photos/beach.jpg"

oImageControlModel.ScaleImage = True

என்றவாறான கட்டளைவரிகளின் வாயிலாக உருவப்படகட்டுபாட்டையும் (ImageControl)

oCheckBoxModel = oDialog.Model.CheckBox3

oCheckBoxModel.TriState = True

oCheckBoxModel.State = 2

என்றவாறான கட்டளைவரிகளின் வாயிலாக தேர்வுசெய்பெட்டியையும்(CheckBox)

If oOptionButton.State Then

' The option is checked

Else

' The option is not checked

End If

என்றவாறானகட்டளைவரிகளின் வாயிலாக வாய்ப்பு பொத்தான்களையும் (OptionButtons)

Dim nCount As Integer, oListBox As Object

oListBox = oDialog.getControl("ListBox1")

nCount = oListBox.getItemCount()

oListBox.addItem( "New Item", nCount )

Dim nPos As Integer, nCount As Integer

nPos = 0

nCount = 1

oListBox.removeItems( nPos, nCount )

oListBox.selectItemPos( 0, True )

Dim sSelectedItem As String

sSelectedItem = oListBox.getSelectedItem()

Dim selectPos As Integer

selectPos = oListBox.getSelectedItemPos()

என்றவாறான கட்டளைவரிகளின் வாயிலாக பட்டி பெட்டியையும்(ListBox)

Dim nCount As Integer

Dim sItems As Variant

REM get control

oComboBox = oDialog.getControl("ComboBox1")

REM first remove all old items from the list

nCount = oComboBox.getItemCount()

oComboBox.removeItems( 0, nCount )

REM add new items to the list

sItems = Array( "Item1", "Item2", "Item3", "Item4", "Item5" )

oComboBox.addItems( sItems, 0 )

என்றவாறான கட்டளைவரிகளின் வாயிலாக சேர்க்கை பெட்டியையும்(ComboBox) உள்ளிணைக்க முடியும்

oScrollBarModel = oDialog.Model.ScrollBar1

oScrollBarModel.ScrollValueMax = 100

oScrollBarModel.BlockIncrement = 20

oScrollBarModel.LineIncrement = 5

oScrollBarModel.VisibleSize = 20

என்றவாறான கட்டளைவரிகளின் வாயிலாக கிடைவரிசை,நெடுவரிசை நகர்வுபட்டையையும் (Horizontal/Vertical Scroll Bar)

Dim oLabelModel As Object

Dim oScrollBarModel As Object

Dim ScrollValue As Long, ScrollValueMax As Long

Dim VisibleSize As Long

Dim Factor As Double

Static bInit As Boolean

Static PositionX0 As Long

Static Offset As Long

REM get the model of the label control

oLabelModel = oDialog.Model.Label1

REM on initialization remember the position of the label control and calculate offset

If bInit = False Then

bInit = True

PositionX0 = oLabelModel.PositionX

OffSet = PositionX0 + oLabelModel.Width - (oDialog.Model.Width - Border)

End If

REM get the model of the scroll bar control

oScrollBarModel = oDialog.Model.ScrollBar1

REM get the actual scroll value

ScrollValue = oScrollBarModel.ScrollValue

REM calculate and set new position of the label control

ScrollValueMax = oScrollBarModel.ScrollValueMax

VisibleSize = oScrollBarModel.VisibleSize

Factor = Offset / (ScrollValueMax - VisibleSize)

oLabelModel.PositionX = PositionX0 - Factor * ScrollValue

End Sub

என்றவாறான கட்டளைவரிகளின் வாயிலாக அதனை கட்டுபடுத்தவதற்கான சரிசெய்திடும் கைப்பிடி(AdjustmentHandler) என்பதையும்

Sub ProgressBarDemo()

Dim oProgressBar as Object, oProgressBarModel As Object, oDialog as Object

Dim ProgressValue As Long

REM Dialog1 contains progress bar ProgressBar1 saved in standard library

DialogLibraries.loadLibrary("Standard")

oDialog = CreateUnoDialog(DialogLibraries.Standard.Dialog1)

REM progress bar settings

Const ProgressValueMin = 0

Const ProgressValueMax = 40

Const ProgressStep = 4

REM set minimum and maximum progress value

oProgressBarModel = oDialog.getModel().getByName( "ProgressBar1" )

oProgressBarModel.setPropertyValue( "ProgressValueMin", ProgressValueMin)

oProgressBarModel.setPropertyValue( "ProgressValueMax", ProgressValueMax)

REM show progress bar

oDialog.setVisible( True )

REM increase progress value every second

For ProgressValue = ProgressValueMin To ProgressValueMax Step ProgressStep

oProgressBarModel.setPropertyValue( "ProgressValue", ProgressValue )

Wait 1000

Next ProgressValue

End Sub

என்றவாறான கட்டளைவரிகளின் வாயிலாக நடைபெறும் பணியின் தற்போதைய நிலையை அறிந்து கொள்வதற்கான (Progress Bar)என்பதை உள்ளிணைக்க முடியும்

Sunday, December 15, 2013

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-103


பொதுவாக பெரும்பாலான செயலிகளின் வாயிலாக ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது விசுவல் பேஸிக்குடன்ஒத்தியங்குக்கின்றது. அவைகளுள் ஒருசில பின்வருமாறு

திரையின் உள்ளீட்டு வெளியீட்டு செயலிகள்

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது அறிக்கைகளின் மூலமாகவும் செயலிகளின் மூலமாகவும் திரையில் தகவல்களை பிரதிபலிக்கசெய்தல் பயனாளரிடமிருந்து தகவல்களை பெறுதல் ஆகிய செயல்களை செய்கின்றது உதாரணமாக அச்சிடும்பணிக்கான செய்திகளை திரையில் பிரதிபலிக்கசெய்து பயனாளரிடமிருந்து பெறும் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல், செய்தி பெட்டியை (MsgBox) பிரதிபலிக்கசெய்து OK, Cancel, Yes ,No ஆகிய பொத்தான்களை பயனாளர்கள் தெரிவுசெய்து சொடுக்குவதற்கேற்ப செயல்படுதல் , அவ்வாறே உள்ளீட்டு பெட்டியை (InputBox )பிரதிபலிக்கசெய்து பயனாளர்கள் தெரிவுசெய்வதற்கேற்ப செயல்படுதல் ஆகிய செயல்கள் விசுவல் பேசிக்கின் செயலிகளுடன் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் செயலிகளும் ஒத்தியங்குமாறு செய்யபட்டுள்ளன

கோப்புகளின் உள்ளீட்டு வெளியீட்டு செயலிகள்

குறிப்பிட்ட இயக்கமுறைமையில்தான் இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல் விசுவல் பேஸிக் போன்றே ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கும் Function Read Directories( ) ,Sub SaveDataToFile( ) ,Function LoadDataFromFile( ) , Function CreateFolder( ) என்பன போன்ற கோப்புகளை கையாளும் உள்ளீட்டு வெளியீட்டு செயல்களை மிக எளிதாக செயல்படுத்துகின்றது

அதுமட்டுமல்லாது copy, move , remove files folders, openFileRead(), openFileWrite(), openFileReadWrite()) என்பன போன்ற கோப்புகளை கையாளும் உள்ளீட்டு வெளியீட்டு செயல்களையும் மிக எளிதாகசெயல்படுத்துகின்றது

நாளிற்கும் நேரத்திற்குமான செயலிகள்

DateSerial, DateValue, Day, Month, WeekDay, Year, Hour, Now, Second, TimeSerial, TimeValue, Date, Time, and Timer என்பன போன்ற நாளிற்கும் நேரத்திற்குமான செயலிகளை விசுவல் பேஸிக் போன்றே ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கும் செயல் படுத்துகின்றது

எண் செயலிகள்

Cos,Sin ,Tan,Atn ,Exp,Log,Sqr,Abs,Sgn என்பன போன்ற முக்கோணவியல் செயலிகளையும், எண்களின் செயலிகளையும் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது விசுவல் பேஸிக் போன்றே செயல்படுத்துகின்றது

எழுத்துகளின் செயலிகள்

மேலும் பின்வரும் எழுத்துகளை கையாளும் செயலிகளையும் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது விசுவல் பேஸிக் போன்றே செயல்படுத்துகின்றது Asc ,Chr ,Str,LCase ,UCase ,Left returns,Mid returns ,Right returns, Trim

இயக்கநேர செயலிகள்

அதுமட்டுமின்றி CreateUnoListener, CreateUnoService, GetProcessServiceManager, HasUnoInterfaces, IsUnoStruct, EqualUnoObjects என்பன பேன்ற இயக்கநேர செயலிகளையும் விசுவல் பேஸிக் போன்று ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கும் செயல்படுத்து கின்றது . கட்டளை செயலிக்கான உதாரணம்

மேலும் MsgBox StarDesktop.Dbg_SupportedInterfaces என்ற ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் கட்டளை செயலியானது

Dim oDesktop oDesktop = CreateUnoService( "com.sun.star.frame.Desktop" ) MsgBox oDesktop.Dbg_SupportedInterfaces

என்ற விசுவல் பேஸிக்கின் கட்டளை செயலியை போன்று செய்தி பெட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது

அலுவலக பயன்பாடுகளை கையாளுதல்

அதுமட்டுமின்றி com.sun.star.text.XTextDocument., com.sun.star.sheet.Spreadsheet DocumentSettings , com.sun.star.drawing.DrawingDocument., என்பன போன்ற சேவைகளின் மூலமாக அலுவலக பயன்பாடுகளின் செயல்களையும் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் கையாளுகின்றது

Saturday, November 23, 2013

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-101


ஓப்பன் ஆஃபிஸின் திரையின் மேல் பகுதியின் கட்டளை பட்டியிலுள்ள Tools=> => Macros=> Organize Macros =>OpenOffice.org Basic=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Open Office Basic.Macros என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்


இந்த உரையாடல் பெட்டியிலுள்ள பொத்தான்களில் Run என்ற பொத்தானை கொண்டு நடப்பு மேக்ரோவிலுள்ள நிகழ்வுகளையும் துனை நிகழ்வுகளையும் இயக்குதல்( Run Macros), Close என்ற பொத்தானை கொண்டு இந்த மேக்ரோவை உருவாக்கிடும் உரையாடல் பெட்டியை மூடுதல்(Close), New என்ற பொத்தானை கொண்டு புதிய மேக்ரோவை உருவாக்குதல்(Create Macros), Assign என்ற பொத்தானை கொண்டு குறிப்பிட்ட நிகழ்விற்கு தேவையான மேக்ரோவை ஒதுக்கீடு செய்தல் (Assign Macros), Edit என்ற பொத்தானை கொண்டு ஏற்கனவே உருவாக்கிய மேக்ரோவை பதிப்பித்தல்(Edit macros) , Delete என்ற பொத்தானை கொண்டு தேவையற்ற மேக்ரோவை நீக்கம்செய்தல் (Delete Macros), , ஆகிய செயல்களையும் ,தொடர்புடைய பேஸிக் உரையாடல் நூலகங்களையும் கையாளமுடியும்

Organizer . என்ற பொத்தானை கொண்டு OpenOffice.org Basic Macro Organizer என்ற மற்றொரு உரையாடல் பெட்டியை Modules என்ற தாவியின் திரையுடன் திரையில் தோன்றசெய்யமுடியும்


இந்த OpenOffice.org Basic Macro Organizer என்ற உரையாடல் பெட்டியிலுள்ள பொத்தான்களில் Edit என்ற பொத்தானை கொண்டு ஏற்கனவே உருவாக்கிய தகவமைவுகளை பதிப்பித்தல்(Edit Modules), Close என்ற பொத்தானை கொண்டு இந்த தகவமைவுகளை உருவாக்கிடும் உரையாடல் பெட்டியை மூடுதல்(Close Modules), New என்ற பொத்தானை கொண்டு புதிய தகவமைவுகளை உருவாக்குதல்(Create Modules), , Delete என்ற பொத்தானை கொண்டு தேவையற்ற தகவமைவுகளை நீக்கம்செய்தல் (Delete Modules), , ஆகிய செயல்களை கையாளமுடியும்.


அதற்கு பதிலாக ஓப்பன் ஆஃபிஸின் திரையின் மேல் பகுதியின் கட்டளை பட்டியிலுள்ள Tools=> Macros=> Organize Dialogs => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இதே OpenOffice.org Basic Macro Organizer என்ற உரையாடல் பெட்டியை ஆனால் Dialogsஎன்ற தாவியின் திரையுடன் திரையில் தோன்றிட செய்யமுடியும்


இந்த திரையில் மேலே கூறியவாறு உருவாக்கியதை பதிப்பித்தல்,திரையில் தோன்றி யிருப்பதை மூடுதல், புதியதை உருவாக்குதல்,தேவையற்றதை நீக்கம் செய்தல் ஆகிய செயல்களை கையாளமுடியும்.

இதே OpenOffice.org Basic Macro Organizer என்ற உரையாடல் பெட்டியிலுள்ள Libraries என்ற தாவியின் திரையை திரையில் தோன்றசெய்க. இதில் வழக்கமான நூலகங்கள் கருப்பு வண்ணத்திலும் ,படிக்கமட்டும் என்பவை சாம்பல் வண்ணத்திலும் கடவுச்சொற்களுடன் இணைப்பில் உள்ளவை திறவுகோள் உருவுடனும் தோன்றிடும் மேலும் தொடர்புடைய நூலகமானது தற்போது இருக்கும் இடத்தின் இணைப்பு முகவரியுடன் இவை பிரதிபலிக்கும்

இந்த OpenOffice.org Basic Macro Organizer என்ற உரையாடல் பெட்டியின் Libraries என்ற தாவியின் திரையிலுள்ள பொத்தான்கள் பின்வருமாறு

Edit என்ற பொத்தானை கொண்டு ஏற்கனவே உருவாக்கிய நூலகங்களை பதிப்பித்தல்(Edit Libraries), Close என்ற பொத்தானை கொண்டு இந்த நூலகங்களை உருவாக்கிடும் உரையாடல் பெட்டியை மூடுதல்(Close Libraries), New என்ற பொத்தானை கொண்டு புதியநூலகங்களை உருவாக்குதல்(Create Libraries), , Delete என்ற பொத்தானை கொண்டு தேவையற்ற நூலகங்ககளை நீக்கம்செய்தல் (Delete Libraries), ஆகிய செயல்களை கையாளமுடியும்.

அதுமட்டுமின்றி கூடுதலாக Password என்ற பொத்தானை கொண்டு குறிப்பிட்ட நூலகத்திற்கு உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்கள் மறந்து விட்டதெனில் இந்த பொத்தானை அழுத்தியவுடன் தோன்றிடும் change password என்ற சிறு உரையாடல் பெட்டியில் தேவையான வாறு கடவுச்சொற்களை மாற்றியமைத்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்தபின் குறிப்பிட்ட கடவுசொற்களை கொண்டு மட்டுமே குறிப்பிட்ட நூலகத்திற்குஉள்நுழைவுசெய்யமுடியும்


மேலும் import என்ற பொத்தானை கொண்டு கூடுதலான நூலக்கங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் நாம் உருவாக்கிய நூலகங்களை வேறு நிகழ்விற்கு பயன்படுத்தி கொள்வதற்காக Export என்ற பொத்தான் பயன்படுகின்றது அதற்காக தேவையான நூலகத்தை உருவாக்கிய பின் இந்த Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Export Basic Library என்ற சிறு உரையாடல் பெட்டியில் Export as extension, Export as Basic library ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்துகொள்க

Tuesday, November 19, 2013

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-102


பேஸிக்கின் ஒருங்கfணைந்த சாளரமானது(IDE window) மூலக்குறிமுறைகளின் தகவமைகளில் உள்ள பிழைகளை சரிசெய்து நீக்கம் செய்திடும் பதிப்பு (Basic Source Editor and Debugger)நிலையிலும், உரையாடல் பெட்டியின் பதிப்பு திரை (Dialog Editor ) நிலையிலும் உள்ளது ஆயினும் இவ்விரண்டு நிலையையும் ஒரேசமயத்தில் திரையில் பிரதிபலிக்காது. இந்த மூலக்குறிமுறைகளின் தகவமைகளில் உள்ள பிழைகளை சரிசெய்து நீக்கம் செய்திடும் பதிப்பு நிலையை(Basic Source Editor and Debugger) எனும் முதல்நிலையை திரையில் கொண்டுவருவதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools=> Macros=> Organize Macros=> OpenOffice.org=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக இரண்டாவது நிலையை திரையில் பிரதிபலிக்கசெய்ய OpenOffice.org Basic Macro Organizerஎன்ற உரையாடல் பெட்டியில் Editஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இந்த இரண்டாவது நிலையின் திரையில் குறிப்பிட்ட உருவை கருவிகளின் உதவியால் வரைந்து உருவாக்கிடும் போது அதற்கான பண்பியல்களை வரையரை செய்யவேண்டும் அதற்காக கருவிபட்டியில் உள்ள Propertiesஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Propertiesஎன்ற உரையாடல் பெட்டி General, Eventsஆகிய இரு தாவிகளின் திரையுடன்தோன்றிடும்

102.1 அவ்விரு தாவிகளின் திரையில் தேவையான பண்பியல்புகளை வரையறை செய்துகொள்க பிறகு மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools=> Customize=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேக்ரோ எனும் உரையாடல் பெட்டியில் Assignஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

102.2 உடன் Customize என்ற உரையாடல் பெட்டி menus என்ற தாவியின் திரையுடன் தோன்றிடும் அதில் தேவையானவாறு புதிய கட்டளைகளை சேர்த்தல் மாறுதல் செய்தல் மறுஅமைவு செய்தல் ஆகிய பணிகளை அதனதன் பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்தி கொள்க

102.3 நாம் உருவாக்கிடும் புதிய மேக்ரோவின்மூலம் பிரதிபலிக்கும் உரையாடல் பெட்டியின் திரையானது நம்முடைய சொந்த மொழியில் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிடுவோம் அந்நிலையில் கருவிபட்டியின் மேலே வலதுபுற மூலையில் உள்ள Manage Language என்ற பொத்தானை தெரிவுசெய்த சொடுக்குக உடன் Manage User Interface Languages என்ற உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில் Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Set Default User Interface Language என்ற உரையாடல் பெட்டி திரையில் விரியும் அதில் Tamil என்றவாறு நாம் விரும்பிடும் ஏதேனுமொருமொழியை தெரிவுசெய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக Manage User Interface Languages என்ற உரையாடல் பெட்டியில் close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக. இந்த தொடரில் நாம் உருவாக்கிய பொத்தான் அல்லது உரையாடல் பெட்டிக்கான செயலை ஒதுக்கீடு செய்தல் அதற்கான மொழியை நமக்கு தெரிந்த மொழியை ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை பார்த்து வந்தோம் வரும் தொடரில் ஓப்பன் ஆபிஸினுடைய பேஸிக்கின் திறன் அதனுடைய பயன்பாடு ஆகியவற்றை காண்போம்

Monday, November 11, 2013

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-100




முந்தைய தொடரில் கூறியவாறு  தோன்றிடும் காலியான வரைகலை பதிப்பு திரையின் இடதுபுறமுள்ள கருவிகளின் பட்டியலிலிருந்துControlsஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஒரு கட்டுபாட்டு பெட்டியை உருவாக்கிஅதற்கு internet graphic wizard என்றவாறு ஒரு பெயரிட்டிடுக. அவ்வாறே திரையின் இடதுபுறமுள்ள கருவிகளின் பட்டியலிலிருந்துlabelஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஒரு கட்டுபாட்டு பெட்டியை உருவாக்கிஅதற்கு Select graphic no என்றவாறு ஒரு பெயரிட்டிடுக
   பின்னர் அதே கருவி பட்டியில் உள்ள  File Selectionஎன்றவாறு உள்ள உருவ பொத்தானை தெரிவுசெய்து பிடித்து கொண்டு முதலில் நீளம் அகலம்  எவ்வளவு இருக்கவேண்டும் என தீர்மாணித்துகொண்டு அதன்பின்னர் ஒரு செவ்வக தேடிடும் பெட்டியை(browse) வரைந்திடுக .பிறகு பண்பியல்பு(properties) எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  உடன் பண்பியல்பு(properties) எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்  அதில் இந்த உரையாடல் பெட்டிக்கு பெயராக  தேடிடும்பெட்டி(browse) என்றும்  இதர பண்பியல்புகளையும் அமைத்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின் இடதுபுறமுள்ள கருவிகளின் பட்டியலிலிருந்து பொத்தான்(button)  என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி << Back ,Next>>, Finish, Cancel ஆகிய பொத்தான்களையும் மேலே கூறியவாறு அதனதன் பண்பியல்பு உரையாடல்  பெட்டியையும் (படம்-100-1) தோன்றசெய்து இவைகளுக்கான பெயரையும் இதர பண்பியல்புகளையும் அமைத்துகொள்க 

படம்-100-1
 இவ்வாறு இந்த பொத்தான்களையும் பெட்டிகளையும் உருவாக்கிடும்போது திரையானது வடிவமைப்பு நிலைக்கு மாறியமையும் அந்நிலையில்   கருவிகளின் பட்டியலிலிருந்துActivate Test Mode என்றவாறு உள்ள உருவ பொத்தானை தெரிவுசெய்து பிடித்து கொண்டு ஒவ்வொன்றையும் செயல்படுகின்றதாவென பரிசோதித்து (test)சரிபார்த்து கொள்க. உண்மையில் இந்த பொத்தான்கள் நாம் உருவாக்கிடும் உரையாடல் பெட்டியில்  செயல்படுமாறு செய்திடவேண்டும் அதற்காக ஒவ்வொரு பொத்தானையும் செயல்படுத்துவதற்குநாம் உருவாக்கிய Module1என்பதை அதற்கான தாவியின் திரையை தோன்ற செய்து பின்வரும் கட்டளைவரிகளை  தவறில்லாமல் உள்ளீடு செய்து இணைத்திடுக
Private oDialog as Variant ' private, module-wide variable
Sub RunGraphicsWizard
oDialog = createUnoDialog(DialogLibraries.Standard.Dialog1)
oDialog.execute
End Sub
Sub CancelGraphicsDialog
oDialog.endExecute()
End Sub
Sub FinishGraphicsDialog
Dim sFile as String, sGraphicURL as String
oDialog.endExecute()
sFile = oDialog.Model.FileControl1.Text
' the FileControl contains a system path, we have to transform it to a file URL
' We use the built-in Basic runtime function ConvertToURL for this purpose
sGraphicURL = ConvertToURL(sFile)
' insert the graphics
' access the document model
oDoc = ThisComponent
' get the Text service of the document
oText = oDoc.getText()
' create an instance of a graphic object using the document service factory
oGraphicObject = oDoc.createInstance("com.sun.star.text.GraphicObject")
' set the URL of the graphic
oGraphicObject.GraphicURL = sGraphicURL
' get the current cursor position in the GUI and create a text cursor from it
oViewCursor = oDoc.getCurrentController().getViewCursor()
oCursor = oText.createTextCursorByRange(oViewCursor.getStart())
' insert the graphical object at the cursor position
oText.insertTextContent(oCursor.getStart(), oGraphicObject, false)
End Sub
Sub Main
...
End Sub
 உதாரணமாக நாம் உருவாக்கிடும்internet graphic wizard  என்ற உரையாடல் பெட்டியிலுள்ள Cancel எனும் பொத்தானை தெரிவுசெய்து கொண்டு  இதற்கான பண்பியல்பு(properties) எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றசெய்க அதில்Event  என்ற தாவியின் திரையை தோன்றிட செய்க இதில் when initiating  எனஅபதற்கருகில் உள்ள முப்புள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-100-2
 உடன்Assign Action என்ற  மற்றொரு உரையாடல் பெட்டி தோன்றிடும் இதில் Macro  எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்  Macro Selector   என்ற  மற்றொரு உரையாடல் பெட்டி(படம்-100-2) தோன்றிடும் இந்த உரையாடல் பெட்டியில் FirstStepsBasic.Standard.Module1, என்பதை தேடிபிடித்திடுக  Sub CancelGraphicsDialog என்பதை தெரிவுசெய்து கொண்டுokஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அவ்வாறே Assign Action என்ற  உரையாடல் பெட்டியிலுள்ள  okஎன்ற பொத்தானையும்  தெரிவுசெய்து சொடுக்குக  உடன் நாம் உருவாக்கிடும் internet graphic wizard  என்ற உரையாடல் பெட்டியிலுள்ள Cancel எனும் பொத்தானை செயல்படுத்திடுவதற்கான கட்டளைவரி இணைக்கபட்டுவிடும்
பிறகு திரையின் இடதுபுறமுள்ள கருவிகளின் பட்டியலிலிருந்துRunஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் உருவாக்கிடும் internet graphic wizard  என்ற உரையாடல் பெட்டியிலுள்ள Finish,Cancel ஆகிய  பொத்தான்கள் உண்மையில் செயல்படுகின்றதாவென சரிபார்த்திடுக. இப்போது நாம் உருவாக்கிடும் உரையாடல் பெட்டியின் செயலை வரிசை படுத்திடுதற்கானAutoPilotஎன்ற இரு பக்கமுடைய உரையாடல் பெட்டியில் அமைப்பதற்கானஇறுதி நிலைக்கு வந்திருக்கின்றோம் 
படம்-100-3
முதலில்Control  என்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டுfile control  என்பதை தெரிவுசெய்து கொண்டு properties என்ற உரையாடல் பெட்டியில்  page(step) என்ற  பண்பியல்பை 1 என அமைத்து கொண்டு உள்ளீட்டு விசையை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் நாம் உருவாக்கிடும் உரையாடல் பெட்டியின் விளிம்பை தெரிவுசெய்து பிடித்துகொண்டு properties என்ற உரையாடல் பெட்டியில்page(step)என்ற  பண்பியல்பை 2  என அமைத்து கொண்டு உள்ளீட்டு விசையை தெரிவுசெய்து சொடுக்குக இப்போது நாம் உருவாக்கிய Anchor என்ற தலைப்பில்at paragraph at character ஆகிய பொத்தான்கள்(படம்-100-3) மட்டும் தெரியும் at aragraph என்பது இயல்பு நிலையில் தெரிவுசெய்து இருந்திடுமாறும் தேவையென தெரிவுசெய்தால் மட்டும் at character  எனும் பொத்தான் தெரிவுசெய்திடுமாறும் பண்பியல்பு பெட்டிஉரையால் பெட்டியில் page(step)என்ற  பண்பியல்பை 2  என அமைத்து கொண்டு உள்ளீட்டு விசையை தெரிவுசெய்து சொடுக்குக  page(step) என்ற  பண்பியல்பை 1  என அமைத்து முந்தைய தொடக்கநிலைக்கு சென்றிடுமாறு அமைத்துகொள்க
 நாம் உருவாக்கிடும்internet graphic wizard  என்ற உரையாடல் பெட்டியிலுள்ள << Back ,Next>>, ஆகிய பொத்தான்களுக்கும் page(step) என்பதை அமைத்திட இந்த AutoPilotஎன்ற இருபக்கஉரையாடல்  பெட்டியை விரிவு படுத்தி பின்வரும் கட்டளைவரிகளை தவறில்லாமல் உள்ளீடு செய்திடுக
Sub BackGraphicsDialog
oDialog.Model.Step = 1
oDialog.Model.Back.Enabled = false
oDialog.Model.Next.Enabled = true
End Sub
Sub NextGraphicsDialog
oDialog.Model.Step = 2
oDialog.Model.Back.Enabled = true
oDialog.Model.Next.Enabled = false
End Sub
Sub FinishGraphicsDialog
Dim sGraphicURL as String, iAnchor as Long
oDialog.endExecute()
sFile = oDialog.Model.FileControl1.Text
' State = Selected corresponds to 1 in the API
if oDialog.Model.AsCharacter.State = 1 then
iAnchor = com.sun.star.text.TextContentAnchorType.AS_CHARACTER
elseif oDialog.Model.AtParagraph.State = 1 then
iAnchor = com.sun.star.text.TextContentAnchorType.AT_PARAGRAPH
endif
' the File Selection control returns a system path, we have to transform it to a File URL
' We use the built-in Basic runtime function ConvertToURL for this purpose
sGraphicURL = ConvertToURL(sFile)
' access the document model
oDoc = ThisComponent
' get the Text service of the document
oText = oDoc.getText()
' create an instance of a graphic object using the document service factory
oGraphicObject = oDoc.createInstance("com.sun.star.text.GraphicObject")
' set the URL of the graphic
oGraphicObject.GraphicURL = sGraphicURL
oGraphicObject.AnchorType = iAnchor
' get the current cursor position in the GUI and create a text cursor from it
oViewCursor = oDoc.getCurrentController().getViewCursor()
oCursor = oText.createTextCursorByRange(oViewCursor.getStart())
' insert the graphical object at the beginning of the text
oText.insertTextContent(oCursor.getStart(), oGraphicObject, false)
End Sub