Tuesday, February 21, 2012

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-60- அச்சிடுதல், ஏற்றுமதி செய்தல், மின்னஞ்சல் செய்தல்


முந்தைய தொடர்களில் கூறப்பட்டவாறு உருவாக்கிய ஒரு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை மேலே கருவிபட்டையிலுள்ள அச்சிடுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் அச்சிடுமாறு செய்யமுடியும் . ஆனால் இந்த ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை அச்சிடும்போது பின்புலவண்ணம் போன்றவைகளையும் கணக்கில் கொண்டு அச்சிட்டால் மட்டுமே அச்சிட பட்ட ஆவணங்களிலும் நாம் எதிர்பார்த்தவாறு  தோற்றம் இருக்கும்  அதனால்  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் Tools => Options => Open Office.org  => Print=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக




படம்-60-1 
உடன்  படம்-60-1-ல்   உள்ளவாறு தோன்றிடும் Open Office.org-Print என்ற உரையாடல் பெட்டியில் தேவையான வாய்ப்புகளை தெரிவு செய்து கொள்க. மேலும் கூடுதலாக Convert colors to grayscaleஎன்ற தேர்வுசெய் பெட்டியையும் தெரிவுசெய்துகொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த மாறுதல்களை சேமித்துகொள்க
பிரௌவ்ச்சராக அச்சிடுதல்
பிறகு  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Printஎன்ற உரையாடல் பெட்டியில்Properties என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   அதன் பின்னர் தோன்றிடும் Properties என்ற திரையில் படுக்கைவசமாகவா கிடைவசமாகவா(portrait or landscape) என மிகச்சரியாக தெரிவுசெய்துகொள்க
 பின்னர் Printஎன்ற உரையாடல் பெட்டியில் Optionsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு தோன்றிடும் Optionsஎன்ற திரையின் pages என்ற பகுதியில் Brochure , Right page, Left page ஆகிய வாய்ப்புகளை தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுதல்
  ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்புதிரையில் மேலே கருவிபட்டையிலுள்ள பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுவதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்யமுடியும் அதற்கு பதிலாக மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File =>Export as PDF => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் PDF option என்ற படம்-60-2-ல்உரையாடல் பெட்டியில் உள்ள ஐந்துவகை தாவியின் பொத்தான்களின் வாய்ப்புகளில் தேவையான தாவியின் பக்கத்திற்குசென்று அதில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு இறுதியாக Exportஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 



 
 படம்-60-2
மிகமுக்கியமாக securityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள set open password ,set permissions password ஆகிய  பொத்தான்கள்  அனுமதிபெற்றவர்கள்மட்டுமே திறந்து பயன்படுத்திடமுடியும் என்ற பாதுகாப்புசெய்வதற்காக  மிக முக்கிய பங்காற்று கின்றன  இந்த பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கியதும் தோன்றும்   set open password என்ற சிறு உரையாடல் பெட்டியில் தேவையான கடவு சொற்களை இரண்டுமுறை உள்ளீடுசெய்து OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. மேலும் இதேsecurityஎன்ற தாவியின் பக்கத்தில் உள்ள மற்ற வாய்ப்புகளை தேவையானவாறு  தெரிவு செய்து கொண்டு OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
ப்ளாஷ் கோப்பாக ஏற்றுமதிசெய்தல்
இம்ப்பிரஸின் முக்கியபயனே அதன்உள்ளடக்கங்கள் அசைவூட்டம் செய்வதில்தான் உள்ளது நாம் மேலேகூறியவகையில் இம்ப்பிரஸின் கோப்பினை ஏற்றுமதிசெய்தால் மற்றஅலுவலக கோப்புபோன்று இதுவும் இருக்குமே தவிர அதில் அசைவூட்டம் ஏதும் இருக்காது.(தேவையெனில் இதனை திரையில் காண்பதற்கு அடோப் ப்ளாஷ் பிளேயரை  http://www.adobe.com/products/flashplayer/  என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிகொள்க ) 
    பார்வையாளர்கள் அசைவூட்டத்துடன் இந்த இம்ப்பிரஸின் கோப்பினை காணவும் பயன்படுத்திடவும்   மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் திரையில் File Formatஎன்பதன்கீழ் Macromedia Flash (SWF) (.swf)என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவு செய்து கொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க 
இணையபக்கமாக உருமாற்றுதல்  
.பார்வையாளர்கள் இதே கோப்பினை இணையபக்கமாக பயன்படுத்திட மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Export=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையில் file type என்பதன்கீழ் HTML Documentஎன்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டபின் தோன்றிடும் திரையில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்துகொண்டு Create என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கோப்பினை சேமித்துகொள்க
மின்னஞ்சல்செய்தல்
நாம் உருவாக்கிய ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பினை நண்பர்களுடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்வதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் File => Send =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக





படம்-60-3
 உடன் படம்-60-3-ல் உள்ளவாறு விரியும் சிறுபட்டியில் முதல்வாய்ப்பு எந்த அலுவலகபயன்பாட்டினை பயன்படுத்திகொண்டிருக்கின்றோமோ அதே கோப்பாக மின்னஞ்சல் அனுப்புவதற்கான  பொதுவான  கட்டளையாகும்
   இரண்டாவதாக உள்ள  E-mail as OpenDocument Presentationஎன்ற வாய்ப்பு கட்டளையானது பெறுபவர் இம்ப்பிரஸ் கோப்பாகவே பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கின்றது 
 E-mail as Microsoft PowerPointஎன்ற மூன்றாவது வாய்ப்பு பெறுபவர் மைக்கரோசாப்ட் அலுவலக பயன்பாட்டினை பயன்படுத்துவர்எனில் நாம் அனுப்பும் இம்ப்பிரஸ் கோப்பானது .PPTஎன்ற பின்னொட்டுடன் உருவாக்கி அனுப்படும் நமக்கும் இந்த கோப்பினை கையாளுவதற்கு சிரமமில்லாமல்   இருக்கும் 
  மூன்றாவதாக உள்ள E-mail as PDF,என்ற வாய்ப்புிற்கான கட்டளையானது எந்தவொரு பயனாளரும் சுலபமாக திறந்து பார்ப்பதற்கான கோப்பாக உருவாக்கி அனுப்பிடுவதற்கான வாய்ப்பாகும்
 நிற்க இந்த மின்னஞ்சலிற்காக உருவாக்கபடும் *.OTP,*.PPT ஆகிய வகை கோப்புகள் கணினி நினைவக்ததில் சேமிக்காது மின்னஞ்சல் அனுப்புவதற்காக மட்டும் தற்காலிகமாக உருவாக்கி அனுப்பபடும்  என்ற செய்தியை கவனத்தில் கொள்க 
  ஓப்பன்ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உருவாக்கிய கோப்பினை மைக்ரோசாப்ட் பவர்பாயின்ட்டில் திறந்து கையாளுவதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் File => Save As=>ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Save As என்ற திரையில் File Type என்பதன்கீழ் Microsoft PowerPoint 97/2000/XP (.ppt). என்ற வாய்ப்பினை அதன்கீழிறங்கு பட்டியலை திறப்பதன்மூலம் தெரிவுசெய்துகொண்டு save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக





படம்-60-4
உடன் படம்-60-4-ல் உள்ளவாறு எச்சிரிக்கை செய்வதற்காக தோன்றிடும்   openoffice.org3.0 என்ற சிறுஉரையாடல்பெட்டியில்keep current format  என்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குவதன்மூலம்  சேமித்துகொள்க .

Friday, February 3, 2012

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-59-படவில்லைகளின் காட்சி தொடர்ச்சி


படவில்லைகளின் மாறுதல்(Slide Transition): படவில்லைகளின் காட்சியை தொடர்ச்சியாக அமையுமாறு செய்தலே மாறுதல்(transitions)ஆகும் .
ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் திரையின் செயல்பலகத்தில் உள்ள Slide Transition என்பதை தெரிவு செய்து சொடுக்குக உடன் Slide Transition என்ற  (படம்-59-1 )தலைப்பில் செயல்பலகம்ஆனது மாற்றமாகி தோன்றும்  பின்னர் படவில்லை களின் பலகத்தில் அல்லது படவில்லைகளின் தொகுப்பு காட்சிதிரையில்  தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொணடு Slide Transition என்ற தலைப்பில் உள்ள செயல்பலகத்தில் Apply to selected slidesஎன்ற பட்டியலில் தேவையான வாய்ப்பையும்   Apply to selected slidesஎன்ற பகுதியின் கீழ்உள்ள speedஎன்பதற்கு அருகில் உள்ள கீழிறங்கு பட்டியலில் தேவையான வாய்ப்பையும் அவ்வாறே soundஎன்பதற்கு அருகில் உள்ள கீழிறங்கு பட்டியலில் தேவையான வாய்ப்பையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் Loop until next soundஎன்ற தேர்வுசெய் பெட்டி தானாகவே தெரிவுசெய்துகொள்ளும்
   இதனால் அடுத்த மாறுதல் செய்யும் வரை தொடர்ந்து இதுசெயலில் இருக்கும் அதனை தொடர்ந்து இம்மாறுதல் தேவையில்லையெனில் இதில் தெரிவுசெய்ததை நீக்கம் செய்துகொள்க. பின்னர் advanceஎன்ற பகுதியின் கீழ்உள்ள on mouse click , automatically afterஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க அதன் பின்னர்இந்த மாறுதல்கள் அனைத்து படவில்லைகளிலும் தேவையெனில் Apply to All Slides என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  படம்-59-1
பின்னர் Slide Showஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நடப்பு படவில்லையிலிருந்து படவில்லைகாட்சி யானது திரையில் தோன்றிடும். Automatic previewஎன்ற தேர்வுசெய் பெட்டி  தெரிவுசெய்திருந்தால் நாம்செய்த மாறுதல்கள் உடனுக்குடன்  படவில்லைகாட்சியாக  திரையில் கண்டு சரிசெய்து கொள்ள முடியும். அவ்வாறே Playஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்கி உடனுக்குடன்  படவில்லை காட்சியாக  திரையில் கண்டு சரிசெய்து கொள்ள முடியும் Apply to selected slidesஎன்ற பட்டியலில் No Transition என்ற வாய்ப்பை தெரிவு செய்து படவில்லைகளின் மாறுதலை(Slide Transition)  நீக்கம் செய்து கொள்ளமுடியும்  
 படவில்லையின் அசைவூட்டம் (slide animation)
 இதுவும் படவில்லை மாறுதல்(Slide Transition)  போன்றதே ஆனால் இதன்மூலம் படவில்லைக்குள்ள உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் அசைவூட்டத்தினை அமைத்திடலாம்  அதனால் இதனை அமைக்குமுன் தனிப்பட்ட படவில்லையை  சாதாரண காட்சிதிரையில் தெரிவுசெய்து கொண்டு அதனுள் இருக்கும் உரை அல்லது படத்தை தெரிவுசெய்து கொள்க. உடன் நாம் தெரிவுசெய்த உரை அல்லது படத்தை சுற்றி பச்சை வண்ண கைப்பிடி யொன்று தோன்றும் பின்னர் Custom Animationஎன்பதை தெரிவு செய்து சொடுக்குக உடன்  Custom Animation என்ற தலைப்பில் செயல்பலகம் ஆனது மாற்றமாகி தோன்றும் அதில் modify effect என்ற பகுதியின் கீழ்உள்ள addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 படம்-59-2
உடன் Custom Animationஎன்ற (படம்-59-2 ) உரையாடல் பெட்டியொன்று திரையில்  தோன்றிடும் இதில்
 Entranceஎன்பது ஒரு படவில்லை காட்சி முடிந்து அடுத்த படவில்லை காட்சி எவ்வாறு தோன்றிடவேண்டுமென அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும் 
Emphasisஎன்பது ஒரு படவில்லைகக்குள் உள்ள உரைக்கு தேவையான அடிப்படை அசைவூட்டத்தை அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
 Exit என்பது ஒரு படவில்லை காட்சி எவ்வாறு முடிவடைய வேண்டுமென அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
 motion pathஎன்பது ஒரு படவில்லை யிலுள்ள பொருளானது அசைவூட்டத்தின் போது எங்கெங்கெல்லாம் செல்லவேண்டுமென அமைப்பதற்கானவாய்ப்புகளுள்ள தாவியாகும்
 misc effects மேலே கூறியவாறுஅல்லாத பொதுவான அசைவூட்டத்தினை அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
இவைகளிந் மூலம் தேவையான அசைவூட்டங்களை அமைத்தபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க

 படம்-59-3
பிறகு Custom Animation என்ற தலைப்பில் உள்ள செயல்பலகத்தில் effects என்பதற்கு அருகிலுள்ள முப்புள்ளியை தெரிவுசெய்து சொடுக்குக உடன் effects options என்ற(படம்-59-3 ) உரையாடல் பெட்டியொன்று திரையில்  தோன்றிடும்இதில்
effect என்பது அசைவூட்டு பாதை ,ஒலி ஆகியவை எவ்வாறு இருக்கவேண்டுமென அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
 timimings என்பது அசைவூட்டத்திற்கான காலஅளவு எவ்வளவாக இருக்கவேண்டுமென அமைப்பதற்கான வாய்ப்புகளுள்ள தாவியாகும்
text animation என்பது உரைகளுக்கான அசைவூட்டத்தில் தனித்தனி எழுத்தாகவா   குழுவாகவா எனஅமைப்பதற்கானவாய்ப்புகளுள்ள தாவியாகும்
இவைகளை கொண்டு தேவையான அசைவூட்டங்களை அமைத்தபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க
இப்படவில்லைகளில் அமைக்கபட்ட அசைவூட்டங்கள் ஏதேனும் தேவையில்லை என கருதுபவைகளை தெரிவுசெய்துகொண்டு  Removeஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி அதற்கான அசைவூட்டத்தை மட்டும் நீக்கம் செய்து கொள்க
இடைமுக கட்டளைகள் go to previous slide, go to next slide, go to first slide, go to last slide, go to page அல்லது object , go to document, play sound, அல்லது run a macro. ஆகியவை படவில்லைகளின் அசைவூட்டத்தின்  போது  இடையிடையே மாற்றியமைப்பதற்கான கட்டளைகளாகும்  இதனை செயல்படுத்திட  படவில்லையில் தேவையான பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் குறுக்குவழிபட்டியில்  Interactionஎன்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் Interactionஎன்ற (படம்-59-4 )உரையாடல்பெட்டியில் Action at mouse clickஎன்பதற்கருகில்உள்ள கீழிறங்கு பட்டியலில் தேவையான வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்குக
  படம்-59-4
இவ்வாறு படவில்லைகளில் அசைவூட்டங்கள் அமைத்தபின் மேலே கட்டளை பட்டையிலுள்ள Slide Show => Slide Show=>என்றவாறு கட்டளைகளை  அல்லது F5 , F9. ஆகிய செயலி விசையில் ஒன்றை  அல்லது மேலே கருவிபட்டையில் Slide Showஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி திரையில் படவில்லைகளின் அசைவூட்டத்தை காணலாம்

Tuesday, January 31, 2012

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-58-படவில்லைகளின் காட்சி


  எந்தெந்த படவில்லைகள் எந்த வரிசைகிரமத்தில் படவில்லைகாட்சியாக திரையில் காண்பிக்கப் படவேண்டும் ,
 இந்த படவில்லைக்காட்சியானது தானாகவே இயங்கவேண்டுமா அல்லது  நாம் விரும்பியவாறு இயங்கவேண்டுமா? ,
 படவில்லைகாட்சியில் இருபடவில்லைகளுக்கு இடையேயான இடைவெளிநேரம் எவ்வளவு இருக்கவேண்டும்,
 படவில்லைகாட்சியில் படவில்லைகளின் அசைவூட்டம் எவ்வாறு அமைய வேண்டும்,
 படவில்லைகாட்சியின்போது சுட்டியின் பொத்தானை சொடுக்குவதால் என்ன நிகழ வேண்டும்
  என்பது போன்ற செயல்களை ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உள்ள ஒரு சில கருவிகளை பயன்படுத்தி நம்மால் அமைத்து கொள்ளமுடியும். இவ்வாறான பெரும்பாலான செயல்கள் படவில்லைகளின் தொகுப்பு காட்சித் (slide sorter view) திரையில் செயல்படுத்தி கொள்ளமுடியும். அதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து View => Slide Sorter=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. 
  அல்லது ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் பணியிடத்தின்(workspace) மேல் பகுதியில்  உள்ள Slide Sorterஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன்  Slide Sorter view என்ற காட்சி திரையின் பணியிடத்தில் அனைத்து படவில்லைகளும் காட்சியளிக்கும்
 படவில்லை காட்சியை திரையில் காண்பிப்பதற்கு முன் அதற்கான அடிப்படை அமைப்பை ஒவ்வொரு படவில்லைக்கும் உருவாக்கிடவேண்டும் அதற்காக முதலில் அவைகள் என்னென்னவென தெரிந்துகொள்வோம் மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Slide Show Settings=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.  உடன்  Slide Showஎன்ற (படம்-58-1)உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்  அதில்

 படம்-58-1
  Rangeஎன்ற பகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் எந்தெந்த படவில்லைகள் எந்தவரிசையில் படவில்லைகாட்சியில் இருக்கவேண்டுமென  தொகுத்திட உதவுகின்றது
  1.All slidesஎன்ற வாய்ப்பு  மறைக்கபட்ட படவில்லையைத் தவிர மிகுதி அனைத்தையும்  வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
  2.From என்ற வாய்ப்பு நாம் தெரிவுசெய்திடும் படவில்லையிலிருந்து  மிகுதியை வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
  3.Custom Slide Showஎன்ற வாய்ப்பு நாம் விரும்பிய வகையில் படவில்லைகள் அனைத்தையும்  வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
   Typeஎன்ற பகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் படவில்லைகாட்சியின்போது படவில்லைகள் எவ்வாறு காட்சியளிக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
  1.Defaultஎன்ற வாய்ப்பு படவில்லைகாட்சி முழுத்திரையிலும் தெரியுமாறும்  ஓப்பன் ஆஃபிஸின் கட்டுபாடு இல்லாமலேயே கடைசி படவில்லைவரை படவில்லை காட்சியை  காண்பித்து காட்சி முடிந்த பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது
  2.Windowஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியானது   ஓப்பன் ஆஃபிஸின் கட்டு பாட்டுடன்   கடைசி படவில்லைவரை   படவில்லைகாட்சியை காண்பித்து காட்சி முடிந்த பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது.
  3.Autoஎன்ற வாய்ப்பு   படவில்லை காட்சி முடிந்தவுடன் கடைசி படவில்லையில் சிறிதுநேரம் காத்திருந்து மீண்டும் முதல் படவில்லையிலிருந்து கடைசி படவில்லைவரை படவில்லை காட்சியை  காண்பிக்குமாறு அமைத்திட பயன்படு கின்றது
  Optionsஎன்ற பகுதியில் பின்வரும் வாய்ப்புகள் உள்ளன
  1.Change slides manuallyபடவில்லை காட்சியில் படவில்லைகளுக்கு இடையில் காலஇடைவெளியானது  தானாகவே அமைக்கபட்டிருந்தாலும் அதனால் படவில்லையில் மாறுதலும்  தானாகவே ஏற்படுவதை தவிர்ப்பதற்கு இந்த வாய்ப்பு உதவுகின்றது
  2.Mouse pointer visible என்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற சாதனங்கள் இல்லாதபோது சுட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது
  2.Mouse pointer as penஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது அந்த காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற சாதனங்கள் இல்லாதபோது சுட்டியை திரையில்  பேனா போன்ற உருவத்துடன் பிரதிபலிக்கசெய்கின்றது
  3.Navigator visibleஎன்ற வாய்ப்பு  படவில்லைகாட்சியின்போது வழிகாட்டியை திரையில்   பிரதிபலிக்கசெய்கின்றது
  4.Animations allowedஎன்ற வாய்ப்பு படவில்லையின் அனைத்து  சட்டகத்திலும் அசைவூட்டத்தை செயல்படுத்துகின்றது இதனை தெரிவுசெய்யவில்லையெனில் முதல்படவில்லையில் மட்டும் அசைவூட்டத்தை அனுமதிக்கும்
  5.Change slides by clicking on backgroundஎன்ற வாய்ப்பு படவில்லை காட்சியின்போதே அடுத்த படவில்லையின் பின்புலத்தை மாறுதல் செய்ய பயன்படுகின்றது
  6.Presentation always on top என்ற வாய்ப்பு மற்ற பயன்பாடுகளின் சாளரம் திரையில் மேல்பகுதியில் தோன்றுவதை தவிர்ப்பதற்காக பயன்படுகின்றது
   Multiple displays என்ற பகுதியின் வாய்ப்புகள்  ஒன்றுக்கு மேற்பட்ட திரையில் ஓரே சமயத்தில் படக்காட்சியை காண்பிக்குமாறு அமைத்திட பயன்படுகின்றது
 படவில்லையை படவில்லைக்காட்சியின்போது மறைத்திட
  ஒருசில படவில்லைகளை குறிப்பிட்ட படவில்லைக்காட்சியில் காண்பிக்க வேண்டாம் என விரும்பிடும்போது  முதலில் படவில்லைகளின் பலகத்தில்(slide pane )அல்லது  படவில்லைகளின் தொகுப்புத்திரையில்  தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொள்க  பின்னர் கருவிபட்டியிலுள்ள Hide Slideஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக 
அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Hide Slideஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
  அல்லது மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Hide Slide=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. 
  உடன் குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியிலிருந்து மாறைக்கபட்டுவிடும்
மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக்காட்சியில் காண்பித்திட
  மேலே கூறியவாறு மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக்  காட்சியில் காண்பிக்க விரும்பிடும்போது  முதலில் படவில்லைகளின் பலகத்தில் அல்லது  படவில்லைகளின் தொகுப்புத்திரையில்  தேவையான படவில்லையை தெரிவு செய்து கொள்க  பின்னர் கருவிபட்டியிலுள்ள ShowSlideஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
   அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Show Slideஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
  அல்லது மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Show Slide=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியில் சேர்க்கபட்டுவிடும்
வாடிக்கையாளர் விரும்பியவாறு படவில்லைகாட்சியை அமைத்திட
  நாம்விரும்பியவாறு படவில்லைகாட்சி திரையில் தோன்றுவதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Custom Slide Show=> என்றவாறு கட்டளை களை செயற்படுத்துக.   உடன் தோன்றிடும் Custom Slide Show என்ற (படம்-58-2) உரையாடல் பெட்டியில்  newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 

 படம்-58-2
பின்னர் விரியும் define Custom Slide Show என்ற (படம்-58-3)உரையாடல் பெட்டியில்  படவில்லைக்காட்சிக்கான பெயரை name என்ற பகுதியில்தட்டச்சு செய்துகொண்டு Existing slides என்பதன் கீழுள்ள பட்டியலில் தேவையானவற்றை தெரிவுசெய்து >> என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்து படவில்லைகள் selected slides என்ற பகுதியில் சென்று சேர்ந்துவிடும்  selected slides என்ற பகுதியில்  தேவையற்ற படவில்லை ஏதேனுமிருந்தால் அதனை தெரிவுசெய்து கொண்டு << என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையற்றது பழைய நிலைக்கே சென்றுவிடும் அனைத்தும் சரியாக இருக்கின்றது எனில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.




படம்-58-3
பின்னர் Custom Slide Show என்ற (படம்-58-2)உரையாடல் பெட்டியில்  edit,delete,copy ஆகிய பொத்தான்களை பயன்படுத்தி  படவில்லை கோப்பில் தேவையான மாறுதல் செய்துகொள்க   பிறகு இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Use Custom Slide Showஎன்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொண்டு   பட்டியலிலுள்ள படவில்லையில் படவில்லைக்காட்சிக்கான தொடக்க படவில்லையை மட்டும் தெரிவு செய்து கொண்டு startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம்விரும்பிய படவில்லையிலிருந்து படவில்லைக்காட்சியானது திரையில் காண்பிக்க தொடங்கும்  இந்த படவில்லைக்காட்சி முடிவடைந்த பின்னர் Closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்து கொள்க