Thursday, April 25, 2013

ஓப்பன் ஆஃபிஸ் பேஸ் -தொடர்-பகுதி-86 அறிக்கை தயாரித்தல்

நாம் இதுவரையில் இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸில் அட்டவணை, வினா ,படிவம் ஆகியவற்றை எவ்வாறு உருவாக்குவது மாறுதல் செய்வது என்ற விவரங்களை கண்டு வந்தோம் இந்த தொடரில் ஒரு அறிக்கையை எவ்வாறு உருவாக்கவது என காண்போம்  ஓப்பன் ஆஃபிஸ் பேஸில் தரவுகளை தேக்கி வைக்க பயன்படுவது அட்டவணையாகும் இவ்வாறான அட்டவணைகளில் தரவுகளை உள்ளீடு செய்ய உதவுவதே படிவமாகும் அட்டவணையின் மூலம் தேக்கி வைத்துள்ள தரவுகளிலிருந்து நாம் விரும்பியவாறான தகவல்களை திரையில் அறிந்துகொள்ள உதவுவதே வினாவாகும்  இவ்வாறான அட்டவணை யிலிருந்தும், வினாவிலிருந்தும் நாம் விரும்பியவாறான தகவல்களை பெறுவதற்கு உதவுவதே அறிக்கையாகும் இந்த அறிக்கையை திரையில் அல்லது அச்சிட்டு பயன்படுத்தி கொள்ளமுடியும்  இந்த அறிக்கையானது ஓப்பன் ஆஃபிஸ் பேஸில்  1.நிலையான அறிக்கை 2.இயக்கநேர அறிக்கை  என இருவகையாக உருவாக்கிட முடியும். நாம் இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸில் அறிக்கை ஒன்றை  உருவாக்கிடும்போது அட்டவணையில் என்ன தரவுகள் இருந்ததோ அதனை அப்படியே அறிக்கைக்குள் கொண்டு வந்து உருவாக்குவது நிலையான அறிக்கையாகும்.மாறக்கூடிய செலவினங்கள்  அறிக்கைக்குள் கொண்டு உருவாக்கும்போது நாம் அறிக்கையை பார்வையிடும் நேரத்தில் அட்டவணையில் என்ன தரவுகள் இருக்கின்றதோ அதனை காண்பிக்குமாறு செய்யபடுவது இயக்கநேர அறிக்கையாகும்
  ஓப்பன் ஆஃபிஸ் பேஸில் இடதுபுற பலகத்தில் Database என்பதன் கீழுள்ள Reportஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் வலதுபுறம் மேல்புறமுள்ள task என்ற பலகத்தி ல்விரியும் use wizard to create reportஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 
படம்-1
உடன் படம்-1 இல் உள்ளவாறு report wizard என்ற வழிகாட்டி உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் இடதுபுற steps என்ற பலகத்தில்முதல் படிமுறையாக 1 field selection என்ற படிமுறை இயல்நிலையில் தெரிவு செய்யபட்டிருக்கும் வலதுபுறம் which fields do you want to have in your report?என்ற வினாவின் கீழ்  tables or queriesஎன்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலிருந்து queries:query_Expenses என்றவாறு தெரிவுசெய்து கொள்க உடன் Available fieldsஎன்ற பகுதியில் நாம் தெரிவுசெய்த அட்டவணை அல்லது வினாவிலுள்ள புலங்களின் பெயர் பட்டியலாக விரியும் அவற்றுள் குறிப்பிட்ட புலம் மட்டு மெனில் ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டு அருகிலுள்ள  >என்ற ஒற்றை குறியையும் அனைத்தையும் எனில் >>என்ற இரட்டை குறியையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் வலதுபுறமுள்ள  fields in report என்ற பகுதிக்கு இந்த புலங்கள் போய்ச்சேரும் இந்த பகுதியில் நாம் தெரிவுசெய்து கொண்டு வந்த புலங்களின் வரிசையை நாம்விரும்பியவாறு மாற்றியமைத்திடுவதற்காக அவ்வாறு வரிசையை மாற்றியமைக்க விரும்பும் புலத்தினை தெரிவுசெய்து மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்கி தேவையான வாறு சரிசெய்து கொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன் அடுத்த படிமுறையாக   இடதுபுற steps என்ற பலகத்தில் இரண்டாவது  படிமுறையாக labelling the fields என்ற திரை தோன்றிடும் மேலும் இதில் how do you want labels in the fields? என்ற கோள்வியுடன் Fields ,labels ஆகிய இரு பகுதிகள் தோன்றிடும்  புலங்களின் பெயர்களை அறிக்கையில் மாற்றுவதாயின் இந்த படிமுறையில் மாற்றியமைத்துகொண்டு   next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
   உடன் அடுத்த படிமுறையாக   இடதுபுற steps என்ற பலகத்தில் grouping என்ற  படிமுறை தெரிவுசெய்யபட்டிருக்கும். வலதுபுறம் do you want add grouping levels? என்ற கோள்வியுடன் Fields grouping   ஆகிய இரு பகுதிகள் தோன்றிடும்    புலங்களின் குழுவை இந்த படிமுறையில் மாற்றியமைத்துகொண்டு   next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 உடன் அடுத்த படிமுறையாக   இடதுபுற steps என்ற பலகத்தில் sort options  என்ற  படிமுறை தெரிவுசெய்யபட்டு தோன்றிடும் வலதுபுறம் which field do you want to sort by data? என்ற கோள்வியுடன் sort by then by   ஆகிய  பகுதிகள் தோன்றிடும்    அறிக்கையில் புலங்களின் தரவுகளை காண்பிப்பது ஏறுவரிசையாகவா(Ascending order ) அல்லது இறங்கு வரிசையாகவா(Descending order) என இந்த படிமுறையில் அமைத்துகொண்டு   next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

உடன் அடுத்த படிமுறையாக   இடதுபுற steps என்ற பலகத்தில் choose layout  என்ற  படிமுறை தெரிவுசெய்யபடிருக்கும் வலதுபுறம் how  do you want your report to look? என்ற கோள்வியுடன் layout of data ,layout headers and footers   ஆகிய  பகுதிகள்    அறிக்கையின் தோற்றம் எவ்வாறு இருக்கவேண்டுமெனவும் orintation என்பதில் அறிக்கையானது படுக்கைவசமாகவா(landscpe)  நெடுக்கை வசமாகவா(portiat) என்றும்  இந்த படிமுறையில் தெரிவு செய்து  அமைத்து கொண்டு   next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  உடன் இறுதி படிமுறையாக   இடதுபுற steps என்ற பலகத்தில் create report  என்ற  வாய்ப்பு தெரிவுசெய்பட்டு தோன்றிடும் இதன் வலதுபுறம் decide how you want to proceed? என்ற கேள்வியின் கீழ் இந்த அறிக்கைக்கான தலைப்பாக  titlle of report என்பதில் Expensesஎன்றவாறு உள்ளீடு செய்து கொள்க .what kind of report do you want create ? என்ற வினாவின் கீழ் எந்த வகையான அறிக்கையென Static report, Dynamic report ஆகிய இரு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொள்க creat repot now என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு இறுதியாக finish  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 
                        படம்-2
 உடன் படம் -2 இல் உள்ளவாறு அறிக்கை தோன்றிடும் இதனை சேமித்து கொண்டு தேவைப்படும் போது அச்சிட்டுகொள்க   தேவையெனில் இந்த அறிக்கையின்  தேதியை, புலங்களின் அகலத்தை நாம் விரும்பியவாறு மாற்றியமைக்கலாம்
 வேறு  சமீபத்திய புதிய வகை அறிக்கையை உருவாக்கிட மேலே கட்டளை பட்டையில் உள்ள Tools => Extension Manager=>Get more extensions here....=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திய பின் தோன்றிடும் http://extensions.services.openoffice.org/. என்ற இணைய பக்கத்தில்  தேவையான அறிக்கையின் வகையை விரிவாக்க மேலாளர் மூலம் தெரிவுசெய்து நிறுவி கொண்டு செயற்படுத்தி பயன்படுத்தி கொள்க
தொடரும்

ஓப்பன் ஆஃபிஸ் தொடர்-பகுதி-84- ஓப்பன்ஆஃபிஸ் பேஸில் படிவத்தை மாறுதல் செய்தல்



நாம் கடந்த ஓப்பன் ஆஃபிஸ் தொடர்-பகுதி-83 இல் பார்த்தவாறு படிவம் ஒன்றை உருவாக்கிய பின் அதன் வாயிலாக தரவுகளை உள்ளீடு செய்வதற்கு முன்பாக ஒருசில மாறுதல்களை அப்படிவத்தில் செய்யவிரும்புவோம்  பொதுவாக இந்த படிவத்தில் பல்வேறு புலங்கள்(fields) அப்புலங்களுக்கான பெயர்கள்(labels)என இதனுடைய கட்டுபாடுகள்(controls) அமைக்கபட்டுள்ளன. அவற்றுள் புலங்களின் கட்டுபாடுகளை மட்டும் அல்லது அப்புலங்களுக்கான பெயர்களின் கட்டுப்பாடுகளை மட்டும் அல்லது அனைத்து கட்டுப்பாடுகளையும் திருத்தி மாறுதல் செய்திட விரும்புவோம்.
இந்நிலையில்  1.ctrl + குறிப்பிட்ட புலம் அல்லது அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் அல்லது
  2  குறிப்பிட்ட புலம் அல்லது அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து  சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் அல்லது
 3 குறிப்பிட்ட புலம் அல்லது அப்புலத்திற்கான பெயரில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் தாவியின் (tab) விசையை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்தால் அதனுடைய கட்டுப்பாடு ஒரு பச்சை வண்ண எட்டுகைப்பிடிகளுடன்(படம்-1) நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும்

படம்-1
இவ்வாறு மாறுதல் செய்யும்போது திரையின் ஓரப்பகுதியில் ரூலரை தோன்றசெய்து அதில் சென்டிமீட்டராக அதன்அளவை மாற்றியமைத்துகொள்வது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது இதற்காகTools => Options =>OpenOffice.org Writer => View=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் திரையின் மேல் ,இடதுபுற ஓரம் தோன்றிடும் ரூலரின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குவதன்வாயிலாக விரியும் சூழ்நிலை பட்டியில் சென்டிமீட்டர் அளவை தெரிவுசெய்து சொடுக்கிஅமைத்துகொள்க
படிவத்தை மாறுதல் செய்வதற்கான படிமுறைகள்
படிமுறை1  நாள் புலத்தை மாறுதல் செய்தல்: மேலே கூறியவாறு மாறுதல் செய்யவிரும்பும் நாள் புலத்தின் கட்டுபாட்டினை(date fields control) தெரிவு செய்து திரையில் தோன்றசெய்க  பின்னர்  வலதுபுறத்தின் மையத்திலுள்ள பச்சைவண்ண கைப்பிடிக்கு இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் அது இருதலை அம்புக்குறியாக மாறிவிடும் உடன்சுட்டியின் இடதுபுற பொத்தானை  இதன்அளவு ரூலரில் 6 சென்டிமீட்டர் வரும்வரை அப்படியே  பிடித்துகொண்டிருந்து அதன்பின் விடுக  அதன்பின்னர் திரையின் மேலே Form Controls toolbar இல் உள்ள   Controls என்ற படம்-2-ல் சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-2
உடன் நாள்புலத்தின் பண்பியல்பு உரையாடல் பெட்டி தோன்றிடும் அதில்  Date format propertyஎன்ற பகுதிக்கு சென்று அதனுடைய கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில்  Standard (long) என்பதை தெரிவுசெய்து சொடுக்கி இயல்புநிலையில் No என்றிருப்பதை Yes என மாற்றியமைத்து கொள்க
 படிமுறை 2 புலத்தின் அகலத்தை மாற்றியமைத்தல்:  ஒருசில புலங்களானது  இயல்பு நிலையில் அதற்கென உள்ளீடு செய்யபடும் தரவுகளுக்கான ஒதுக்கவேண்டிய அளவைவிட மிகப்பெரியதாக இருக்கும் அதனால் அவைகளில் மிகுதி காலியான இடம் வீணாக இருக்கும் அதனை சரிசெய்து அமைப்பதற்காக முன்பு கூறியவாறே  BPaymentஎன்ற புலத்தினை தெரிவு செய்து கொள்க  பின்னர்  வலதுபுறத்தின் மையத்திலுள்ள பச்சைவண்ண கைப்பிடிக்கு அருகில் இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் அது இருதலை அம்புக்குறியாக மாறிவிடும் உடன் சுட்டியின் இடதுபுற பொத்தானை  இதன்அளவு ரூலரில் 2.5 சென்டிமீட்டர் வரும்வரை  அல்லது தரவுகளின் அளவிற்கு பொருத்தமாக அமையும்வரை அப்படியே பிடித்து கொண்டிருந்து அதன்பின் விடுக அவ்வாறே Lpayment, Spayment, SnPayment, Mpayment, and MiscPaymentஆகிய புலங்களின் அளவுகளையும் மாற்றியமைத்திடுக 
படிமுறை 3  ஒரு குழுவிலுள்ள தனித்தனி புலத்தினை அதன் வகைக்கு ஏற்றவாறு இடம்மாற்றியமைவு செய்தல்:

படம்-3
நாம் மேலே கண்ட படிமுறையின்படி ஒரு குழுவிற்குள் உள்ள பல்வேறு புலங்களை வகைக்கேற்றவாறு தெரிவுசெய்துபிடித்துகொண்டு இழுத்து சென்று (படம்-3)இடம் மாற்றி யமைத்து கொள்க
 படிமுறை 4 புலங்களின் பெயரை மாற்றியமைத்தல்:மாறுதல் செய்யவிரும்பும் புலத்தின் பெயரை தெரிவுசெய்து கொண்டு அதன்மீது இடம்சுட்டியை வைத்து  சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும சூழ்நிலை பட்டியில் Control  என்ற(படம்-4) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது Form Controls toolbar இல் உள்ள   Controls என்ற படிமுறை 1-ல்  குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-4
உடன் தோன்றிடும் labeled Propertiesஎன்ற உரையாடல் பெட்டியில் labelஎன்ற பகுதியை தெரிவு செய்து அதில் நாம் விரும்புவதுபோன்று பெயரினை மாறுதல் செய்து அமைத்து கொண்டு இந்த உரையாடல் பெட்டியைமூடிவிடுக 
 படிமுறை 5  புலங்கள் புலங்களின் பெயர்கள் ஆகியவற்றின் அகலத்தை மாற்றியமைத்தல்: அகலத்தினை மாற்றியமைத்திட விரும்பும் புலம் அல்லது புலத்தின் பெயரை அதனுடைய கட்டு பாட்டினை தெரிவுசெய்து திரையில் தோன்றசெய்க  பின்னர்  வலதுபுறத்தின் மையத்திலுள்ள பச்சை வண்ண கைப்பிடிக்கு இடம்சுட்டியை கொண்டு சென்றவுடன் அது இருதலை அம்புக் குறியாக மாறிவிடும் உடன் சுட்டியின் இடதுபுற பொத்தானை  இதன்அளவு ரூலரில் 2 சென்டிமீட்டர் வரும்வரை அல்லது நாம் விரும்பும் அளவிற்கு  அப்படியே பிடித்துகொண்டிருந்து அதன்பின் விடுக இவ்வாறே மற்ற  புலம் அல்லது புலத்தின் பெயரை  அதன் அகலத்தினை மாற்றி யமைத்து கொள்க
படிமுறை 6  ஒரு புலத்திற்கு பதிலாக வேறொரு  புலமாக மாற்றியமைத்தல்:   ctrl + Breakfast இனுடைய Payment என்ற புலத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் இதனுடைய கட்டுப்பாடு ஒரு பச்சை வண்ண எட்டுகைப்பிடிகளுடன் நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும் பின்னர் அக்கைப்பிடிக்குள் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில்  Replace with => List Box=> என்றவாறு (படம்-5)கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-5

 பின்னர்  Form Controls toolbar இல் உள்ள   Controls என்ற படிமுறை 1-ல்  குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-6
 உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் General என்ற (படம்-6) தாவிபொத்தானின் திரையை  தோன்றசெய்க அதிலுள்ள Drop down என்ற பெட்டியில்   இயல்புநிலையில் No என்றிருப்பதை Yes என (படம்-6)மாற்றியமைத்து கொள்க
இதே உரையாடல் பெட்டியின் data என்ற தாவிபொத்தானின் திரையை  தோன்றசெய்க அதிலுள்ள Type of list contents  என்ற பெட்டியில்   Sql என(படம்-7) மாற்றியமைத்து கொள்க


படம்-7
இதே உரையாடல் பெட்டியின் tab   என்ற தாவிபொத்தானின் திரையை  தோன்றசெய்க   அதிலுள்ள list contents என்றபெட்டியில்    SELECT "Type", "Type" FROM "Payment Type" என (படம்-7) மாற்றியமைத்து கொள்க அவ்வாறே  இதே படிமுறையை பின்பற்றி Lunch, Supper, Motel, Snacks,  Miscஆகியவற்றின் payment புலங்களுக்கும்  மாற்றி யமைத்து கொள்க
படம்-8
 படிமுறை 7  குறிப்பு புலத்தினை மாற்றியமைத்தல்:
 ctrl + note என்ற புலத்தில் இடம்சுட்டியை வைத்து விசைப்பலகையில் சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் இதனுடைய கட்டுப்பாடு ஒரு பச்சை வண்ண எட்டுகைப்பிடிகளுடன் நாம் மாறுதல் செய்வதற்கு தயாராக திரையில் தோன்றிடும் பின்னர் Form Controls toolbar இல் உள்ள   Controls என்ற படிமுறை 1-ல்  குறிப்பிடபட்டுள்ளவாறு அதனுடைய உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் General என்ற தாவிபொத்தானின் திரையை  தோன்றசெய்க அதிலுள்ள Scroll bar என்ற புலத்தினுடைய பெட்டியின் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் இயல்புநிலையில் none என்றிருப்பதை vertical  என (படம்-8) மாற்றியமைத்து இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக பின்னர்  படிமுறை 5 ஐ பின்பற்றி இதனுடைய நீள அகலத்தை மாற்றியமைத்துகொள்க

 
படம்-8-1
 படிமுறை 8  ஒரு துனைப்படிவத்தில் புலத்தின் பெயர் புலத்தினை மாற்றியமைத்தல்: payment type என்ற புலப்பெயரில்  இடம்சுட்டியை வைத்து படிமுறை 6 இல் கூறியவாறு  Replace with (படம்-8) => List Box(படம்-5)=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மீண்டும் இதே  payment type என்ற புலப்பெயரில் சூழ்நிலை பட்டியை தோன்றசெய்து column என்ற (படம்-8)கட்டளையை  தெரிவுசெய்து சொடுக்கி  இதனுடைய பண்பியல் உரையாடல் பெட்டியை தோன்றசெய்க  பின்னர் படிமுறை 6 இல் கூறியவாறு அதிலுள்ள Type of list contents  என்ற பெட்டியில்   Sql என மாற்றியமைத்து கொள்க இதே உரையாடல் பெட்டியின் tab   என்ற தாவிபொத்தானின் திரையை  தோன்றசெய்க   அதிலுள்ள list contents என்றபெட்டியில்    SELECT "Type", "Type" FROM "Payment Type"என மாற்றியமைத்து கொள்க பிறகு இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக
படிமுறை 9  குழுவிற்கான தலைப்பைஅமைத்தல்: இடம்சுட்டியானது மேலே இடதுபுற மூலையில் இருப்பதை உறுதி செய்து கொள்க   பின்னர் உள்ளீட்டு விசையை அழுத்துவதன் மூலம் Heading 2. இன் கிடைவரிசைக்கு இடம்சுட்டியை கொண்டு செல்க. அதில் இயல்பு நிலையில் இருப்பதை  அதனுடையApply Styles என்ற கீழிறங்கு பட்டியலை விரியச்செய்க  அதில் Meals  snacks என்றவாறு தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்தி  subformஇற்குள் இடம் சுட்டியை கொண்டு சென்று Fuel Data என இதனுடைய தலைப்பையும் மாற்றியமைத்திடுக
 படிமுறை 10  படிவத்தின் பின்புலத்தினை மாற்றியமைத்தல்: ஒரு படிவத்தின் பின்புலத்தில் Tools => Options => OpenOffice.org => Colors=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி . வண்ணத்தையும், வரைகலை ,படம் ஆகியவை இருக்குமாறும் மாற்றியமைத்திடலாம் இவ்வாறு பின்புலத்தினை மாற்றியமைக்கும்போது புலங்களையும் அவற்றின் பெயர்களையும் திரையில் நம் கண்ணிற்கு புலப்படுமாறும் அதனை நம்மால் படித்தறிந்து கொள்ளுமாறும் அமைத்திட வேண்டும் என்பதை மனதில் கொள்க  படம்-3-ல் உள்ள படிவத்தின் முதல்வரிசை புலங்களின் பெயர்களில் உள்ள   Control+ Date label ஐ தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  Control+shift+ rest of the labels களை  தெரிவுசெய்து சொடுக்குக  அதன்பின்  Design Form toolbarஎன்பதில் உள்ளControlஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இதனுடைய பண்பியல்பு உரையாடல் பெட்டியை திரையில் தோன்ற செய்க அதன்பின்னர் பின்புல வண்ணம்  இயல்புநிலையில் Light cyan. என்றிருப்பதை அதனுடைய கீழிறங்கு பட்டியலிலிருந்து தேவையான வண்ணத்தை தெரிவுசெய்து கொள்க அவ்வாறே மற்ற புலங்களின் பெயர்களுக்கும் பின்புல வண்ணத்தை மாற்றி் யமைத்து கொண்டு இந்த பண்பியல்பு உரையாடல் பெட்டியை மூடிவிடுக
  அதன்பிறகு படிவத்தின் பின்புலத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் page என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் background என்ற (படம்-9) தாவியின்  திரையை தோன்றசெய்க அதில் As என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் color என்பதற்கு பதிலாக graphic என்பதை தெரிவுசெய்து கொள்க 

படம்-9
பின்னர் File என்ற பகுதியில் browseஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் உரையாடல் பெட்டியில்  Gallery என்ற மடிப்பகத்தை தேடிபிடித்து அதில் sky.gif  என்ற கோப்பினை தெரிவுசெய்து open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்  type என்ற பகுதியில் உள்ள area என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு ok என்ற  பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 படிமுறை 10  படிவத்தின் தாவியின்வரிசையை  மாற்றியமைத்தல்:  ஒரு படிவத்தில் உள்ள புலங்களின் வாயிலாக தரவுகளை உள்ளீடு செய்திடும்போது ஒரு புலத்திலிருந்து மற்றொரு புலத்திற்கு இடம்சுட்டி மாறிசெல்வதற்கு  விசைபலகையிலுள்ள tab என்ற விசையை அழுத்தபடவேண்டும்  இவ்வாறு  tab என்ற விசையை அழுத்திடும் போது எந்த புலத்திலிருந்து ஆரம்பித்து அடுத்தடுத்து வரிசைகிரமமாக எந்தபுலம் வரை செல்லவேண்டும் என நாம் விரும்பியவாறு மாற்றியமைத்து கொள்ளமுடியும்  இதற்காக Control+ Date field ஐ தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் form controls toolbar இல் form design என்றஉருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது  View => Tool bars =>  Form Design=>   என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் கருவிபட்டியில் Activation Order என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் தோன்றிடும்Tab Order என்ற உரையாடல் பெட்டியில் தேவையான புலங்களை   தெரிவுசெய்து கொண்டு Move Up  அல்லது move down ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றினை  தேவையானவாறு தெரிவுசெய்து சொடுக்கி முன்பின் வரிசை கிரமத்தை சரிசெய்து நாம்விரும்பியவாறு வரிசையாக அமைத்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த படிவத்தையும் தரவுதளத்தையும் சேமித்து வெளியேறுக