Sunday, October 31, 2010

ஓப்பன் ஆஃபிஸ்-20-ஆவணங்களில் குறுக்குவழிவிசைகளை பயன்படுத்தல்


         ஓப்பன் ஆஃபிஸின்  ஆவணம் ஒன்றில் சுட்டியை பயன்படுத்தாமல்   விசைப்பலகையை மட்டும் பயன்படுத்தி அனைத்து செயல்களையும் செய்யமுடியும். உதாரணமாக  ஓப்பன் ஆஃபிஸின் ஆவணம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டி ருக்கும்போது கட்டளைபட்டி(Menu bar) அல்லது கருவிபட்டியிலுள்ள(Tool bar) கட்டளையை அல்லது கருவியை செயல்படுத்திட விழைவோம்
        அந்நிலையில் சுட்டி(Mouse) எங்கிருக்கின்றது எனத்தேடாமல் இடம் சுட்டியானது (Cursor) கட்டளைபட்டிக்கு மட்டும்  செல்வதற்கு F10 என்ற விசையை அழுத்துக.
       பின்னர் கருவிபட்டிக்கு (Tools bar) இடம்சுட்டி செல்வதற்கு F6என்ற விசையை மீண்டும் மீண்டும் அழுத்துக.
        இவ்வாறு குறிப்பிட்ட பட்டிக்கு இடம்சுட்டி சென்றபின் தேவையான கட்டளையை அல்லது கருவியை  தெரிவுசெய்திடுவதற்கு இடது(Left arrow) அல்லது வலதுநோக்கும் அம்புக்குறியை(Right arrow) பயன் படுத்திகொள்க.
        இவ்வாறுதெரிவுசெய்தபின் கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) பயன்படுத்துக. உடன் நாம் தெரிவு செய்தது கருவிபட்டியின் கருவியெனில் குறிப்பிட்ட கருவி செயலிற்கு வரும் நாம் தெரிவுசெய்தது கட்டளைபட்டியின்(Menu bar)  கட்டளையெனில் குறிப்பிட்ட கட்டளையின் துனைப்பட்டி (Sub menu)திரையில் விரியும்
      அதில் மீண்டும் மேலேகூறியவாறு அம்புக்குறியை  பயன்படுத்தி நாம்விரும்பும் கட்டளையை செயற்படுத்தி கொள்க.குறிப்பிட்ட கட்டளை அல்லது கருவியில் இடம்சுட்டி இருக்கும்போது  உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தியும்  நாம்விரும்பும் கட்டளையைஅல்லது கருவியை செயற் படுத்தி கொள்ளலாம்.
      F6என்ற விசையை மீண்டும் மீண்டும் அழுத்தும்போது இடம்சுட்டியானது (Cursor) திரையில் ஒவ்வொரு  பட்டியாக  சென்று பிரதிபலிக்கும் கடைசியில் நாம் பணிபுரியும் ஆவணத்திற்கே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
      Shift + F6, Shift+Ctrl+Tab என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  இடம் சுட்டியானது ஆவணத்திலிருந்து பட்டிக்கு செல்லும்
     Ctrl+F6  என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  இடம்சுட்டியானது பட்டியிலிருந்து ஆவணத்திற்கு செல்லும்
       F10என்ற விசையை  அழுத்தும்போது தற்போது இடம்சுட்டியானது ஆவணத்திலிருந்தால் பட்டிக்கும் பட்டியிலிருந்தால் ஆவணத்திற்கும் மாறிச்செல்லும்.
      Esc  என்ற விசையை  அழுத்தும்போது   தற்போது இடம்சுட்டி இருக்கும்  இடமான பட்டி , துனைப்பட்டி,உரையாடல்பெட்டி ஆகியவற்றிலிருந்து முந்தைய இடத்திற்கு செல்லும்.
        Alt,F6 ,F10 ஆகியவிசைகளில் ஒன்றை அழுத்தினால் கட்டளைபட்டியின் முதல்கட்டளையான Fileஎன்ற கட்டளையை தெரிவுசெய்துவிடும் அந்நிலையில் கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) அல்லது உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தியவுடன் இந்தFile என்பதன் பட்டியலை திரையில் விரித்து திறந்துவிடும்.
    அதில்   கீழ்(Down arrow) அல்லது மேல் நோக்கும் அம்புக்குறியை (Up arrow) அழுத்தி தேவையான கட்டளையை தெரிவுசெய்து  உள்ளீட்டு விசையை (Enter key) அழுத்தியவுடன் நம்மால் தெரிவுசெய்யப்பட்ட கட்டளை செயற்படுத்தப்படும்.
     ஏதேனும் பட்டியில் இடம்சுட்டிஇருக்கும்போது Home என்ற விசையை அழுத்தினால் முதல் கட்டளைக்கும் End என்றவிசையை அழுத்தினால் கடைசி கட்டளைக்கும் இடம்சுட்டிசெல்லும்.இந்நிலையில் உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தினால் குறிப்பிட்ட கட்டளை செயற்படுத்தப்படும்.
              
                                                                             படம்-20-1
   வரைவுப்பட்டியில்  உள்ள ஏதேனும் பணிக்குறியின்மீது(Icon)இடம்சுட்டி இருந்திடும்போது உதாரணமாக செவ்வகம் அல்லது நீள்வட்ட பணிக் குறியின்மீது இடம்சுட்டி இருப்பதாக கொள்வோம் இந்நிலையில்  Ctrl+ Enter என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தும்போது  முன்கூட்டியே இயல்பு நிலையில் அமைக்கப்பட்டுள்ளவாறு செவ்வக அல்லது நீள்வட்ட  படம் ஆவணத்தில் வரையப்பட்டுவிடும்.(படம்-20-1) இந்த கருவிப்பட்டி மிகநீண்டதாக இருந்து ஏதேனும் சில பணிக்குறிகள் திரையில் பிரதிபலிக்கவில்லை யெனில் PageUpஅல்லதுPage Down விசையிலொன்றை  அழுத்தினால் மிகுதிபணிக் குறிகள் திரையில் பிரதிபலிக்கும்.



   படம்-20-2
 சாளரத்தை மாற்றியமைப்பதற்கான அமைவுபட்டி(System menu)
   Alt+Space bar என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக.உடன் அமைவுபட்டி(System menu) மேலே இடதுபுறமூலையில் தோன்றும்(படம்-20-2) இதில் இடம்சுட்டி பிரதிபலித்து கொண்டு  இருக்கும்போது மேலேகூறியவாறு விசைகளை அழுத்தி தேவையான வற்றை செயற்படுத்திகொள்க.
             கருவிபட்டியை சாளரத்துடன் கட்டுதல்
   F6 என்ற விசையை தேவையைனவாறு அழுத்தி  கருவிபட்டியை தெரிவு செய்து கொள்க பின்னர்  Ctrl+ Shift+ F10        என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துக உடன் கருவிபட்டியானது தனியாக மிதந்து கொண்டிருந்தால் சாளரத்துடன் கட்டப்பட்டுவிடும். அல்லது  சாளரத்துடன் கட்டப்பட்டிருந்தால் தனியாக (படம்-20-3) மிதக்க ஆரம்பித்துவிடும்



                                                        படம்-20-3
  பொதுவாக கட்டளைகளை செயற்படுத்திட கட்டளைபட்டியிலுள்ள குறிப்பிட்ட கட்டளையை தெரிவுசெய்தவுடன் விரியும் பட்டியலிலிருந்து  குறிப்பிட்ட கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கிடுவோம் அதற்கு பதிலாக குறுக்கு வழிவிசைகளை செயற்படுத்தி நாம்விரும்பும் செயலை செயற்படுத்தி கொள்ள முடியும்.உதாரணமாக நாம் ஓப்பன் ஆஃபிஸ் ஆவணமொன்றில் பணிபிரிந்து கொண்டிருக்கும்போது வேறொரு கோப்பினை திறப்பதற்காக File=>Open=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதற்கு பதிலாக Ctrl , O ஆகியவிசைகளை சேர்த்து அழுத்துக.உடன் Open என்ற உரையாடல்பெட்டி திரையில் தோன்றும்
   அதுபோன்றே கட்டளைபட்டியலில் ஒருசில கட்டளைகளின் முதலெழுத்து கீழ்கோடிடப் பட்டிருக்கும்.அவ்வாறான கட்டளையை செயற்படுத்திடுவதற்கு Alt என்ற விசையை அழுத்திபிடித்துகொண்டு கீழ்கோடிடப் பட்டிருக்கும் கட்டளைகளின்  முதலெழுத்தின் விசையை சேர்த்து அழுத்துக.
    உடன் குறிப்பிட்டகட்டளைக்கான உரையாடல்பெட்டியிருந்தால் திரையில் தோன்றும் அதில் இயல்புநிலையில்  பொத்தான்9Button) பட்டிபெட்டி(Listbox) தேர்வுசெய்பெட்டி(Check box) ஆகியஏதேனும் ஒன்றின்மீது இடம்சுட்டியிருக்கும் பின்னர் Tab என்ற விசையை தட்டினால் அடுத்தவாய்ப்பிற்கு இடம்சுட்டி முன்னோக்கி தாவிச்செல்லும்.
    Shift + Tab என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தியவுடன் முந்தைய வாய்ப்பிற்கு இடம்சுட்டி பின்னோக்கி தாவிச்செல்லும். இவ்வுரையாடல் பெட்டியில் குறிப்பிட்ட வாய்ப்பின்மீது இடம்சுட்டியிருக்கும்போது . உள்ளீட்டு விசையை(Enter key) அழுத்தினால் குறிப்பிட்ட வாய்ப்பின் கட்டளை செயற்படுத்தப்படும்.

No comments:

Post a Comment