Friday, June 21, 2013

ஓப்பன் ஆஃபிஸ் தொடர் -பகுதி -92




பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் விரைவாக அச்சிடுவதற்கும் விரைவாக பிடிஎஃப் கோப்பாக உருமாற்றுவதற்கும் மேலே கருவிகளின் பட்டியலில் உள்ள இதற்கான Print File Directly , Export Directly as PDF என்ற உருவபொத்தான்களை (படம்-92.1) தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பிய பணிக்கான செயல் நடைபெறும்.

படம்-92.1
துமட்டுமல்லாது அச்சிடும் பணியின் ஒவ்வொரு செயல்களையும் நாம் விரும்பிய வாறு மாற்றியமைப்பதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள File => Print=>  என்ற வாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் Print என்ற உரையாடல்(படம்-92.2)  பெட்டியில் General ,என்ற அனைத்து பயன்பாடுகளிலும் உள்ள பொதுவான முதல் தாவியின் திரையும் அதற்கு அடுத்ததாக அந்தந்த பயன்பாட்டிற்கு ஏற்ப openoffice writer ,open office calc  ,என்ற தாவியின் திரையும், மூன்றாவதாக அந்தந்த பயன்பாட்டிற்கு ஏற்ப page layout  என்ற தாவியின்திரையும் நான்காவதாக options என்ற தாவியின்திரையும் அமைந்திருக்கும் அவற்றுள்  General என்ற தாவியின் திரையில் அச்சுபொறியின் பெயர் ,ஆவணத்தின் அனைத்து பகுதிகளுமா? அல்லது குறிப்பிட்ட பகுதியா? எத்தனை நகல் போன்றவிவரங்களை தெரிவுசெய்துகொண்டு  Print என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக .உடன் நாம் தெரிவுசெய்தவாறு ஆவணமானது அச்சிடபெறும்.




 
படம்-92.2
 பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்திடும்போது அதன் உள்ளடக்கங்கள், தரம் ஆகியன எவ்வாறு இருக்கவேண்டும் என அமைப்பதற்காக ,  மேலே கட்டளை பட்டையிலுள்ள File => Export as PDF=>  என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் PDF Options என்ற உரையாடல்(படம்-92.3)  பெட்டி திரையில் தோன்றிடும் 
 

படம்-92.3
அதில் General ,என்ற தாவியின் திரையில் எந்த பகுதியை பிடிஎஃப் ஆக உருமாற்ற  விரும்புகின்றோம்? படங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? படிவம் எவ்வாறு இருக்கவேண்டும்? என்பனபோன்ற விவரங்களை இயல்பு நிலையில் இருப்பதை ஆமோதித்திடுக அல்லது நம்விருப்பபடி மாற்றியமைத்திடுக.  initial view என்ற தாவியின் திரையில் பலகம், உருபெருக்க அமைவு ,பக்கவடிவமைப்பு ஆகியவை இயல்பு நிலையில் இருப்பதை ஆமோதித்திடுக அல்லது நம்விருப்பபடி மாற்றியமைத்திடுக .

படம்-92.4
 இதே உரையாடல்பெட்டியில் user interface  என்ற தாவியின்(படம்-92.4) திரையில் பயன்பாட்டாளரின் இடைமுகம் எவ்வாறு அனுமதிப்பது என அமைத்திடுக
மிகமுக்கியமாக Security என்ற தாவியின் (படம்-92.4)திரையில் set open password ,set permission password ஆகிய இரண்டு பொத்தான்களையும் அழுத்துவதன்மூலம் நாம் உருவாக்க விருக்கும் பிடிஎஃப் கோப்பினை  கடவுச்சொற்களின் மூலமாக மட்டுமே திறக்கமுடியும் என அமைத்து  பிடிஎஃப் கோப்பின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள முடியும் இவ்வாறு அனைத்தும் அமைவுசெய்தபின் இறுதியாக  Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பியவாறு பிடிஎஃப் கோப்பாக உருமாற்றிடும்  செயல் நடைபெறும்.
  ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளின் ஆவணத்தையும் நேரடியாக மின்னஞ்சலாக அனுப்பிடமுடியும் அதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள File => send=>  என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் சிறு பட்டியில்(படம்-92.5) document as E-mail,E-mail as open document text ஆகிய இரண்டு வாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக (இவையிரண்டு வாய்ப்புகளும் ஒரே மாதிரியான பணியையே செய்கின்றன)உடன் தோன்றிடும் இயல்புநிலையின் மின்னஞ்சல் பயன்பாட்டில் ,இம்மின்னஞ்சலை பெறுபவரின் மின்னஞ்சல் முகவரி நாம் மின்னஞ்சலாக அனுப்பிடும் கோப்பின் சுருக்க விவரம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தபின் அனுப்பிவைத்திடலாம்.
 

 படம்-92.5
 E-mail as Microsoft word என்ற வாய்ப்பு வாயிலாக மின்னஞ்சல் அனுப்பிட முனையும்போது ஆவணமானது முதலில் மைக்ரோசாப்ட் ஆவணமாக உருமாற்றம் செய்து அதன்பின் மின்னஞ்சலாக அனுப்பிவிடும்  அவ்வாறே E-mail as PDF என்ற வாய்ப்பானது அனுப்பிடும் ஆவணத்தை முதலில்  பிடிஎஃப் ஆவணமாக உருமாற்றம் செய்து அதன்பின் மின்னஞ்சலாக அனுப்பிவிடும்
 மின்னஞ்சலை பெறுபவர்கள் ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் எனில்  ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் உள்ள Mail Merge Wizardஎன்ற வாய்ப்பினை பயன்படுத்தி கொள்க .
இதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ளTools => Mail Merge Wizard=>  என்றவாறு கட்டளைகளை  தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் விரியும் Mail Merge Wizard என்ற உரையாடல் பெட்டியின் முதல் பக்கத்தில் Use the current document என்றவாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-92.6
  பின்னர் விரியும் இரண்டாவது திரையில்(படம்-92.6)  E-mail messageஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு next என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அதன்பின்னர் தோன்றிடும் மூன்றாவது திரையில் Select Address List என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியலில் தேவையான முகவரிகளை தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இவ்வாறே next ,nextஎன்றவாறு பொத்தானை ஏழுபடிமுறைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் எட்டாவது படிமுறையாக இந்த உரையாடல் பெட்டியின் இடதுபுறபலகத்தில் உள்ள 8. Save, print or send என்ற வாய்ப்பின் படிமுறையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் வலதுபுற பலகத்தில் Send merged document as E-Mail என்ற (படம்-92.7)வாய்ப்பை தெரிவு செய்து கொண்டு Send documents என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் பட்டியலில் உள்ள அத்துனை மின்னஞ்சல் முகவரிகளுக்கும் இந்த  ஆவணத்தை மின்னஞ்சலாக அனுப்பி வைத்துவிடும் .
  படம்-92.7

Thursday, May 23, 2013

ஓப்பன் ஆஃபிஸ் தொடர் -பகுதி -91 இணைய பக்கத்தை உருவாக்குதல்




  ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களில் உரையை அல்லது எழுத்துகளை கொண்டு இணைய முகவரியை அல்லது யூஆர்எல் முகவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்திடவுடன் அச்சொற்றொடரை இளநீலவண்ணமாகவும்கீழ்கோடிட்டும்  மேல்மீட்பு முகவரியாக தானாகவே உருமாறி தோன்றுமாறு செய்யவேண்டும் அவ்வாறு உருமாறவில்லையெனில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => AutoCorrectOption =>Options => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக .உடன் தோன்றிடும் AutoCorrect என்ற உரையாடல் பெட்டியில்Options என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அந்த திரையை தோன்றசெய்க பின்னர் Options என்ற தாவியின் திரையில்(படம்-91-1) URL Recognition என்ற வாய்ப்பை தெரிவு செய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-91-1
இவ்வாறு தானாகவே உருமாறவேண்டாம் என எண்ணினால் உடன் மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit => Undo Insert=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக அல்லது Ctrl+Zஎன்றவாறு விசைப்பலகையிலுள்ள விசைகளை சேர்த்து அழுத்துக உடன் இந்த தானியிங்கி செயல் நிறுத்தம் செய்யபட்டுவிடும்
  அல்லது தற்போது ஆவணங்களில் உள்ள உரையை அல்லது எழுத்துகளை இணைய முகவரியாக அல்லது யூஆர்எல் முகவரியாக மாற்றம் செய்வதற்காக மேலே கருவிபட்டையிலுள்ள இதற்கான  

என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளைபட்டையிலுள்ள Insert => Hyperlink=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் திரையில் விரியும்(படம்-91-2) Hyperlink என்ற உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் உள்ள Internet,Mail & News,Document,New documentஆகியவாய்ப்புகளில் நாம் தெரிவுசெய்யும் வாய்ப்புகளுக்கேற்ப வலதுபுற பலகத்தின் தோற்றம் மாறியமையும் முதல் வாய்ப்பு http:// எனத்தொடங்கும்  ( Web, FTP , Telnet)ஆகிய இணயமுகவரி உள்ளீடு செய்வதாகும்.
 இரண்டாவது வாய்ப்பு Mail , News ஆகிய விவரங்களை குறிப்பதாகும்  மூன்றாவது வாய்ப்பு  ஆனது நடப்பிலுள்ள குறிப்பிட்ட ஆவணத்தோடு இணைப்பை ஏற்படுத்தஉதவும் வசதியாகும் நான்காவது வாய்ப்பு புதிய ஆவணத்திற்கான இணைப்பை ஏற்படுத்தஉதவும் வசதியாகும்
இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலிருக்கும் settings என்ற பகுதி மேலேகூறிய அனைத்து வாய்ப்பிற்கும் பொதுவான அமைப்பாகும்  இவைகளில் தேவையான வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி மேல் இணைப்பு உருவாக்கியபின் Apply,ok ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கி  தற்போது ஆவணங்களில் உள்ள உரையை அல்லது எழுத்துகளை இணைய முகவரியாக அல்லது யூஆர்எல் முகவரியாக உருமாற்றம் செய்துகொள்க

படம்-91-2
ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தை ஒரு இணையபக்கமாக உருமாற்றுதல்
 ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தின் ஒற்றை பக்கத்தை இணையபக்கமாக உருமாற்றுவதற்கான மிக எளியவழி மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Web Layout=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துவதுதான் அல்லது மேலேகட்டளைபட்டையிலுள்ள File => SaveAs=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தியபின் தோன்றிடும்  Save As என்ற உரையாடல் பெட்டியில் HTML Document என்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவு செய்து கொண்ட பின்னர் வழக்கமாக கோப்பினை சேமிப்பதற்கான வழிமுறைகளை அப்படியே பின்பற்றிடுக 
ஒன்றுக்குமேற்பட்ட  ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தின் பக்கங்களை இணைய பக்கங்களாக உருமாற்றிட
முதலில் நாம் உருமாற்றிட விரும்பும் அந்த ஆவணத்தின்  தலைப்புகள் ஒரே பாவணையாக(style) இருக்கின்றதாவென உறுதிபடுத்திகொள்க
 பின்னர் மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Send => Create HTML Document=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
 உடன்தோன்றிடும் உரையாடல் பெட்டியில் (படம்-91-3)  இந்த கோப்பிற்கான பெயரை skwebpageஎன்றவாறு தெரிவுசெய்து கொள்க பிறகு படிமுறை 1-ல் கூறியவாறு இந்த ஆவணத்தின் பாவணையை(style) தெரிவுசெய்து கொள்க 
அதன்பின்னர் Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஒன்றுக்கு மேற்பட்டஇணைய பக்கங்களாக உருமாற்றி சேமித்து கொள்க

படம்-91-3
வித்தகரை(wizard) பயன்படுத்தி இணைய பக்கங்களாக உருமாற்றுதல்
 இதற்காக மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Wizards => Web Page=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
 உடன் திரையில் தோன்றிடும் Web Wizards என்ற உரையாடல் பெட்டியில் இயல்புநிலையில் உள்ள அல்லது தேவையான அமைவை (settings) தெரிவுசெய்து கொண்டு Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  அடுத்து தோன்றிடும் அடுத்த படிமுறையின் திரையில்(படம்-91-4) Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  தேவையான ஆவணத்தை  தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு Title, Summary, Author informationஆகிய விவரங்களை அந்த ஆவணத்தின் பண்பியல்பிலிருந்து    தெரிவு செய்து கொள்க தேவையெனில் இவைகளை மாறுதல் செய்து திருத்தி அமைத்துகொள்க பின்னர்Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக


படம்-91-4
 பின்னர் தோன்றிடும் திரையில் தேவையான புறவடிவமைப்பிற்காக(layout) தயார்நிலையில் இருக்கும் புறவடிவமைப்பு பெட்டிகளில்(layoutbox) நமக்கு விருப்பமான ஒன்றை தெரிவுசெய்து கொண்டு Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  
 அடுத்து தோன்றிடும் திரையில் பட்டியலிடப்படும் விவரங்கள் எவையெவை என்றும் திரையின் துல்லியத்தையும் தெரிவுசெய்துகொண்டு Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 பின்னர் விரியும் திரையில் இணைய பக்கத்தின் பாவணை(style) வண்ணங்களின் கலவை(color combinations)  ஆகிய விவரங்களை அதற்கான கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தெரிவுசெய்து கொள்க அவ்வாறே இணைய பக்கத்தின் பின்புல வண்ணம், உருவதோற்றம் ஆகியவற்றை அதற்கான பட்டியல்களிலிருந்து தெரிவுசெய்துகொண்டு Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 அடுத்து தோன்றிடும் திரையில் Title . HTML Metadataஆகிய பொது விவரங்களை உள்ளீடு செய்துகொண்டுNext.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இறுதியாக தோன்றிடும் திரையில்(படம்-91-5) தேவையெனில் முன்காட்சியாக கண்டு திருப்பதியுற்றால் இந்த கோப்பினை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு  Finish.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  

படம்-91-5
ஓப்பன் ஆஃபிஸின் கால்க் விரிதாளை  இணைய பக்கங்களாக உருமாற்றுதல்
 மேலேகட்டளைபட்டையிலுள்ள File => SaveAs=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தியபின் தோன்றிடும்  SaveAs என்ற உரையாடல் பெட்டியில் HTML Documentஎன்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவுசெய்துகொண்ட பின்னர் வழக்கமாக கோப்பினை சேமிப்பதற்கான வழிமுறைகளை அப்படியே பின்பற்றிடுக
 அல்லது மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Wizards => Web Page=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக பின்னர் ஒவ்வொரு படிமுறையிலும் Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் கூறிய படிமுறைகளை பின்பற்றிடுக
 ஓப்பன் ஆஃபிஸின் பிரஸன்டேசன் கோப்பினை இணைய பக்கங்களாக உருமாற்றுதல்
 மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Export=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தியபின் தோன்றிடும்  Export என்ற உரையாடல் பெட்டியில் macromedia Flash (.sfh)என்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவுசெய்துகொண்ட பின்னர் வழக்கமாக கோப்பினை சேமிப்பதற்கான வழிமுறைகளை அப்படியே பின்பற்றிடுக
 அல்லது மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Export => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் Export என்ற உரையாடல் பெட்டியில்   HTML Document என்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவுசெய்து கொள்க 
அதன் பின்னர் இந்த கோப்பு சேமிக்கவிருக்கும் மடிப்பகம்  கோப்பின் பெயர் ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டு  Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  HTML Export என்ற வித்தகர் திரையில் நமக்கு வழிகாட்டிட தோன்றிடுவார்  பின்னர் ஒவ்வொரு படிமுறையிலும் Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் கூறிய படிமுறைகளை பின்பற்றிடுக  இறுதியாக  திருப்தியுற்றால் createஎன்ற (படம்-91-6)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  இணைய பக்கங்களாக உருமாற்றிகொள்க

படம்-91-6
ஓப்பன்ஆஃபிஸின் ட்ரா ஆவணத்தை இணைய பக்கங்களாக உருமாற்றுதல்
 மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Export => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக தோன்றிடும் Export என்ற உரையாடல் பெட்டியில்   HTML Document என்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவுசெய்து கொள்க
வித்தகரை பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு படிமுறையிலும் Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் கூறிய படிமுறைகளை பின்பற்றிடுக  இறுதியாக  திருப்தியுற்றால் createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  இணைய பக்கங்களாக உருமாற்றிகொள்க

Wednesday, May 8, 2013

ஓப்பன் ஆஃபிஸ்-90 மேக்ரோவை உருவாக்கி பயன்படுத்துதல் தொடர்ச்சி

  திரும்ப திரும்ப செய்யும் செயல்களை மேக்ரோவாக பதிவுசெய்து அதற்கொரு பெயரிட்டு கோப்பாக சேமித்து கொண்டு செயற்படுத்தலாம் என கடந்த தொடரில் அறிந்துகொண்டதை தொடர்ந்து C:\Documents and Settings\குப்பன்\Application Data. என்றவாறு பயனாளரின் பெயரிலுள்ள அடைவில் இந்த கோப்பானது சேமிக்கபடுகின்றது தற்காலிகமாக இந்த மேக்ரோவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த மேக்ரோ எங்கு சேமிக்கபடுகின்றது என்ற விவரம் தேவையில்லாததாகும். ஆனால் இந்த மேக்ரோவை மற்றவர்களுடன் பகிரந்து கொள்ளுதல் போன்ற நிகழ்வின்போது எங்கு சேமிக்கபடுகின்றது என தெரிந்துகொள்வது நல்லது மேலும் ஓப்பன் ஆஃபிஸை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திடும்போது இந்த மேக்ரோவானது நகலெடுக்கபடாமல் வன்தட்டில் அப்படியே விடப்பட்டுவிடும் அதனால் புதிய பதிப்பில் பழையபதிப்பில் உருவாக்கபட்ட மேக்ரோ எதையும் செயல்படுத்தமுடியாது இதற்கு தீர்வாக Tools => Macros => Organize => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக அல்லது Tools => Macros => Organize Macros => OpenOffice.org Basic=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் Organizer என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக OpenOffice.org Macros என்ற உரையாடல் பெட்டியை திறந்து கொள்க பிறகு அந்த உரையாடல் பெட்டியில் Importஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக முந்தைய பதிப்பில் உருவாக்கபட்ட மேக்ரோவை பதிவிறக்கம் செய்து கொள்க
ஒவ்வொருமுறையும் இந்த மேக்ரோவை இயக்குவதற்காக Tools => Macros => Run Macro => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் நாம் உருவாக்கிய மேக்ரோவானது மிகமெதுவாகவே இயங்கதுவங்கிடும் இதனை விரைவாக செயல்படுமாறு செய்திடுவதற்காக
Listing 3: Modify Main to call CopyNumToCol1.
Sub Main
CopyNumToCol1
End Sub
என்றவாறு மாற்றியமைத்தபின் கருவிபட்டையிலுள்ள Run Basic என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி மிகவிரைவாக இந்த மேக்ரோவை செயல்படுமாறு செய்யலாம்
அதற்கு பதிலாக கருவிபட்டையில் ஒரு கருவியாக அல்லது கட்டளை பட்டியில் ஒரு கட்டளையாக அல்லது விசைப்பலகையின் ஒரு குறுக்குவழி பொத்தானாக உருவாக்கி அதனை செயற்படுத்துவதன் வாயிலாக இந்த மேக்ரோவை இயக்கமுடியும் இதற்காக Tools => Customize=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உடன் தோன்றிடும் Customize என்ற உரையாடல் பெட்டியில் toolbars,Menus, Keyboard, event ஆகிய தாவிகளின் பொத்தான்களில் நாம்விரும்பும் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கி தொடர்புடைய தாவியின் திரையை தோன்றசெய்க அதில் தேவையான வாறு கட்டளைகளை அல்லது செயல்களை ஒதுக்கீடு செய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. இந்த Customize என்ற உரையாடல் பெட்டியின் செயல்முறை தொடர்பான விவரத்தை மேலும் விரிவாக அடுத்த தொடரில் காண்போம்
குறிப்பு இங்குமேக்ரோவைபற்றி அறிமுகம் மட்டுமே செய்யபடுகின்றது மிகஆழ்ந்து செல்வதற்கான செய்முறையை இங்கு குறிப்பிடவில்லை என்பதை மனதில்கொள்க .
விரிவாக்க செயல்கள்(extensions)இந்த ஓப்பன் ஆஃபிஸின் ஒவ்வொரு பயன்பாட்டிலும் குறிப்பிட்ட வசதிகள் பொதுவாக வழங்கபட்டுள்ளன அதற்குமேலும் Calc Add-Ins , Chart Add-Ins போன்ற வசதிகள் தேவையெனில் http://extensions.services.openoffice.org/. என்ற இணையதளத்திற்கு சென்று நமக்கு தேவையான வசதிகளின் விரிவாக்கங்களை பதிவிறக்கம் செய்து ஓப்பன் ஆஃபிஸின் கூடுதல் வசதிகளை விரிவுபடுத்தி கொள்ள முடியும்
கடந்த தொடரில் பார்த்தவாறு கட்டளைவரிகளின் குறிமுறைகளை கைகளால் எழுதாமலேயே macro recorder உதவியுடன் திரும்ப திரும்ப செய்யபடும் செயல்களை மேக்ரோவாக பதிவுசெய்து பயன்படுத்திடமுடியும் என அறிந்து கொண்டதை தொடர்ந்து அவ்வாறு செய்ய முயலும்போது ஒருசில நேரங்கலில் macro recorder செயல்படவில்லையெனில் Tools => Macros => Organize Macros => OpenOffice.org Basic => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் OpenOffice.org Basic உரையாடல் பெட்டியில் new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் திரையில் மேக்ரோவின் கட்டளைவரிகளை நேரடியாக தட்டச்சு செய்து செயற்படுத்திடுவதுதான் மாற்றுவழியாகும் . மேலும் மேக்ரோ தேவையெனில் இதே உரையாடல் பெட்டியில் OpenOffice.org library container என்ற பகுதியில் தயாராக உள்ளவைகளில் தேடிபிடித்து தேவையானதை தெரிவுசெய்து பயன்படுத்திகொள்க அதுமட்டுமல்லாது http://www.pitonyak.org/AndrewMacro.odt என்ற இணைய தளபக்கத்திற்கு சென்று தேவையானதை தெரிவுசெய்து கொள்க