மற்ற ஓப்பன் ஆஃபிஸ் பயன்பாடுகளை போன்றே ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கிலும் கட்டளை பட்டி,கருவிபட்டி ,சுருக்குவழிவிசை போன்றவைகளை ஏற்கனவே இருப்பதை நாம்விரும்பியவாறு இதிலுள்ள Tools => Customize => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது OpenOffice.org என்ற இணையதளம் ஆகியவற்றின் மூலம் மாறுதல் செய்யவும் நாம் விரும்பியவாறு இவைகளை புதியதாக சேர்க்கவும் முடியும்
அதற்காகTools => Options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் உரையாடல் பெட்டியின் இடப்புறபலகத்தில் பொதுவாக தோன்றும் Load/Save – General என்ற வாய்ப்பின் + என்ற குறியை சொடுக்குவதன் மூலம் விரிவடையும் வாய்ப்புகளுடன் தொடர்புடைய துனைவாய்ப்புகள் வலப்புற பலகத்தில் விரிவடையும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு வசதிகளும் வய்ப்புகளும அங்கு பிரதிபலிக்கும் அவற்றுள் நமக்கு தேவையான வற்றை மட்டும் தெரிவு செய்து செயற்படுத்தி கொள்ளலாம்
படம்-48.1
மிகமுக்கியமாக Load/Save – Microsoft Office என்றவாய்ப்பை தெரிவுசெய்தவுடன் தோன்றிடும் ( படம்-48.1)திரையின் வலப்புறபலகத்தின் பட்டியலில் எந்தெந்த மைக்ரோசாப்ட் அலுவலக பயன்பாடுகளுக்கு L என்பதை தெரிவுசெய்துள்ளோமோ அவைகளைமிக எளிதாக ஒப்பன் ஆஃபிஸில் திறந்து பணிபுரிய முடியும்.அவ்வாறே எந்தெந்த மைக்ரோசாப்ட் அலுவலக பயன்பாடுகளுக்கு S என்பதை தெரிவு செய்துள்ளோமோ அவைகளாக ஒப்பன் ஆஃபிஸின் அமைவிலிருந்து சேமிக்கமுடியும்
படம்-48.2
Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Customizeஎன்ற ( படம்-48.2)உரையாடல் பெட்டியில் menu,keyboard,toolbar,events என்பன போன்ற வாய்ப்புகளின் திரையில் new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் newmenu / toolbar என்ற ( படம்-48.2)உரையாடல் பெட்டியில் தேவையான புதியதை உள்ளீடு செய்து எந்தஇடத்தில் வேண்டுமென அமைவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்கி சேர்த்துகொள்க
தேவையானால்Customizeஎன்ற உரையாடல் பெட்டியில் modify என்ற பொத்தானை சொடுக்குவதன் மூலம் இவைகளை சரிசெய்யவும் Customizeஎன்ற உரையாடல் பெட்டியில்Delete என்ற பொத்தானை அழுத்துவதன்மூலம் தேவையற்றதை நீக்கம் செய்யவும் முடியும்
படம்-48.3
ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில் ஏதேனும் விவரங்களை தட்டச்சு செய்திடும்போது முதல்எழுத்தினை உள்ளிட ஆரம்பித்தவுடனேயே தொடர்புடைய சொற்கள் தானாகவே நிரப்பி கொள்வதாக திரையில் தோன்றும் தேவையெனில் ஏற்கலாம் இல்லையெனில் தொடர்ந்து தட்டச்சு செய்துவரலாம் இவ்வாறான தானாகவே சொற்களை நிரப்பிகொள்ளும் வசதியை கட்டுபடுத்துவதற்காக Auto Correct என்ற வாய்ப்பு உதவுகின்றது
இதற்காக Tools => AutoCorrect=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் AutoCorrectஎன்ற உரையாடல் பெட்டியில் ( படம்-48.3)தேவையான வாய்ப்பை சரிசெய்து கொள்க
இதற்காக Tools => AutoCorrect=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் AutoCorrectஎன்ற உரையாடல் பெட்டியில் ( படம்-48.3)தேவையான வாய்ப்பை சரிசெய்து கொள்க
ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் இருக்கும் வசதி போதுமானதாகஇல்லை எனும்போது http://extensions.services.openoffice.org/. என்ற தளத்திற்கு சென்று தேவையான விரிவாக்க வசதியை பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்தி கொள்ளமுடியும்
இதற்காக மேலேகூறிய தளத்திற்கு சென்று தேவையானதை பதிவிறக்கம் செய்து கணினியில் சேமித்துகொள்க
பின்னர்Tools => Extension Manager =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் add என்ற பொத்தானை சொடுக்குக
அதன் பின்னர் விரியும் சாளரத்தில் பதிவிறக்கம் செய்து சேமித்துள்ள கோப்பினை தேடிபிடித்து தெரிவுசெய்து open என்ற பொத்தானை சொடுக்குக உடன் தேவையான விரிவாக்க வசதி கணினி்யில் நிறுவப்பட்டுவிடும்
இதன் பிறகு Extension Manager என்ற உரையாடல் பெட்டியில் நம்முடைய கணினியில் நிறுவப்பட்ட விரிவாக்க வசதிகளை பட்டியலாக (படம்-48.4)காண்பிக்கும்
படம்-48.4
இவ்வாறு ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் இல்லாத வசதிகளை இதனுடைய விரிவாக்கதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தும் நமக்குத்தேவையான நாம் விரும்பியவாறான வசதிகளை Customize ,வசதி மூலம் நிறுவியும் பயன்படுத்தி கொள்ளமுடியும்
நன்றி தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்
நன்றி தமிழ் கம்யூட்டர் மாதமிருமுறை இதழ்