திரும்ப
திரும்ப செய்யும் செயல்களை
மேக்ரோவாக பதிவுசெய்து
அதற்கொரு பெயரிட்டு கோப்பாக
சேமித்து கொண்டு செயற்படுத்தலாம்
என கடந்த தொடரில் அறிந்துகொண்டதை
தொடர்ந்து C:\Documents
and Settings\குப்பன்\Application
Data. என்றவாறு
பயனாளரின் பெயரிலுள்ள அடைவில்
இந்த கோப்பானது சேமிக்கபடுகின்றது
தற்காலிகமாக இந்த மேக்ரோவை
பயன்படுத்துபவர்களுக்கு
இந்த மேக்ரோ எங்கு சேமிக்கபடுகின்றது
என்ற விவரம் தேவையில்லாததாகும்.
ஆனால்
இந்த மேக்ரோவை மற்றவர்களுடன்
பகிரந்து கொள்ளுதல் போன்ற
நிகழ்வின்போது எங்கு
சேமிக்கபடுகின்றது என
தெரிந்துகொள்வது நல்லது
மேலும் ஓப்பன் ஆஃபிஸை புதிய
பதிப்பிற்கு மேம்படுத்திடும்போது
இந்த மேக்ரோவானது நகலெடுக்கபடாமல்
வன்தட்டில் அப்படியே
விடப்பட்டுவிடும் அதனால்
புதிய பதிப்பில் பழையபதிப்பில்
உருவாக்கபட்ட மேக்ரோ எதையும்
செயல்படுத்தமுடியாது இதற்கு
தீர்வாக Tools
=> Macros => Organize =>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துவதன்
வாயிலாக அல்லது Tools
=> Macros => Organize Macros => OpenOffice.org Basic=>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்தியபின்
தோன்றிடும் உரையாடல் பெட்டியில்
Organizerஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குவதன்வாயிலாக
OpenOffice.org
Macros என்ற
உரையாடல் பெட்டியை திறந்து
கொள்க பிறகு அந்த உரையாடல்
பெட்டியில் Importஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குவதன் வாயிலாக முந்தைய
பதிப்பில் உருவாக்கபட்ட
மேக்ரோவை பதிவிறக்கம் செய்து
கொள்க
ஒவ்வொருமுறையும்
இந்த மேக்ரோவை இயக்குவதற்காக
Tools
=> Macros => Run Macro =>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்தியவுடன்
நாம் உருவாக்கிய மேக்ரோவானது
மிகமெதுவாகவே இயங்கதுவங்கிடும்
இதனை விரைவாக செயல்படுமாறு
செய்திடுவதற்காக
Listing
3: Modify Main to call CopyNumToCol1.
Sub
Main
CopyNumToCol1
End
Sub
என்றவாறு
மாற்றியமைத்தபின் கருவிபட்டையிலுள்ள
Run
Basic என்ற
உருவபொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கி மிகவிரைவாக இந்த
மேக்ரோவை செயல்படுமாறு
செய்யலாம்
அதற்கு
பதிலாக கருவிபட்டையில் ஒரு
கருவியாக அல்லது கட்டளை
பட்டியில் ஒரு கட்டளையாக
அல்லது விசைப்பலகையின் ஒரு
குறுக்குவழி பொத்தானாக
உருவாக்கி அதனை செயற்படுத்துவதன்
வாயிலாக இந்த மேக்ரோவை
இயக்கமுடியும் இதற்காக Tools
=> Customize=>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
உடன்
தோன்றிடும் Customizeஎன்ற
உரையாடல் பெட்டியில்
toolbars,Menus,
Keyboard, event ஆகிய
தாவிகளின் பொத்தான்களில்
நாம்விரும்பும் ஒன்றை
தெரிவுசெய்து சொடுக்கி
தொடர்புடைய தாவியின் திரையை
தோன்றசெய்க அதில் தேவையான
வாறு கட்டளைகளை அல்லது செயல்களை
ஒதுக்கீடு செய்து okஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக.
இந்த
Customizeஎன்ற
உரையாடல் பெட்டியின் செயல்முறை
தொடர்பான விவரத்தை மேலும்
விரிவாக அடுத்த தொடரில்
காண்போம்
குறிப்பு
இங்குமேக்ரோவைபற்றி அறிமுகம்
மட்டுமே செய்யபடுகின்றது
மிகஆழ்ந்து செல்வதற்கான
செய்முறையை இங்கு குறிப்பிடவில்லை
என்பதை மனதில்கொள்க .
விரிவாக்க
செயல்கள்(extensions)இந்த
ஓப்பன் ஆஃபிஸின் ஒவ்வொரு
பயன்பாட்டிலும் குறிப்பிட்ட
வசதிகள் பொதுவாக வழங்கபட்டுள்ளன
அதற்குமேலும் Calc
Add-Ins , Chart Add-Ins போன்ற
வசதிகள் தேவையெனில்
http://extensions.services.openoffice.org/.என்ற
இணையதளத்திற்கு சென்று நமக்கு
தேவையான வசதிகளின் விரிவாக்கங்களை
பதிவிறக்கம் செய்து ஓப்பன்
ஆஃபிஸின் கூடுதல் வசதிகளை
விரிவுபடுத்தி கொள்ள முடியும்
கடந்த
தொடரில் பார்த்தவாறு
கட்டளைவரிகளின் குறிமுறைகளை
கைகளால் எழுதாமலேயே macro
recorder உதவியுடன்
திரும்ப திரும்ப செய்யபடும்
செயல்களை மேக்ரோவாக பதிவுசெய்து
பயன்படுத்திடமுடியும் என
அறிந்து கொண்டதை தொடர்ந்து
அவ்வாறு செய்ய முயலும்போது
ஒருசில நேரங்கலில் macro
recorder செயல்படவில்லையெனில்
Tools =>
Macros => Organize Macros => OpenOffice.org Basic =>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
உடன் தோன்றிடும் OpenOffice.org
Basicஉரையாடல்
பெட்டியில் new
என்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கியபின் தோன்றிடும்
திரையில் மேக்ரோவின் கட்டளைவரிகளை
நேரடியாக தட்டச்சு செய்து
செயற்படுத்திடுவதுதான்
மாற்றுவழியாகும் .
மேலும்
மேக்ரோ தேவையெனில் இதே உரையாடல்
பெட்டியில் OpenOffice.org
library container என்ற
பகுதியில் தயாராக உள்ளவைகளில்
தேடிபிடித்து தேவையானதை
தெரிவுசெய்து பயன்படுத்திகொள்க
அதுமட்டுமல்லாது
http://www.pitonyak.org/AndrewMacro.odtஎன்ற
இணைய தளபக்கத்திற்கு சென்று
தேவையானதை தெரிவுசெய்து
கொள்க
பிற்காலத்தில் பயன்படுத்தலாம் என சேமித்து
வைத்துள்ள வரிசையான கட்டளைவரிகள் அல்லது விசைப்பலகையின் விசையை அழுத்துவதால்
செயற்படுத்தப்படும் செயல்கள் ஆகியவையே மேக்ரோ ஆகும்.இந்த ஓப்பன் ஆஃபிஸின்
மேக்ரோவானதுமிகச்சாதாரண மானதும்
சிக்கலானமானதுமான தானியங்கி செயல்களை நெகிழ்வு தன்மையுடன் அனுமதிக்கின்றது.
பொதுவாக ஒரேமாதிரியான திரும்ப திரும்ப செய்யக்கூடிய செயல்களை
செயற்படுத்துவதற்காக மட்டும் இந்த மேக்ரோ பயன்படுகின்றது .
இந்த
ஓப்பன் ஆஃபிஸின் மேக்ரோவானது வழக்கமாக பேஸிக்மொழி என அழைக்கபடும் ஸ்டார்
பேஸிக்கின் மொழியில் எழுதபடுகின்றது புதியவர்கள் கூட இந்தபேஸிக்மொழியை மிகச்சுலபமாக அறிந்துகொண்டு
மிகஎளிதாக மேக்ரோவை எழுதமுடியும் பெரும்பாலும் புதியவர்கள் இதில் முன்கூட்டியே
கட்டமைக்கப்பட்ட மேக்ரோ பதிவாளர் வாயிலாகஅல்லது விசைப்பலகையின் விசையை அழுத்துவதால் செயற்படுத்தப்படும் செயல்கள்
ஆகியவைகளை பதிவுசெய்து மேக்ரோவாகசேமித்துகொண்டு பின்னர் செயற்படுத்தமுடியும் பெரும்பாலான ஓப்பன் ஆஃபிஸின்
மேக்ரோவானது கட்டளைகளை செயற்படுத்துவதற்காக அனுப்புதல் என்ற கொள்கைக்கு ஏற்ப
ஒத்தியங்குகின்றது
பொதுவாக
நாம் நகலெடுத்தல் அல்லது வெட்டுதல்பின்னர் ஒட்டுதல் ஆகிய செயல்களின் கட்டளைகள் கிளிப்போர்டு என்ற பகுதியில்
சேமிக்கபட்டு பின்னர் அதேசெயலை தேவைப்படும் போதெல்லாம் செயற்படுத்துவதற்கேதுவாக
தயார்நிலையில் உள்ளனஅதேபோன்றே திரும்ப
திரும்ப செய்யபடும் செயல்களை முதலில் அதனை ஒருமுறை மட்டும் செயற்படுத்தி
பதிவுசெய்து சேமித்துகொண்டு பின்னர் அதனை இயக்கி செயற்படுத்திடமுடியும்அதற்காகமேலே கட்டளை பட்டையிலுள்ள Tools
=> Macros => Record Macro=> என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்துக உடன்89.1.1
Record எனும் சிறு சாளரம் திரையில்
தோன்றி
நாம்
செய்யும் செயலை மேக்ரோவாக பதிவுசெய்ய தயாராக நிற்கும் உடன் ச.குப்பன் என்ற வாறு ஏதேனும் சில
எழுத்துகளை அல்லது சொற்களை தட்டச்சு செய்து stop
recording எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகபின்னர் இந்த மேக்ரோவை சேமித்து ஓப்பன் ஆஃபிஸ்
பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியை படம்-1-ல் உள்ளவாறு
திரையில் பிரதிபலிக்க செய்க
படம்-1
பின்னர்
save macro என்ற
நூலக உள்ளடக்கங்களுக்குள் my macros என்பது இருக்கும்
அதன்கீழ் standardஎன்பதும் இருக்கும்வலதுபுறமுள்ள new moduleஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் new moduleஎன்ற
சிறு உரையாடல்பெட்டியில்module1என்று இயல்புநிலையில் இருக்கும்
அதற்கு Recordedஎன்றவாறு ஒரு பெயரை உ்ள்ளீடுசெய்துok
என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை
மூடிவிடுக அவ்வாறேஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்
மேக்ரோ உரையாடல் பெட்டியின் வலதுபுறத்தில் உள்ளmacro name என்பதற்கு Enter
My Nameஎன்றவாறு ஒரு
பெயரைஉ்ள்ளீடுசெய்துSaveஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த மேக்ரோவை சேமித்து கொள்க. இப்போது இந்த உரையாடல் பெட்டியில் மேக்ரோவின் பெயரானது படம்-2-ல் உள்ளவாறுEnter My
Nameஎன்று இருக்கும்
படம்-2
பின்னர் மேலே கட்டளை பட்டையில் Tools => Macros => Run Macro=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி படம்-2-ல்
உள்ளவாறு ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ
உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro
name என்பதின்கீழ் இருக்கும் நாம்
உருவாக்கியEnterMyNameஎன்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இதே மேக்ரோவை வேறு வழியிலும்
செயற்படுத்திடமுடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையில் Tools => Macros => Organize Macros=>OpenOffice.org Basic => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி படம்-2-ல் உள்ளவாறு
ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ
உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro
name என்பதின்கீழ் இருக்கும் நாம்
உருவாக்கியEnterMyNameஎன்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-3
பின்னர்நாம் எழுதாமலேயே தானாகவே உருவாகியஇந்த மேக்ரோ
கட்டளை தொடரானதுஎவ்வாறு இருக்கும் என
திரையில் நம் கண்களால் காண மேலே கட்டளை பட்டையில் Tools
=> Macros => Organize Macros=>OpenOffice.org Basic => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்திஓப்பன்
ஆஃபிஸ் பேஸிக் மேக்ரோ உரையாடல் பெட்டியை தோன்றசெய்து அதில் macro name என்பதின்கீழ்
இருக்கும் நாம் உருவாக்கியEnterMynameஎன்ற பெயரை தெரிவுசெய்து கொண்டு வலதுபுறமுள்ள Edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்படம்-3-ல் உள்ளவாறு mymacros&Dialog
standard openoffice.orgBasic என்ற உரையாடல் பெட்டிதிரையில்
தோன்றிடும் அதில் EnterMyname எனும் மேக்ரோவின் கட்டளைவரிகளானது பின்வரும்EnterMyname எனும் மேக்ரோ
நிரல்தொடர்-1-ல் உள்ளவாறுகட்டளைவரிகள் இருக்கும்.
EnterMyname எனும்
மேக்ரோ நிரல்தொடர்-1.
REM ***** BASIC *****
Sub Main
End Sub
sub EnterMyName
rem
-------------------------------------------------------------
rem define variables
dim document as object
dim dispatcher as object
rem
-------------------------------------------------------------
இந்த கட்டளைவரிகளை எழுதுவதற்காக நாம்
எந்தவொரு சிறப்பு பயிற்சியும் எடுத்து கொள்ள வில்லை மிகச்சாதாரணமாக நாம் செய்யும்
செயலைTools
=> Macros => Record Macro=> என்ற வாறு கட்டளைகளை செயற்படுத்தி
பதிவுசெய்துகொண்டபின் இந்த மேக்ரோவிற்கு ஒரு பெயரிட்டு சேமித்தோம் அவ்வளவுதான்
இதேபோன்றே நாம் விரும்பும் திரும்ப திரும்ப செய்யும் செயல்களைமேக்ரோவாகா பதிவுசெய்து பெயரிட்டு
சேமித்துகொண்டுசெயற்படுத்தி பயன்படுத்தி கொள்க .
ஓப்பன் ஆஃபிஸின் கூடுதல்
வசதிகளை கடந்த ஓப்பன் ஆஃபிஸ் -87-ல்
பார்த்து வந்தோம் இந்த தொடரில் ஓப்பன் ஆஃபிஸில் உள்ள மேலும் கூடுதல் வசதிகளை
பற்றிகாண்போம்ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களில்
உள்ள இணைய இணைப்பிற்கான இணைய முகவரியின் எழுத்துகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்
தொடர்புடைய இணைய பக்கம் திறப்பதற்கான இணைய இணைப்பின் தொடர்பை உடன்
வழங்கவேண்டும்அதற்காக தேவையான இணைய
முகவரியின் சொற்களைதட்டச்சு செய்தபின்
உள்ளீட்டு விசையை அழுத்துகஉடன்
அவ்வெழுத்துகளின் வண்ணம் வெளிர்நீலத்திலும் அடிக் கோடிட்டும் மீத்தொடுப்பை
அங்கீகரித்து மாறிவிடும்அவ்வாறு
மாறவில்லை யெனில் மேலே கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளில்Tools
=> AutoCorrect =>Options =>URL Recognition=>என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துகஉடன் AutoCorrect என்ற
உரையாடல் பெட்டியானது திரையில் தோன்றிடும் அதில் option என்ற
தாவியின் திரையை தோன்ற செய்க இந்த AutoCorrect என்ற உரையாடல்
(படம்-1) பெட்டியின் option என்ற தாவியின் திரையில் URL Recognition என்ற
வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு Okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
படம்-1
அதற்கு பதிலாக மேலே கருவிகளின்பட்டியில்
உள்ள
என்ற மீத்தொடுப்பிற்கானஉருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது
மேலே கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளில் Insert=> Hyperlink => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி
செயற்படுத்துகஉடன்Hyperlinkஎன்ற
உரையாடல் பெட்டி(படம்-2) திரையில் தோன்றிடும்
அதில் இடதுபுற பலகத்தில் இயல்புநிலையில் http://
எனத்தொடங்கும் இணைய முகவரியை அங்கீகரிக்கும்Internet: என்பது தெரிவுசெய்யபட்டிருக்கும் .மேலும்
இதிலுள்ளMail
& Newsஎன்ற வாய்ப்பு மின்னஞ்சல் முகவரியை குறிப்பது ஆகும்Document என்பது
அதே ஆவணத்தில் அல்லது அடுத்த ஆவணத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதற்கான
மீ்த்தொடுப்பாகும் NewDocumentஎன்பது புதிய ஆவணத்தை
உருவாக்குவதற்கான மீத்தொடுப்பாகும்
படம்-2
இந்த Hyperlinkஎன்ற உரையாடல் பெட்டியின் இடதுபுற
பலகத்தில்Internet என்ற
வாய்ப்பு தெரிவு செய்யபட்டிருந்தால்இதன்
வலதுபுற பலகத்தில் அதற்கானதிரைத் தோற்றம் மாறி அமையும் அதில் hyperlinktype
என்பதன் கீழ்Web,
FTP ,Telnetஆகியவற்றில்எந்த வகை இணைப்பு என அதற்கான வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு target
என்ற உரைபெட்டியில் சரியான இணைய முகவரியை தட்டச்சு செய்து கொள்க.
இடதுபுறபலகத்தில்Mail & News என்ற
வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால்வலதுபுற பலகத்தில்Mail ,
News என்பதன்கீழ்
தேவையான வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு Receiver என்ற
உரைபெட்டியில் அதற்கான முகவரியையும் subjectஎன்ற உரைபெட்டியில்அதற்கான விவரத்தையும் உள்ளீடுசெய்துகொள்க.
இடதுபுறபலகத்தில்Documents என்ற வாய்ப்பு
தெரிவுசெய்யபட்டிருந்தால்இதன் வலதுபுற
பலகத்தில்Documents என்பதன்கீழ்path என்ற உரைபெட்டியின் அருகிலுள்ள File என்ற
உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி யவுடன் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் அந்த
கோப்பு இருக்கும் இடத்தை தெரிவு செய்து கொண்டு Target in Documents என்பதன்கீழ் targetஎன்ற உரைபெட்டியில்அதற்கான
விவரத்தை உள்ளீடுசெய்துகொள்க.
இடதுபுறபலகத்தில்New Documents என்ற
வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருந்தால்வலதுபுற பலகத்தில்New
Documents என்பதன்கீழ்Edit
now, Edit later ஆகிய வானொலி பொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து
கொண்டு File என்ற உரைபெட்டியின் அருகிலுள்ள File என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி யவுடன் விரியும் உரையாடல்
பெட்டியில் அந்த கோப்பு இருக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு File
typeஎன்ற
உரைபெட்டியில்நகரும் பொத்தானை பிடித்து
நகர்த்தி text documents ,spread sheet போன்றவற்றில்ஒன்றைதெரிவுசெய்து கொள்க.
இறுதியாகஇந்த
அனைத்து வாய்ப்புகளிவும் Applyஎன்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக பின் closeஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த hyperlinkஎன்ற உரையாடல்
பெட்டியை மூடிவிடுக .
இந்த மீத்தொடுப்பை தேவையானால் மாற்றியமைத்திட இடம்சுட்டியை
அந்த சொற்களின் மீது வைத்து மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit=>Hyperlink=>
என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன்
விரியும் hyperlinkஎன்ற
உரையாடல் பெட்டியில் தேவையானவாறு மாறுதல்களை செய்தபின்Applyஎன்ற
பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக பின் closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த hyperlinkஎன்ற
உரையாடல் பெட்டியை மூடிவிடுக .
மேலே இதுவரை பார்த்து வந்தது
ஒப்பன் ஆஃபிஸின் பொதுவான செயலாகும் ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தை இணைய பக்கமாக
உருமாற்றம் செய்திடமேலே
கட்டளைபட்டையிலுள்ள view =>web layout=> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் திரைதோற்றம் ஆனதுஇணைய பக்கம் போன்று மாறியமையும்இந்த ஆவணத்தினை இணையபக்கமாக சேமித்திடமேலே கட்டளைபட்டையிலுள்ள file=>save
as=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
உடன்தோன்றிடும் save as என்ற உரையாடல் பெட்டியில்save
as type என்ற உரை பெட்டியில் html documents (.html) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு saveஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஒன்றிற்கு மேற்பட்ட
தொடர்ச்சியான பக்கங்களை இணைய பக்கங்களாக சேமித்திடமேலே கட்டளை பட்டையிலுள்ள File=>Send=>create
html documents=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி
செயற்படுத்துக உடன் தோன்றிடும் name and path of the html documentsஎன்ற உரையாடல் பெட்டியில் save
as type என்ற உரைபெட்டியில் html documents (.html) என்ற வாய்ப்பை தெரிவுசெய்து கொண்டு saveஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-3
இணைய பக்கத்தை உருவாக்குவதற்கான
வழிகாட்டியின் துனையை பின்பற்றி ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் ஒருஇணைய பக்கத்தை
உருவாக்குவதற்காகமேலே கட்டளைபட்டையிலுள்ள
File=>wizards=>webpage=> என்றவாறு கட்டளைகளை
தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் தோன்றிடும் web wizardsஎன்ற (படம்-3)உரையாடல் பெட்டியில்தேவையான
விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next என்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்கியபின் அடுத்ததிரையிலும் அவ்வாறேதேவையான விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு next
என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி கொண்டே இந்த உரையாடல்
பெட்டியில் கூறும் வழிமுறைகள பின்பற்றி வருக இறுதியாக அனைத்தும் சரியாக
இருக்கின்றது என திருப்தியுற்றால்இந்த
கோப்பினை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு Finishஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறு உருவாக்கிய இணைய பக்கத்தை மாறுதல்
செய்வதற்காகமேலே
கட்டளைபட்டையிலுள்ள view=>html source=> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துகஅல்லது மேலே கருவிகளின் பட்டையிலுள்ள html sourceஎன்ற
உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன்
தோன்றிடும் திரையில் தேவையானவாறு மாறுதல் கள் செய்து கொள்க.
ஓப்பன் ஆஃபிஸின் கால்க் என்ற பயன்பாட்டில்இதனை இணைய பக்கமாக மாற்றிட மேலே
கட்டளைபட்டையிலுள்ள file=>save as=> என்றவாறு கட்டளை களை
தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன்தோன்றிடும் save as என்ற உரையாடல் பெட்டியில்save as type என்ற
உரைபெட்டியில் html documents (.html) என்ற வாய்ப்பை
தெரிவுசெய்து கொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
அல்லது மேலே
கட்டளைபட்டையிலுள்ள File=>wizards=>webpage=> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் தோன்றிடும் web
wizardsஎன்ற (படம்-3)உரையாடல்பெட்டியில்வழிகாட்டி கோரும்
விவரங்களை உள்ளீடு செய்து கொண்டே இந்த வழிகாட்டி கூறும் வழிமுறைகளை பின்பற்றி வந்த
பின் இறுதியாகஅனைத்தும் சரியாக
இருக்கின்றது என திருப்தியுற்றால்இந்த
கோப்பினை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு Finishஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஓப்பன் ஆஃபிஸின்
இம்ப்பிரஸ் என்ற பயன்பாட்டில் ஆவணத்தை இணைய பக்கமாக உருமாற்றம்
செய்திடுவதற்காகமேலே கட்டளைபட்டியில்
உள்ள கட்டளைகளில் file=> Export=>
என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துகஉடன்Export
என்ற
உரையாடல் பெட்டியில்இதற்கான பெயரை
உள்ளீடு செய்து கோப்புகளின் வகைகளில் HTML Documents என்றவாறு
தெரிவுசெய்து கொண்டு save என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Documents =>என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துகஉடன்HTML
Exportஎன்ற (படம்-4)உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் தேவையான
விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next என்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்கியபின் அடுத்ததிரையிலும் அவ்வாறேதேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next
என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிகொண்டே இந்த வழிகாட்டிகூறும் வழிமுறைகளை பின்பற்றி கொண்டேவருகஇறுதியாக அனைத்தும் சரியாக இருக்கின்றது என திருப்தியுற்றால்இந்த கோப்பினை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து
கொண்டு createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குகஉடன் name HTML Design என்ற
சிறு உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் கோப்பின்பெயரை உள்ளீடு செய்துகொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
படம்-4
படம் வரைந்து அதனை திருத்தம்
செய்திட உதவும் ஓப்பன் ஆஃபிஸின் ட்ராஆவணத்தை இணைய பக்கமாக உருமாற்றம் செய்திடுவதற்காகமேலே கட்டளைபட்டியில் உள்ள கட்டளைகளில் file=> Export=> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துகஉடன்தோன்றிடும் Export
என்ற
உரையாடல் பெட்டியில்இதற்கான பெயரை
உள்ளீடு செய்து கோப்புகளின் வகைகளில் HTML Documents என்றவாறு
தெரிவுசெய்து கொண்டு save என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Documents =>என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துகஉடன்HTML Export
wizard என்ற உரையாடல் பெட்டிதோன்றிடும்
அதில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next என்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் அடுத்ததிரையிலும் அவ்வாறேதேவையான விவரங்களை உள்ளீடு செய்துகொண்டு next
என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கிகொண்டே வருக இந்த
வழிகாட்டித்திரையின் எந்த நிலையிலும் createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கியவுடன் இந்த படத்திற்கான மீத்தொடுப்பு உருவாகிவிடும்
நாம் இதுவரையில் முந்தை.ய தொடர்களில் ஆவணங்களை கையாள ஓப்பன்
ஆஃபிஸின் ரைட்டர் ,விரிதாளை கையாள ஓப்பன் ஆஃபிஸின் கால்க்,
படவில்லையை கையாள ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் , படங்களை கையாள ஓப்பன் ஆஃபிஸின் ட்ரா, கணக்கீடு களை
கையாள ஓப்பன் ஆஃபிஸின் மேத், தரவுதளமாக ஓப்பன் ஆஃபிஸின் பேஸ்
ஆகியபயன்பாடுகளை பார்த்து வந்தோம்
இந்த தொடரில் மேலே கூறிய ஓப்பன் ஆஃபிஸில்பயன்படுத்தபடும் கூடுதலான வசதிகளைபற்றி காணலாம்இதுவரை முந்தையதொடர்களில் கூறியவாறு ஓப்பன் ஆஃபிஸில்
உருவாக்கபட்ட கோப்புகளை அச்சிட விரும்புவோம் இந்நிலையில் அனைத்து
பயன்பாடுகளிலும்மேலே கட்டளை பட்டையிலுள்ள
கட்டளை களிலிருந்து file=>print=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும்print என்ற உரையாடல்
பெட்டி ஒவ்வொரு பயன் பாட்டிற் கேற்ப சிறிது மாறுபடும்அச்சுபொறியின் பெயர், எத்தனை
நகல் என்பன போன்ற பொதுவான விவரங்களுடன் அந்தந்த பயன்பாடுகளுக்கேற்ப மேலும் தேவையான
விவரங்களை தெரிவுசெய்துகொண்டு ok என்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அச்சிட்டுகொள்க.
இந்த அச்சிடும் பணியை விரைவாக
செய்திட வேண்டும்எனில் மேலே கட்டளை பட்டையிலுள்ள printer -இன்
(படம் -87-1) உருவபொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக .உடன் நேரடியாக நடப்பில்
திறந்திருக்கும் கோப்பானது இயல்புநிலை அமைவை கொண்டு அச்சிட்டுவிடும்
படம் -87-1
நம்முடைய ஆவணத்தை பார்வையிட
விரும்பும் பார்வையாளர்களின் கணினியில் நாம் பயன்படுத்திடும் ஓப்பன் ஆஃபிஸ்
பயன்பாடு இல்லாவிட்டாலும்நம்முடைய
ஆவணத்தை அவர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக அக்கோப்பினை பிடிஎஃப் கோப்பாக
உருமாற்றம் செய்து அனுப்பிட விரும்புவோம் அந்நிலையில்மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து file=>Export as pdf=> என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும்pdf options என்ற (படம் -87-2
)உரையாடல் பெட்டியில்General,Inial
view,user interface,links ,security ஆகிய ஐந்து தாவி பொத்தான்களின்
பக்கங்கள் உள்ளனஅந்தந்த பக்கங்களுக்கு
சென்று தேவையான வாய்ப்புகளைதெரிவுசெய்துகொள்க
மிகமுக்கியமாக Export bookmarksஎன்ற
வாய்ப்பானது கோப்பிலுள்ள விவரங்களை பகுதி பகுதியாக பிரித்திருக்கும் நிலையில்
குறிப்பிட்ட பகுதிக்கு நேரடியாக செல் வதற்கு அந்த பகுதியின் பெயரானது அட்டவணையாக
பட்டியலிடப்பட்டு அந்த அட்டவணையில் குறிப்பிட்ட பகுதியின் பெயரை தெரிவுசெய்து
சொடுக்கினால்குறிப்பிட்டபகுதிக்கு
நேரடியாக செல்வதற்கான வழிமுறைகளைஉருவாக்கு கின்றது .
,Export automatically inserted blank pages என்ற வாய்ப்பானது புத்தகங்களில் வலதுபுறம் 1,3,5 என்றுஒற்றை
படைவரிசையிலும்இடதுபுறம் 2,4,6 என்று இரட்டைபடை வரிசையிலும் பக்கங்களை உருவாக்க பயன்படுகின்றது.
படம் -87-2
இதுமட்டுமின்றி நம்முடைய
பிடிஎஃப் கோப்பினை அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பார்வையிடமுடியும் என்ற நிலையை
உருவாக்கிட இதே உரையாடல் பெட்டியின் securityஎன்ற தாவிபொத்தானின்
பக்கத்தில்Set open password,set a password for permissions
ஆகிய இரு பொத்தான்களில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் படம் 87.3
இல் உள்ளவாறு தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையான கடவுச்சொற்களை
உள்ளீடுசெய்துok என்ற
பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக. இறுதியாக pdf
options என்ற (படம் -87-2 )உரையாடல் பெட்டியில் Export என்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்கியவுடன்நடப்பில் திறந்திருக்கும் கோப்பானது பிடிஎஃப் கோப்பாக
உருமாற்றம் செய்துவிடும்
படம் -87-3
இதே செயலை விரைவாக செய்திடமேலே கட்டளை பட்டையிலிலுள்ள இதற்கான (படம் -87-4) உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.உடன் நேரடியாக நடப்பில் திறந்திருக்கும் கோப்பானது இயல்புநிலை அமைவை
கொண்டு பிடிஎஃப் கோப்பாக உருமாற்றம் செய்துவிடும்
படம் -87-4
இதுமட்டுமின்றி மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து file=>
Export=> என்றவாறு கட்டளைகளை செயற் படுத்தியவுடன் தோன்றிடும்Exportஎன்ற உரையாடல் பெட்டியின்
மூலம்XHTML.
BibTeX (.bib), LaTeX 2e (.tex),Macromedia Flash (.swf). என்பன
போன்ற வகை கோப்புகளையும் உருவாக்கமுடியும் .
அடுத்ததாக ஓப்பன் ஆஃபிஸில்
உருவாக்கபடும் ஆவணத்தை நேரடியாக மின்னஞ்சல்அனுப்பிவைத்திடுவதற்காக
படம் -87-5
மேலே கட்டளைபட்டையிலுள்ள
கட்டளை களிலிருந்து File => Send =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் சிறு கட்டளைபட்டியில்documents
as E-mail,E-mail ascOpen documents,E-mail as Microsoft word,E-mail as pdf என்பன போன்ற (படம் -87-5)பல்வேறு
வாய்ப்புகளின் கட்டளைகளில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல்
பெட்டியில் மின்னஞ்சல் பெறுபவரின் முகவரி போன்ற விவரங்களை உள்ளீடு செய்துகொள்க இந்நிலையில்ஓப்பன் ஆஃபிஸின் மெயில் மெர்ஜ் எனும் வசதியை
பயன்படுத்தி கொள்க
இதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து Tools
=> Mail Merge Wizard =>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும்Mail
Merge Wizard எனும் வழிகாட்டி திரையில் (படம் -87-6)தோன்றிடும் இந்த வழிகாட்டி கூறும் வழிமுறைகளை next ,next என்றவாறு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கியவாறுபின்பற்றி மின்னஞ்சலை உருவாக்கி அனுப்பி
வைத்திடுக
படம் -87-6
பொதுவாக நாம் அனுப்பிடும் ஆவணங்கள் நம்முடைய கையொப்பமுடன்
இருந்தால் மட்டுமே அதனை நம்பகமான ஆவணமாக கொள்ளமுடியும் அதற்காகமேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களிலிருந்து File
=> Digital Signatures =>என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக உடன்விரியும்உரையாடல் பெட்டியில்தேவையானவாறு நம்முடைய கையெழுத்தைசேர்த்தபின் ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்து கொள்க .இவ்வாறான கையெழுத்துடன் கூடிய
ஆவணமானது நிலைபட்டியில்