Saturday, April 30, 2011

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-41-டேட்டா பைலட்டை கையாளுவது


ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கை உடயோகபடுத்தும் போது அதனுடைய சிக்கலான ஃபார்முலா ஃபங்சன் ஆகியவற்றை பற்றி நன்கு அறிந்தவர்களே இதனை மிகசிறப்பாக கையாளமுடியும் என்ற தாழ்வு மனப்பான்மை பொதுவாக தொடக்க பயனாளர்களுக்கு ஏற்படும் .அவ்வாறான தொடக்கநிலை பயனாளர்கள் கூட மிக எளிதாக தரவுகளை கையாளுவதற்கு ஏதுவாக உதவிக்கு வருவதுதான் ஓப்பன் ஆஃபிஸின் டேட்டா பைலட் (Data Pilot )ஆகும்
 தரவுதளத்தினுடைய அட்டவனை போன்ற நெடுவரிசையும் கிடைவரிசையும் சேர்ந்த முழுமையற்ற தரவுகளின் பட்டியலில் ஃபார்முலா ஃபங்சன்  போன்றவைகளின் துனையின்றி நாம்விரும்பும் வகையில் விளைவுகளை இந்த டேட்டா பைலட் மூலம் அடையமுடியும்
 கால்க்கினுடைய ஒரு விரிதாளின் தரவுகளுள்ள செல் ஒன்றில் இடம் சுட்டியை வைத்து மேலே கட்டளை பட்டியிலுள்ள  Data =>Data Pilot=> Start=> என்றவாறு கட்டளைகளை செயல் படுத்துக உடன் இடம் சுட்டிஇருக்குமிடத்திலிருந்து நான்கு திசைகளிளும் தரவுகள் இருக்கும் கிடை வரிசை நெடுவரிசைகளை இது தெரிவு செய்து கொள்கின்றது இடையில் ஏதேனும் காலியான கிடை வரிசை அல்லது நெடுவரிசை  இருந்தால் அதற்கு முந்தைய கிடை வரிசைஅல்லது நெடுவரிசைவரை மட்டும் தெரிவு செய்து கொள்கின்றது
எச்சரிக்கை  1.கால்க்கில் டேட்டா பைலட்டை பயன்படுத்த விரும்பினால் தரவுகளுக்கு இடையே  காலியான கிடை வரிசை அல்லது நெடுவரிசை  இல்லாமல் பார்த்துகொள்க
  2.கால்க்கில் தானாகவே பட்டியலை அங்கீகரிக்கும் செயலை நிறுத்தம் செய்துவிடுக.
3.ஒன்றிற்கும் மேற்பட்ட பொருட்களை குழுவாக பயன்படுத்துவதாக இருந்தால் அவை ஒவ்வொன்றிற்குமென தனித்தனி தாளை வழக்கமாக நாம் பயன்படுத்துவோம் அதனால்  இவைகளை ஆய்வுசெய்து கணக்கீடு செய்வது மிகச்சிரமமான பணியாகி விடுகின்றது
  3.விற்பனை பட்டியலில் ஒவ்வொரு விற்பனைபிரதிநிதிக்கும் ஒவ்வொரு நெடுவரிசை யென்றும் பின்னர் இவர்களின் விற்பனையின் கூடுதலுக்கு தனியான தொரு நெடுவரிசையென்றும் அமைத்திருப்போம் அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசை தரவுகளைகொண்டு டேட்டா பைலட்டை செயல் படுத்திட முடியாது
 4.நாள்வாரியாக விற்பனைதொகையை  பதிவுசெய்து வாரமுடிவில் அல்லது மாதமுடிவில் மொத்தகூடுதல்  கணக்கிட்டு வைத்துள்ள ஒருஅட்டவனையில் டேட்டா பைலட்டை செயல் படுத்திட முடியாது ஏனெனில் இந்த மொத்தகூடுதல் நெடுவரிசையையும் வழக்கமான நெடுவரிசையாக டேட்டா பைலட்டானது கணக்கில் எடுத்துகொள்ளும்

                                     படம்-41.1
 இதனுடன் select source என்ற உரையாடல் பெட்டிதிரையில் தோன்றும்  இதில் selection என்பதன்கீழ் 1.current selection  என்ற  Calc spreadsheet, 2.data source registered in Open Office .org, 3. an external data source like access to an OLAP system ஆகிய மூன்று வாய்ப்புகள் உள்ளன அவற்றுள் current selection  என்ற வானொலி பொத்தான் மட்டும் தயார்நிலையில் தெரிவு செய்ய பட்டிருக்கும் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 உடன் DataPilotன்ற உரையாடல்பெட்டி திரையில்தோன்றிடும்இந்த டேட்டா பைலட்டின் செயல் இதனுடைய DataPilotன்ற உரையாடல்பெட்டியிலும் அதன்விளைவுகள் மற்றொரு விரிதாளிளும் என இரண்டு நிகழ்வுகளாக செயல்படுகின்றன


படம்-41.2
 இதில் Layout என்பதன் கீழ் Page fields, row fields, Coloum fields,Data fields  ஆகிய நான்கு காலியிடங்களும் அதற்கருகில் நாள் ,விற்பணை ரூ,. பொருளின் வகை, மண்டலம் ஆகிய அட்டவணையின் நான்கு விற்பனை விவர  நெடுவரிசைகளின் பொத்தான்களும் உள்ளன
 Page fields,--ன் காலியிடத்தில் மண்டலம் என்ற பொத்தானை தெரிவுசெய்து பிடித்து இழுத்துசென்று விடுக இதனால் ஏற்படும் இறுதி விளைவுகள் மண்டலம் வாரியாக காணுமாறு ஒருவடிகட்டி உருவாகிவிடும் எந்தமண்டலத்தை தெரிவுசெய்கின்றோமோ அதனுடைய விவரங்கள் மட்டுமே திரையில் பிரதிபலிக்கும் அதனால் காலியிடத்தில் பொருத்தபட்ட மண்டலம் என்ற பொத்தானின் மீது இடம்சுட்டியை வைத்து Del என்றவிசையை அழுத்துக அல்லது இதே உரையாடல் பெட்டியிலுள்ளRemove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக    உடன் காலியிடத்தில் பொருத்தப்பட்ட இந்த மண்டலம் என்ற பொத்தான் நீக்கபட்டுவிடும்
  Data fields --ன் காலி யிடத்தில் தரவுகளின் அட்டவணையிலிருந்து குறைந்தது ஒரு நெடுவரிசை விவரமாவது இருக்கவேண்டும்  இங்கு  விற்பணை ரூ, என்ற பொத்தானை தெரிவுசெய்து பிடித்து இழுத்துசென்று விடுக உடன்sum விற்பணை ரூ,என மாறியமையும் 
 அதேபோன்று row fields--ன் காலியிடத்தில்   நாள் , மண்டலம் ஆகிய இரு பொத்தான்களை தெரிவுசெய்து பிடித்து இழுத்துசென்று விடுக
 அவ்வாறே Coloum fields--ன் காலி யிடத்தில் தரவுகளின்  பொருளின் வகை, என்ற பொத்தானை தெரிவுசெய்து பிடித்து இழுத்துசென்று விடுக
 இதே உரையாடல் பெட்டியிலுள்ள more என்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த உரையாடல் பெட்டி கீழ்பகுதியில் விரிவடையும் அதில் result என்பதன்கீழ் results to  என்பதற்கருகில்undefined என்றிருக்கும் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதிலுள்ளnew sheetஎன்பதை தெரிவுசெய்து கொள்க இதிலுள்ள 
Ignore empty rowsஎன்றவானொலி பொத்தான்: டேட்டா பைலட்டின் பரிந்துரைக்கபட்ட கட்டமைப்பில் அதாவது தரவுகளுக்கிடையே காலியான கிடைவரிசையிருந்தால் இந்த வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொள்க
படம்-41.3
 Identify categories என்றவானொலி பொத்தான்:இந்த பட்டியல் டேட்டா பைலட்டின் பரிந்துரைக்கபட்ட கட்டமைப்பில் அதாவது தரவுகளுக்கிடையே தரவுகளேதேனும் விடுபட்டு படத்தில் உள்ளவாறு காலியான கிடைவரிசையிருந்தால் இங்கு பொருளின் வகையை குறிப்பிடாமல் காலியாக விடுபட்டுள்ளது இந்த வாய்ப்பின் தேர்வுசெய் பெட்டியை தெரிவு செய்யாது விட்டிட்டால் டேட்டா பைலட்டானது விளைவை தனி பணித்தாளில் பட்டியிலிட்டு திரையில் பிரதி பலிக்க செய்யும்போது அவ்வாறே காலியாகempty விட்டிடும்
படம்-41.4



 இந்த வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தெரிவு செய்திருந்தால் விளைவை தனி பணித்தாளில் பட்டியிலிட்டு திரையில் பிரதி பலிக்க செய்யும்போது காலியிடத்திற்கு முன்பிருக்கும் விவரத்தை எடுத்துகொள்ளும்.


                                      படம்-41.5
 Total columns / total rowsஎன்றவானொலி பொத்தான்:விளைவை பட்டயலிடும்போது கூடுதலான நெடுவரிசை கிடைவரிசையை சேர்த்து மெத்த கூடுதலைsum காண்பிக்க இந்த வாய்ப்பு உதவுகின்றது இந்த வாய்ப்பு இயல்புநிலையில் தேர்வுசெய்யபட்டே யிருக்கும்
Add filterஎன்றவானொலி பொத்தான்:நெடுவரிசை விவரங்களை மேலும் வடிகட்டி காண விரும்பினால் இந்த வாய்ப்பு உதவுகின்றது இந்த வாய்ப்பு இயல்புநிலையில் தேர்வுசெய்யபட்டேயிருக்கும்
Enable drill to detailsஎன்றவானொலி பொத்தான்:அவ்வாறே  விளைவுகளின் பட்டியலிலுள்ள ஏதேனுமொரு செல்லில் இடம்சுட்டியைவைத்து சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்கினால் மேலும் விவரங்களை show  details என்ற உரையாடல் பெட்டி காண்பிக்க இந்த வாய்ப்பு உதவுகின்றது இந்த வாய்ப்பு இயல்புநிலையில் தேர்வுசெய்யபட்டேயிருக்கும் இந்த வாய்ப்பை தேர்வுசெய்யாது விட்டிட்டால் அவ்வாறான விவரங்களுக்கான  உரையாடல் பெட்டியை திரையில்  காண்பிக்காது 
படம்-41.6


பொத்தானை ஒவ்வொரு புலத்திற்கும் இழுத்துசென்று விட்டபின்னர் அவற்றின் விடை எவ்வாறு வரவேண்டும் என முடிசெய்வதற்கு பொதுவாக  Data fields -ஐ கணக்கீடு செய்ய எடுத்துகொள்வார்கள்

 படம்-41.7
 அவ்வாறே நாமும் கணக்கீடு செய்ய விரும்புவதாக கொள்வோம் அதற்காக இந்த Data fields -ன் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக  அல்லது இதே DataPilotன்ற உரையாடல் பெட்டியிலுள்ள options என்ற பொத்தானை சொடுக்குக உடன் Data fields ன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் கால்க்கில் தயார்நிலையிலுள்ள ஒட்டுமெத்தம் காண sum என்பதும் எண்ணிக்கையை காண count என்பதும் சராசரியை காண average என்பதும் மேலும் தேவையான கணக்கீடுகளும்function  என்பதன் கீழ்பட்டியலாக இருக்கும் அவற்றில் நாம் விரும்பிய கணக்கீட்டை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக



படம்-41.8
இதே விற்பணை ரூ என்ற பொத்தானைData pilot என்ற உரையாடல் பெட்டியில்  data field பதிலாகcolumn field -ல் இழுத்துசென்று விட்டபின்னர் DataPilotன்ற உரையாடல் பெட்டியிலுள்ள options என்ற பொத்தானை சொடுக்குக உடன் Data fields ன்ற உரையாடல் பெட்டி மேலே  படத்திலுள்ளவாறு  இருக்கும்  இதில் என்பதன்கீழுள்ள என்ற வாய்ப்பை தெரிவுசெய்துகொள்க அவ்வாறே ஏதேனும் தரவுகளில்லாத நெடுவரிசைகளையும் கிடைவரிசைகளையும் காண்பிக்க என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க   நாம் விரும்பிய கணக்கீட்டிற்கு முன்பு கூறியதுபோன்று  தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக இறுதியாக Data pilot என்ற உரையாடல் பெட்டியிலும் okஎன்ற பொத்தானை சொடுக்குக. உடன் தனி பணித்தாளில் இந்த நாம்விரும்பிவாறான கணக்கிட்டை பிரதிபலிக்க செய்யும் அதில் ஏதேனுமொரு செல்லில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பெத்தானை சொடு்ககுக உடன் விரியும் பட்டயலின் வாய்ப்பின் மூலம் தற்போதுள்ள விடையை மேலும் நாம்விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்ளமுடியும்

படம்-41.9

Monday, April 4, 2011

ஓப்பன் ஆஃபிஸ்- கால்க்-40- விரிதாளின் தரவுகளை அச்சிடுதல்


ஓப்பன் ஆஃபிஸ்- கால்க்கில் தரவுகளை அச்சிடுவதற்காக மேலே கருவி பட்டையிலுள்ளPrint File Directly என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் விரிதாள் முழுவதும் நேரடியாக அச்சிடபட்டுவிடும் அல்லது வேறு மாற்று வழியாக மேலே கட்டளைபட்டையிலுள்ளFile => Print.=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Print என்ற உரையாடல் பெட்டி யொன்று திரையில் தோன்றிடும்

 அதில் printerஎன்பதன்கீழுள்ள கீழிறங்கு பட்டியலை  (ஒன்றுக்கு மேற்பட்ட அச்சுபொறி இணைக்கபட்டிருந்தால் )விரியச்செய்துஅதில் நாம் விரும்பும் அச்சுபொறியின் பெயரை தெரிவுசெய்து கொள்க.பின்னர்properties என்ற பெத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன்printer properties என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் orientation  என்பதன்கீழுள்ள கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து  தாளில் கிடை மட்டமாகவா landscape  நெடுக்கைவசமாகவா portrait  என்பதில் ஒன்றை தெரிவு செய்து கொள்க பின்னர் தாளின் அளவு  போன்றவாய்யப்புகளை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  அதன்பின்னர் Print என்ற உரையாடல் பெட்டியில் Range and copies என்பதன்கீழ் Selected cells என்பதன் வானொலி பொத்தானையும்   thereof print என்பதன் கீழ் pages என்பதை தெரிவுசெய்து தேவையான பக்கஎண்களை உள்ளீடு செய்துகொண்டு  Number of copies என்பதில் எத்தனை நகல் என்பதை தெரிவுசெய்துகொள்க இந்நிலையில் நாம்தெரிவுசெய்த பகுதி இந்த உரையாடல் பெட்டியின் இடதுபுறத்தில் அச்சிற்கு முன்காட்சிகுறும்படமாக பிரதி பலிக்கும் பின்னர் okஎன்றபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரிதாளில் தெரிவுசெய்த பகுதிமட்டும் அச்சிடப்பட்டுவிடும்
  அச்சுபொறிக்கு பதிலாக நம்மால் தெரிவு செய்யப்பட்ட பகுதி அச்சிடுவதற்கான ஒருகோப்பாக உருவாகிட இதேPrint என்ற உரையாடல் பெட்டியின் மேல்பகுதியில் உள்ளoptions  என்ற தாவிபொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் options என்ற தாவியின் திரையில் print to a file என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  விரிதாளை அச்சிடும்போது ஒரேதாள் பல பக்கங்களை கொண்டதாக இருக்கும். அதனால் முதலில் எந்தபக்கம் அச்சிடவேண்டும் அதற்கடுத்ததாக எந்த பக்கம் அச்சிடவேண்டும் என்ற முன்னுரிமையை முன்கூட்டிய அளித்திடுவதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள Format=>page=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
  உடன்விரியும் page style default என்ற உரையாடல் பெட்டியில் sheetஎன்ற தாவியின் திரையில் page order  என்பதன்கீழுள்ள top to bottom then rightஎன்ற வானொலிபொத்தானை தெரிவு செய்துகொள்க அவ்வாறே பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காகநன்றாக படிப்பதற்கேதுவாக scale  என்பதன் கீழுள்ளscalling mode என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையான வாய்ப்பையும் அவ்வாறே scaling factorஎன்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தேவையான அளவையும் தெரிவுசெய்து கொள்க.
  விரிதாளை அச்சிடும்போது ஒரேதாள் பல பக்கங்களை கொண்டதாக இருக்கும். அனைத்தையும் நாம் அச்சிடவிரும்பமாட்டோம் அதனால் முதலில் கால்க்கில் தரவுகளுள்ள தேவையான செல்களை மட்டும் தெரிவு செய்துகொண்டு   மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Print Ranges => Define=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி எந்தபகுதி மட்டும் அச்சிடபடவேண்டும் என வரையறுத்து கொள்க. இதனுடன் மேலும் பகுதிகளை சேர்த்திட கால்க்கில் தரவுகளுள்ள தேவையான செல்களை தெரிவுசெய்துகொண்டுFormat => Print Ranges => Add=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. முன்னர் தெரிவுசெய்தபகுதிகளை நீக்கம் செய்திட Format => Print Ranges => Remove =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.அவ்வாறே தெரிவுசெய்த பகுதியை மாறுதல்செய்ய Format => Print Ranges => Edit =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் .Edit Print Ranges என்ற உரையாடல்பெட்டியில் தேவையான மாறுதல்களை செய்துகொண்டு okஎன்றபொத்தானை சொடுக்குக.
கால்க்கில் தரவுகளை பலபக்கங்களாக அச்சிடும்போது  தலைப்பும் முடிவும் ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடுமாறு செய்திட page style default என்ற உரையாடல் பெட்டியில் Header/footerஎன்ற தாவியின் திரையில் header/footer on என்ற தேர்வுசெய் பொத்தானை தெரிவுசெய்து கொண்டு மற்ற வாய்ப்புகளை தேவையானவாறு தெரிவுசெய்துகொள்க மேலும் மெருகூட்டிட moreஎன்றபொத்தானை சொடுக்குக விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான மாறுதல்களைசெய்துகொண்டு.  okஎன்ற பொத்தானை சொடுக்குக. தலைப்பு முடிவு ஆகியவற்றின் உள்ளடக்கங்களை மாறுதல்செய்திடpage style default என்ற உரையாடல் பெட்டியில் Header/footerஎன்ற தாவியின் திரையில்Edit என்ற பொத்தானை சொடுக்குக பின்னர் தோன்றிடும் திரையில்தேவையான மாறுதல்களை செய்துகொண்டு.  okஎன்றபொத்தானை சொடுக்குக.  மீண்டும் page style default என்ற உரையாடல் பெட்டியில் Header/footerஎன்ற தாவியின் திரையில் ok என்ற பொத்தானை சொடுக்குக.

 கால்க்கின் தாட்களை இவ்வாறு அச்சிடாமல் பிடிஎஃ்ப் கோப்பாக உருவாக்கினால் நல்லது என எண்ணிடுவோம் அந்நிலையில் மேலே கருவி பட்டையிலுள்ளExport Directly as PDF என்ற குறும்படத்தை தெரிவு செய்து சொடுக்குக.உடன் விரிதாள் முழுவதும்  இயல்புநிலையிலுள்ள பிடிஎஃ்ப்  வடிவமைப்பில் ஒரு பிடிஎஃ்ப்  கோப்பாக உருவாகிவிடும் இதற்கு ஒரு பெயரினைமட்டும் நாம் உள்ளீடு செய்தால்போதும்
  நாம் தெரிவு செய்த பகுதிமட்டுமெனில் கால்க்கில் நாம்விரும்பும்பகுதியை தெரிவுசெய்துகொண்டு மேலேகட்டளைபட்டையிலுள்ள File= > Export as PDF=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Export as PDF என்ற உரையாடல்பெட்டியில் தேவையான தாவியின் திரையில் தேவையானவாறு மாறுதல்களை செய்து அமைத்துகொண்டுநம்முடைய கோப்பை அனுமதி அளித்தவர்மட்டும் பார்வையிடுமாறு செய்வதற்கு இதே உரையாடல்பெட்டியில் securityஎன்ற தாவியின் திரையில் set open password என்ற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் set open password என்ற உரையாடல் பெட்டியில் password என்ற உரைபெட்டியில் தேவையானகடவுசொற்களை உள்ளீடு செய்க மீண்டும் confirm என்ற உரைபெட்டியில் அதே சொற்களை உள்ளீடுசெய்துokஎன்ற பொத்தானைசொடுக்குகஇறுதியாக Export as PDF என்ற உரையாடல்பெட்டியில் Exportஎன்ற பொத்தானை சொடுக்குக.தோன்றிடும் திரையில் இதற்கு ஒரு பெயரினை இட்டு Saveஎன்ற பொத்தானை சொடுக்குக
.இந்த விரிதாளை HTML பக்கமாக உருமாற்றம் செய்திட மேலே கட்டளை பட்டையிலுள்ள File => Save As=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Save As என்ற உரையாடல்பெட்டியில்  file type என்பதில் HTML Document என்றவாறு தெரிவுசெய்துகொண்டு Saveஎன்ற பொத்தானை சொடுக்குக அல்லது
மேலே கட்டளை பட்டையிலுள்ள File => Wizards => Web Page=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Wizards என்ற உரையாடல்பெட்டியின் வழிகாட்டுதல் களை பின்பற்றி இறுதியாக finishஎன்ற பொத்ததானை சொடுக்குக. 
  நாம் உருவாக்கிய விரிதாளினை நம்முடைய நண்பர்களுக்கு மின்னஞ்சல்வாயிலாக அனுப்பிட விரும்புவோம் அதற்காக மேலேகட்டளைபட்டையிலுள்ளFile => Send => E-mail as OpenDocument Spreadsheet=> அல்லது File => Send => Document as E-mail=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் மின்னஞ்சல் அனுப்பும் திரையொனஅறு தோன்றிடும் அதில் வழக்கமான மின்னஞ்சல் விரங்களை உள்ளீடுசெய்து இந்த விரிதாளினை இணைத்து அனுப்பமுடியும்  எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் விரிதாள் போன்று அனுப்பிட File => Send => E-mail as Microsoft Excel=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் இந்தகால்க் கட்டமைப்பிலுள்ள விரிதாள் எக்செல்லின் கட்டமைப்பிற்கு உறுமாற்றமாகும் அதன்பிறகு வழக்கமான மின்னஞ்சல் நடைமுறையை பின்பற்றிடுக 
 File => Send => E-mail as PDF=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் இந்தகால்க்கட்டமைப்பிலுள்ள விரிதாள் PDFகட்டமைப்பிற்கு உருமாற்றமாகும் அதன்பிறகு வழக்கமான மின்னஞ்சல் நடைமுறையை பின்பற்றிடுக 
 மின்னஞ்சலில் அனுப்பிடும்போதும் பிடிஎஃப்கோப்பாக கட்டமைப்பு செய்திடும்போதும் நம்முடைய சொந்த தகவல்கள்இநத விரிதாளுடன் செல்லாமல் பார்த்துகொள்க அவ்வாறான தகவல்களை நீக்கம்செய்திடFile => Properties=> என்றவாறுகட்டளைகளை செயற்படுத்துக தோன்றிடும் உடன் திரையில் தோன்றிடும் பண்பியல்பு உரையாடல் பெட்டியில் General தாவியின் திரையை தோன்றசெய்கஅதில் Apply user data என்ற தேர்வுசெய் பெட்டி தெரிவுசெய்திருந்தால் நீக்கம்செய்து Reset என்ற பொத்தானை சொடுக்குக.

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-39.

 பயனாளர்களுக்கு தரவுகளை வழங்கி அதிலிருந்து வருங்காலத்தில் என்னவாக இருக்கும் என  தமக்கு தேவையானவாறு முன்கணிப்பு செய்வதற்கு இந்த ஓப்பன் ஆஃபிஸ் கால்க் பயன்படுகின்றது ஓப்பன் ஆஃபிஸ் கால்கில் இந்த முன்கணிப்பு செய்வதற்கு எண்களால் ஆன தரவுகளை விட வரைபடங்கள் அதிகமுக்கியத்துவம் பெறுகின்றன  இதன் வகைகளான கோட்டுவரைபடம் புள்ளி படங்கள்  போன்றவைகளை  கால்க்கில் உருவாக்குவதற்காக  இறக்குமதிசெய்ய அனுமதிக்கின்றன.
  பொதுவாக கால்க்கில்   உருவப்படம் (Image), வரைபடம்(Diagram), விளக்கப்படம்(Chart) ஆகிய மூன்றுவகை அடிப்படை வரைபடங்கள் உள்ளன. உருவப்படங்கள்  படப்பிடிப்பு கருவியிலிருந்தும் இணையத்திலிருந்தும்  கால்க்கின் பணித்தாளுக்குள் பதிவிறக்கம் செய்யபடுகின்றன அவ்வாறு பதிவிறக்கம் செய்து இணைப்பதற்கு  Insert Picture dialog ,  Drag and dropஆகிய இருவழிமுறைகள் பயன்படுகின்றன
  Insert Picture dialog கால்க்கின் பணித்தாளின் திரையில்  மேலே கட்டளை பட்டியிலுள்ள Insert => Picture => From File=> என்றவாறு கட்டளைகளை செற்படுத்துக அல்லது கருவி பட்டையிலுள்ள  Insert Pictureஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக.
 உடன் விரியும்Insert Picture என்ற  உரையாடல்பெட்டியில் உருவபடமுள்ள பகுதியை தேடிபிடித்து படத்தை தெரிவுசெய்துகொள்க.
 இதே உரைபெட்டியில் கீழ்பகுதியிலுள்ளPreview,Link  ஆகியஇரு வாய்ப்புகளில் முதலில்Preview  என்ற வாய்ப்பின் தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொண்டால் நாம் இணைக்கவிரும்பும் படத்தின் முன்காட்சி இந்த உரையாடல்பெட்டியின் வலதுபுறத்தில் சிறியஅளவு படமாக தோன்றும் சரியாக இருக்கின்றதுஎனில்Open என்ற பொத்தானை சொடுக்குக

படம்-

 Drag and drop கால்க்கின் பணித்தாளினை திறந்தகொண்டு உள்ளிணைக்க விரும்பும் படமிருக்கும்மிடத்தை கோப்பு உலாவி சாளரத்தின் வழியாக தேடி பிடித்து தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தானை சொடுக்கி அழுத்தி பிடித்து இழுத்துசென்று கால்க்கின் பணித்தாளில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானைவிட்டிடுக.   .
 Link இதே Insert Picture என்ற  உரையாடல்பெட்டியில்கீழ்பகுதியிலுள்ள Preview,Link ஆகியஇரு வாய்ப்புகளில் Link என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Open என்ற பொத்தான சொடுக்குக உடன் உருவபடம் இருக்குமிடத்தின் தொடுப்புவிவரம் மட்டும் இந்த செல்லில் பதிவுசெய்யபெறும் இதனால் கால்க் பணித்தாளிற்கு பதிலாக படமிருக்கும் இடத்திலேயே படத்தில் தேவையானவாறு மாறுதல் செய்து சரிசெய்து கொள்ள முடியும் மேலும் கால்க் கோப்பின் கொள்ளளவும் மாறாது
இவ்வாறு தொடுப்பின்மூலம் இணைக்கபட்ட படத்தை எளிதாக கால்க் பணித்தாளில் உள்பொதிவு (Embedded)செய்யமுடியும்

படம்-

 அதற்காக இந்நிலையில் மேலேகட்டளைபட்டையில் உள்ளEdit => Links=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் விரியும்Edit Links  என்ற  உரையாடல் பெட்டியில் Break Link என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் இந்த கோப்பினை சேமித்துகொள்க.
  ஒப்பன் ஆஃபிஸின் கால்க் ,ரைட்டர், ட்ரா போன்ற மற்ற பயன்பாடுகளில் உள்ள படத்தை  தெரிவுசெய்துகொண்டு Control+Cஎன்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தி நகலெடுத்துகொள்க பின்னர் கால்க் பனித்தாளில் இடம்சுட்டியை நிறுத்தி கொண்டுControl+V என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தி நகலெடுத்த படத்தை கால்க் பனித்தாளில் ஒட்டிகொள்க எச்சரிக்கை இந்நிலையில் நகலெடுத்த கோப்பினை பயன்பாட்டிலிருந்து மூடிவிடக்கூடாது
 அவ்வாறேபடங்களனைத்தையும் தொகுத்து வைக்கபட்டுள்ள Gallery  என்ற பகுதியிலிருந்தும் நமக்குதேவையான படங்களை இறக்குமதி செய்யமுடியும் இதற்காக மேலேகட்டளைபட்டையில் உள்ள Tools => Gallery => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது மேலேகருவிபட்டையில்இருந்து  இதற்கான Gallery என்ற குறும்படத்தை . உடன் விரியும்  Gallery  என்ற சாளரத்தில் தேவையான படம் இருக்குமிடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்து சுட்டியின் பெத்தானை சொடுக்கிபிடித்து இழுத்துசென்று கால்க் பனித்தாளில் விட்டிடுக அல்லது  மேலேகருவிபட்டையில்இருந்துInsert =>  Copy=>  என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்தி நகலெடுத்துகொள்க பின்னர்  கால்க் பனித்தாளில் இடம்சுட்டியை நிறுத்தி கொண்டுControl+V என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்தி நகலெடுத்த படத்தை கால்க் பனித்தாளில் ஒட்டிகொள்க


படம்-

 இது திரையில் தோன்றிடும்போது இந்த திரைமுழுஇடத்தையும்இந்த  Gallery அபகரித்து கொள்வதால் நமக்கு பணித்தாளில் பணிபுரியும் இடம் மிகசிறியதாக கிடைக்கும்  இந்நிலையில் பனித்தாளின் முழுஅளவு கிடைத்திட மையத்திலுள்ள மெல்லிய பட்டையில்  Hide/Show என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி தேவையானவாறு விரிவுபடுத்தி அல்லது சுருக்கிகொள்ளலாம்

படம்-

 இவ்வாறு கால்க்கில் உள்ளிணைக்கபட்ட படத்தில் மாறுதல்செய்வதற்கு GIMP  http://www.gimp.org/downloads/.என்ற பயன்பாடு உபயோகபடுத்தபடுகின்றது
 பனித்தாளிற்குள்ளேயே மாறுதல் செய்திட மேலே கட்டளைபட்டையிலுள்ள View => Toolbars => Picture=>  என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றும்Picture என்ற கருவிபட்டையிலுள்ள கருவிகளைகொண்டு தேவையான மாறுதல்கள் செய்து கொள்க மேலும் இதே கருவிபட்டையிலுள்ள Graphics mode ,graphic filters ஆகியவற்றை பயன்படுத்தி கூடுதலான மாறுதல்களை செய்துகொள்க.
 உரையின் பின்புலத்தில் படத்தை வைப்பதற்கும்  வாட்டர்மார்க் இடுவதற்கும் Transparency ஊடுருவும் தன்மை பயன்படுகின்றது  அதற்காக இதே கருவிபட்டையிலுள்ள Transparency என்ற பெட்டியில் தேவை.யான சதவிகிதத்தை அமைத்துகொள்க
  படத்தில் தேவையில்லாத பகுதியை வெட்டி சரிசெய்வதற்கு இதே கருவி பட்டையிலுள்ள Crop என்ற கருவியை பயன்படுத்திகொள்க இந்த குறும்படத்தை தெரிவு செய்து சொடுக்கியவுடன் தோன்றிடும்   Crop என்ற உரையாடல் பெட்டியை  பயன் படுத்தி  தேவையானவாறுபடத்தை வெட்டி சரிசெய்துகொள்க

படம்-

படத்தை வெட்டி சரிசெய்வதற்கு பதிலாக இந்த உருவபடத்தை சொடுக்குக உடன் படத்தை சுற்றி கைப்பிடிகள் தோன்றும் அதனை பயன்படுத்தி தெரிவுசெய்து பிடித்து இழுத்துசென்ற தேவையானஅளவிற்கு சுருக்கி கொள்ளலாம்
 அவ்வாறே இந்த உருவ படத்தை தெரிவுசெய்துகொண்டு கருவிபட்டையிலுள்ள Rotateஎன்ற குறும்படத்தை சொடுக்கி தேவையான கோணத்திற்கு சுற்றசெய்து அமைத்து கொள்க
 அல்லது இந்த உருவபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியலில்உள்ள கட்டளைகளை பயன்டுத்தியும் இந்த உருவபடத்தில் தேவையான மாறுதல்களை செய்துகொள்ளமுடியும்.
 படங்களை குழுவாக உருவாக்கமுடியும் அதற்காக முதலில் ஒரு உருவபடத்தை தெரிவுசெய்துகொண்டு shift என்றவிசையை அழுத்திபிடித்துகொள்கபின்னர் இதனுடன் குழுவாக சேர்க்கவேண்டிய படங்கள் ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து சொடுக்கி பிடித்துகொள்க அதேநிலையில் மேலே கட்டளைபட்டையிலுள்ளFormat  =>Group  => Group =>  என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்துக அல்லது உருவபடத்தின்மீது இடம்சுட்டியை மேலூர்தல்செய்க அப்போது இடம்சுட்டியின் உருவம் கைப்பிடி போன்று மாறுதலடையும் அப்போது சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியலில் உள்ள கட்டளைகளில் Group=> Group=>  என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்துக உடன் தெரிவுசெய்த படங்கள் குழுவாக ஆக்கபட்டுவிடும்
  சூழ்நிலைபட்டியலில் Ungroup , Edit Group ,Enter Group ஆகிய கூடுதலான வாய்ப்புகளின் கட்டளைகள்  சேர்ந்திருக்கும்  Format  => Group => என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்தி இவைகளில் தேவையானவற்றை பயன்படுத்திகொள்க
 மேலே கட்டளைபட்டையிலுள்ளView  => Toolbars  =>Drawing =>  என்றவாறு  கட்டளைகளை செயற்படுத்தி தேவையான வரைபடகருவிகளை Drawing Tools பயன்படுத்தி படங்களை வடிவமைத்துகொள்க  மேலும் சிக்கலான வரைபடங்களை உருவாக்கிட இதே ஓப்பன் ஆஃபிஸின் ட்ரா என்ற பயன்பாட்டையும் மேலும் தேவையெனில் GIMP ஐயும் பயன்டுத்திகொள்க

Sunday, April 3, 2011

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-38.வரைபடமும் விளக்கபடமும் தொடர்ச்சி


   ஒரு வரைபடத்தில் பரவலாக குழுவாகவுள்ள புள்ளிகளை அவற்றிற் கிடையே தொடர்பு ஏற்படுத்தி வரையபடும் கோட்டினை போக்கு கோடுகள் (trend  lines) என அழைப்பார்கள் linear, logarithm, exponential,  power ஆகியவை இந்த போக்கு கோடுகளின்(trend  lines)  வகைகளாகும் . இதனை வரைவதற்கு முதலில் வரைபடத்தினை தெரிவுசெய்துகொள்க பின்னர் சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன்விரியும் பட்டியலி லிருந்து அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ளInsert => Trend Lines => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
                             படம்-38.1
உடன் தோன்றிடும்Trend Lines for All Data Series  என்ற உரையாடல் பெட்டியில் திரையில் Regression Type என்பதன் கீழுள்ள None, Linear, Logarithmic, Exponential, or Power ஆகியவற்றின் வகையிலிருந்து தேவையானதை தெரிவுசெய்து ok என்ற பொத்தானை சொடுக்குக.
 விளக்க வரைபடத்துடன் அவற்றின் சமன்பாட்டினையும் திரையில் காண்பிக்க தேவையான போக்கு கோட்டினை தெரிவுசெய்துகொண்டு  சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறைசொடுக்குக உடன்விரியும் பட்டியலிலிருந்துInsert Trend Line Equation  என்றவாறு கட்டளைகளை செயற் படுத்துக
 முக்கியமான விவரங்களை தெரிந்து அதற்கேற்ப அரசின் திட்ங்களை செற்படுத்துவதற்காக அவ்வப்போது தேசிய கணக்கெடுப்பு செய்வார்கள் அப்பொழுது முழுவதுமாக  கணக்கெடுப்பு செய்வதற்கு பதிலாக குத்து மதிப்பாக பரவலாக ஆங்காங்கு மாதிரி கணக்கெடுப்பு செய்வார்கள் இவ்வாறான செயல் மிகச்சரியாக இருக்கும் என கூறமுடியாது இருப்பினும் ஒருபாணை சோற்றிற்கு ஒருசோறு பதம் என்பது போன்று முடிவுசெய்திடும்போது அதில் எற்படும் பிழைகளை தவிர்ப் பதற்காக பிழைபட்டி(Error bar) என்ற விளக்க வரைபடம் பயன்படுகின்றது  இதனை வரைவதற்கு முதலில் வரைபடத்தை தெரிவுசெய்து கொண்டபின்னர்மேலே கட்டளைபட்டையிலுள்ள  Insert => Y Error Bars =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் திரையில் தோன்றிடும் Y Error Bars என்ற உரையாடல் பெட்டியில் Error categories ,Error Indicator ஆகிய ஒவ்வொன்றின் கீழுமுள்ள வாய்ப்புகளில் ஏதேனும் ஒவ்வொருவாய்ப்பை  மட்டும் தெரிவுசெய்துகொள்க
                            படம்-38.02
 இவ்வாறு நம்மால் வரையபட்ட வரைபடத்தை நாம்விரும்பும் வகையில் வடிவமைப்பு செய்திடமுடியும் அதற்காக தேவையான வரைபடத்தின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக உடன் இந்த வரைபடம் திருத்தி அமைப்பதற்காக அதனைசுற்றி சாம்பல் நிற சுற்றுகோட்டுடன் தயார்நிலையிலிருக்கும் அதில் தேவையான வரைபடத்தின் உறுப்பினை(Chart element)  தெரிவுசெய்து  சுட்டியின் வலதுபுறபொத்தானை இருமுறை சொடுக்குக (இந்நிலையில் வரைபடத்தின் உறுப்புகள் ஏராளமாக இருக்கும்போது நாம்விரும்புவதை தெரிவுசெய்வதில் சிரமம் ஏற்படும் அதனை தவிர்த்திட Tools= > Options => OpenOffice.org =>General => Help  =>Tips=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி கொண்டால் நாம் விரும்பும் வரைபடத்தின் உறுப்பினை குழப்பமில்லாமல் தெரிவு செய்து கொள்ள வசதியாக இருக்கும்)  உடன் விரியும் சூழ்நிலை பட்டியலிலிருந்து Formatஎன்ற கட்டளையை தெரிவுசெய்க பின்னர் தோன்றிடும் Formatஎன்ற உரையாடல் பெட்டியிலிருந்து தேவையான வாய்ப்பை தெரிவுசெய்து கொள்க
                            படம்-38.03
title,  legend, data, labelபோன்ற வரைபடத்தின் உறுப்புகளை தெரிவுசெய்து இழுத்து சென்றுவிடுவதன் வாயிலாக அதனுடைய இடத்தை மாற்றியமைக்கமுடியும்
 அதுமட்டுமின்றி Format => Chart Area=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் Chart Areaஎன்ற உரையாடல் பெட்டியின் வாயிலாக வரைபடம் அமைந்துள்ள இடத்தின் பின்புலத்தை நாம் விரும்பிய வாறு மாற்றியமைத்திட முடியும்
 அவ்வாறே வரைபடத்தின் பின்புலத்தையும் Format => Chart Wall=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் Chart Wallஎன்ற உரையாடல் பெட்டியின் வாயிலாக மாற்றியமைத்திடமுடியும்.
முப்பரிமான வரைபடத்தை வடிவமைத்தல்
 Format > 3D Viewஎன்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் தோன்றிடும் 3D Viewஎன்ற உரையாடல் பெட்டியில் Perspectiveஎன்ற தாவியின் திரையை தோன்றசெய்க.இதில் எந்தெந்த அச்சில் எவ்வளவு கோணத்தில் சுற்றவேண்டும் என அமைத்துகொள்க
 பின்னர்  Appearanceஎன்ற தாவியின் திரையை தோன்றசெய்க.இதில்  schemeஎன்பதன் கீழிறங்கு பட்டியல்மூலம் தேவையான வாய்ப்பையும் அவ்வாறே Shading, Object Borders ,Rounded Edgesபோன்ற வாய்ப்புகளில்  தேவையானதை தெரிவுசெய்துகொள்க
 பின்னர்  Illuminationஎன்ற தாவியின் திரையை தோன்றசெய்க.இதில்light source என்பதன் கீழுள்ள எட்டுபொத்தான்களில் ஒன்றினை தெரிவுசெய்துகொள்க இயல்பு நிலையில் இரண்டாவது பொத்தான் தெரிவு செய்ய பட்டிருக்கும். அதன்பின்னர் Ambient lightஎன்பதன் கீழிறங்கு பட்டியல்மூலம் தேவையான வாய்ப்பை தெரிவு செய்துகொள்க இந்த தாவியின் திரையில் நாம் தெரிவு செய்யும் வாய்ப்பிற்கேற்ப ஒளிர்வினால்  ஏற்படும் வரைபடத்தின் தோற்றம் எவ்வாறு இருக்குமென இதன் வலதுபுற முன்காட்சி பகுதியில் கண்டு தேவையான வாய்ப்புகளை மாற்ரி தெரிவுசெய்துகொள்ளலாம்.  இறுதியாக okஎன்ற பொத்தானை சொடுக்கி நாம் செய்த மாறுதல் களனைத்தையும்  செயற்படுமாறு செய்துகொள்க.
                          படம்-38.04