வாடிக்கையாளர் விரும்பியவாறு கட்டளைபட்டி கருவி
பட்டிகுறுக்குவழிவிசை ஆகியவற்றை ஓப்பன் ஆஃபிஸில் புதியதாக உருவாக்கி அதற்கான
சிறுசிறுநிகழ்வு செயல்களை ஒதுக்கீடு செய்து கொள்ளமுடியும் ஆயினும் சுட்டியின்
வலதுபுற பொத்தானை சொடுக்குவதால் உருவாகும்
குறுக்குவழிபட்டியை மட்டும்
வாடிக்கையாளர் விரும்பியவாறு
மாறுதல் செய்திடமுடியாது பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் இணையதளத்திலிருந்து
அல்லது மூன்றாவது விற்பணையாளர் மூலம் ஓப்பன் ஆஃபிஸில் புதியதாக விரிவாக்கங்களை
மிகசுலபமாக செய்துகொள்ளலாம்
இதனுடைய கட்டளை பட்டியை நாம் விரும்பியவாறு
மாறுதல் செய்திட திரையின் மேலே
கட்டளைபட்டையிலுள்ளTools
==> Customize==> என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customize என்ற திரையில் Menusஎன்ற
திரையை(படம்-1) தோன்றிடசெய்க அதில்save in என்ற பகுதியின் கீழிறங்கு
பட்டிமூலம் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் அல்லது
நடப்பு ஆவணம் ஆகிய ஏதேனுமொன்றை
தெரிவுசெய்துகொள்க
படம்-1
பிறகு இதற்கு
மேலேயுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான கட்டளையை தெரிவு செய்து கொள்க .நடப்பிலிருக்கும் பட்டியில் மாறுதல்கள் செய்வதாக இருந்தால் தேவையான கட்டளை பட்டியை இதனுடைய கீழிறங்கு
பட்டியிலிருந்து தெரிவு செய்து
கொண்டு இதே உரையாடல் பெட்டியில் Menu அல்லது Modify என்றவாறு
தேவையான பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் சிறு உரையாடல் பெட்டியில் Move, Rename,Delete. ஆகிய
கட்டளையை செயற்படுத்துக ஆனால் ஒருசில கட்டளைபட்டிக்கு இந்த கட்டளை செயல்படாது
என்பதை மட்டும் மனதில் கொள்க இறுதியாக OKஎன்ற
பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி நாம்
செய்த மாறுதல்களை சேமித்துகொள்க
இதே
உரையாடல் பெட்டியில்Newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்New
Menu என்ற (படம்-2)சிறு உரையாடல் பெட்டியொன்று திரையில்
தோன்றிடும் அதில் Menu Name என்பதி்ல் Skmenu என்றவாறு ஒருபெயரினை தட்டச்சு
செய்து Menu position என்ற பகுதியில் அது மிகச்சரியான
இடத்தில் அமரச்செய்வதற்கு மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தேவையானவாறு
பயன்படுத்தி கொள்க பின்னர் OKஎன்ற
பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி நாம்
செய்த மாறுதல்களை சேமித்துகொள்க
படம்-2
கட்டளைபட்டையில் புதியதாக
ஏதேனுமொரு கட்டளையை சேர்க்கவிரும்பினால் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து
சொடுக்குக உடன் விரியும் Add
commands என்ற (படம்-3)உரையாடல் பெட்டியில் மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை
தேவையானவாறு பயன்படுத்தி புதிய வகையை category
என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டு புதிய கட்டளையை commands
என்றபகுதியலிருந்து தெரிவு செய்து சொடுக்கி பட்டியில் சேர்த்து
கொள்க இறுதியாக OKஎன்ற
பொத்தானை தெரிவு செய்து சொடுக்கி கட்டளை பட்டியில் நாம் செய்த மாறுதல்களை
சேமித்துகொள்க
படம்-3
மேலே கூறியவாறு
கருவிபட்டையிலும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல்கள் செய்துகொள்ளலாம் அதாவது
புதிய கருவிபட்டியை சேர்த்துகொள்ளுதல் நடப்பிலிருக்கும் கருவிபட்டியில் புதிய
கருவிகளின் உருவபொத்தான்களை சேர்த்தல் அல்லது இடமாற்றியமைத்தல் போன்ற பணிகளை
செய்யலாம்
படம்-4
இதற்காக நடப்பில்
இருக்கும் கருவிபட்டியின் கடைசியாக இருக்கும் அம்புக்குறியை
தெரிவுசெய்துசொடுக்கியவுடன் விரியும் கட்டளைபட்டியிலிருந்து Customize Toolbar என்றவாறு
(படம்-4)கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது
மேலேகட்டளை பட்டையிலிருந்து View
=> Toolbar => Customize=>என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்துக அல்லது திரையின் மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customize என்ற திரையில் Toolbars
என்ற(படம்-5) திரையை
தோன்றிடசெய்க
படம்-5
அதில்save
in என்ற பகுதியின்
கீழிறங்கு பட்டிமூலம் ஓப்பன்
ஆஃபிஸ் ரைட்டர் அல்லது நடப்பு ஆவணம் ஆகிய ஏதேனுமொன்றை தெரிவுசெய்துகொள்க பிறகு இதற்கு மேலேயுள்ள கீழிறங்கு
பட்டியலிருந்து தேவையான கருவி பட்டையை
தெரிவு செய்து கொள்க நடப்பிலிருக்கும் கருவிபட்டியில் மாறுதல்கள் செய்வதாக
இருந்தால் தேவையான கருவி பட்டியை
கீழிறங்கு பட்டியலிருந்து தெரிவு செய்து
கொண்டு இதே உரையாடல் பெட்டியில் Toolbar
அல்லதுModifyஎன்றவாறு
தேவையான பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் சிறு உரையாடல் பெட்டியில் Move, Rename,Delete. ஆகிய கட்டளையை
செயற்படுத்துக இறுதியாக OKஎன்ற பொத்தானை
தெரிவு செய்து சொடுக்கி நாம் செய்த
மாறுதல்களை சேமித்துகொள்க