Saturday, October 5, 2013

ஓப்பன் ஆஃபிஸ்பேஸிக்-99-

முந்தைய தொடர்களில் ஓப்பன் ஆஃபிஸ்பேஸிக்கில் கட்டளை தொடர் எழுதுவதற்கு முதற்படியாக அதற்கான திரையை எவ்வாறு தோன்றசெய்வது என தெரிந்து கொள்வுதற்குமுன் நேரடியாக கட்டளை தொடர் எழுதுவதற்கான இலக்கணத்தை காண ஆரம்பித்துவிட்டோம் நிற்க முதலில் ஓப்பன் ஆஃபிஸ்பேஸிக்கின் கட்டளை தொடர் எழுதுவதற்கான திரையை எவ்வாறு தோன்றசெய்வது என கண்டபின் அதனை தொடரலாம் அதற்காக ஓப்பன் ஆஃபிஸ் திரையின் மேல்பகுதியிலுள்ள Tools= > Macros => Organize Dialog= > OpenOffice.org Basic=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-99-1
உடன் OpenOffice.org Basic Macro organizer என்ற உரையாடல் பெட்டி (படம்-99-1)திரையில் தோன்றிடும் அதில் Dialog என்ற பகுதியில் my Dialog என்பதன்கீழ்உள்ள standard என்பதை தெரிவுசெய்துகொண்டு வலதுபுறமுள்ள new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் new Dialog என்ற சிறு உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் Name என்பதில் step by step macro1 என்றவாறு இந்த மேக்ரோவிற்கு ஒரு பெயரினை தட்டச்சு செய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் இந்த OpenOffice.org Basic Macro organizer என்ற உரையாடல் பெட்டியில் close என்ற பொத்தனை தெரிவுசெய்து சொடுக்கி மூடிடுக அதன்பின்னர் இதில் மீண்டும் கட்டளை தொடர் எழுதுவதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Macros = > Organize Macros= > OpenOffice.org Basic =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் OpenOffice.org Basic Macro என்ற உரையாடல் பெட்டி(படம்-99-2) திரையில் தோன்றிடும்
படம்-99-2
இதில் Macro from என்ற பகுதியில் பொதுவாக My Macros என்ற பகுதியிலிருந்து இதன் மூலக்குறிமுறைகள் தேக்கி வைக்கப்பட்டு வருவதாக காண்பிக்கும் இதற்கான நூலகமாக Standard என்பது இருக்கும் அதனை தெரிவுசெய்து கொண்டு இந்த உரையாடல் பெட்டியின் வலதுபுறமுள்ள new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் My Macros& Dialog .Standard-Open Office Basic என்ற உரையால் பெட்டி Module1 என்ற பெயருடன் நாம் ஓப்பன் ஆஃபிஸ்பேஸிக்கில் கட்டளை தொடர் எழுதுவதற்காக திரையில் தோன்றிடும்
இவ்வாறு புதியதை தோன்றசெய்வதற்கு பதிலாக ஏற்கனவே பெயரிட்டு உருவாக்கி இருக்கும் மேக்ரோவில் திருத்தம் செய்வது எனில் நாம் திருத்தம் செய்ய விரும்பும் கோப்பினை தெரிவுசெய்துகொண்டு இந்த penOffice.org Basic Macro என்ற உரையாடல் பெட்டியில் உள்ள edit என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-99-3
பின்னர் பின்வரும் குறிமுறை வரிகளை தவறில்லாமல் தட்டச்சு செய்திடுக .
Sub Main
' ask the user for a graphics file
sGraphicUrl = InputBox("Please enter the URL of a graphic file", _
"Import Graphics", _
"file:///")
if sGraphicURL = "" then ' User clicked Cancel
exit sub
endif
' access the document model
oDoc = ThisComponent
' get the Text service of the document
oText = oDoc.getText()
' create an instance of a graphic object using the document service factory
oGraphicObject = oDoc.createInstance("com.sun.star.text.GraphicObject")
' set the URL of the graphic
oGraphicObject.GraphicURL = sGraphicURL
' get the current cursor position in the GUI and create a text cursor from it
oViewCursor = oDoc.getCurrentController().getViewCursor()
oCursor = oText.createTextCursorByRange(oViewCursor.getStart())
' insert the graphical object at the cursor position
oText.insertTextContent(oCursor.getStart(), oGraphicObject, false)
End Sub
அதன்பின் இவை படம்99-3இல் உள்ளவாறு இருக்கும் பிறகு கருவி பட்டையிலுள்ள Run Basic என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த குறிமுறைகள் சரிபார்க்கபட்டுகுறிப்பிட்ட குறிமுறைவரியில் பிழை ஏதேனுமிருந்தால் அதனை இருப்பதாக சுட்டிகாட்டி இடம்சுட்டி நிற்கும். Enable watch என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் அவ்வாறு பிழை உள்ளவரிமட்டும் கூர்ந்து கவணிக்கபடும் step into, step out, step over ஆகிய உருவ பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கி ஒவ்வொரு வரியாக பிழை ஏதேனுமிருக்கின்றதாவென சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கின்றது பிழையேதும் இல்லையெனில் save basic என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த குறிமுறைகட்டளை வரிகளை சேமித்து கொள்க பின்னர் compile என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த குறிமுறைவரிகள் இயந்திரமொழியாக உருமாற்றம் ஆகிவிடும்
இந்த எடுத்துகாட்டில் கட்டளைவரியானது பயனாளியை வரைகலை கோப்பு எங்குள்ளது நடப்பு ஆவணத்தின் சுட்டியின் இடத்தை அவ்விடத்தில் உள்ளிணைத்திடுமாறு கோருகின்றது பிறகு தானியங்கியாக வரைகலையை உள்ளிணைக்குமாறு செய்கின்றது
படம்-99-4
OpenOffice.org Basic Macro என்ற உரையாடல் பெட்டி(படம்-99-2)யில் assign என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேல்பகுதியிலுள்ள Tools => Customize=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் உரையாடல் பெட்டியில் Toolbars என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் இதில் Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் add commandsஎன்ற உரையாடல் பெட்டியில் Category என்பதன்கீழ் OpenOffice.org Macros என்ற மையமுனையையும் அதன் கீழுள்ள Module1 என்பதையும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் வலதுபுறம் mainஎன்பது தானாகவே உருவாகும் உடன் add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பேஸிக்கின் ஒருங்கிணைந்தமேம்படுத்தும் சூழலில் கீழ்பகுதியில் module1 என்பதன் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு உடன் விரியும் சிறு பட்டியலில் திரையின் மேல்பகுதியிலுள்ள Tools= > Macros => Organize Dialog= > OpenOffice.org Basic=> edit => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-99-5 இல் உள்ளவாறு வரைகலை இடைமுகத்தில் திரைதோன்றிடும்
                              படம்-99-5