ஓப்பன்ஆஃபிஸ்இம்ப்பிரஸ்-52-படங்களை சேர்த்தலும் வடிவமைத்தலும்
பக்கம்பக்கமாக எழுதப்படும் சொற்களால் ஆன உரையைவிட ஒரேயொரு படத்தை கொண்டு நாம் கூறவிரும்பும் செய்தியை பார்வையாளருக்கு எளிதாகவழங்கமுடியும். அவ்வாறான படத்தை இம்ப்ரஸின் ஒரு படவில்லையில் சேர்த்து வழங்கும்போது படவில்லைகாட்சி கூடுதல் செய்தியை பார்வையாளருக்கு வழங்குகின்றது.அவ்வாறான ஒரு படத்தை படவில்லைக்குள் எவ்வாறு சேர்த்து இணைத்து வடிவமைப்பது என இப்போது காண்போம்.
தேவையான படவில்லையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் மேலே கட்டளை பட்டியிலுள்ள Insert => Picture=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
உடன் விரியும்Insert Picture என்ற உரையாடல் பெட்டியில் இணைக்கவிரும்பும் படம் இருக்குமிடத்தை தேடிபிடித்து தெரிவுசெய்க அப்போது முன்காட்சி (Preview) திரையில் அந்த படத்தின் தோற்றம் காண்பிக்கும் இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியில் இருக்கும்Link ,Preview ஆகிய இருவாய்ப்புகளின் தேர்வுசெய்பெட்டிகளில் முதல்வாய்ப்பை தெரிவு செய்து கொண்டு இந்தபடம் நன்றாக இருந்தால் Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் விரும்பி தெரிவுசெய்த படம் படவில்லையில் இணைக்கபட்டிருக்கும் உடன் பச்சை வண்ணத்தில் எட்டு கைப்பிடிகள் இப்படத்தைசுற்றி நாம் மேலும் வடிவமைப்பதற்கு உதவுவதற்காக தயாராக இருக்கும்.
அச்சிடபட்டு கைவசமிருக்கும் படத்தை படவில்லைக்குள் கொண்டு வந்து சேர்த்திட மேலே கட்டளை பட்டியிலுள்ள Insert => Picture => Scan => Request=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக பின்னர் scannerஎன்ற சாதனத்தை இயக்குவதற்கான மென்பொருளிற்கேற்ப அவை கூறும் படிமுறையை பின்பற்றுக
ஒரு கோப்பிலிருக்கும் படங்களின் தொகுப்பிலிருந்து நாம் விரும்பும் படத்தை படவில்லைக்குள் கொண்டு வந்த சேர்த்திட மேலே கட்டளை பட்டியிலுள்ள Tools => Gallery => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக அல்லது மேலே வரைகலை கருவிபட்டியிலிருந்து (Drawing Toolbar) இதற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-52-1-ல் உள்ளவாறு விரியும் themesஎன்ற தலைப்பின்கீழ் பல்வேறு வகையான படங்களின் தொகுப்பிலிருந்து (Gallery) தேவையான படத்தை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியை பிடித்து இழுத்துவந்து படவில்லையில் தேவையான இடத்தில் விட்டிடுக உடன் நாம் விரும்பி தெரிவுசெய்து இழுத்து வந்த படம் படவில்லையில் இணைக்க பட்டிருக்கும்(படம்-52-1) அதனை சுற்றி பச்சை வண்ணத்தில் எட்டு கைப்பிடிகள் இப்படத்தை நாம் மேலும் வடிவமைப்பதற்கு உதவுவதற்காக தயாராக இருக்கும்.
படம்-52-1
இந்த கைப்பிடியை பிடித்து நகர்த்திசென்ற விடுவதன்மூலம் படத்தின் அளவையும் இடத்தையும் மாற்றியமைக்கலாம் மேலே வரைகலை கருவிபட்டியிலிருந்து (Drawing Toolbar) Rotate என்ற (படம்-52-2)பொத்தானை சொடுக்கியபின் படத்தை இடவலமாக அல்லது தலைகீழாக மாற்றியைக்கமுடியும்
படம்-52-2
மேலே கட்டளை பட்டியிலுள்ள View => Toolbars => Picture => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன் திரையின் மேல்பகுதியில் Picture toolbarஎன்ற படங்களின் கருவிபட்டையானது வடிவமைப்பு செய்வதற்கு தயாராக தோன்றிடும் அதனை பயன்படுத்தி படவில்லையில் சேர்த்த படத்தைமேலும் வடிவமைப்பு செய்து மெருகூட்டிடமுடியும் இதன் இடதுபுறம் ஓரமாகவுள்ள வடிகட்டியின் குறும்படத்திற்கு அருகிலுள்ள கீழிறங்கு பட்டிக்கான பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்படம்-52-3-ல் உள்ளவாறு விரியும் பலவாய்ப்புகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து வடிகட்டி படத்தை வடிவமைத்து கொள்க இதே கருவிபட்டியின் மையத்திலுள்ள Transparency என்ற பெட்டியில் 0 என அமைத்து படத்தின் பின்னால் உள்ளவைகளை பார்த்திடுமாறு அமைத்திடுக
படம்-52-3
இம்ப்ரஸ் ஆனது படவில்லையில் இணைக்கும் படங்களை வெட்டி சரிசெய்வதற்கு 1.நேரடியாக இடைமுகம் செய்து வெட்டிசரிசெய்வது 2. அதற்கான உரையாடல் பெட்டிமூலம் வெட்டிசரிசெய்வது ஆகிய இரண்டு வழிகளில்அனுமதிக்கின்றது
முதல் வழியில் முதலில் படவில்லையிலுள்ள படத்தை தெரிவுசெய்து கொண்டு மேலே படங்களின் கருவிபட்டையிலுள்ள கத்தரிபோன்ற குறும்படத்தை தெரிவு செய்துசொடுக்குக உடன் படம்-52-4-ல் உள்ளவாறு படத்தை சுற்றிகுறியீடும் பக்கமூலைகளில் ட வடிவ குறியீடும் தோன்றும் தேவையான பக்கத்தின் மூலையிலிருக்கும் குறியீட்டை பிடித்து இழுத்து செல்வதன்மூலம் படத்தின் அளவை சரிசெய்து கொள்க
படம்-52-4
படவில்லையிலுள்ள படத்தை தெரிவுசெய்து கொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள Format => Crop Picture=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படவில்லையிலுள்ள படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Crop Picture என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம் 52-5-ல் உள்ளவாறு Crop என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் Crop என்பதன் கீழுள்ள keep scale ,keep image ஆகிய இரு தேர்வுசெய்பெட்டியில் தேவையானதையும் தொடர்புடைய அளவுகளையும் தெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-52-5
உருவப்படமும் இணையமுகவரியும் இணைந்து உரையும்மேல்மீட்புஇணைப்பும் சேர்ந்ததற்கு சம்மான உருவபடத்தை உருவாக்குகின்றது இவ்வுருவ படத்தை உருவாக்குவதற்காக படவில்லையிலுள்ள படத்தை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit => Image Map => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Image Map என்ற உரையாடல் பெட்டியில் தேவையானகருவிகளை தெரிவுசெய்து இறுதியாக Apply ,Save ஆகிய குறும்படங்களை தெரிவுசெய்து சொடுக்கி நாம் செய்த மாற்றங்களை செயற்படுத்தி சேமித்துகொள்கக
படம்-52-6