Saturday, December 17, 2011

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-56-படவில்லைகளை சேர்த்தலும் வடிவமைத்தலும்




புதிய காலியான படவில்லையொன்றை உள்ளிணைத்தல்
 ஒரு இம்பிரஸ்ஸின் திரையில் இரண்டுவகையில் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியை தோன்றுமாறு செய்யமுடியும் 
 1.படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் ஒரு படவில்லையின் மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கியவுடன் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியொன்று(படம்-1) தோன்றிடும்.




படம்-1
2.படவில்லைகளின் பலகத்தில் (slides pane)(படம்-2)அல்லது மேலே கட்டளை பட்டியிலுள்ள  View => Slide Sorter=>.என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியபின் தோன்றிடும் குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view) ஏதேனுமொரு படவில்லையின் குறும்படத்தின்மீது இடச்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கியவுடன் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியொன்று (படம்-2) தோன்றிடும்.







படம்-2
  பின்னர் முதல் வகையில் தோன்றிய பட்டியெனில் slides => new slides => என்றவாறும் இரண்டாவது வகையில்  தோன்றிய பட்டியெனில் new slides => என்றவாறும் கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
 உடன் இம்ப்பிரஸ் திரையில் புதிய காலியான படவில்லையொன்று உள்ளிணைந்து தோன்றிடும்
ஏற்கனவேயிருக்கும் கோப்பிலிருந்துபுதிய காலியான படவில்லையொன்றை உள்ளிணைத்தல்
 ஏற்கனவேயிருக்கும் கோப்பிலிருந்தும் புதிய படவில்லையொன்றை உள்ளிணைத்து கொள்ளமுடியும் அதற்காக
 1.புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் திறந்துகொணடு அதில் புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  படவில்லைக்கு முந்தைய படவில்லையில் இடம் சுட்டியை வைத்தபின் மேலே கட்டளைபட்டியில் insert => file=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக. 
  2.உடன் தோன்றிடும் கோப்புகளை தேடிடும் insert files என்ற உரையாடல் பெட்டியுள்ள திரையில்  படவில்லை கோப்பு இருக்குமிடத்தை தேடியபின் விரும்பும் படவில்லை களின் கோப்பு கிடைத்தவுடன்  அதனை தெரிவுசெய்துகொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 3.பிறகு தோன்றிடும் Insert Slides/Objectsஎன்ற(படம்-3) உரையாடல் பெட்டியில் இம்பிரஸ் கோப்பின்அருகிலிருக்கும் +என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்கிய வுடன் அதிலுள்ள படவில்லைகளின் குறும்படங்கள் வரிசையாக விரிவுபடுத்த படும்




படம்-3
  4.அவைகளுள் தேவையான படவில்லைகளை மட்டும்தெரிவுசெய்துகொண்டு Linkஎன்ற தேர்வுசெய்பெட்டியையும் அதன்பின்OKஎன்ற பொத்தானையும் தெரிவு செய்து சொடுக்குக
ஏற்கனவே யிருக்கும் கோப்பிலிருந்து நகலெடுத்து ஒட்டுதல் வழியில்புதிய படவில்லை யொன்றை உள்ளிணைத்தல்
 நகலெடுத்து ஒட்டுதல் வழியிலும் புதிய படவில்லை யொன்றை ஏற்கனவே யிருக்கும் கோப்பிலிருந்து உள்ளிணைத்து கொள்ளமுடியும்
1. நகலெடுத்திட விரும்பும் படவில்லையுள்ள கோப்பி்ன் மேலே கட்டளை பட்டியிலுள்ள  View => Slide Sorter=>.என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view)  தேவையான படவில்லைகளை தெரிவுசெய்து கொள்க
2.பிறகுமேலே கட்டளைபட்டியிலுள்ள  Edit => Copy=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது மேலேமுதன்மை கருவிபட்டியில்  Copyஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+Cஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
3.பின்னர் புதிய படவில்லையை உள்ளிணைக்க வேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை .படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் திறந்துகொள்க
4.அதில் ஒட்டவேண்டிய படவில்லையில் இடம்சுட்டியை வைத்து மேலே கட்டளை பட்டியிலுள்ள  Edit => Paste=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
  அல்லது மேலேமுதன்மை கருவிபட்டியில் Pasteஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+V.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
 இதற்கு பதிலாக புதிய படவில்லையை உள்ளிணைக்க வேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை சாதாரன திரையிலும்  ஏற்கனவே படவில்லைகள் இருக்கும்  இம்ப்பிரஸ் கோப்பினை குறும்படங்களின் காட்சித்  திரையிலும்(slides sorter view)  பக்கம் பக்கமாக திரையில் திறந்து கொள்க
 பிறகு ஏற்கனவே படவில்லைகள் இருக்கும் கோப்பிலிருந்து தேவையான படவில்லைகளை தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை பிடித்துகொண்டு அப்படியே பிடியை விடாமல் இழுத்துவந்து புதிய கோப்பில் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து பிடித்திருந்த சுட்டியின் பொத்தானை விட்டிடுக.
   உடன் மேலேகூறிய நகலெடுத்து ஒட்டுதல்  இழுத்துவந்து விடுதல் ஆகிய இருவழிகளிலும் புதிய கோப்பில் நாம்விரும்பிய படவில்லைகள் உள்ளிணைந்தவிடும்
படவில்லையை பதிலிடுதல் (Duplicate) வழிமுறையில் புதிய படவில்லையை உள்ளிணைத்தல்
 மேலே கூறிய வழிமட்டுமல்லாது பின்வரும் வழியிலும் புதிய படவில்லையை உள்ளிணைத்து கொள்ளமுடியும்
புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை திறந்துகொண்டு அதன் மேலே கட்டளைபட்டியில் View => Normal=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லையின் சாதாரான காட்சித்திரையை தோன்றிட செய்க
 பின்னர் அதில் மேலே கட்டளைபட்டியில் Insert=> Duplicate Slide => என்றவாறு(படம்-4) கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் புதிய படவில்லை யொன்று இடம்சுட்டி இருக்கும் படவில்லைக்கு அடுத்தாற் போன்று தோன்றிடும்




படம்-4

   குறிப்பு ஒரே படவில்லைக்குள் ஏராளமான தகவல்கள் இருந்தால் பார்வையாளர் களுக்கு எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க குறிப்பிட்ட படவில்லையின் தகவல்களை தேவையான அளவிற்கு ஒன்றுக்குமேற்பட்ட படவில்லைகளாக இந்த வழிமுறையில் பிரித்து கொள்க
படவில்லைகளை விரிவாக்கம் செய்தல்
ஒரு படவில்லைக்குள் ஏராளமான தகவல்கள் இருந்திடும்போது அவற்றின் எழுத்துரு வின் அளவை  குறைத்து படவில்லையின் தோற்றத்தை மாற்றியமைப்பதற்கு பதிலாக இந்த தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகளாக பிரித்து வழங்குவது நன்று அதற்காக மேலே கட்டளைபட்டியில் Insert => Exp and Slide => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அப்படவில்லைக்குள் உள்ள முக்கிய தகவல்கள் தனித்தனி புதிய படவில்லைகளாக பிரிந்து அமையும் 
ஒட்டுமொத்த சாராம்ச படவில்லையை உருவாக்குதல்
ஒரு இம்பிரஸ் கோப்பில் பல்வேறு படவில்லைகளில் கூறப்படும் தகவல்களை தொகுத்து  ஒட்டுமொத்த சாரம்சமாக அக்கோப்பின் முதல் படவில்லையில் வழங்கினால் நன்றாக இருக்கும் என திட்டமிடுவோம் அதற்காக   படவில்லைகளின் பலகத்திரையில் (slides pane)அல்லது  குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view) தேவையான படவில்லைகளை தெரிவுசெய்துகொள்க பின்னர் மேலே கட்டளை பட்டியில் Insert => Summary Slide=>. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அப்படவில்லைகளின்  தலைப்பிலுள்ள முக்கிய தகவல்கள் மட்டும் சேர்ந்து ஒரே படவில்லைக்குள் ஒட்டுமொத்தசாராம்ச வில்லையாக தோன்றிடும்
படவில்லையின் பெயரை மாற்றியமைத்தல்
 பெயர்மாற்றம் செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகுஇந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியெனில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில் Rename Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் Rename Slideஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக 
 அதன்பின்னர் தோன்றிடும் Rename Slideஎன்ற (படம்-5)உரையாடல் பெட்டியில் நாம் விரும்பியவாறு அந்த படவில்லைக்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்து மாற்றி அமைத்தபின் OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக




படம்-5
படவில்லையை வடிவமைத்தல்
வடிவமைப்பு செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையெனில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில்  Slide design என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில்  Slide design என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  




படம்-6
   உடன் தோன்றிடும்Slide design என்ற(படம்-6)  உரையாடல் பெட்டியில் தேவையான வடிவமைப்பை தெரிவுசெய்க பிறகு loadஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு உடன்விரியும் load slide design என்ற உரையாடல் பெட்டியின்categories என்பதன் கீழுள்ள Slide design என்ற போன்ற வகைகளில் தேவையானதை தெரிவுசெய்க அவ்வாறு தெரிவுசெய்திடும்போது அவை எவ்வாறு இருக்கும் என  பார்த்து தெரிந்து கொள்ள இதிலுள்ள   more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையின் preview பகுதியில் பார்த்து திருப்தியானபின் ok என்ற பொத்தானையும்  பின்னர் slide designஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்றபொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக
தேவையற்ற படவில்லைகளை நீக்கம் செய்தல்
  நீக்கம்செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையெனில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில் Delete Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் Delete Slideஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக 
 அல்லது தேவையற்ற படவில்லைமீது இடம் சுட்டியை வைத்து விசைப்பலகை யிலுள்ள del என்ற விசையை அழுத்துக

Monday, December 5, 2011

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-55-கால்க்கின் விரிதாள் வரைபடம் போன்றவைகளை ஒரு படவில்லைக்குள் இணைத்தல்


 சிக்கலான தரவுகளை  ஒரு அட்டவணையாக மட்டுமே இம்ப்பிரஸின்  படவில்லைக்குள் பொதிந்து பிரதிபலிக்க செய்யமுடியும்  அதனால் அத்தரவுகளை  ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் ஒரு பட வில்லைக்குள் அட்டவணையாக உருவாக்கி பிரதிபலிக்க செய்யலாம் அதைவிட. இந்த தரவுகளை ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில்  சிக்கலான கணக்கீடுகளின் விடையையும் தரவுஆய்வையும் உருவாக்கி ஒரு பட வில்லைக்குள்    பொதிந்து காட்சியாக காண்பிக்கமுடியும் ஆனால் இவ்வாறான  சிக்கலான தரவுகளின் கணக்கீடுகளை ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின் விரிதாளில் தனியாக உருவாக்கி கொண்டு அதன்பின்னர் அதனுடைய விளைவுகளை மட்டும் படவில்லைக்குள் பிரதிபலிக்கும்படி செய்வதுதான் நல்லது ஏனெனில் கால்க்கின் விரிதாள் தனியாக படவில்லைக்கு வெளியில் இருக்கும்போது நாம் விரும்பியவாறு கணக்கீடுகளை எப்போது வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டு மானாலும் மாற்றியமைத்துகொள்ளமுடியும்
 படவில்லைக்குள் கால்க்கின் விரிதாள் ஒன்றினை உள்ளிணைத்தல்
 கால்க்கின் விரிதாள் ஒன்றினை உள்ளிணைப்பதற்கு செயல்பலகத்திலுள்ள முன்கூட்டியே கட்டமைக்கபட்ட (படம்-1)இடஅமைவின்(layout) படவில்லை யொன்றை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-1
 உடன் காலியான படவில்லையொன்று திரையில் தோன்றும் அதன் மையபகுதியில் உள்ள விரிதாள் போன்ற குறும்படத்தின் மீது இடம்சுட்டி பிரதிபலி்க்கும்  உடன் சுட்டியை இருமுறை சொடுக்குக.
படம்-2
    உடன் விரிதாளானது படவில்லைக்குள் உள்ளிணைந்து தோன்றும் அதனுடன் (படம்-2) இந்த விரிதாளினை வடிவமைப்பதற்கான வடிவமைப்பு பட்டை (formating bar) கருவிபட்டை(toolbar) விரிதாளிற்கேஉரிய வாய்ப்பாடு பட்டை(Formula bar) ஆகியவையும் தோன்றிடும்  கால்க்கில் அனுபவம் பெற்றவர்எனில் இவை கால்க்கின் விரதாளில் பணிபுரிவதற்கு உதவுபவைஎன தெரிந்துகொண்டு வழக்கமான கால்க்கின் பணிகளை இந்த படவில்லைக்குள் உள்ள விரிதாளில் பணிபுரிவார்கள்.
   இதனுடைய விளிம்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து பிடித்து நகர்த்தி செல்வதன் மூலம் இந்த விரிதாளின் நீள அகலங்களை மாற்றியமைத்திடலாம்.அதன் கீழ்பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில்  Insert => Sheet =>என்றவாறு  கட்டளைகள செயற்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தாளை இதனுடன் உள்ளிணைத்திடலாம் ஆயினும்  படவில்லைக்குள் எப்போதும் நாம் கடைசியாக பணிபுரிந்து வெளியேறிய பணித்தாள் மட்டுமே பிரதிபலிக்கும்
  வாய்ப்பாடு இல்லாத வெற்றுத்தரவுகளை மட்டும் உள்ளீடுசெய்யும்போது பொதுவாக அதன் வகையை இம்ப்பிரஸ் ஆனது புரிந்துகொண்டு அதனை ஏற்றுகொள்வதற்கு பச்சை வண்ண பொத்தானையும் அல்லது மறுத்தளிப்பதற்கு சிவப்பு வண்ணபொத்தானையும்  திரையில்  பிரதிபலிக்கும் அவற்றுள் தேவையானதை சொடுக்கி தரவுகளின் உள்ளீட்டை நிறைவுசெய்யலாம்  
 இந்நிலையில் இம்ப்பிரஸ்ஆனது தரவுகளை தவறாக புரிந்துகொண்டால்  Format => Cells=> என்றவாறு  கட்டளைகள செயற்படுத்தியபின் தோன்றும் திரையில் தேவையானவாறு சரிசெய்து கொள்க.
   கால்க்கில் ஒவ்வொரு நுன்னறைக்கும் (cell)ஒரு பாவணையென ஏராளமாக இருக்கும் தனித்தனியான கால்க்கின் பாவனையை இம்ப்பிரஸ் ஆதரிக்காது அதனால் Ctrl +A  என்றவாறு விசைகளை சேர்த்து அழுத்துவதன்மூலம் பணித்தாள் முழுவதும் ஒரேமாதிரியான பாவணையை தெரிவுசெய்துகொள்வது நல்லது
வரைபடத்தை படவில்லைக்குள் இணைத்தல்
   செயல்பலகத்தில் உள்ளமுன்கூட்டியே கட்டமைக்கபட்ட இடஅமைவை (layout) தெரிவு செய்வது அல்லது மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Chart=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது ஆகியஇருவழிகளில் ஒரு வரைபடத்தை படவில்லைக்குள்(slide) இணைக்கமுடியும்.
  செயல்பலகத்தில் உள்ளமுன்கூட்டியே கட்டமைக்கபட்ட இடஅமைவில் (layout)வரைபடம் உள்ள படவில்லைகளுள் ஒன்றினை தேடிபிடித்து தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் படவில்லையில் உள்ள வரைபடத்தின் குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
  உடன் மாதிரி தரவுகளுடன் வரைபடமொன்று திரையில் தோன்றிடும் அந்த வரை படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து இருமுறை சொடுக்குக அல்லது  மேலே கட்டளை பட்டையிலிருந்து View => Chart Data Table =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் வரைபடத்திற்கான தரவுகளடங்கிய அட்டவனை இருக்கும் தாள் திரையில் தோன்றிடும் அதில் நம்முடைய தரவுகளை உள்ளீடுசெய்துகொள்க
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Chart => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது செந்தர கருவிபட்டை(Standard tool bar) யிலிருந்து வரைபடத்திற்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
 உடன் மாதிரி தரவுகளுடன் வரைபடமொன்று திரையில் தோன்றிடும் அதில் நம்முடைய தரவுகளை உள்ளீடுசெய்துகொள்க.
  பிறகு மேலே கட்டளை பட்டையிலிருந்து View => Toolbars => Main Toolbar => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் Main Toolbar -ல் Chart Typeஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது மேலே கட்டளை பட்டையிலிருந்து Format => Chart Type=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது படவில்லையில் தோன்றிடும் வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக அதன்பின்னர் விரியும் சூழ்நிலைபட்டியில் Chart Typeஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-3
  உடன் Chart Typeஎன்ற(படம்-3) உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதன் இடதுபுற பலகத்தில் வரைபடத்தின் வகைகளின் பெயர்பட்டியலாக தோன்றும் அவைகளுள் ஒன்றை  தெரிவுசெய்தவுடன் அதிலுள்ள பல்வேறு துனைவகைகளின் மாதிரிவரைபடம் வலதுபுறத்தில் தோன்றும் அவற்றுள் தேவையான வகையை மட்டும் தெரிவு செய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
  பிறகு வரைபடத்திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insertஅல்லது Format என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் கட்டளைபட்டியில் தேவையான வரைடத்தின் உறுப்புகளை சேர்ப்பதற்கான கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
   ஒருவரைபடத்தில் chart wall,chart areaஆகிய (படம்-4)இருமுக்கிய கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன அவைகளின் உதவியுடன் வரைபடத்தின் கட்டமைப்பை  நாம்விரும்பியவாறு மாற்றி யமைத்து கொள்ளலாம் 
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Format => Position and Size =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது F4என்ற செயலிவிசையை அழுத்துக அல்லது வரை படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Position and Size என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
   உடன் தோன்றிடும் Position and Size என்ற உரையாடல் பெட்டியின் துனையுடன் அல்லது வரைபடத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சொடுக்குக உடன் வரைபடத்தை சுற்றி நான்கு மூலைகளிலும் பச்சைவண்ண கைப்பிடிதோன்றிடும் அதனைபிடித்து தேவையானவாறு இழுத்துசெல்வதன் மூலம் வரைபடத்தின் அளவையும் இடத்தையும் மாற்றியமைத்து கொள்க.
 மேலே கட்டளை பட்டையிலிருந்து Format => Chart Area=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Chart Areaஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதன் உதவியுடன்  வரைபடத்தின் பின்புலத்தை தேவையானவாறு மாற்றியமைத்து கொள்க
 படம்-4
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert =>Movie and Sound=>. என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்   திரையில் தோன்றிடும் உரையாடல் பெட்டியில் தேவையானவாறு ஒளிஒலி படங்களைஅல்லது இசையை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லை்ககுள் இணைத்துகொள்க
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools =>Gallery=>.  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Gallery.  என்ற திரையில் தேவையானவற்றை  தெரிவுசெய்து சொடுக்கி படவில்லைக்குள் இணைத்துகொள்க
 படம்-5
  இவ்வாறு செய்தவுடன் இம்பிரஸின் திரையில் Media Playbackஎன்ற (படம்-5)கருவிபட்டை தானாகவே இயல்புநிலையில் Drawing என்ற கருவிபட்டைக்கு சற்று மேலே தோன்றிடும் அதன்மூலம் நாம் படவில்லைக்குள் இணைத்தவைகளை முன்காட்சியாக காணலாம்  
   அல்லது மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools=> Media Player=>   என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Media Player -ல்  நாம் படவில்லைக்குள் இணைத்தவைகளை முன்காட்சியாக காணலாம்
  மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Object => OLE object=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Insert OLE object என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் create new என்ற வா்னொலி பொத்தானை தெரிவு செய்து கொண்டு    object type  என்பதன் கீழ் தேவையான வகையை தெரிவுசெய்துok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக 
   ஏற்கனவே இருக்கும் கோப்பினை இணைப்பதற்கு இதே Insert OLE object என்ற (படம்-6) உரையாடல் பெட்டியில்create from file  என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில்Link to file என்ற தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்துகொள்க பின்னர் தேவையான கோப்பை  தேடிபிடித்துதெரிவுசெய்துகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
படம்-6
  இம்ப்பிரஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert=> Object=> Formula=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Math objectஎன்ற திரையின் மூலம் படவில்லைக்குள் உருவாக்கிய அட்டவணையில் வாய்ப்பாடுகளை(formula) உருவாக்கி கொள்ளமுடியும்
 எச்சரிக்கை இவ்வாறு மாறுதல் செய்யும்போது எழுத்துருவின் அளவை சரியாக அமைத்துகொள்க.
 இம்ப்பிரஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Fill =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பிறகு தோன்றிடும் திரையின்மூலம் படவில்லைக்குள் ஓப்பன் ஆஃபிஸின்  Draw , HTML , plain text ஆகியவற்றின் கோப்புகளை  இணைத்து கொள்ளமுடியும் நேரடியாக இணைய இணைப்பிருந்தால் URLமுகவரியை உள்ளீடுசெய்தும் இந்த கோப்புகளை ஒரு படவில்லைக்குள்  இணைத்துகொள்ளமுடியும்