Saturday, December 17, 2011

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-56-படவில்லைகளை சேர்த்தலும் வடிவமைத்தலும்




புதிய காலியான படவில்லையொன்றை உள்ளிணைத்தல்
 ஒரு இம்பிரஸ்ஸின் திரையில் இரண்டுவகையில் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியை தோன்றுமாறு செய்யமுடியும் 
 1.படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் ஒரு படவில்லையின் மீது இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கியவுடன் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியொன்று(படம்-1) தோன்றிடும்.




படம்-1
2.படவில்லைகளின் பலகத்தில் (slides pane)(படம்-2)அல்லது மேலே கட்டளை பட்டியிலுள்ள  View => Slide Sorter=>.என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்கியபின் தோன்றிடும் குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view) ஏதேனுமொரு படவில்லையின் குறும்படத்தின்மீது இடச்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்கியவுடன் மேல்மீட்பு (சூழ்நிலை ) பட்டியொன்று (படம்-2) தோன்றிடும்.







படம்-2
  பின்னர் முதல் வகையில் தோன்றிய பட்டியெனில் slides => new slides => என்றவாறும் இரண்டாவது வகையில்  தோன்றிய பட்டியெனில் new slides => என்றவாறும் கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
 உடன் இம்ப்பிரஸ் திரையில் புதிய காலியான படவில்லையொன்று உள்ளிணைந்து தோன்றிடும்
ஏற்கனவேயிருக்கும் கோப்பிலிருந்துபுதிய காலியான படவில்லையொன்றை உள்ளிணைத்தல்
 ஏற்கனவேயிருக்கும் கோப்பிலிருந்தும் புதிய படவில்லையொன்றை உள்ளிணைத்து கொள்ளமுடியும் அதற்காக
 1.புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் திறந்துகொணடு அதில் புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  படவில்லைக்கு முந்தைய படவில்லையில் இடம் சுட்டியை வைத்தபின் மேலே கட்டளைபட்டியில் insert => file=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக. 
  2.உடன் தோன்றிடும் கோப்புகளை தேடிடும் insert files என்ற உரையாடல் பெட்டியுள்ள திரையில்  படவில்லை கோப்பு இருக்குமிடத்தை தேடியபின் விரும்பும் படவில்லை களின் கோப்பு கிடைத்தவுடன்  அதனை தெரிவுசெய்துகொண்டு open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 3.பிறகு தோன்றிடும் Insert Slides/Objectsஎன்ற(படம்-3) உரையாடல் பெட்டியில் இம்பிரஸ் கோப்பின்அருகிலிருக்கும் +என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்கிய வுடன் அதிலுள்ள படவில்லைகளின் குறும்படங்கள் வரிசையாக விரிவுபடுத்த படும்




படம்-3
  4.அவைகளுள் தேவையான படவில்லைகளை மட்டும்தெரிவுசெய்துகொண்டு Linkஎன்ற தேர்வுசெய்பெட்டியையும் அதன்பின்OKஎன்ற பொத்தானையும் தெரிவு செய்து சொடுக்குக
ஏற்கனவே யிருக்கும் கோப்பிலிருந்து நகலெடுத்து ஒட்டுதல் வழியில்புதிய படவில்லை யொன்றை உள்ளிணைத்தல்
 நகலெடுத்து ஒட்டுதல் வழியிலும் புதிய படவில்லை யொன்றை ஏற்கனவே யிருக்கும் கோப்பிலிருந்து உள்ளிணைத்து கொள்ளமுடியும்
1. நகலெடுத்திட விரும்பும் படவில்லையுள்ள கோப்பி்ன் மேலே கட்டளை பட்டியிலுள்ள  View => Slide Sorter=>.என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியபின் தோன்றிடும் குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view)  தேவையான படவில்லைகளை தெரிவுசெய்து கொள்க
2.பிறகுமேலே கட்டளைபட்டியிலுள்ள  Edit => Copy=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.அல்லது மேலேமுதன்மை கருவிபட்டியில்  Copyஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+Cஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
3.பின்னர் புதிய படவில்லையை உள்ளிணைக்க வேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை .படவில்லையின் சாதாரான காட்சியின் திரையில் திறந்துகொள்க
4.அதில் ஒட்டவேண்டிய படவில்லையில் இடம்சுட்டியை வைத்து மேலே கட்டளை பட்டியிலுள்ள  Edit => Paste=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக.
  அல்லது மேலேமுதன்மை கருவிபட்டியில் Pasteஎன்ற பொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Ctrl+V.ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
 இதற்கு பதிலாக புதிய படவில்லையை உள்ளிணைக்க வேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை சாதாரன திரையிலும்  ஏற்கனவே படவில்லைகள் இருக்கும்  இம்ப்பிரஸ் கோப்பினை குறும்படங்களின் காட்சித்  திரையிலும்(slides sorter view)  பக்கம் பக்கமாக திரையில் திறந்து கொள்க
 பிறகு ஏற்கனவே படவில்லைகள் இருக்கும் கோப்பிலிருந்து தேவையான படவில்லைகளை தெரிவுசெய்து சுட்டியின் பொத்தானை பிடித்துகொண்டு அப்படியே பிடியை விடாமல் இழுத்துவந்து புதிய கோப்பில் தேவையான இடத்தில் இடம்சுட்டியை வைத்து பிடித்திருந்த சுட்டியின் பொத்தானை விட்டிடுக.
   உடன் மேலேகூறிய நகலெடுத்து ஒட்டுதல்  இழுத்துவந்து விடுதல் ஆகிய இருவழிகளிலும் புதிய கோப்பில் நாம்விரும்பிய படவில்லைகள் உள்ளிணைந்தவிடும்
படவில்லையை பதிலிடுதல் (Duplicate) வழிமுறையில் புதிய படவில்லையை உள்ளிணைத்தல்
 மேலே கூறிய வழிமட்டுமல்லாது பின்வரும் வழியிலும் புதிய படவில்லையை உள்ளிணைத்து கொள்ளமுடியும்
புதிய படவில்லையை உள்ளிணைக்கவேண்டிய  இம்ப்பிரஸ் கோப்பினை திறந்துகொண்டு அதன் மேலே கட்டளைபட்டியில் View => Normal=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லையின் சாதாரான காட்சித்திரையை தோன்றிட செய்க
 பின்னர் அதில் மேலே கட்டளைபட்டியில் Insert=> Duplicate Slide => என்றவாறு(படம்-4) கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் புதிய படவில்லை யொன்று இடம்சுட்டி இருக்கும் படவில்லைக்கு அடுத்தாற் போன்று தோன்றிடும்




படம்-4

   குறிப்பு ஒரே படவில்லைக்குள் ஏராளமான தகவல்கள் இருந்தால் பார்வையாளர் களுக்கு எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க குறிப்பிட்ட படவில்லையின் தகவல்களை தேவையான அளவிற்கு ஒன்றுக்குமேற்பட்ட படவில்லைகளாக இந்த வழிமுறையில் பிரித்து கொள்க
படவில்லைகளை விரிவாக்கம் செய்தல்
ஒரு படவில்லைக்குள் ஏராளமான தகவல்கள் இருந்திடும்போது அவற்றின் எழுத்துரு வின் அளவை  குறைத்து படவில்லையின் தோற்றத்தை மாற்றியமைப்பதற்கு பதிலாக இந்த தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகளாக பிரித்து வழங்குவது நன்று அதற்காக மேலே கட்டளைபட்டியில் Insert => Exp and Slide => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அப்படவில்லைக்குள் உள்ள முக்கிய தகவல்கள் தனித்தனி புதிய படவில்லைகளாக பிரிந்து அமையும் 
ஒட்டுமொத்த சாராம்ச படவில்லையை உருவாக்குதல்
ஒரு இம்பிரஸ் கோப்பில் பல்வேறு படவில்லைகளில் கூறப்படும் தகவல்களை தொகுத்து  ஒட்டுமொத்த சாரம்சமாக அக்கோப்பின் முதல் படவில்லையில் வழங்கினால் நன்றாக இருக்கும் என திட்டமிடுவோம் அதற்காக   படவில்லைகளின் பலகத்திரையில் (slides pane)அல்லது  குறும்படங்களின் காட்சித்  திரையில் (slides sorter view) தேவையான படவில்லைகளை தெரிவுசெய்துகொள்க பின்னர் மேலே கட்டளை பட்டியில் Insert => Summary Slide=>. என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் அப்படவில்லைகளின்  தலைப்பிலுள்ள முக்கிய தகவல்கள் மட்டும் சேர்ந்து ஒரே படவில்லைக்குள் ஒட்டுமொத்தசாராம்ச வில்லையாக தோன்றிடும்
படவில்லையின் பெயரை மாற்றியமைத்தல்
 பெயர்மாற்றம் செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகுஇந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியெனில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில் Rename Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் Rename Slideஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக 
 அதன்பின்னர் தோன்றிடும் Rename Slideஎன்ற (படம்-5)உரையாடல் பெட்டியில் நாம் விரும்பியவாறு அந்த படவில்லைக்கு ஒரு பெயரினை உள்ளீடு செய்து மாற்றி அமைத்தபின் OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக




படம்-5
படவில்லையை வடிவமைத்தல்
வடிவமைப்பு செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையெனில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில்  Slide design என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில்  Slide design என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  




படம்-6
   உடன் தோன்றிடும்Slide design என்ற(படம்-6)  உரையாடல் பெட்டியில் தேவையான வடிவமைப்பை தெரிவுசெய்க பிறகு loadஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு உடன்விரியும் load slide design என்ற உரையாடல் பெட்டியின்categories என்பதன் கீழுள்ள Slide design என்ற போன்ற வகைகளில் தேவையானதை தெரிவுசெய்க அவ்வாறு தெரிவுசெய்திடும்போது அவை எவ்வாறு இருக்கும் என  பார்த்து தெரிந்து கொள்ள இதிலுள்ள   more என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையின் preview பகுதியில் பார்த்து திருப்தியானபின் ok என்ற பொத்தானையும்  பின்னர் slide designஎன்ற உரையாடல் பெட்டியில் ok என்றபொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக
தேவையற்ற படவில்லைகளை நீக்கம் செய்தல்
  நீக்கம்செய்யவேண்டிய படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலது புறபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வகையெனில் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Slide என்ற கட்டளயை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனைபட்டியில் Delete Slideஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்க
 இரண்டாவது வகையெனில்  தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் Delete Slideஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக 
 அல்லது தேவையற்ற படவில்லைமீது இடம் சுட்டியை வைத்து விசைப்பலகை யிலுள்ள del என்ற விசையை அழுத்துக

No comments:

Post a Comment