எந்தெந்த
படவில்லைகள் எந்த வரிசைகிரமத்தில் படவில்லைகாட்சியாக திரையில் காண்பிக்கப் படவேண்டும் ,
இந்த
படவில்லைக்காட்சியானது தானாகவே இயங்கவேண்டுமா அல்லது நாம் விரும்பியவாறு இயங்கவேண்டுமா? ,
படவில்லைகாட்சியில்
இருபடவில்லைகளுக்கு இடையேயான இடைவெளிநேரம் எவ்வளவு இருக்கவேண்டும்,
படவில்லைகாட்சியில்
படவில்லைகளின் அசைவூட்டம் எவ்வாறு அமைய வேண்டும்,
படவில்லைகாட்சியின்போது
சுட்டியின் பொத்தானை சொடுக்குவதால் என்ன நிகழ வேண்டும்
என்பது
போன்ற செயல்களை ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் உள்ள ஒரு சில கருவிகளை பயன்படுத்தி
நம்மால் அமைத்து கொள்ளமுடியும்.
இவ்வாறான பெரும்பாலான செயல்கள்
படவில்லைகளின் தொகுப்பு காட்சித் (slide
sorter view) திரையில் செயல்படுத்தி
கொள்ளமுடியும். அதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து View
=> Slide Sorter=>என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்துக.
அல்லது
ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் பணியிடத்தின்(workspace) மேல் பகுதியில் உள்ள Slide Sorterஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் Slide Sorter view என்ற
காட்சி திரையின் பணியிடத்தில் அனைத்து படவில்லைகளும் காட்சியளிக்கும்
படவில்லை காட்சியை
திரையில் காண்பிப்பதற்கு முன் அதற்கான அடிப்படை அமைப்பை ஒவ்வொரு படவில்லைக்கும்
உருவாக்கிடவேண்டும் அதற்காக முதலில் அவைகள் என்னென்னவென தெரிந்துகொள்வோம் மேலே
கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Slide Show
Settings=>என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்துக. உடன் Slide Showஎன்ற (படம்-58-1)உரையாடல் பெட்டி திரையில்
தோன்றிடும் அதில்
படம்-58-1
Rangeஎன்ற
பகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் எந்தெந்த படவில்லைகள் எந்தவரிசையில்
படவில்லைகாட்சியில் இருக்கவேண்டுமென
தொகுத்திட உதவுகின்றது
1.All slidesஎன்ற
வாய்ப்பு மறைக்கபட்ட படவில்லையைத் தவிர
மிகுதி அனைத்தையும் வரிசையாக அடுக்கி
தொகுத்து வைத்திட பயன்படுகின்றது
2.From என்ற
வாய்ப்பு நாம் தெரிவுசெய்திடும் படவில்லையிலிருந்து மிகுதியை வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட
பயன்படுகின்றது
3.Custom Slide Showஎன்ற
வாய்ப்பு நாம் விரும்பிய வகையில் படவில்லைகள் அனைத்தையும் வரிசையாக அடுக்கி தொகுத்து வைத்திட
பயன்படுகின்றது
Typeஎன்ற
பகுதியில் உள்ள பின்வரும் வாய்ப்புகள் படவில்லைகாட்சியின்போது படவில்லைகள் எவ்வாறு
காட்சியளிக்கவேண்டும் என அமைத்திட உதவுகின்றது
1.Defaultஎன்ற
வாய்ப்பு படவில்லைகாட்சி முழுத்திரையிலும் தெரியுமாறும் ஓப்பன் ஆஃபிஸின் கட்டுபாடு இல்லாமலேயே கடைசி
படவில்லைவரை படவில்லை காட்சியை காண்பித்து
காட்சி முடிந்த பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது
2.Windowஎன்ற
வாய்ப்பு படவில்லைகாட்சியானது ஓப்பன் ஆஃபிஸின் கட்டு பாட்டுடன் கடைசி படவில்லைவரை படவில்லைகாட்சியை காண்பித்து காட்சி முடிந்த
பின்னரே வேளியேறுமாறும் அமைத்திட பயன்படுகின்றது.
3.Autoஎன்ற
வாய்ப்பு படவில்லை காட்சி முடிந்தவுடன்
கடைசி படவில்லையில் சிறிதுநேரம் காத்திருந்து மீண்டும் முதல் படவில்லையிலிருந்து
கடைசி படவில்லைவரை படவில்லை காட்சியை
காண்பிக்குமாறு அமைத்திட பயன்படு கின்றது
Optionsஎன்ற
பகுதியில் பின்வரும் வாய்ப்புகள் உள்ளன
1.Change slides
manuallyபடவில்லை காட்சியில் படவில்லைகளுக்கு இடையில் காலஇடைவெளியானது தானாகவே அமைக்கபட்டிருந்தாலும் அதனால்
படவில்லையில் மாறுதலும் தானாகவே ஏற்படுவதை
தவிர்ப்பதற்கு இந்த வாய்ப்பு உதவுகின்றது
2.Mouse pointer
visible என்ற வாய்ப்பு
படவில்லைகாட்சியின்போது காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற
சாதனங்கள் இல்லாதபோது சுட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது
2.Mouse pointer as
penஎன்ற
வாய்ப்பு படவில்லைகாட்சியின்போது அந்த
காட்சியின் விவரங்களை சுட்டி காண்பிப்பதற்காக மற்ற சாதனங்கள் இல்லாதபோது சுட்டியை
திரையில் பேனா போன்ற உருவத்துடன்
பிரதிபலிக்கசெய்கின்றது
3.Navigator visibleஎன்ற
வாய்ப்பு படவில்லைகாட்சியின்போது
வழிகாட்டியை திரையில்
பிரதிபலிக்கசெய்கின்றது
4.Animations allowedஎன்ற
வாய்ப்பு படவில்லையின் அனைத்து
சட்டகத்திலும் அசைவூட்டத்தை செயல்படுத்துகின்றது இதனை
தெரிவுசெய்யவில்லையெனில் முதல்படவில்லையில் மட்டும் அசைவூட்டத்தை அனுமதிக்கும்
5.Change slides by
clicking on backgroundஎன்ற வாய்ப்பு படவில்லை காட்சியின்போதே அடுத்த படவில்லையின்
பின்புலத்தை மாறுதல் செய்ய பயன்படுகின்றது
6.Presentation always
on top என்ற வாய்ப்பு மற்ற பயன்பாடுகளின் சாளரம் திரையில் மேல்பகுதியில்
தோன்றுவதை தவிர்ப்பதற்காக பயன்படுகின்றது
Multiple
displays என்ற பகுதியின் வாய்ப்புகள்
ஒன்றுக்கு மேற்பட்ட திரையில் ஓரே சமயத்தில் படக்காட்சியை காண்பிக்குமாறு
அமைத்திட பயன்படுகின்றது
படவில்லையை
படவில்லைக்காட்சியின்போது மறைத்திட
ஒருசில
படவில்லைகளை குறிப்பிட்ட படவில்லைக்காட்சியில் காண்பிக்க வேண்டாம் என
விரும்பிடும்போது முதலில் படவில்லைகளின்
பலகத்தில்(slide pane )அல்லது படவில்லைகளின் தொகுப்புத்திரையில் தேவையான படவில்லையை தெரிவுசெய்து கொள்க பின்னர் கருவிபட்டியிலுள்ள Hide
Slideஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியில் Hide Slideஎன்ற
வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லது மேலே
கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Hide Slide=>
என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
உடன்
குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியிலிருந்து மாறைக்கபட்டுவிடும்
மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக்காட்சியில்
காண்பித்திட
மேலே
கூறியவாறு மறைக்கபட்ட படவில்லையை மீண்டும் படவில்லைக் காட்சியில் காண்பிக்க விரும்பிடும்போது முதலில் படவில்லைகளின் பலகத்தில் அல்லது படவில்லைகளின் தொகுப்புத்திரையில் தேவையான படவில்லையை தெரிவு செய்து கொள்க பின்னர் கருவிபட்டியிலுள்ள ShowSlideஎன்ற
குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லது
சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை
பட்டியில் Show Slideஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லது மேலே
கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Show Slide=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன்
குறிப்பிட்ட படவில்லையானது படவில்லைகாட்சியில் சேர்க்கபட்டுவிடும்
வாடிக்கையாளர் விரும்பியவாறு படவில்லைகாட்சியை அமைத்திட
நாம்விரும்பியவாறு
படவில்லைகாட்சி திரையில் தோன்றுவதற்காக மேலே கட்டளை பட்டியிலிருந்து Slide Show => Custom Slide Show=> என்றவாறு
கட்டளை களை செயற்படுத்துக.
உடன் தோன்றிடும் Custom Slide
Show என்ற (படம்-58-2) உரையாடல்
பெட்டியில் newஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-58-2
பின்னர் விரியும் define Custom
Slide Show என்ற (படம்-58-3)உரையாடல்
பெட்டியில் படவில்லைக்காட்சிக்கான பெயரை name என்ற பகுதியில்தட்டச்சு
செய்துகொண்டு Existing slides என்பதன்
கீழுள்ள பட்டியலில் தேவையானவற்றை தெரிவுசெய்து >> என்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்து படவில்லைகள் selected
slides என்ற பகுதியில் சென்று சேர்ந்துவிடும் selected slides என்ற
பகுதியில் தேவையற்ற படவில்லை
ஏதேனுமிருந்தால் அதனை தெரிவுசெய்து கொண்டு << என்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையற்றது பழைய நிலைக்கே சென்றுவிடும் அனைத்தும்
சரியாக இருக்கின்றது எனில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக.
படம்-58-3
பின்னர் Custom Slide Show என்ற (படம்-58-2)உரையாடல் பெட்டியில் edit,delete,copy ஆகிய பொத்தான்களை
பயன்படுத்தி படவில்லை கோப்பில் தேவையான
மாறுதல் செய்துகொள்க பிறகு இதே உரையாடல்
பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Use Custom Slide Showஎன்ற
தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து கொண்டு
பட்டியலிலுள்ள படவில்லையில் படவில்லைக்காட்சிக்கான தொடக்க படவில்லையை மட்டும்
தெரிவு செய்து கொண்டு startஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் நாம்விரும்பிய படவில்லையிலிருந்து படவில்லைக்காட்சியானது திரையில்
காண்பிக்க தொடங்கும் இந்த
படவில்லைக்காட்சி முடிவடைந்த பின்னர் Closeஎன்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்கி நாம் செய்த மாறுதல்களை சேமித்து கொள்க