Saturday, January 7, 2012

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-57-படவில்லையை சேர்த்தலும் வடிவமைத்தலும் தொடர்ச்சி


உருமாதிரியிலிருந்து(outline) படவில்லையை உருவாக்குதல்
  ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் உரையை அடிப்படையாகவைத்து பின்வரும் மூன்று வழிகளில் படவில்லைக்கான உருமாதிரியை(outline) உருவாக்கிவிட்டால் அதன்பின்னர் அதிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லையை உருவாக்குதல் எளிதான செயலாகும்
   1.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸுக்கு உருமாதிரியை(outline) அனுப்பிவைப்பது
   2,ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸுக்கு தானியங்கி சுருக்க விவரமாக அனுப்பிவைப்பது
   3.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து நகலெடுத்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் ஒட்டுவது
1.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸுக்கு உருமாதிரியை(outline) அனுப்பிவைப்பது
இயல்புநிலை பத்திதலைப்பு பாவணையில் உரையானது ரைட்டரில் இருந்தால் இந்த தலைப்புகளையே படவில்லைகளின் உருமாதிரியாக(outline) உருவாக்கி கொள்ளமுடியும்
அதற்காகமுதலில் அவ்வாறான உரைத்தொகுப்பை தெரிவுசெய்துகொண்டு ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் மேலே கட்டளை பட்டையிலிருந்து File => Send => Outline to Presentation=> என்றவாறு(படம்-57-1) கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக.

 படம்-57-1
 உடன் புதிய படவில்லைகள் உருவாகி outline என்ற தாவியின் திரையுடன் தோன்றும் பின்னர்  normal என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படவில்லைகளின் தொகுப்பு பலகத்துடன் திரைத்தோற்றம் (படம்-57-2)அமையும் 


 படம்-57-2
  இந்த படவில்லையின் உள்ளடக்கம் சரியாக  அமைவதற்காக  இம்ப்பிரஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து insert=>expanding slides=>அல்லது duplicating slides=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லைகளை புதியதாக சேர்த்து இதன் உள்ளடக்கங்களை மாற்றி,திருத்தியமைத்து (படம்-57-3)கொள்க


 படம்-57-3
 2.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸுக்கு தானியங்கி சுருக்க விவரமாக அனுப்பிவைப்பது
தலைப்பையும் அதனுடன் துனைத்தலைப்புகளையும் சேர்த்து படவில்லையாக உருவாக்குவதற்கு இந்த வழிமுறை பயன்படுகின்றது  அதற்காக ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரின் மேலே கட்டளை பட்டையிலிருந்து File => Send => AutoAbstract to Presentation=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
 உடன் படம்-57-4-ல் உள்ளவாறு Create AutoAbstractஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் include outline level என்பதில் வில்லைகளின் தலைப்பு எத்தனை என்றும் Subpoints per levelஎன்பதில் எத்தனை பத்திகள் துனைத்தலைப்பாக அமையவேண்டும் என்றும் தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  


 படம்-57-4
உடன் படவில்லைகளின் தொகுப்பு பலகத்துடன் திரைத்தோற்றம்  (டம்-57-2) அமையும் 
  இந்த படவில்லையின் உள்ளடக்கம் சரியாக  அமைவதற்காக  இம்ப்பிரஸ் திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து insert=>expanding slides=>அல்லது duplicating slides=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லைகளை புதியதாக சேர்த்து இதன் உள்ளடக்கங்களை மாற்றி,திருத்தியமைத்து (படம்-57-3) கொள்க

 3.ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரிலிருந்துநகலெடுத்து ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸில் ஒட்டுவது
  காலியான புதிய படவில்லை யொன்றை  உருவாக்கிகொள்க அதில் Click add to Title, என்ற பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு ரைட்டரில் தேவையான தலைப்பு உரையை நகலெடுத்து வந்து ஒட்டி கொள்க. அவ்வாறே Click add to Textஎன்ற பகுதியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு துனைதலைப்புகளையும்  நகலெடுத்து வந்து ஒட்டி கொள்க. இவ்வாறு செய்யும்போது உரைகளின் வரிசை மாறியமையும்அதனால்  Demote என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக அவற்றை சரிசெய்து அமைத்து கொள்க
 இவ்வாறு நம்மால் புதியதாக உருவாக்கப்பட்ட படவில்லைகளை வடிவமைத்திடமேலே கட்டளை பட்டையிலிருந்துFormat => Page=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது படவில்லையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Page Setupஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்Page Setup என்ற உரையாடல் பெட்டியில் நாம் விரும்பியவாறு பத்தியை வடிவமைத்துகொள்க

  கருத்துரைகளை சேர்த்தல்  (add Comments)
 குறிப்பிட்ட படவில்லையைபற்றிய கருத்தரையை இதனுடன் சேர்த்தால் மற்றவர்கள் தொடர்ந்து இந்த படவில்லையை மேம்படுத்துவதற்கு முடியும் அதற்காகமேலே கட்டளை பட்டையிலிருந்து insert=>Comment=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக 

  படம்-57-5-
  உடன் படம்-57-5-ல் உள்ளவாறு தோன்றிடும் திரையில் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து இந்த கருத்துரைக்கு வெளியே இடம்சுட்டியை வைத்து சொடுக்குக.
 இவ்வாறு ஒருபடவில்லையில்கருத்துரை(Comments) உருவாக்கபட்டபின் அதில் இடம்சுட்டியை வைத்து  சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக


  படம்-57-6
பின்னர் விரியும்சூழ்நிலை பட்டியிலிருந்து (படம்-57-6) தேவையான கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் வாயிலாக இந்த கருத்துரையை வடிவமைப்பு செய்துகொள்க இந்த கருத்துரை  தேவையில்லையெனில் நீ்க்கம் செய்யவும்முடியும்
  மேலும் இந்த கருத்துரை(Comments)என்ற பெட்டியின்  கீழேஇடதுபுறமூலையில் உள்ள சிறியமுக்கோன வடிவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் பட்டியிலிருந்து deleteஎன்ற கட்டளைகளை தெரிவுசெய்து  சொடுக்கி நீக்கம் செய்யமுடியும் அவ்வாறே reply என்ற கட்டளைகளை தெரிவுசெய்து  சொடுக்கி மற்றவர்களின் கருத்துரைக்கு பதிலிருக்கமுடியும்

 குறிப்பை சேர்த்தல் (add notes)
படவில்லையில் மேலும் கூடுதலான தகவலை notesஎன்ற வாய்ப்பின்மூலம் வழங்க முடியும். ஆனால் இந்த குறிப்பு படவில்லை காட்சியின்போது திரையில் காண்பிக்காது இதனை உருவாக்குவதற்காக notesஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்click add notes என்ற பெட்டியொன்று (படம்-57-7) படவில்லைக்கு கீழ்பகுதியில் தோன்றிடும்


 படம்-57-7
 அதில் தேவையான குறிப்பை தட்டச்சு செய்தபின் normalஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லையின் சாதாரணகாட்சிதிரைக்கு மாறிக்கொள்க.
இந்த குறிப்பு பகுதியை வடிவமைப்பு செய்திட மேலேகட்டளைபட்டையிலிருந்துView => Master => Notes Master=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக 
  பின்னர் தோன்றிடும் திரையின் add notes என்ற பகுதியில் இடம்சுட்டி பிரதிபலிக்கும் அதன்பின்னர் Format => Page=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது குறிப்பு பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Page Setupஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
  பின்னர் தோன்றிடும்Page Setup என்ற உரையாடல் பெட்டியில் நாம்விரும்பியவாறு குறிப்பு பத்தியை வடிவமைத்துகொள்க


 படம்-57-8
 இதனை அச்சிட்டு பெறுவதற்கு மேலே  கட்டளைபட்டையிலிருந்து File => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் தோன்றிடும் Printஎன்ற உரையாடல் பெட்டியில்genralஎன்ற தாவியின் திரையில்  print document என்பதற்கு அருகிலுள்ள வாய்ப்புகளில்notes என்பது தெரிவுசெய்யபட்டுள்ளதாவென(படம்-57-8) உறுதிபடுத்திகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
   படவில்லை கோப்பினை குறிப்பை பிடிஎஃப்ஆக உருமாற்றம் செய்வதற்கு மேலே  கட்டளை பட்டையிலிருந்துFile => Export as PDF=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக


 படம்-57-9
 பின்னர் தோன்றிடும் Export as PDFஎன்ற உரையாடல் பெட்டியில் generalஎன்ற பகுதியில் Export comments என்பது தெரிவுசெய்யபட்டுள்ளதாவென (படம்-57-9)உறுதிபடுத்திகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
 பார்வையாளர்களுக்கு நாம் கூறவிரும்பும் படவில்லைகளில் உள்ள செய்திகளை அச்சிட்டு வழங்குவதற்கு  handoutஎன்ற வசதி பயன்படுகின்றது


 படம்-57-10
  இதனை செயற்படுத்துவதற்காக handoutஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்handout என்ற பெட்டியொன்று படவில்லைக்கு கீழ்பகுதியில்(படம்-57-10) தோன்றிடும்
 அதில தேவையான உரையை தட்டச்சு செய்தபின் normalஎன்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி படவில்லையின் சாதாரணகாட்சிதிரைக்கு மாறிக்கொள்க.
  இந்த handout என்ற பகுதியை வடிவமைப்பு செய்திட  மேலேகட்டளை பட்டையி    லிருந்து View => Handout Page=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  பின்னர் தோன்றிடும் handout என்ற பகுதியில் இடம்சுட்டி பிரதிபலிக்கும்
பின்னர் மேலேகட்டளை பட்டையிலிருந்து Format => Page =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது handout என்ற பகுதியில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானைதெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Slide => Page Setup=>என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும்Page Setup என்ற உரையாடல் பெட்டியில் நாம்விரும்பியவாறு handout என்பதிலுள்ள பத்தியை வடிவமைத்துகொள்க
இதனை அச்சிட்டு பெறுவதற்கு மேலே  கட்டளைபட்டையிலிருந்துFile => Print=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக  அதன் பின்னர் தோன்றிடும் Printஎன்ற உரையாடல் பெட்டியில் print document என்பதற்கருகிலுள்ள வாய்ப்புகளில்handout என்பது தெரிவுசெய்யபட்டுள்ளதாவென உறுதிபடுத்திகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
பிடிஎஃப்ஆக உருமாற்றம் செய்வதற்கு மேலே  கட்டளைபட்டையிலிருந்துFile => Print => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
  
   படம்-57-11
 பின்னர் தோன்றிடும் Printஎன்ற உரையாடல் பெட்டியில் Printerஎன்ற பகுதியில்PostScript printerஎன்பதிலுள்ள பட்டியலிலிருந்துAdobe PDF  என்பதை(படம்-57-11) தெரிவுசெய்து கொண்டு இந்தகோப்பின் பண்பியல்பை சரிபார்த்து கொள்க.பின்னர்Rely on system fonts only; do not use document fontsஆகியவை தெரிவுசெய்யபடவில்லை யென்பதையும் Print to fileஎன்ற தேர்வுசெய்பெட்டியின் வாய்ப்பு தெரிவு செய்யபட்டுள்ளதாவென்பதையும் உறுதிபடுத்திகொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.

 படம்-57-12
 உடன் படம்(படம்-57-12)  உள்ளவாறு எச்சரிக்கை செய்தியொன்று தோன்றிடும் அதில்yes no  ஆகியவற்றிலொன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன் .ps என்ற பின்னொட்டுடன் பிடிஎஃப் கோப்பு உருவாகிவிடும்.

No comments:

Post a Comment