வாடிக்கையாளர் ஒருவர் தாம்
விரும்பியவாறு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பில் மாறுதல் செய்து அமைத்து
கொள்ளலாம் பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் இவ்வாறான மாறுதல்களை
செயல்படுத்துவதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள
கட்டளைகளில்Tools =>
Options =>என்றவாறு
கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக
படம்-61-1
உடன் விரியும் options-Open Office.org என்ற திரையின் இடதுபுற பலகத்தில் Open Office.org என்பதற்கருகிலுள்ள + கூட்டல் குறியை
தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும் கட்டளைகள் ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து
பயன்பாடுகளிலும் பயன் படக்கூடிய பொதுவான கட்டளைகளாகும் அவைகளுள் Appearance என்ற கட்டளை யை தெரிவுசெய்து
சொடுக்கியபின் விரியும் options-Open
Office.org-Appearance என்ற
(படம்-61-1 )திரையில் Drawing/Presentation என்ற
பகுதியை தேடிபிடித்து அதில் grid என்பதற்கு அருகிலுள்ள கீழிறங்கு
பட்டியலின்மூலம் தேவையான வண்ணங்க ளின் வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் இடதுபுறபலகத்தில் Open Office.org Impress என்பதற்கருகிலுள்ள
+ கூட்டல் குறியை
தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் கட்டளைகள் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில்
மட்டும் பயன்படக்கூடிய கட்டளைகளாகும்
அவைகளுள் General என்ற
வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும்
options-Open Office.org-Impress- general என்ற (படம்-61-2
)திரையில்
படம்-61-2
Text objects என்ற பகுதியில்உள்ள Allow
quick editing என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது உடனடியாக
உரைபதிப்பு செயலுக்கு மாறிகொள்வதற்கு உதவுகின்றது only text area
selectable என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது தெரிவுசெய்யபட்ட உரையை உள்ளீடு செய்யவேண்டிய
பகுதியில் மட்டும் உரைபதிப்புசெயலை
அனுமதிக்கின்றது இந்த இரு
செயல்களையும் மேலே கருவிபட்டியிலுள்ள இவைகளுக்கான குறும்படத்தை தெரிவுசெய்து
சொடுக்குவதன்மூலம் செயல்படுத்திட முடியும்
New document என்ற
பகுதியில்உள்ள Start with Wizard என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது
ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் இயங்கதொடங்கும் போது புதிய இம்பிரஸ் கோப்பினை
உருவாக்குவதற்கான வழிகாட்டியை தோன்ற
செய்கின்றது இதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள
File =>
new=> presentaion=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம்
புதிய இம்ப்பிரஸ் கோப்பினை உருவாக்கமுடியும்
Settings என்ற பகுதியில்உள்ள use
background cashe என்ற வாய்ப்பானது
புதிய படவில்லையை உருவாக்கியவுடன் அதன்பின்புலத்தை தானாக உருவாக்கி
கொள்கின்றது இதனை தெரிவுசெய்யாது
விடுத்தால் ஒவ்வொரு முறை புதிய படவில்லை
உருவாக்கும் போதும் நாமே அதன்பின்புலத்தை உருவாக்க வேண்டி யிருக்கும். copy
when moving objects always moveable என்ற வாய்ப்பு படவில்லை யின் படங்களை நகர்த்துதல் ,அளவை
மாற்றியமைத்தல் ,சுழற்றியமைத்தல் ஆகிய செயலின்போது தானாகவே நகலெடுத்து கொள்கின்றது சரியாக அமையவில்லை எனும்போது ctrl என்ற விசையை அழுத்தி பழைய நிலைக்கு மாற்றியமைத்து கொள்ளலாம். unit
of measurement என்பது தேவையான அளவை அமைப்பதற்கும் tab
stop என்பது தேவையான
இடத்தில் காலி இடைவெளி விடுவதற்கும் பயன்படு கின்றது
Start presentaion என்ற
பகுதியில்உள்ள always with current page என்ற வாய்ப்பானது
படவில்லையை உருவாக்கி முடித்தவுடன் அப்படவில்லையானது திரையில் எவ்வாறு தோன்றும் என முன்னோட்டம்
பார்ப்பதற்காக முயலும்போது நடப்பு படவில்லையிலிருந்து திரைகாட்சியை காண்பிப்பதற்கு
உதவுகின்றது
Compatability
என்ற பகுதியில்உள்ள
வாய்ப்புகள் நடப்பு கோப்பில்
மட்டும் அமைப்பதற்கு பயன்படுகின்றன Use printer
metrics for document formattingஎன்ற வாய்ப்பானது கணினியுடன்
இணைக்கபட்டுள்ள அச்சுபொறிக்கு ஏற்ப ஒத்திசைவு செய்து திரையில் காட்சிகளை பிரதிபலிக்கசெய்கின்றது.
Add spacing between paragraphs (in current document)என்ற
வாய்ப்பானது உரையின் பத்திகளுக்கிடைய
இடைவெளி விடுவதற்கு உதவுகின்றது
இதன் பின்னர் இடதுபுற பலகத்தின்
ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில் மட்டும் பயன்படக்கூடிய கட்டளைகளுள் view என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும் options-Open Office.org-Impress-
view என்ற (படம்-61-3 )திரையில்
படம்-61-3
Display
என்ற பகுதியில்உள்ள Rulers
visible என்ற வாய்ப்பானது
திரையின் இடதுபுறத்திலும் மேல்பகுதியிலும் அளவுகோளை பிரதிபலிக்கசெய்கின்றது.
Guides when movingஎன்ற வாய்ப்பானது குறிப்பிட்ட பெட்டிக்கு வெளியே பணியிடம்
முழுவதும் குறிப்பிட்ட பொருளை நகர்த்திடும் போது நமக்கு வழிகாட்டிட
பயன்படுகின்றது இதற்கு பதிலாக மேலே
கருவிபட்டையிலுள்ள இதற்கான குறும்படத்தை
தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் செயல்படுத்திடமுடியும்
All control points in Bézier editorஎன்ற
வாய்ப்பானது தெரிவுசெய்யபட்ட Bézier
புள்ளியை பிரதிபலிக்க செய்கின்றது Contour of each
individual objectஎன்ற வாய்ப்பானது தெரிவுசெய்யபட்ட பொருளின் Contour கோட்டினை பிரதிபலிக்க செய்கின்றது
பிறகு இடதுபுற பலகத்தின் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில்
மட்டும் பயன்படக்கூடிய கட்டளைகளுள் grid என்ற வாய்ப்பை தெரிவுசெய்து
சொடுக்கிய பின் விரியும் options-Open
Office.org-Impress- grid என்ற
(படம்-61-4 )திரையில்
படம்-61-4
grid என்ற பகுதியில்உள்ள snap to grid என்ற வாய்ப்பானது நொடிப்பு செய்யவும் visible grid என்ற வாய்ப்பானது திரையில்
காண்பிக்கவும் பயன்படுகின்றது
resolution என்ற பகுதியில்உள்ள synchronize
என்ற வாய்ப்பானது திரைத்துல்லியத்தை ஒத்திசைவுசெய்ய
பயன்படுகின்றது
snap என்ற பகுதியில்உள்ள
வாய்புகளை நமக்கு தேவையானவாறு பயன்படுத்தி கொள்ளலாம் அதற்கு பதிலாக இந்த
செயல்களுக்கான Snap to Object Points
, Snap to Object Border ,Snap to Page Margins,Snap
to Guides என்பது போன்றவைகளில்
தேவையான குறும்படத்தை மட்டும்
கருவிபட்டியிலிருந்து தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் செயல்படுத்தி
கொள்ளலாம்
வாடிக்கையாளர் விரும்பியவாறு
கட்டளை பட்டையில் மாறுதல்
செய்வதற்கு
இதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில்Tools
=> customization
=> என்றவாறு கட்டளைகளை
தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்- 61-5 ல் உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் menu என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
படம்- 61-5
உடன் விரியும் menu என்ற தாவியின் திரையில் புதிய கட்டளை பட்டியலை சேர்ப்பதற்கு new
என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்- 61-6
உடன் new menu என்ற (படம்-
61-6)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் menu
name என்பதில் நாம் உருவாக்கி சேர்க்க போகும் கட்டளைக்கு பெயர்
ஒன்றை உள்ளீடு செய்க இந்த கட்டளையானது
எங்கிருக்கவேண்டும் என்பதற்காக menu
position என்பதன் கீழுள்ள வாய்ப்பில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டு
ok என்ற பொத்தானையும் customizeஎன்ற உரையாடல்
பெட்டியிலும் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக
நடப்பு கட்டளைபட்டையிலுள்ள
கட்டளைகளை இடம் மாற்றம் செய்ய customizeஎன்ற உரையாடல்
பெட்டியிலுள்ள move
என்ற கட்டளை பயன்படுகின்றது
நடப்பிலிருக்கும் பட்டியில் புதிய
கட்டளையை சேர்த்திட customizeஎன்ற உரையாடல் பெட்டியில் உள்ள Add என்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்- 61-7 ல் category
என்பதன் கீழ் தேவையான வகையையும் commands என்பதில்
தேவையான கட்டளையையும் தெரிவுசெய்துகொண்டு add என்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக மேலும் இவ்வாறு
தேவையான கட்டளைகளையும் வகைகளையும் தெரிவுசெய்யும்போது ஒவ்வொருமுறையும் add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இறுதியாக close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி
இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக.
படம்- 61-7
வாடிக்கையாளர்
விரும்பியவாறு கருவி பட்டையில்
மாறுதல் செய்வதற்கு
அவ்வாறே கருவிபட்டையையும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் முடியும்
அதற்காக கருவிபட்டையின் முடிவிலிருக்கும்
அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் பட்டையில் Customize என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது
மேலே கட்டளை பட்டையிலுள்ள
கட்டளைகளில்View => Toolbars => Customize => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக அல்லது
மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில்Tools => Customize => Toolbars tab => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்- 61-8 ல்
உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று Toolbars என்ற தாவியின் திரையுடன்
தோன்றிடும்
படம்- 61-8
இதில் மேலே கட்டளை பட்டையில் கூறியவாறு
செயற்படுத்தி கொள்க.
மிகமுக்கியமாக குறும்படங்களுடன்
கூடிய பொத்தான்களே இதிலுள்ளன அதனால்
அவ்வாறான குறும்படங்களுடன் கூடிய பொத்தான்களை உருவாக்கிட அல்லது அவைகளை மாறுதல் செய்திடுவதற்காக Modify => Change icon=>என்றவாறு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக
படம்- 61-9
உடன் தோன்றிடும் Change iconஎன்ற (படம்-
61-9) உரையாடல் பெட்டியில் தேவையான உருவத்தை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை
சொடுக்குவதன்மூலம் ஒதுக்கீடு செய்து கொள்க. புதியதாக
உருவாக்குவதற்கு எனில் import என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
வாடிக்கையாளர் விரும்பியவாறு விசைப்பலகையின் விசைகளை ஒதுக்கீடு செய்வதற்கு
அதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில்Tools => customization => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்-
61-10 ல் உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று
திரையில் தோன்றிடும் அதில் keyboard என்ற தாவியின்
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்- 61-10
உடன் விரியும் keyboard என்ற தாவியின் திரையில் impress என்ற வாய்ப்பின் வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க. பின்னர் கீழே functions என்ற பகுதியிலுள்ள category என்பதன்கீழ் insertஎன்பதை தெரிவுசெய்து கொண்டு functions என்பதன் கீழுள்ள duplicate
slides என்பதை தெரிவுசெய்க
உடன்keys என்பதன்
கீழ்insert என்பது
சேர்ந்திருக்கும்
இந்நிலையில் மேலே shortcutkeys
என்ற பகுதியின் கீழ்insert duplicate slides என்பதை தெரிவுசெய்து
கொண்டு முதலில் modify என்ற பொத்தானையும் பின்னர் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து
சொடுக்குக .
இவ்வாறே நாம் விரும்பியவாறு
மற்ற விசைகளுக்கும் குறுக்கு வழி கட்டளைகளை ஒதுக்கீடு செய்து சேமித்துகொள்க.
நடப்பிலிருக்கும் குறுக்கு வழி விசையை மாற்றியமைத்திடload என்ற பொத்தானும் மறுஅமைவுசெய்திட reset
என்ற பொத்தானும் பயன்படுகின்றன.
ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க
கட்டளைகளை பயன்படுத்தி மேலும் கூடுதலான விரிவாக்கத்தை http://extensions.services.openoffice.org/.என்ற இணையபக்கத்தில் தேடிபிடித்து பதிவிறக்கம்செய்து கொள்க பின்னர் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில்Tools => Extension Manager => என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்-
61-11 ல் உள்ளவாறு Extension
Manager என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் தேவையான விரிவாக்கத்தை
தெரிவுசெய்து கொண்டு Addஎன்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்கி ஓப்பன் ஆஃபிஸில்
நிறுவிகொண்டு கூடுதல் பயன் பெறுக
படம்-
61-11