ஓப்பன் ஆஃபிஸின் ட்ரா (படம்-62-1)என்பது வெக்டார் வரைகலையின் ஒரு வரைதல்
கருவியாகும் இது கட்டவரைகலையின் ஒரு சில
செயல்களைகூட செயல் படுத்திடும் தன்மை வாய்ந்ததாக உள்ளது இதன் உதவியால் ஏராளமான
வகையில் வரைகலை உருவபடத்தை மிகவிரைவாக உருவாக்கிடமுடியும் கோடு, வட்டம் ,பலகோணம் என்பன போன்ற பல்வேறு
படங்களை இதில் உருவாக்கி சேமித்திட முடியும் இது ஒப்பன் ஆஃபிஸின் ஒருங்கிணைந்த ஒரு
பயன்பாடாக இருக்கின்றது அதனால்
ரைட்டரிலும் கால்க்கிலும் இம்பிரஸிலும்
படங்களை வரைபடங்களை நகல் எடுத்து
ஒட்டுவதன்மூலம் உள்பொதிவதையும் அல்லது இணைப்பதையும் எளிதான செயலாக்குகின்றது
படம்-62-1
இந்த ட்ரா திரையின் மத்தியில் செவ்வகம்போன்ற (படம்-62-1)பெட்டியே படம் வரைவதற்கான
பணிபுரியும் இடமாகும் (Workspace) இடதுபுற பக்கங்களின் பலகத்தில் (pages pane) நாம்
வரையும் படம்பிரதிபலிக்கும் இதனை மேலே கட்டளை
பட்டை யிலுள்ளView => Page Pane=> என்றவாறு
கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் திரையில் தோன்றிடுமாறு செய்யலாம் அதன்மூலம் ஒரு
படத்தின் தோற்றத்தை அறிந்து அதில் மேலும் நாம் விரும்பும் மாறுதல்களை
பணியிடத்தில் செய்து கொள்ளலாம் ஒரு வரைபடத்தை பலபக்கங்களாக மிகமுக்கியமாக இம்ப்பிஸின் படவில்லைக்கு ஏற்றவாறு பிரித்து
கொள்ளலாம் அதிகபட்சம் ஒரு வரைபடத்தின்
பக்கத்தை 300
சென்டிமீட்டர் வரை அமைக்கலாம்
படம்-62-2
இந்த பணியிடத்திரையின்
மேல்பகுதியிலும் இடதுபுறபகுதியிலும் அளவீட்டு பட்டையுள்ளன (படம்-62-2)இதனை மேலே கட்டளை பட்டையிலுள்ளView => Ruler => என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம்
திரையில்தோன்றிடுமாறு செய்யலாம் இந்த Rulerன் உதவியால்
ஒரு படத்தின் அளவு ,அதன் அமைவிடம் ஆகியவற்றை நிர்ணையம் செய்யலாம்
படம்-62-3
இந்த Rulerன் மீது இடம்சுட்டியை வைத்து
சுட்டியை சொடுக்கியவுடன் (படம்-62-3) தோன்றிடும்
குறுக்குவழிபட்டியிலுள்ள தேவையான அளவீடுகளை நாம் விரும்பிய வாறு தெரிவுசெய்து
மாற்றியமைத்துகொள்ளலாம்
படம்-62-4
இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -ன் திரையினுடைய கீழ்பகுதியில் நிலைபட்டை (stats bar)
உள்ளது அதன்தோற்றம் படம்-62-4இல் உள்ளவாறு
இருக்கும்
இதிலுள்ள informationஎன்ற
புலத்தில் தற்போது என்ன செயல் நடைபெறுகின்றது என காண்பிக்கும்
positionஎன்ற புலம் தற்போது படம்
தெரிவுசெய்யபட்டு பதிப்பிக்கும் செயல் நடைபெறுகின்றதாவென காண்பிக்கும்
(*)என்ற புலம் மாறுதல் செய்யபட்ட து
சேமிக்கப்பட்டதா எனற செய்தியை காணபிக்கும்
Slideஎன்ற புலம் நடப்பு படத்தின் எண்களை
காண்பிக்கின்றது
Zoom என்ற புலத்திலுள்ள நகர்வியை
நகர்த்தி சென்று திரையிலுள்ள படத்தனுடைய தோற்ற அளவை மாற்றியமைத்திடலாம்
மேலே
கட்டளை பட்டையிலுள்ளView =>Toolbars=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் Toolbars என்பதை திரையில்தோன்றிடுமாறு செய்து
அதிலுள்ள படம் வரைவதற்கான கருவிகளை பயன்படுத்திகொள்ளலாம்
படம்-62-5
Line and Filling toolbarஎன்ற (படம்-62-5)கருவிபட்டையை
கொண்டு படங்களில் தேவையான மாறுதல்களை
செய்யமுடியும்
படம்-62-6
Drawing toolbarஎன்ற மிகமுக்கியமான (படம்-62-6) கருவிபட்டையை கொண்டு புதிய
ஜியாமெட்ரிக் படங்களையும் வரைபடங்களையும் உருவாக்குதல் உருவாக்கியதில் தேவையான மாறுதல்களை செய்தல் ஆகிய செயல்களை
செய்யமுடியும்
படம்-62-7
படத்திற்கான வண்ணங்களை நிரப்புவதற்கு Color Bar என்பது (படம்-62-7) பயன்படுகின்றது இதனை மேலே கட்டளை
பட்டையிலுள்ள View =>Toolbars =>Color
Bar=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்மூலம்
இதனைசெயலுக்கு கொண்டுவரலாம்
படம்-62-8
மேலே கட்டளை பட்டையிலுள்ள Format =>Arear=>என்றவாறு (படம்-62-8) கட்டளைகளை
செயற்படுத்துவதன்மூலம் அல்லது Line and Filling toolbarஎன்ற (படம்-62-5) கருவிபட்டையிலுள்ள
வாளிபோன்ற உருவை செயல் படுத்துவதன் வாயிலாக தேவையான வண்ணத்தை வரைபடத்தில்
நிரப்பலாம்
படம்-62-9
வரைபடத்தை வரைவதற்கான பல்வேறு உதவிகளை Optionsbar என்ற வாய்ப்பு கருவிபெட்டியின் (படம்-62-9)மூலம் பெறமுடியும் மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Toolbars =>Options=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்மூலம் இதனை செயலுக்கு
கொண்டுவரலாம்
படம்-62-10
இதிலுள்ள உருவங்கள் அதன் செயல் படம்-62-10 -ல் கொடுக்கபட்டுள்ளன
ஓப்பன்
ஆஃபிஸ் ட்ராவிலுள்ள கருவிபட்டைகளை தேவையான இடத்தில் வைத்து இணைக்கலாம் அல்லது
மிதக்குமாறும் நகருமாறும் (Floating
and moving toolbars) (படம்-62-11)செய்யலாம் பழையபடி மிதக்காமல்
நகராமல் செய்யலாம் இந்த கருவி பட்டையிலுள்ள
அம்புக்குறியில்மறைந்துள்ள கருவிகளை அந்த அம்புக் குறியை சொடுக்கினால் பெறமுடியும் இவைகளின் வலதுபுற ஓரமாக இருக்கும் Visible Buttons என்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குவதன்வாயிலாக கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து கூடுதலான கருவிகளை அல்லது
கட்டளைகளை செயற்படுத்துவதற்காக பயன்படுத்திகொள்ளமுடியும்
படம்-62-11
No comments:
Post a Comment