ஏதேனுமொரு
வரைபொருளை (object)அல்லது குழுவான வரைபொருட்களை(group of objects) மாறுதல் செய்வதற்காக அதனை
தெரிவுசெய்தவுடன் அதனை சுற்றி செவ்வக வடிவ கைப்பிடியொன்று தோன்றிடும் அவ்வாறு
தெரிவுசெய்தது தனிப்பட்ட வரைபொருளெனில் அதனை சுற்றி தோன்றிடும் செவ்வக வடிவ
கைப்பிடியை handle என்றும் தெரிவுசெய்தது குழுவான வரை பொருளெனில் அதனை
சுற்றி தோன்றிடும் செவ்வக வடிவ கைப்பிடியை
selection rectangle என்றும் (படம்-64-2
-ல் மையத்தின்மேலே) அழைப்பார்கள் இதன்பின் Optionsஎன்ற கட்டளை பட்டை திரையில் பிரதிபலிக்கின்றதா என
சரிபார்த்திடுக இல்லையெனில் மேலே கட்டளை பட்டையில் உள்ள View ==> Toolbars ==> Options==> என்றவாறு
கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி அதனை பிரதிபலிக்க செய்திடுக
இந்த Options என்ற கட்டளை பட்டையில் (படம்-64-1)சாதாரண படம் வரைவதற்கு Simple
Handlesஎன்ற பொத்தானும் முப்பரிமாணபடம் வரைவதற்கு Large Handlesஎன்ற பொத்தானும்
பயன்படுகின்றன.ஒரு வரைபொருளை 1) Moving and changing size, 2)
Editing,3) Rotating points ஆகிய மூன்றுநிலைகளில் தெரிவுசெய்யமுடியும்
செந்தரநிலையில்
பச்சைவண்ணகைப்பிடியில் தெரிவுசெய்யபட்டிருக்கும் drawing என்ற
கருவிபட்டையிலுள்ள pointsன்ற பொத்தான் செயலிழந்து
இருக்கும் இவ்வாறு தெரிவு செய்வதை இயல்பான
நிலையிலிருப்பதற்குdrawing என்ற கருவிபட்டையில் pointsஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் points என்ற
பொத்தான் செயலிலும் பச்சை வண்ண கைப்பிடியுடன் நீலவண்ண கைப்பிடியும் (படம்-64-2 -ல் இடதுபுறஓரம் மையத்தில் )சேர்ந்திருக்கும் தெரிவுசெய்யபட்ட வரைபொருளை திசையை சுழற்றி(அதனுடைய
கோண அளவை மாற்றி ) அமைப்பதற்கு drawing என்ற
கருவிபட்டையில் effectஎன்ற கீழிறங்கு பட்டியல் பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக உடன் தெரிவு செய்யபட்ட வரை பொருளானது சுழலுவதற்கு
தயாராக சிவப்புவண்ண கைப்பிடியுடன்
மையத்தில் வட்டமான சிவப்புவண்ண புள்ளியும் (படம்-64-2
-ல் இடதுபுறஓரம் கீழே )தயாராக இருக்கும்
படம்-64-2
இந்நிலையில் திரையில் தோன்றிடாமல் மறைந்திருக்கும் படத்தையும்
தெரிவுசெய்வதற்கு Altஎன்ற விசையை அழுத்தி பிடித்துகொண்டு தேவையான வரைபொருளை
தெரிவு செய்து கொள்க(படம்-64-2 மையத்தின்
கீழே) ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களெனில் Altஎன்ற விசையை அழுத்தி
பிடித்துகொண்டு ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொள்க இவ்வாறு தெரிவுசெய்ததை விட்டிட Alt+Shiftஆகிய விசைகளை அழுத்தி பிடித்துகொண்டு ஒவ்வொன்றாக
தெரிவுசெய்ததை விட்டிடுக
வரைபொருளை நகர்த்தவும்(move) அதன்
அளவை மாற்றியமைக்கவும்(change) dynamicஎன்ற வழிமுறை
பயன்படுகின்றது அவ்வாறு மாற்றி யமைக்கும்போது அந்த வரைபொருளை பற்றிய தகவலையும்
அதன் இடத்தையும் அதனுடைய நீளம்,அகலம், உயரம்
ஆகிய விவரங்களையும் நிலைபட்டையின்(status
bar) இடதுபுறஓரத்தில்பிரதிபலிக்கும்(படம்-64-3)
இதனை திரையில் தோன்றிட செய்வதற்கு Tools ==> Options ==> OpenOfce.org Draw ==>
General==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக
படம்-64-3
ஒரு தெரிவுசெய்யபட்ட
வரைபொருளை இடம்விட்டு வேறுஇடத்திற்கு நகர்த்துவதற்காக அதனை இடம் சுட்டியால்
பிடித்து இழுத்துசெல்லும்போது புள்ளியிட்ட கோடு நாம் நகர்த்திடும் இடம்வரை
தோன்றிடும் (படம்-64-2 வலதுபுறம் மேலே)
பின்னர் சுட்டியை விட்டிட்டால் அந்த வரைபொருள் புதிய இடத்தில்
சென்றமர்ந்திருக்கும் அதனுடைய அளவை மாற்றியமைத்திட தெரிவுசெய்யபட்ட கைபிடியின்
ஏதேனுமொரு மூலையிலிருப்பதை இடம் சுட்டியால் பிடித்து இழுத்துசெல்லும்போது புள்ளியிட்ட கோடு நாம்
நகர்த்திடும் இடம்வரை தோன்றிடும்(படம்-64-2 வலதுபுறம் கீழே) பின்னர் சுட்டியை விட்டிட்டால்
புதிய இடம்வரை அந்த வரைபொருள் விரிவடைந்திருக்கும்
படம்-64-4
இவ்வாறு இடம் சுட்டியால் ஏதேனுமொரு
வரைபொருளை நகர்த்தவும் அதன் அளவை மாற்றியமைக்கவும் செய்யும்போது geometric shapes ஆன basic shapes, symbol shapes, block arrows என்பன போன்றவை எனில் அந்த வரைபொருள் மாற்றியமைக்கபடுகின்றது(படம்-64-4
இடது புறம் மேலே) என்ற தகவலையும் geometric elements ஆன
rectangles, circles, என்பன
போன்றவை எனில் அந்த வரைபொருளின் உறுப்புகள் மாற்றியமைக்கபடுகின்றன(படம்-64-4
வலதுபுறம் மேலே) என்ற தகவலையும் திரையின் கீழே நிலைபட்டையின் தகவல் புலத்தில்
தோன்றிட செய்கின்றது
அவ்வாறு மாற்றியமைத்திடும் வரைபொருள் கோடுஎன்றால் அதன்
ஆரம்பகோணத்தின் அளவு அதனுடைய தற்போதைய கோணத்தின் அளவு ஆகிய விரங்களும்(படம்-64-4
வலது புறம் கீழே) மாற்றியமைத்திடும் வரைபொருள் பிறைபோன்ற வளைவுக்கோடு எனில்
அதன் சரியான ஆரம்பபுள்ளி முடிவுபுள்ளி ஆகிய விரங்களும் (படம்-64-4
இடதுபுறம் கீழே)திரையின் கீழே நிலைபட்டையின்
தகவல் புலத்தில் தோன்றிடசெய்கின்றது
பிறைபோன்ற வளைவுக்கோட்டினை மாறுதல்
செய்வதற்காக அதனை தெரிவு செய்து கொண்டு Drawing
toolbar-ல் Pointsஎன்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் பிறையின் இருமுனையிலும் பெரிய நீலவண்ண கைப்பிடி தோன்றிடும் அதனை
இடம்சுட்டியால் பிடித்தவுடன் கைபோன்று சுட்டியின் உருவம் மாறிவிடும் (படம்-64-5மேலே) பின் தேவையான அளவிற்கு அப்படியே இழுத்து சென்றுவிடுக
படம்-64-5
ஒரு
வரைபொருளின் திசையை சுழற்றி மாற்றியமைப்பதற்கு Drawing
toolbar-ல் rotationஎன்ற வசதி பயன்படுகின்றது அவ்வாறு
தெரிவுசெய்தவுடன் அதனை சுற்றி சிவப்பு வண்ண வட்டம் போன்று கைப்பிடி
உருமாறியமைகின்றது அதனோடு மையத்திலுள்ள சுட்டியின் தோற்றமும் பிறை போன்று அமைகின்றது
அதனை சுழற்றி அமைத்திட இழுத்து
செல்லும்போது புள்ளியிடன் கூடிய கோடு இடம்சுட்டியை விடும்வரை தோன்றிடும்(படம்-64-5மேலிருந்து இரண்டாவது) இவ்வாறு சுழற்றி அமைக்கும்போது shiftஎன்ற
விசையை அழுத்தி பிடித்து கொண்டிருந்தால் கோணஅளவு 15°-ன் மடங்காக நாம்
இடம்சுட்டியை விடும் வரை மாறிக்கொண்டு போகும்
இவ்வாறு சுழற்றி அமைப்பதற்காக தெரிவுசெய்த வரைபொருள் முக்கோனம் போன்று slant அல்லது shear இருந்தால் சுட்டியின் தோற்றம் என்றவாறு இருக்கும் இதன் ஒருபுறம் நிலையாகவும் அதன் மறுபுறம் மேலே கண்டவாறு(படம்-64-5மேலிருந்து மூன்றாவது) தோன்றிடும் சுட்டியை பிடித்து இழுத்து சென்றுவிடுக.
இந்த
கருவியை பயன்படுத்தி perspective
drawingsயை கூட வரையமுடியும் (படம்-64-5கீழே) இந்த slant
இலும்shiftஎன்ற விசையை அழுத்தி பிடித்து
கொண்டிருந்தால் கோணஅளவு 15°-ன் மடங்காக நாம் இடம்சுட்டியை
விடும் வரை மாறிக்கொண்டு போகும்
இவ்வாறு ஒரு வரைபொருளை இடம்
சுட்டியால் நகர்த்தி பிடித்து இழுத்து சென்று விடுவது மிகச்சரியான
நாம்வரும்புகின்ற அளவாக அமையாது அதற்காக
மேலே கட்டளை பட்டையிலுள்ள Format ==>
Position and Size==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது
சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் சூழ்நிலை பட்டியலில் Position
and Sizeஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன்
Position and Size என்ற உரையாடல்
பெட்டியொன்று திரையில் (படம்-64-6 )தோன்றிடும்
படம்-64-6
இதில் இயல்புநிலையில் Position
and Size என்ற
தாவியின் திரை தோன்றிடும் படத்தின் இடஅமைவை இதிலுள்ளX, Y அச்சின் அளவை குறிப்பிடுவதன்
மூலமும் படத்தின் அளவை இதிலுள்ள width
,height ஆகியவற்றின் அளவை (படம்-64-6 இடதுபுறம்)குறிப்பிடுவதன்
மூலமும் மிகச்சரியாக படத்தை அமைத்து கொள்ளமுடியும்
அவ்வாறே
படத்தின் கோணஅளவை சுழற்றியமைப்பதற்கு இதே உரையாடல் பெட்டியில் Rotation என்ற தாவிபொத்தானின் திரையை
தோன்றசெய்க பின்னர் படத்தின் இடஅமைவை
இதிலுள்ள X, Y அச்சின்
அளவை குறிப்பிடுவதன் மூலமும் (படம்-64-6 வலதுபுறம்) படத்தின் சுழற்சியளவை இதிலுள்ள angle என்பதில் எவ்வளவு என்று
குறிப்பிடுவதன் மூலமும் மிகச்சரியாக படத்தை சுழற்றி அமைத்து கொள்ளமுடியும்