விண்டோவில் பெயின்ட் என்ற பயன்பாட்டை தனியாக செயல்படுத்தி திறந்து
பயன்படுத்துவதை போன்று அல்லாமல் நாம் ஓப்பன் ஆஃபிஸின் வேறு
பயன்பாடு ஏதேனும் பயன்படுத்தி வரும்
நிலையில் அந்த திரையின் மேலே கட்டளை பட்டையில் File=>New=>
என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் விரியும்
பட்டியில் open office draw என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவை
பயன்படுத்துவதற்காக start => all
programm=> openoffice.org=> என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்தியவுடன் விரியும் பட்டியில் ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவிற்கான உருவபடத்தை
தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா என்ற பயன்பாடு திரையில் தோன்றிடும் இதன் மூலம் இரு பரிமான, முப்பரிமான படங்களை வரையமுடியும் இந்த இரு பரிமான படங்களான கோடு ,செவ்வகம், சிக்கலான உருவம் போன்ற வைகளை
வரையும் பொருட்கள்(objecdt) என அழைப்பார்கள் இந்த படங்களை வரைவதற்காக Drawing tool bar எனும் கருவிகளடங்கிய
பட்டை ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில்உள்ளது
இதில் பின்வரும் அடிப்படை கருவிகள் உள்ளன
1.கோடு(line) என்ற
கருவியை கொண்டு ஒரு கோட்டினையும் 2.அம்புக்குறி(arrow) என்ற கருவியை கொண்டு ஒரு
அம்புக்குறியையும் 3.செவ்வகம் (rectangle) என்ற கருவியை கொண்டு ஒரு செவ்வகம் அல்லது சதுரத்தையும்
4.நீள்வட்டம் (ellips) என்ற கருவியை கொண்டு ஒரு வட்டம் அல்லது நீள்வட்டத்தையும்
5.flowchart என்ற கருவியை கொண்டு ஒரு flow chart ஐயும்
6.basic shape என்ற கருவியை கொண்டு நாம் விரும்பும் வகையில் ஒருமுக்கோணம் போன்ற
உருவையும்
7.symbol shape என்ற கருவியை கொண்டு ஒரு மனித
முகம் போன்ற உருவையும்
8.இணைப்புக்கோடுconnector வரையும் கருவியை கொண்டு இரண்டு உருவத்தை இணைப்பதற்கான ஒரு இணைப்பு
கோட்டினையும்
9.curve என்ற கருவியை கொண்டு பிறை போன்றதொரு
வளைவு உருவையும்
10 callouts என்ற கருவியை கொண்டு ஒரு மனித உரு
பேசும் உரையாடல் இடம் பெறும் உருவையும்
வரைந்து கொள்ளமுடியும்
இந்த கருவிகளடங்கிய பட்டையில்
தேவையான உருவபடத்தை தெரிவுசெய்து பின் படம் வரையும் பணியிடத்தில் இடம்சுட்டியை
வைத்து பிடித்துகொண்டு சுட்டியை
தேவையானவாறு நகர்த்தினால் போதும் நாம் விரும்பியவாறு ஏதேனுமொரு படம் (படம்-1) வரையபட்டுவிடும்
படம்-1
இதனுடைய கருவிபட்டையில்
அம்புக்குறி உருவிற்கு அருகிலுள்ள முக்கோனவடிவ பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கியவுடன் விரியும் பட்டியில்(படம்-2) அம்புக்குறியின் பல்வேறுவகை உருவிலிருந்து தேவையானதை மட்டும் தெரிவுசெய்து
வரைவதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்
படம்-2
அவ்வாறே connector,curve ஆகியவற்றின்
பல்வேறுவகைகளில் ஒன்றை தெரிவுசெய்வதற்கு connector,curve ஆகிய
உருவிற்கு அருகிலுள்ள முக்கோனவடிவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும்
பட்டியில்connector,curve ஆகியவற்றின் (படம்-3)பல்வேறுவகை திரையில் பிரதிபலிக்கும்
படம்-3
இதிலுள்ள நீள்வட்ட கருவியின் பல்வேறு வகைகளைகொண்ட துனைக்கருவி பட்டையை
திரையில் கொண்டு வருவதற்கு வரைபட
கருவிபட்டையின் முடிவிலுள்ள அம்புக்குறியை
தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் பட்டியில் Customize
Toolbarஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் விரியும் Customize
என்ற(படம்-4) உரையாடல் பெட்டியில்Toolbars
என்ற பக்கத்தின் toolbarஎன்பதிலுள்ள drawing என்பதை தெரிவுசெய்து கொண்டு Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
அதன் பின்னர் விரியும் add
commandsஎன்ற (படம்-4)உரையாடல் பெட்டியின் category
என்பதன் கீழுள்ள drawings என்பதையும் commands என்பதன் கீழுள்ள ellipsஎன்பதை.யும் தெரிவுசெய்து கொண்டு Addஎன்ற பொத்தானையும் பின்னர் close என்ற பொத்தானையும்
தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Customize என்ற உரையாடல் பெட்டியில் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக
படம்-4
பிறகு இந்த Ellipseஇன் பல்வேறு வகைகளில் ஒன்றை தெரிவு செய்வதற்கு இந்த Ellipseஉருவிற்கு அருகிலுள்ள முக்கோனவடிவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்
விரியும்(படம்-5) பட்டியில் Ellipseஇன் பல்வேறுவகை பிரதிபலிக்கும்
படம்-5
மேலே கூறியவாறு வரைந்த அனைத்து உருவங்களுக்குள்ளும் தேவையானால் உரையை
தட்டச்சு செய்து கொள்ளமுடியும் இந்த கருவி பட்டையில் படுக்கை வசமானT அல்லது நெடுக்கைவசமான Tஆகிய இரண்டில் ஒன்றை தெரிவுசெய்து கொண்டு உரையை உள்ளீடு
செய்ய விரும்பும் உருவிற்குள் இடம் சுட்டியை வைத்து தேவையான உரையை நாம் விரும்பும் மொழியில்
தட்டச்சு செய்து(படம்-6) உள்ளீட்டு விசையை அழுத்துக
படம்-6
No comments:
Post a Comment