ஒரு வரைபொருளின்
தன்மையை Line
and Filling என்ற கருவிபட்டை(toolbar)
அல்லது சூழ்நிலைபட்டி(context
menu) ஆகிய
இரண்டின் உதவியால் நம்மால்
மாற்றியமைக்க முடியும்
இந்த Line and
Filling என்ற கருவிபட்டை(toolbar)
திரையில் தோன்றவில்லை
எனில் மேலே கட்டளை பட்டையில்
View =>
Toolbars => Line and
Filling=>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
உடன் படம் -1
-ல் உள்ளவாறு Line
and Filling என்ற கருவிபட்டை(toolbar)
திரையில் தோன்றிடும்
படம்
-1
இதிலுள்ள
Lineஎன்ற
உருவ பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கியவுடன் படம்-
4ல் உள்ளவாறு Line
என்ற உரையாடல்
பெட்டியொன்று திரையில்
தோன்றிடும் இந்த உரையாடல்
பெட்டியை பயன்படுத்தி
நாம்விரும்பியவாறு ஒரு
படத்திலுள்ள கோட்டினை
மாற்றியமைத்து கொள்ளமுடியும்
அவ்வாறே
Areaஎன்ற
உருவ பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்கியவுடன்
படம்-11 ல்
உள்ளவாறு Areaஎன்ற
உரையாடல் பெட்டியொன்று
திரையில் தோன்றிடும் அதனை
பயன்படுத்தி ஒரு படத்திற்குதேவையான
வண்ணத்தை பூர்த்தி செய்து
கொள்ளமுடியும்
ஒரு வரைபொருளில்
உள்ள எழுத்தினை வடிவமைத்திட
Text Formatting என்ற
கருவி பட்டை(toolbar)
பயன்படுகின்றது இந்த
Text Formatting என்ற
கருவிபட்டை(toolbar)
திரையில் தோன்றவில்லை
எனில் மேலே கட்டளை பட்டையில்
View =>
Toolbars =>Text Formatting
=>என்றவாறு
கட்டளைகளை செயற்படுத்துக
உடன் படம் -2
-ல் உள்ளவாறு Text
Formatting என்ற
கருவிபட்டை(toolbar)திரையில்
தோன்றிடும்
படம்
-2
ஒரு வரைபொருளை
இடம்சுட்டியால் தெரிவுசெய்துகொண்டு
சுட்டியின் வலதுபுற பொத்தானை
தெரிவுசெய்து இருமுறை
சொடுக்கியவுடன் படம்-3-ல்
உள்ளவாறு சூழ்நிலைபட்டி(context
menu) திரையில் தோன்றிடும்
இதில்உள்ள கட்டளைகளின் அருகே
வலதுபுறம் சிறிய அம்புக்குறிபோன்று
இருந்தால் அவைகளுக்குள்
மேலும் கட்டளைகள் அடங்கிய
துனைபட்டிஉள்ளது என பொருளாகும்
தேவையெனில் அந்த கட்டளைகளை
தெரிவுசெய்து சொடுக்கி
செயற்படுத்திகொள்ளமுடியும்
படம்
-3
ஒரு வரைபொருளின்
Lines,
arrows, borders ஆகியவற்றை
Lineஎன்ற
உரையாடல் பெட்டியின் உதவியுடன்
அல்லது Line
and Filling என்ற
கருவிபட்டை(toolbar)யின்
உதவியுடன் மாற்றியமைக்கமுடியும்
அதற்காக மேலே படம்-3-ல்
உள்ளவாறான சூழ்நிலைபட்டியில்
உள்ள Lineஎன்ற
கட்டளையை தெரிவுசெய்து
சொடுக்குக அல்லது படம் -1
-ல் உள்ளவாறு Line
and Filling என்ற
கருவிபட்டை(toolbar)யிலுள்ள
Lineஎன்ற
உருவ பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் படம்-4-ல்
உள்ளவாறு Lineஎன்ற
உரையாடல் பெட்டியொன்று
திரையில் தோன்றிடும்
படம்-4
ஒரு வரைபடத்தில்
கோடு எவ்வாறு இருக்கவேண்டும்
அதன் வண்ணம் மற்றும் அதனுடைய
அகலம் போன்றவைகளை இந்தLineஎன்ற
உரையாடல் பெட்டியின் Line
என்ற தாவியின்
திரையின் மூலம் அல்லது படம்
-1 -ல்
உள்ளவாறு Line
and Filling என்ற கருவி
பட்டை(toolbar)
யின் வரிசைஎண்
4(Line
style),5(Line width),6(Line color) ஆகிய
பொத்தான்களை தெரிவுசெய்து
சொடுக்குவதன் வாயிலாக
நாம்விரும்பியவாறு மாற்றியமைத்து
கொள்ள முடியும்
இதே Lineஎன்ற
உரையாடல் பெட்டியின்Lineஎன்ற
தாவியின் திரையின்மூலம்
அல்லது படம் -1
-ல் உள்ளவாறு Line
and Filling என்ற
கருவிபட்டை(toolbar)
யின் வரிசைஎண்
3(Arrow
style) என்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக உடன்
Arrowheads
என்ற பல்வேறு
அம்புக்குறிகளின் வகைகள்
கொண்ட பட்டி திரையில் படம்-5-ல்
உள்ளவாறு தோன்றிடும் அவைகளில்
தேவையான வகையை மட்டும்
தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம்
இதனை மாற்றியமைத்துகொள்ளமுடியும்
படம்-5
இதே Lineஎன்ற
உரையாடல் பெட்டியின்Line
styleஎன்ற தாவியின்
திரையினை படம்-6-ல்
உள்ளவாறு தோன்றசெய்க அதில்
உள்ள Addஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குவதன் வாயிலாக நாம்
விரும்பியவாறான கோட்டினை
உருவாக்கி கொள்ள முடியும்
அவ்வாறே
ஏற்கனவே இருக்கும் கோட்டினைModify
என்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குவதன்
வாயிலாக நாம் விரும்பியவாறு
மாற்றியமைத்து கொள்ளமுடியும
மேலும் இதிலுள்ள Load
Line style ,save line style ஆகிய
பொத்தான்களை தெரிவுசெய்து
சொடுக்குவதன்வாயிலாக ஏற்கனவே
இருப்பதை திரையில் காண்பிக்கவும்
நாம் மாறுதல் செய்ததை சேமி்க்கவும்
முடியும்
படம்-6
ஒரு காலியான
திரையில் முதலில் ஒரு சிறிய
வளைவு கோட்டினை வரைந்து
கொண்டபின் இதே Lineஎன்ற
உரையாடல் பெட்டியின்arrow
styleஎன்ற தாவியின்
திரையினை படம்-7-ல்
உள்ளவாறு தோன்றசெய்கஅதில்
உள்ள Addஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக பின்னர் தோன்றிடும்
சிறு உரையாடல் பெட்டியில்
இதற்கு ஒரு பெயரிட்டு okஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குக இதன்பின்னர்
படம்-5-ல்
உள்ளவாறான பல்வேறு வகைஅம்புக்குறியில்
ஒருவகையை தெரிவுசெய்து
மாற்றியமைத்து கொள்ளமுடியும்
படம்-7
ஒருவரைபொருளில்
உள்ள காலியிடத்தை பல்வேறுவகையில்
(படம்-8)
வண்ணங் களால்
நிரப்பிடமுடியும்
படம்-8
இவ்வாறு
வண்ணங்களை நிரப்புவதற்காக
படம்-1-ல்
உள்ளவாறாக Line
and Filling என்ற
கருவிபட்டை(toolbar)யில்
வரிசைஎண் 8-9
Area Style / Fillingஎன்பதன்
உதவியுடன் செயற்படுத்திடமுடியும்
இதற்காக முதலில் படம்-1-ல்
உள்ளவாறான Line
and Filling என்ற கருவி
பட்டை (toolbar)யில்
வரிசைஎண் 8-Area
Style என்பதில் color
என்பதை அதிலுள்ள
கீழிறங்கு பட்டியலில் இருந்து
தெரிவுசெய்தபின் வரிசைஎண்
9-Fillingஎன்பதில்
அதிலுள்ள கீழிறங்கு பட்டியலில்
இருந்து தேவையான வண்ணத்தை
(படம்-9)தெரிவுசெய்து
கொள்க
படம்-9
அவ்வாறே
படம்-1-ல்
உள்ளவாறான Line
and Filling என்ற
கருவிபட்டை(toolbar)யில்
வரிசைஎண் 8-Area
Style என்பதில் Gradient,
Hatching
,Bitmapஎன்றவாறு
அதிலுள்ள கீழிறங்கு பட்டியலில்
இருந்து தெரிவுசெய்தபின்
வரிசைஎண் 9-Fillingஎன்பதில்
அதிலுள்ள கீழிறங்கு பட்டியலில்
இருந்து தேவையான Gradient
,Hatching ,Bitmap
போன்றவைகளை
தெரிவுசெய்து கொள்க
இதே படம்-1-ல்
உள்ளவாறான Line
and Filling என்ற
கருவிபட்டை(toolbar)யில்
வரிசைஎண் 10-shadows
என்பதை தெரிவுசெய்தபின்
படத்திற்கு தேவையான நிழலுருவை
உருவாக்கிட (படம்-10)
முடியும்
படம்-10
மேலேகூறிய
வழிகளில் படத்தில் வண்ணங்களை
நிரப்புவதற்கு பதிலாக படம்
-1 -ல்
உள்ளவாறு Line
and Filling என்ற
கருவிபட்டை(toolbar)
யில் Areaஎன்ற
உருவ பொத் தானை தெரிவுசெய்து
சொடுக்குக அல்லது படம்-3-ல்
உள்ளவாறு சூழ்நிலை பட்டி
(context
menu)யில் Areaஎன்ற
கட்டளையை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் படம்-11
ல் உள்ளவாறு Areaஎன்ற
உரையாடல் பெட்டியொன்று
தோன்றிடும்
படம்-11
அதில் color
என்ற தாவியின்
திரையினை படம்-11-ல்
உள்ளவாறு தோன்றசெய்க அதில்
உள்ள Addஎன்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்குவதன் வாயிலாக நாம்
விரும்பியவாறான வண்ணத்தை
உருவாக்கி கொள்ளமுடியும்
அவ்வாறே ஏற்கனவே இருக்கும்
வண்ணத்தை Modify
என்ற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குவதன்
வாயிலாக நாம் விரும்பியவாறு
மாற்றியமைத்து கொள்ளமுடியும
இதிலுள்ள Edit
என்ற பொத்தான்
மிகசிறந்த வண்ணக் கலவையை
உருவாக்கிட பயன்படுகின்றது
அதுமட்டுமல்லாது இதிலுள்ள Table:Standard
என்பதன் கீழுள்ள
வண்ணங்களில் தேவையானதை
தெரிவுசெய்து சொடுக்கியபின்
ok என்ற
பொத்தானை தெரிவுசெய்து
சொடுக்கி சேர்த்து கொள்க
அவ்வாறேAreaஎன்ற
உரையாடல் பெட்டியில் Gradients,
Hatching,Bitmaps Shadow ,Trans parancy ஆகியவற்றினுடைய
தாவியின் திரைகளை தோன்ற
செய்து தேவையானவாறு படங்களில்
சேர்த்து கொள்க