திரையின்
மேலேஉள்ள கருவிகளின் பட்டையிலிருந்து செவ்வக உருவை தெரிவுசெய்து சொடுக்கியபின்
திரையில் செவ்வகத்தை வரைந்து கொள்க பின்னர் அதே கருவிகளின் பட்டியில் Text என்ற குறும்படத்தை தெரிவுசெய்து
சொடுக்கியபின் படம்-65-1-ல் உள்ளவாறு எழுத்துகளை தட்டச்சு
செய்து கொள்க
அதன்பின்னர் மேலே கட்டளைபட்டையில் Format=>
postion and size =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
அல்லது F4என்ற செயலி விசையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது
நாம் வரைந்த செவ்வக படத்தின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்
சூழ்நிலை பட்டியிலிருந்து postion
and size என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் position and size என்ற
உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் Slant &Corner Radius
என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி Slant
&Corner Radius என்ற தாவியின் திரையை தோன்றசெய்க
அத்திரையில் Slant என்பதன் கீழுள்ள Angle என்பதில் 20 degree என்றவாறு அமைத்து ok என்ற பொத்தனை தெரிவுசெய்து
சொடுக்கு உடன் நாம் தெரிவுசெய்த செவ்வகமானது சாய்வாக மாறி அமையும் படம்-65-1-ல் கீழிருந்து இரண்டாவதாக இருப்பது
அவ்வாறே corner radius என்பதன் கீழுள்ளRadius என்பதில் 1.1 Cm என்றவாறு அமைத்து ok என்ற பொத்தனை தெரிவுசெய்து
சொடுக்கு உடன் நாம் தெரிவு செய்த செவ்வகத்தின் மூலைபகுதி வளைவாக மாறிஅமையும் படம்-65-1-ல் கீழிருந்து முதலாவதாக இருப்பது
படம்-65-1
நாம் வரைந்த படத்தை
உருமாற்றம் செய்வதற்காக திரையின் கீழே உள்ள கருவிகளின் பட்டியில் basic shapes என்ற
குறும்படத்திற்கு அருகிலிருக்கும் விரிவாக்க பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்
basic shapesஎன்ற பலஉருவங்கள் அடங்கிய பெட்டியொன்று திரையில்
(படம்-65-2) தோன்றிடும் அதில் cylinder
என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியபின் படம் வரையும்
பகுதியில் சுட்டியை வைத்து இந்த cylinder
உருவை வரைந்து கொள்க
பின்னர் மேலே கட்டளைபட்டையில் Modify => Convert => To Curve=>என்றவாறு கட்டளைகளை
தெரிவுசெய்து சொடுக்குக அல்லது நாம் வரைந்த உருளை படத்தின்மீது இடம்சுட்டியை
வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன்விரியும் சூழ்நிலை
பட்டியிலிருந்து Convert => ToCurve =>என்ற கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
பின்னர் தோன்றிடும் திரையில் தேவையானவாறு மாறுதல் செய்து கொள்க அதற்கு பதிலாக மாற்று வழியில் basic shapes என்ற
பெட்டியிலிருந்து cylinder உருவை தெரிவுசெய்து வரைந்தவுடன் மஞ்சள் வண்ண புள்ளி (படம்-65-2) தோன்றும் அதனை பிடித்து இழுத்து
செல்வதன்வாயிலாக இந்த உருவை
மாற்றியமைக்கமுடியும்
படம்-65-2
ஒரு பலகோண உருவை வரைந்து கொள்க இதில் கோண அளவை மாற்றி அமைப்பதற்கு அந்த கோண
அளவு கோட்டின் இருபுறமும் இரு கட்டுபாட்டு புள்ளிகளும் மையத்தில் மத்திய
புள்ளியும் (படம்-65-3) உள்ளன இந்த மத்திய புள்ளியை பிடித்து
இழுத்து செல்வதன்மூலமோ அல்லது இரண்டு ஓரமும் உள்ள இரண்டு கட்டுபாட்டு புள்ளிகளை
பிடித்து இழுத்து செல்வதன்மூலமோ இந்த உருவை நாம் விரும்பிய வாறு மாற்றியமைத்து (படம்-65-3) கொள்ள முடியும்
படம்-65-3
விளம்பர
பலகையை ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா மூலம் உருவாக்கிட முடியும் அதற்காக திரையின் கீழே உள்ள
கருவிகளின் பட்டியில் stars என்ற குறும்படத்திற்கு அருகிலிருக்கும் விரிவாக்க
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் stars and banners என்ற
பலஉருவங்கள் அடங்கிய பெட்டி யொன்று (படம்-65-4)தோன்றிடும்
அதில் vertical banners என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியபின் படம் வரையும் பகுதியில்
சுட்டியை வைத்து இந்த vertical banners
உருவை வரைந்து கொள்க பின்னர் அதே கருவிகளின் பட்டியில் Text என்ற குறும்படத்தை தெரிவுசெய்து
சொடுக்கியபின் படம்-65-4-ல் உள்ளவாறு எழுத்துகளை தட்டச்சு
செய்து கொள்க
அவ்வாறே stars and
banners என்ற பலஉருவங்கள் அடங்கிய பெட்டியில் horizontal
banners ன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கியபின் படம் வரையும்
பகுதியில் சுட்டியை வைத்து இந்த horizontal banners உருவை
வரைந்து கொள்க பின்னர் அதே கருவிகளின் பட்டியில் Text என்ற குறும்படத்தை தெரிவுசெய்து
சொடுக்கியபின் படம்-65-4-ல் உள்ளவாறு எழுத்துகளை தட்டச்சு
செய்து கொள்க
இவ்வாறு
நாம் விரும்பியவாறு விளம்பர பலகைகளை ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா மூலம் உருவாக்கி
கொள்ளமுடியும்
படம்-65-4
ஏதேனும் ஒரு உருவை வரைந்தபின்
அதனை மாறுதல் செய்வதற்கு Edit points என்ற கருவிபட்டை பயன்படுகின்றது
படம்-65-5
ஏதேனும் ஒரு உருவை
வரைந்து கொண்ட View => Toolbars
=> EditPoints=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Edit points என்ற
கருவிகளின் பட்டை திரையில் படம்-65-5 தோன்றிடும்
அதில் நகர்த்துவதற்கு move points என்பதும்
நீக்குவதற்கு delete
pointsஎன்பதும் பிரிப்பதற்கு split curve என்பதும் வளைகோடாக உருமாற்றம் செய்திட convert to curve என்பதும் பயன்படுகின்றன இவ்வாறே மற்ற
தேவைகளுக்கு இதிலுள்ள மற்ற பொத்தான்களை பயன்படுத்தி கொள்க
No comments:
Post a Comment