Wednesday, October 31, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா-76 மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram) வரைதல்


ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவானது கணினி உதவியால் வரையப்படும் வரைபட வடிவமைப்பு CAD (computer-aided design),pro-e போன்றதன்று ஆனாலும் வரைகலை பயன்பாட்டினை போன்று இதில் ஒரு scale வரையமுடியும்  மேலும் இதன் உதவியால் ஒரு மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram)  வரையமுடியும் ஆயினும் அதன் உண்மையான அமைப்பை பற்றிய விளக்கம் இங்கு கூறப்போவதில்லை இருந்த போதிலும் ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவினுடைய வரைகலை தொழில்நுட்பத்தை பயன் படுத்தி எவ்வாறு ஒரு மின்சுற்று வரைபடத்தை(Logic Circuit Diagram)  வரைவது என இப்போது காண்போம் 
  முதலில் இந்த வரைபடத்தின் வரைவு அளவை மில்லிமீட்டர் ஆக வைத்து கொள்க.முதல் படிமுறையாக ஒரு மின்சுற்று வரைபடத்தின்(Logic Circuit Diagram) அடிப்படை உறுப்பான ஒரு அன்டு கேட் உருவ வரைபடத்தை வரைய விருக்கின்றோம்.
 படம்-76-1 
 இதற்காக திரையின் மேலே இடதுபுற மூலையில்  இதன் Xஅச்சு 10மிமீ என்றும் Yஅச்சு 5மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு(படம்-76-1) ஒரு சதுரஉருவை வரைந்து கொள்க பின் அதன் இடதுபுறம் மேல்பகுதியில் ஒரு lead ஐ வரைந்து அதனைPosition and Sizeஎன்ற உரையாடல் பெட்டியின் துனையுடன்  சரிசெய்து அமைத்துகொள்க   அவ்வாறே அதன் இடதுபுறம் கீழே   மற்றொரு lead ஐயும் வலதுபுறம் மேலே மூன்றாவாதாக  ஒரு lead ஐயும் வரைந்து அவைகளை  Position and Sizeஎன்ற உரையாடல் பெட்டியின் துனையுடன்  கீழேஅட்டவணையில் குறிப்பிட்டுள்ளவாறு சரிசெய்து அமைத்துகொள்க

left (X/Y) [mm]  
right (X/Y) [mm]
Input 1 (X/Y)[mm]
Output (X/Y)[mm]
10/05/12
18 / 5
10 / 6.5 (right EP.)
18 / 6.5 (left EP.)

 தற்போது இந்த அண்டு கேட் வரையும் பணி ஏறத்தாழ முடிவுற்றது இந்த  அண்டு   கேட்டை அடிப்படையாக கொண்டுதான் மற்ற கேட்டுகளை  இனி வரைய இருக்கின்றோம்
படம்-76-2
 அதனால் இந்த பயன்பாட்டுத்திரையின் மேலே கட்டளைபட்டையில் Edit => Duplicate => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்Duplicate என்ற(படம்-76-2) உரையாடல் பெட்டியில்  முதலில் இதன் Xஅச்சு 0மிமீ என்றும் Yஅச்சு 15மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு  இரண்டாவது உருவபடத்தையும் பிறகு  Xஅச்சு 30மிமீ என்றும் Yஅச்சு 0மிமீ என்றும்  அதனுடைய இடஅமைவு இருந்திடுமாறு மூன்றாவது உருவபடத்தையும்  அவ்வாறே மற்றொரு வரிசை உருவபடத்தையும் படம்-76-3-ல் உள்ளவாறு நகலெடுத்துகொள்க
 படம்-76-3
  இவைகளை நாட் கேட்டாக மாற்றியமைத்திடுவதற்காக இதனுடைய  lead ஐ தேவையானவாறு நகர்த்தி சரிசெய்து அமைத்து கொள்க மேலும்  இந்த lead -ல் சிறுவட்டத்தை 2மிமீ அளவில் வரைந்து கொள்க அதன்பின் இதனை தேவைப்படும் இடத்தில் ஒட்டிகொள்வதற்காக இந்த  2மிமீ அளவுள்ள  சிறுவட்டத்தை ஒட்டும் பலகையில்(Clipboard) நகலெடுத்து வைத்து கொள்க
  இதன்பின் இந்த அண்டு கேட், ஆர் கேட் ஆகிய கேட்டுகளில் (&,≤ )என்பனபோன்ற தேவையான குறியீட்டை சேர்ப்பதற்கு  மேலே கட்டளை பட்டையில் Insert => Special Characters =>  என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் உரையாடல் பெட்டியில்  தேவையான குறியீட்டை தெரிவுசெய்து சொடுக்கி சேர்த்துகொள்க
  இந்த கேட்டுகளில் உள்ள    leadகளை   கணக்கீடுகளின் மூலம் இணைப்பது மிகச்சரியாக பொருந்தியமையாது என்பதால் glue points-ன் உதவியுடன் கைகளால் இணைத்துகொள்க இதற்காக Snap to Gridஎன்ற கட்டளையை செயலிழக்க செய்து கொண்டு Snap to Object Points. என்பதை செயல்படச்செய்தால் glue points- ஐதிறந்து செயல்படுத்திடமுடியும்   மேலும் இந்த பணியை செய்வதற்காக கருவிபட்டையை பயன்படுத்தி  வரைபடத்தின் உருவை பெரியதாக மாற்றியமைத்துகொள்வது நல்லது
 இந்த அண்டு கேட் ,ஆர் கேட் ,நண்டு கேட் ,நாட் கேட் என்பன போன்றவைகளை தனித்தனி வகைவாரியான குழுவாக உருவாக்கி கொண்டால் அதன்பின் அவைகளை கம்பி இணைப்புடன்  இணைத்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்  என பரிந்துரைக்கப் படுகின்றது   அல்லது இவைகளை உருவாக்கி ஒரு புரிந்துகொள்ளும் பெயருடன் Gallery-ல்   சேகரித்து சேமித்து வைத்துகொண்டபின் தேவையானபோது ஒரு வரைபடத்தில் நகலெடுத்து ஒட்டிகொள்ளமுடியும்
   ஒரு Half adderஎன்பதை எவ்வாறு வரைவது என இப்போது காண்போம்  முதலில் இந்த வரைபடத்தின் வரைவு அளவை சென்டிமீட்டர் ஆகவும் துனைஅளவு 4புள்ளி எனவும் அமைத்துகொள்க பின் grid, guiding lines,  associated snap functions ஆகியவைகளை செயலில் இருக்குமாறு வைத்து கொள்க
பிறகு முதல் பணியாக பின்வரும் அட்டவணையிலுள்ளவாறு a , b,என்ற இரு signal leads  களை வரைந்து கொள்க

Start point
Length
Signal wire a
X = 2 cm / Y = 3.0 cm
5.5 cm
Signal wire b
X = 3 cm / Y = 3.0 cm
5.5 cm

  பின் A,Bஎன்ற படுக்கைவச கோடுகளுக்கிடையில் input leads  Y=4.0 cm என்றும் output leads Y=6.0 cm என்றும்  அதனுடைய நிலையை சரிசெய்து அமைத்துகொள்க  
அதன்பின்இரு INVERTER  கேட்டுகளின் நிலையை input   Y=4.1 cm என்றும் output Y=6.1 cm என்றும் சூழ்நிலை பட்டியின்Edit guiding lineஎன்ற கட்டளையின் வாயிலாக சரிசெய்து அமைத்துகொள்க இவை மிகச்சரியாக அமையX=5.0 cm (INVERTER gate) and X=8.0 cm(AND gate). என அமைத்துகொள்க  இதன்பின்  Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள  INVERTER  கேட்டினைஇழுத்துவந்து விடுவதன் வாயிலாக இரு INVERTER  கேட்டுகளை  படம் 76-4-ல் உள்ளவாறு பொருத்தி அமைத்துகொள்க
   படம் 76-4
  இந்த இன்வெர்ட்டர் கேட்டுகளின் Input leads  Y=4.5 cm என்றும் output leads Y=6.5 cm என்றும்  இருக்கும் பின் இடம்சுட்டியை இதன்மீது மேலூர்தல் செய்தவுடன் கூட்டல்க குறிபோன்று அதன்உருவம் மாறியமையும்   உடன்input leads மற்றும் outputs leads ஆகியவை guiding line-ல் சரியாக பொருந்தி அமையுமாறு இழுத்து சரிசெய்து அமைத்துகொள்க
அதன்பின் Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள  அண்டு கேட்டினை இழுத்துவந்து விடுவதன் வாயிலாக இரு அண்டு கேட்டுகளை  படம் 76-5-ல் உள்ளவாறு பொருத்துக 
 படம் 76-5
இந்த அண்டு கேட்டுகளின் Input leads  Y=4.5 cm என்றும் output leads Y=6.5 cm என்றும்  இருக்கும் பின் இடம்சுட்டியை இதன்மீது மேலூர்தல் செய்தவுடன் கூட்டல்குறிபோன்று அதன்உருவம் மாறியமையும்  உடன் input leads மற்றும் outputs leads ஆகியவை guiding line-ல் சரியாக பொருந்திஅமையுமாறு இழுத்து சரிசெய்து அமைத்துகொள்க
 பின் ஒரு நெடுக்கைவசகோடு X=11 cmஎன்ற அளவிலும்  C,Dஎன்ற படுக்கைவச கோடுகள் Y=5.5 cm and Y=7.5 cmஎன்ற அளவுகளிலும் வரைந்து கொள்க  அதன்பின் இந்த  C,Dஎன்ற படுக்கைவச கோடுகளை Y=5.35 cm, Y=7.35 cmஎன்ற அளவுகளுக்கு மாற்றியமைத்துகொள்க
பிறகு Gallery-யில்   சேகரித்து வைத்துள்ள   ஆர் மற்றும் மற்றொரு அண்டு கேட்டுகளை மூன்றாவது நெடுவரிசையாக இழுத்துவந்து படம் 76-6-ல் உள்ளவாறு பொருத்துக

படம் 76-6
பின் மேலிருக்கும் அண்டு கேட்டிற்கு ஏற்றவாறு  C,Dஎன்ற படுக்கைவச கோடுகள் Y=7.0 cm and Y=7.5 cmஎன்ற அளவுகளில் வரைந்து கொள்க அவ்வாறே கீழிருக்கும்  அண்டு கேட்டிற்கு ஏற்றவாறு  ,E,Fஎன்ற படுக்கைவச கோடுகள் Y=5.0 cm and Y=5.5 cmஎன்ற அளவுகளில் படம் 76-7 ல் உள்ளவாறு வரைந்து கொள்க இந்த கோடுகளுக்கு ஏற்ப அண்டு கேட்டுகளை சரிசெய்து அமைத்தபின் இந்த கோடுகள் அனைத்தையும் நீக்கம்செய்துவிடுக.
படம் 76-7
இவ்வாறான படிமுறையை பின்பற்றி படம் 76-8-ல்உள்ளவாறு Half Adder logic diagram ,Full-adder logic diagram ஆகிய வரைபடங்களை CAD ,pro-e போன்ற பயன்பாடுகளைபோன்று ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவிலும்  வரையமுடியும்
 படம் 76-8
 ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் உரையை அசைந்தாட செய்தல்
கருவிபட்டையிலுள்ள Tஎனும் ட்ராவில் உரையை எழுதுவதற்கான கருவியை தெரிவுசெய்து சொடுக்கியபின்படம்-76-9ல்உள்ளவாறு ஏதேனுமொரு உரையை தட்டச்சு செய்து கொண்டு சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்கியபின் தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Edit styles என்றவாறு கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோனறிடும் Graphic styles என்றஉரையாடல் பெட்டியில் text animation தாவியின் திரையை தோன்றசெய்து அதில் effect தேவையான செயலை தெரிவசெய்து கொண்டு   ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தட்டச்சு செய்த உரையானது நாம் தெரிவுசெய்த விருப்பத்திற்கேற்ப நகர்ந்து செல்வதை காணலாம்    

படம் 76-9

Thursday, October 11, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா- 75- ஒருசில தொழில்நுட்ப ஆலோசனைகள்


இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் உள்ள ஒரு படத்துடன் அதை விளக்குவதற்காக வரையப்படும் உரைப்பெட்டி போதுமானதாக இருக்காது அந்நிலையில்  மேலே கட்டளைபட்டையில்  உள்ள  Insert ==> Object ==> OLE Object==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  உடன் Insert OLE Object என்ற உரையாடல் (படம்-75-1) பெட்டி திரையில் தோன்றிடும்

  படம்-75-1
 அதில் Object type என்பதன்கீழுள்ள வகைகளில் Open Office.org3.3 Textஎன்றவாறு தெரிவுசெய்து கொண்டு Create new  என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்தால் அந்த வரைபடத்துடன்  உரைபெட்டி உள்பொதியப்பட்டுவிடும்  create from file  என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்தால் ஏற்கனவே இருக்கும் கோப்பினை இணைப்பு அல்லது உள்பொதிதல் ஆகிய இரண்டில் ஒன்று நாம் தெரிவுசெய்வதற்கேற்ப உருவாகும் முதல் வானொலி பொத்தானை மட்டும் தெரிவுசெய்து கொண்டபின் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  ஓப்பன் ஆஃபிஸின் உரை பதிப்பான் திரையில் தோன்றிடும்

 படம்-75-2
 அதில் தேவையான உரையை  உள்ளீடு செய்து கொண்டு இந்த OLE Object  இற்கு வெளியே(படம்-75-2) இடம்சுட்டியை வைத்து சொடுக்குக அதன்பின் மேலே கட்டளைபட்டையில்  உள்ள  Edit => Object => Edit என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது OLE Object இற்குள் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக உடன் ஓப்பன் ஆஃபிஸின் உரை பதிப்புத்திரை தோன்றிடும்  அதில் தேவையானவாறு நாம் உள்ளீடு செய்த உரையை மாறுதல்கள் செய்து கொள்ளமுடியும் 
  படம்-75-3
 ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் வரையப்படும் படத்தை zoom  என்ற கருவிபட்டையில் உள்ள தேவையான கருவிகளை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது கீழே நிலைபட்டியின் வலதுபுற பகுதியில் உள்ள நகர்வியை நகர்த்துதல் அல்லது அதிலுள்ள +, - ஆகிய குறியீடுகளை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது காட்சிக்கான அளவை குறிப்பிடும் சதவிகிதத்தின் மீது இடம் சுட்டியை வைத்து வலதுபுறம் சொடுக்கியவுடன் தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் தேவையான அளவா மாற்றி யமைத்தல் அல்லது    சதவிகித அளவின் மீது இடம் சுட்டியை வைத்து  இருமுறை சொடுக்கியவுடன் தோன்றிடும் zoom & view layout என்ற (படம்-75-3)உரையாடல் பெட்டியை தேவையான சதவிகித அளவு அமைத்தல்  ஆகிய வழிகளில் ஒரு படத்தை நாம் விரும்பும் அளவிற்கு பெரியதாக அல்லது சிறியதாக திரையில் காட்சியாக காணமுடியும்
   ஓப்பன் ஆஃபிஸில் வரையப்படும் படத்தை grid points, special snap points and lines, object frames, individual points on objects, or page edges  ஆகியவற்றை கொண்டு மிகச்சரியாக நாம் விரும்பும் இடத்தில் விரும்பும் அளவிற்கு அமைக்கமுடியும்  இந்த செயலையே Snapஎன அழைப்பார்கள்  இந்த Snap செயலியை திரையில்   கொண்டு வருவதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள View ==> Grid ==> Snap to Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
 அதன்பின்Grid ஐ திரையில் பிரதிபலிக்குமாறு செய்வதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள View ==> Grid ==> Display Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக திரையில் பிரதிபலிக்குமாறு செய்யமுடியும்
மேலும் இந்த Grid ஐ வடிவமைப்பு செய்வதற்காக   மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools ==> Options ==> OpenOfce.org Draw ==> Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து உடன் தோன்றிடும் Options-OpenOfce.org Draw- Grid என்ற (படம்-75-4)உரையாடல் பெட்டியில் தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்க 
 படம்-75-4
  Snap objectsஇற்கு Snap ஐ அமைத்தல்
ஒரு Snap lines அல்லது,Snap pointsஆகியவற்றை பயனாளரே வரையமுடியும்  Snap lines என்பது படுக்கை வசமாகவோ அல்லது நெடுக்கை வசமாக விட்டுவிட்டு வரையப்படும் ஒரு கோடாகும்   அவ்வாறே Snap pointsஎன்பது மேலேகூறியவாறு விட்டு விட்டு வரையப்படும் கோட்டின்மீது உள்ள ஏதேனுமொரு புள்ளியின் ஒரு கூட்டல் போன்றகுறியாகும்
சுட்டியால் Snap lines ஒன்றை வரைதல்
படுக்கைவசமான அல்லது நெடுக்கைவசமான Grid -ன்மீது இடம்சுட்டியைவைத்து  சுட்டியின் பொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு அப்படியே சுட்டியை  கோடு வரையவிரும்பும் பகுதியில் வைத்து ஒரு Snap lines  ஐ வரைந்து கொள்க இவ்வாறாக வரையப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட   Snap lines களை ஒருங்கினைப்பதற்காகமேலே கட்டளைபட்டையிலுள்ள Insert => Snap point / line => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து உடன் தோன்றிடும் new snap object என்ற (படம்-75-5) உரையாடல் பெட்டியில் திரையில் position x y ஆகிய இரு அச்சுகளின் அளவை அமைத்து கொண்டு type என்பதன் கீழுள்ள  point, vertical line, horizontal lineஆகியவற்றில்  தேவையானதை தெரிவுசெய்து அமைத்து கொண்டு  ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   
 படம்-75-5
இவ்வாறு  வரையப்பட்ட  snap object ஐ மேலும் திருத்தம் செய்திடுவதற்காக snap object -ன்மீது சூழ்நிலை பட்டியை தோன்றசெய்து அதில் edit , delete,என்றவாறு நாம் விரும்புவதற்கேற்ப தேவையான கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக சரிசெய்து அமைத்துகொள்க
இதிலுள்ள page edge என்ற செயலியானது  snap object ஐ ஒரு பக்கத்தின் மூலையில் நகர்த்தி சரிசெய்து அமைத்திட உதவுகின்றது  
 படம்-75-6
 சுற்றெல்லையை object border -ல் இணைத்தல்  முதலில்  Snap to gridஎன்பதை செயலிழக்க செய்தபின்   இந்த செயலியானது செயல்படுவதற்கு ஏதுவான சூழல்ஏற்படும் மேலும் கோடுஒன்று மற்றொன்றோடு இணைப்பதற்கு இந்த செயலி பயன்படுகின்றது இவ்வாறான இணைப்பு புள்ளியானது(படம்-75-6) சுற்றெல்லையில் எங்கு வேண்டுமானாலும் அமையும்

புள்ளியில்object pointsஇணைத்தல் இதுவும் முந்தை செயலியை போன்றதுதான்  இவ்வாறான இணைப்பானது நான்குமூலையிலுள்ள புள்ளிகளில் மட்டுமே (படம்-75-6 வலதுபுறம் )இணைப்பு புள்ளி அமையும்
இவ்வாறான செயலியின்போது வழிகாட்டிடும் கோடானது செயலுடனோ அல்லது செயலற்றதாகவோ இருக்கவேண்டும் அதற்காக  மேலே கருவிபட்டையிலுள்ள இதற்கான கருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options => OpenOfce.org Draw => View => Guides when moving=> ன்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக 
    பொதுவாக ஒரு வரைபடமானது கடிதத்தாள் அளவுள்ள A4 தாளில் மட்டுமே வரைந்திடுமாறு இயல்புநிலையில் அமைந்திருக்கும் மேலும் இந்த வரைபடமானது ஒன்றிற்கு மேற்பட்ட அடுக்குகளாக அவ்வடுக்குகளை நாம் காண்பதற்கேற்ப ஒளிபுகுவண்ணம் அல்லது ஒளிபுகாமல் அமைக்கமுடியும் ஒரு வரைபடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பல அடுக்குகளாக எவ்வாறு அமைக்கமுடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும் உதாரணமாக ஒரு வீட்டின் வரைபடம் (படம்-75-7) எனில் இதில் தரைப்பகுதியை மட்டும் குறிப்பது ஒரு அடுக்கு எனப்படும் அவ்வீட்டிற்கான மின்சாரம் வழங்கும் கம்பிசெல்லும்பாதையை குறிப்பிடுவது மற்றொரு அடுக்காகும் இவ்வாறே மற்றவைகளை அவ்வரைபடத்தின் அடுக்குகள் எனப்படும் பொதுவாக ஒப்பன் ஆஃபிஸின் ட்ராவில்ஒரு புதிய படம் உருவாக்குவதற்கான திரையை தோன்றசெய்தால் Layout,controls, Dimension Lines ஆகிய மூன்றடுக்குகள் இயல்புநிலையில் திரையில் தோன்றிஇருக்கும்   
 படம்-75-7
 இதற்குமேலும் அடுக்குகள் தேவையெனில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Insert=> Layer=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் insert layerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் visible ,printable,lockedஆகிய பண்பியல்புகளை நாம் விரும்பியவாறு அமைத்திடுக. பின்னர் Layerஎன்ற தாவியின்மீது இடம்சுட்டியைவைத்து சூழ்நிலைபட்டியை தோன்றிடச்செய்க.அதில் delete,rename,modifyஎன்பன போன்ற  கட்டளைகளை நாம்விரும்பியவாறு செயற்படுத்தி கொள்க
ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவிலும் இம்ப்பிரஸின் படவில்லைகளான Slide 1, Slide 2போன்று ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களை உருவாக்கி அவைகளுக்கு தனித்தனியான பெயர்வழங்கமுடியும்  இந்த வரைபடங்களின் பக்கங்களை ட்ரா திரையின் இடதுபுற பலகத்தில் (படம்-75-8)இம்ப்பிரஸின் படவில்லைகள் போன்றே சிறுசிறு அளவுடையதாக காண்பிக்கும்  
 படம்-75-8
புதிய பக்கங்களை உருவாக்குவது இருக்கும் வரைபடத்தின் பக்கத்திற்கு பெயரினை மாற்றியமைப்பது நீக்கம் செய்வது போன்ற செயல்களை இதில் சூழ்நிலை பட்டியை தோன்றசெய்தபின் அதிலுள்ள கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக செயல்படுத்திகொள்ளமுடியும் 
 அவ்வாறே ஒரு வரைபடத்தின் இந்த பக்கங்களின் பின்புல தோற்றத்தை view=> master=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையின் மூலம் அமைத்திடமுடியும்
மேலும் format => page =>background=>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையின் மூலம் வரைபடத்தின் இந்த பக்கங்களின் பின்புல தோற்றத்தை மாற்றிஅமைத்திடமுடியும்
 படம்-75-9
 அவ்வாறே இந்த வரைபடத்தின்மீது இடம்சுட்டியைவைத்து ஒரு சூழ்நிலை பட்டியை தோன்றச் செய்து அதில் Page=> slide design=>என்றவாறு செயற்படுத்தியவுடன் தோன்றிடும் slide design என்ற(படம்-75-9) உரையாடல் பெட்டியின்வாயிலாக  ஒருவரைபடத்தின் பின்புலகாட்சியை ஒதுக்கீடுசெய்தல் நிருவகித்தல் போன்ற செயல்களை செய்திடமுடியும்  மேலும் இந்தslide design என்ற உரையாடல் பெட்டியில் உள்ள Load என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடிடும் Load slide design என்ற உரையாடல் பெட்டியின் திரையில் தயார்நிலையிலுள்ள வடிவமைப்பை  தெரிவுசெய்து உள்ளிணைத்துகொள்ளமுடியும்  
 ஒரு படத்திலுள்ள குறிப்பிட்ட உறுப்பு படத்தினை ஒன்றிற்கு மேற்பட்டதாக அடுக்குபோன்று உருவாகுவதற்காக குறிப்பிட்ட உருவபடத்தினை தெரிவுசெய்து கொண்டு  மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit =>duplicate=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Duplicate என்ற உரையாடல்(படம்-75-10) பெட்டியில்  number of copies என்பதில் எத்தனை எண்ணிக்கை வேண்டுமென எண்ணிக்கையை அமைத்தபின்  மற்ற விவரங்களை தேவையானவாறு அமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 படம்-75-10
 அவ்வாறே ஒருவரைபடத்தின் இரு உருவங்களை ஒன்றின்மீது மற்றொன்றை அடுக்கியவாறு காண்பிக்கவும் அவ்வாறு அடுக்கியவாறு காண்பிக்கும்போது எதுமுன்புறம் எதுபின்புறம் என அமைத்திடவும் cross fading என்ற வசதி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்காக இவ்வாறு அடுக்கிடவிரும்பும்இரு படத்தினை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit =>cross-fading=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் cross fading என்ற (படம்-75-11)உரையாடல் பெட்டியில்  increments என்பதில் எத்தனை வேண்டுமென எண்ணிக்கையை அமைத்துகொண்டு  மற்ற விவரங்களை தேவையானவாறு அமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 படம்-75-11