இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் உள்ள ஒரு படத்துடன் அதை விளக்குவதற்காக வரையப்படும் உரைப்பெட்டி போதுமானதாக இருக்காது அந்நிலையில் மேலே கட்டளைபட்டையில் உள்ள Insert ==> Object ==> OLE Object==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Insert OLE Object என்ற உரையாடல் (படம்-75-1) பெட்டி திரையில் தோன்றிடும்
படம்-75-1
அதில் Object type என்பதன்கீழுள்ள வகைகளில் Open Office.org3.3 Textஎன்றவாறு தெரிவுசெய்து கொண்டு Create new என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்தால் அந்த வரைபடத்துடன் உரைபெட்டி உள்பொதியப்பட்டுவிடும் create from file என்ற வானொலி பொத்தானை தெரிவுசெய்தால் ஏற்கனவே இருக்கும் கோப்பினை இணைப்பு அல்லது உள்பொதிதல் ஆகிய இரண்டில் ஒன்று நாம் தெரிவுசெய்வதற்கேற்ப உருவாகும் முதல் வானொலி பொத்தானை மட்டும் தெரிவுசெய்து கொண்டபின் Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஓப்பன் ஆஃபிஸின் உரை பதிப்பான் திரையில் தோன்றிடும்
படம்-75-2
அதில் தேவையான உரையை உள்ளீடு செய்து கொண்டு இந்த OLE Object இற்கு வெளியே(படம்-75-2) இடம்சுட்டியை வைத்து சொடுக்குக அதன்பின் மேலே கட்டளைபட்டையில் உள்ள Edit => Object => Edit என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது OLE Object இற்குள் இடம்சுட்டியை வைத்து சொடுக்குக உடன் ஓப்பன் ஆஃபிஸின் உரை பதிப்புத்திரை தோன்றிடும் அதில் தேவையானவாறு நாம் உள்ளீடு செய்த உரையை மாறுதல்கள் செய்து கொள்ளமுடியும்
படம்-75-3
ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் வரையப்படும் படத்தை zoom என்ற கருவிபட்டையில் உள்ள தேவையான கருவிகளை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது கீழே நிலைபட்டியின் வலதுபுற பகுதியில் உள்ள நகர்வியை நகர்த்துதல் அல்லது அதிலுள்ள +, - ஆகிய குறியீடுகளை தெரிவுசெய்து சொடுக்குதல் அல்லது காட்சிக்கான அளவை குறிப்பிடும் சதவிகிதத்தின் மீது இடம் சுட்டியை வைத்து வலதுபுறம் சொடுக்கியவுடன் தோன்றிடும் சூழ்நிலைபட்டியில் தேவையான அளவா மாற்றி யமைத்தல் அல்லது சதவிகித அளவின் மீது இடம் சுட்டியை வைத்து இருமுறை சொடுக்கியவுடன் தோன்றிடும் zoom & view layout என்ற (படம்-75-3)உரையாடல் பெட்டியை தேவையான சதவிகித அளவு அமைத்தல் ஆகிய வழிகளில் ஒரு படத்தை நாம் விரும்பும் அளவிற்கு பெரியதாக அல்லது சிறியதாக திரையில் காட்சியாக காணமுடியும்
ஓப்பன் ஆஃபிஸில் வரையப்படும் படத்தை grid points, special snap points and lines, object frames, individual points on objects, or page edges ஆகியவற்றை கொண்டு மிகச்சரியாக நாம் விரும்பும் இடத்தில் விரும்பும் அளவிற்கு அமைக்கமுடியும் இந்த செயலையே Snapஎன அழைப்பார்கள் இந்த Snap செயலியை திரையில் கொண்டு வருவதற்கு மேலே கட்டளைபட்டையிலுள்ள View ==> Grid ==> Snap to Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
அதன்பின்Grid ஐ திரையில் பிரதிபலிக்குமாறு செய்வதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள View ==> Grid ==> Display Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக திரையில் பிரதிபலிக்குமாறு செய்யமுடியும்
மேலும் இந்த Grid ஐ வடிவமைப்பு செய்வதற்காக மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools ==> Options ==> OpenOfce.org Draw ==> Grid==>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து உடன் தோன்றிடும் Options-OpenOfce.org Draw- Grid என்ற (படம்-75-4)உரையாடல் பெட்டியில் தேவையானவாறு சரிசெய்து அமைத்து கொள்க
படம்-75-4
Snap objectsஇற்கு Snap ஐ அமைத்தல்
ஒரு Snap lines அல்லது,Snap pointsஆகியவற்றை பயனாளரே வரையமுடியும் Snap lines என்பது படுக்கை வசமாகவோ அல்லது நெடுக்கை வசமாக விட்டுவிட்டு வரையப்படும் ஒரு கோடாகும் அவ்வாறே Snap pointsஎன்பது மேலேகூறியவாறு விட்டு விட்டு வரையப்படும் கோட்டின்மீது உள்ள ஏதேனுமொரு புள்ளியின் ஒரு கூட்டல் போன்றகுறியாகும்
சுட்டியால் Snap lines ஒன்றை வரைதல்
படுக்கைவசமான அல்லது நெடுக்கைவசமான Grid -ன்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் பொத்தானை அழுத்தி பிடித்துகொண்டு அப்படியே சுட்டியை கோடு வரையவிரும்பும் பகுதியில் வைத்து ஒரு Snap lines ஐ வரைந்து கொள்க இவ்வாறாக வரையப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட Snap lines களை ஒருங்கினைப்பதற்காகமேலே கட்டளைபட்டையிலுள்ள Insert => Snap point / line => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து உடன் தோன்றிடும் new snap object என்ற (படம்-75-5) உரையாடல் பெட்டியில் திரையில் position x y ஆகிய இரு அச்சுகளின் அளவை அமைத்து கொண்டு type என்பதன் கீழுள்ள point, vertical line, horizontal lineஆகியவற்றில் தேவையானதை தெரிவுசெய்து அமைத்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-75-5
இவ்வாறு வரையப்பட்ட snap object ஐ மேலும் திருத்தம் செய்திடுவதற்காக snap object -ன்மீது சூழ்நிலை பட்டியை தோன்றசெய்து அதில் edit , delete,என்றவாறு நாம் விரும்புவதற்கேற்ப தேவையான கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக சரிசெய்து அமைத்துகொள்க
இதிலுள்ள page edge என்ற செயலியானது snap object ஐ ஒரு பக்கத்தின் மூலையில் நகர்த்தி சரிசெய்து அமைத்திட உதவுகின்றது
படம்-75-6
சுற்றெல்லையை object border -ல் இணைத்தல் முதலில் Snap to gridஎன்பதை செயலிழக்க செய்தபின் இந்த செயலியானது செயல்படுவதற்கு ஏதுவான சூழல்ஏற்படும் மேலும் கோடுஒன்று மற்றொன்றோடு இணைப்பதற்கு இந்த செயலி பயன்படுகின்றது இவ்வாறான இணைப்பு புள்ளியானது(படம்-75-6) சுற்றெல்லையில் எங்கு வேண்டுமானாலும் அமையும்
புள்ளியில்object pointsஐஇணைத்தல் இதுவும் முந்தை செயலியை போன்றதுதான் இவ்வாறான இணைப்பானது நான்குமூலையிலுள்ள புள்ளிகளில் மட்டுமே (படம்-75-6 வலதுபுறம் )இணைப்பு புள்ளி அமையும்
இவ்வாறான செயலியின்போது வழிகாட்டிடும் கோடானது செயலுடனோ அல்லது செயலற்றதாகவோ இருக்கவேண்டும் அதற்காக மேலே கருவிபட்டையிலுள்ள இதற்கான கருவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options => OpenOfce.org Draw => View => Guides when moving=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
பொதுவாக ஒரு வரைபடமானது கடிதத்தாள் அளவுள்ள A4 தாளில் மட்டுமே வரைந்திடுமாறு இயல்புநிலையில் அமைந்திருக்கும் மேலும் இந்த வரைபடமானது ஒன்றிற்கு மேற்பட்ட அடுக்குகளாக அவ்வடுக்குகளை நாம் காண்பதற்கேற்ப ஒளிபுகுவண்ணம் அல்லது ஒளிபுகாமல் அமைக்கமுடியும் ஒரு வரைபடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பல அடுக்குகளாக எவ்வாறு அமைக்கமுடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும் உதாரணமாக ஒரு வீட்டின் வரைபடம் (படம்-75-7) எனில் இதில் தரைப்பகுதியை மட்டும் குறிப்பது ஒரு அடுக்கு எனப்படும் அவ்வீட்டிற்கான மின்சாரம் வழங்கும் கம்பிசெல்லும்பாதையை குறிப்பிடுவது மற்றொரு அடுக்காகும் இவ்வாறே மற்றவைகளை அவ்வரைபடத்தின் அடுக்குகள் எனப்படும் பொதுவாக ஒப்பன் ஆஃபிஸின் ட்ராவில்ஒரு புதிய படம் உருவாக்குவதற்கான திரையை தோன்றசெய்தால் Layout,controls, Dimension Lines ஆகிய மூன்றடுக்குகள் இயல்புநிலையில் திரையில் தோன்றிஇருக்கும்
படம்-75-7
இதற்குமேலும் அடுக்குகள் தேவையெனில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Insert=> Layer=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. உடன் insert layerஎன்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் அதில் visible ,printable,lockedஆகிய பண்பியல்புகளை நாம் விரும்பியவாறு அமைத்திடுக. பின்னர் Layerஎன்ற தாவியின்மீது இடம்சுட்டியைவைத்து சூழ்நிலைபட்டியை தோன்றிடச்செய்க.அதில் delete,rename,modifyஎன்பன போன்ற கட்டளைகளை நாம்விரும்பியவாறு செயற்படுத்தி கொள்க
ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவிலும் இம்ப்பிரஸின் படவில்லைகளான Slide 1, Slide 2போன்று ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களை உருவாக்கி அவைகளுக்கு தனித்தனியான பெயர்வழங்கமுடியும் இந்த வரைபடங்களின் பக்கங்களை ட்ரா திரையின் இடதுபுற பலகத்தில் (படம்-75-8)இம்ப்பிரஸின் படவில்லைகள் போன்றே சிறுசிறு அளவுடையதாக காண்பிக்கும்
படம்-75-8
புதிய பக்கங்களை உருவாக்குவது இருக்கும் வரைபடத்தின் பக்கத்திற்கு பெயரினை மாற்றியமைப்பது நீக்கம் செய்வது போன்ற செயல்களை இதில் சூழ்நிலை பட்டியை தோன்றசெய்தபின் அதிலுள்ள கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக செயல்படுத்திகொள்ளமுடியும்
அவ்வாறே ஒரு வரைபடத்தின் இந்த பக்கங்களின் பின்புல தோற்றத்தை view=> master=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையின் மூலம் அமைத்திடமுடியும்
மேலும் format => page =>background=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் திரையின் மூலம் வரைபடத்தின் இந்த பக்கங்களின் பின்புல தோற்றத்தை மாற்றிஅமைத்திடமுடியும்
படம்-75-9
அவ்வாறே இந்த வரைபடத்தின்மீது இடம்சுட்டியைவைத்து ஒரு சூழ்நிலை பட்டியை தோன்றச் செய்து அதில் Page=> slide design=>என்றவாறு செயற்படுத்தியவுடன் தோன்றிடும் slide design என்ற(படம்-75-9) உரையாடல் பெட்டியின்வாயிலாக ஒருவரைபடத்தின் பின்புலகாட்சியை ஒதுக்கீடுசெய்தல் நிருவகித்தல் போன்ற செயல்களை செய்திடமுடியும் மேலும் இந்தslide design என்ற உரையாடல் பெட்டியில் உள்ள Load என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடிடும் Load slide design என்ற உரையாடல் பெட்டியின் திரையில் தயார்நிலையிலுள்ள வடிவமைப்பை தெரிவுசெய்து உள்ளிணைத்துகொள்ளமுடியும்
ஒரு படத்திலுள்ள குறிப்பிட்ட உறுப்பு படத்தினை ஒன்றிற்கு மேற்பட்டதாக அடுக்குபோன்று உருவாகுவதற்காக குறிப்பிட்ட உருவபடத்தினை தெரிவுசெய்து கொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit =>duplicate=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Duplicate என்ற உரையாடல்(படம்-75-10) பெட்டியில் number of copies என்பதில் எத்தனை எண்ணிக்கை வேண்டுமென எண்ணிக்கையை அமைத்தபின் மற்ற விவரங்களை தேவையானவாறு அமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-75-10
அவ்வாறே ஒருவரைபடத்தின் இரு உருவங்களை ஒன்றின்மீது மற்றொன்றை அடுக்கியவாறு காண்பிக்கவும் அவ்வாறு அடுக்கியவாறு காண்பிக்கும்போது எதுமுன்புறம் எதுபின்புறம் என அமைத்திடவும் cross fading என்ற வசதி பயன்படுகின்றது இதனை செயற்படுத்திடுவதற்காக இவ்வாறு அடுக்கிடவிரும்பும்இரு படத்தினை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit =>cross-fading=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் cross fading என்ற (படம்-75-11)உரையாடல் பெட்டியில் increments என்பதில் எத்தனை வேண்டுமென எண்ணிக்கையை அமைத்துகொண்டு மற்ற விவரங்களை தேவையானவாறு அமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-75-11
No comments:
Post a Comment