Monday, March 19, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -62- ஒரு அறிமுகம்


   ஓப்பன் ஆஃபிஸின் ட்ரா (படம்-62-1)என்பது வெக்டார் வரைகலையின் ஒரு வரைதல் கருவியாகும்  இது கட்டவரைகலையின் ஒரு சில செயல்களைகூட செயல் படுத்திடும் தன்மை வாய்ந்ததாக உள்ளது இதன் உதவியால் ஏராளமான வகையில் வரைகலை உருவபடத்தை மிகவிரைவாக உருவாக்கிடமுடியும்  கோடு, வட்டம் ,பலகோணம்  என்பன போன்ற பல்வேறு படங்களை இதில் உருவாக்கி சேமித்திட முடியும் இது ஒப்பன் ஆஃபிஸின் ஒருங்கிணைந்த ஒரு பயன்பாடாக இருக்கின்றது அதனால்  ரைட்டரிலும் கால்க்கிலும் இம்பிரஸிலும்  படங்களை வரைபடங்களை  நகல் எடுத்து ஒட்டுவதன்மூலம் உள்பொதிவதையும் அல்லது இணைப்பதையும் எளிதான செயலாக்குகின்றது
  படம்-62-1
இந்த ட்ரா திரையின் மத்தியில் செவ்வகம்போன்ற (படம்-62-1)பெட்டியே  படம் வரைவதற்கான பணிபுரியும்  இடமாகும் (Workspace) இடதுபுற பக்கங்களின் பலகத்தில் (pages pane) நாம் வரையும் படம்பிரதிபலிக்கும் இதனை மேலே கட்டளை பட்டை யிலுள்ளView => Page Pane=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் திரையில் தோன்றிடுமாறு செய்யலாம் அதன்மூலம் ஒரு படத்தின் தோற்றத்தை அறிந்து அதில் மேலும் நாம் விரும்பும் மாறுதல்களை பணியிடத்தில்  செய்து கொள்ளலாம்  ஒரு வரைபடத்தை பலபக்கங்களாக மிகமுக்கியமாக  இம்ப்பிஸின் படவில்லைக்கு ஏற்றவாறு பிரித்து கொள்ளலாம் அதிகபட்சம் ஒரு வரைபடத்தின்  பக்கத்தை 300 சென்டிமீட்டர் வரை அமைக்கலாம்
 படம்-62-2
   இந்த பணியிடத்திரையின் மேல்பகுதியிலும் இடதுபுறபகுதியிலும் அளவீட்டு பட்டையுள்ளன (படம்-62-2)இதனை மேலே கட்டளை பட்டையிலுள்ளView => Ruler => என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் திரையில்தோன்றிடுமாறு செய்யலாம் இந்த Rulerன்  உதவியால்  ஒரு படத்தின் அளவு ,அதன் அமைவிடம் ஆகியவற்றை நிர்ணையம் செய்யலாம்
 படம்-62-3
இந்த Rulerன் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியை சொடுக்கியவுடன் (படம்-62-3) தோன்றிடும் குறுக்குவழிபட்டியிலுள்ள தேவையான அளவீடுகளை நாம் விரும்பிய வாறு தெரிவுசெய்து மாற்றியமைத்துகொள்ளலாம்   
 படம்-62-4
இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -ன் திரையினுடைய கீழ்பகுதியில் நிலைபட்டை (stats bar) உள்ளது அதன்தோற்றம் படம்-62-4இல் உள்ளவாறு இருக்கும் 
 இதிலுள்ள informationஎன்ற புலத்தில் தற்போது என்ன செயல் நடைபெறுகின்றது என காண்பிக்கும்
positionஎன்ற புலம்  தற்போது படம் தெரிவுசெய்யபட்டு பதிப்பிக்கும் செயல் நடைபெறுகின்றதாவென   காண்பிக்கும் 
(*)என்ற புலம் மாறுதல் செய்யபட்ட து சேமிக்கப்பட்டதா எனற செய்தியை காணபிக்கும்
Slideஎன்ற புலம்  நடப்பு படத்தின் எண்களை காண்பிக்கின்றது
Zoom என்ற புலத்திலுள்ள நகர்வியை நகர்த்தி சென்று திரையிலுள்ள படத்தனுடைய தோற்ற அளவை மாற்றியமைத்திடலாம்
 மேலே கட்டளை பட்டையிலுள்ளView =>Toolbars=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் Toolbars என்பதை திரையில்தோன்றிடுமாறு செய்து அதிலுள்ள படம் வரைவதற்கான கருவிகளை பயன்படுத்திகொள்ளலாம்
  படம்-62-5
 Line and Filling toolbarஎன்ற (படம்-62-5)கருவிபட்டையை கொண்டு  படங்களில் தேவையான மாறுதல்களை செய்யமுடியும்
  படம்-62-6
 Drawing toolbarஎன்ற மிகமுக்கியமான (படம்-62-6) கருவிபட்டையை கொண்டு  புதிய ஜியாமெட்ரிக் படங்களையும் வரைபடங்களையும் உருவாக்குதல் உருவாக்கியதில்  தேவையான மாறுதல்களை செய்தல் ஆகிய செயல்களை செய்யமுடியும்
  படம்-62-7
படத்திற்கான வண்ணங்களை நிரப்புவதற்கு Color Bar என்பது (படம்-62-7) பயன்படுகின்றது இதனை  மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Toolbars =>Color Bar=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்மூலம் இதனைசெயலுக்கு கொண்டுவரலாம்
  படம்-62-8
  மேலே கட்டளை பட்டையிலுள்ள Format =>Arear=>என்றவாறு (படம்-62-8) கட்டளைகளை செயற்படுத்துவதன்மூலம்  அல்லது Line and Filling toolbarஎன்ற (படம்-62-5) கருவிபட்டையிலுள்ள வாளிபோன்ற உருவை செயல் படுத்துவதன் வாயிலாக தேவையான வண்ணத்தை வரைபடத்தில் நிரப்பலாம் 
 படம்-62-9
 வரைபடத்தை  வரைவதற்கான பல்வேறு உதவிகளை Optionsbar என்ற வாய்ப்பு கருவிபெட்டியின் (படம்-62-9)மூலம்  பெறமுடியும் மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Toolbars =>Options=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்மூலம் இதனை செயலுக்கு கொண்டுவரலாம் 

படம்-62-10
இதிலுள்ள உருவங்கள் அதன் செயல் படம்-62-10 -ல் கொடுக்கபட்டுள்ளன  
 ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவிலுள்ள கருவிபட்டைகளை தேவையான இடத்தில் வைத்து இணைக்கலாம் அல்லது மிதக்குமாறும் நகருமாறும் (Floating and moving toolbars) (படம்-62-11)செய்யலாம் பழையபடி  மிதக்காமல் நகராமல் செய்யலாம்  இந்த கருவி பட்டையிலுள்ள அம்புக்குறியில்மறைந்துள்ள கருவிகளை அந்த அம்புக் குறியை சொடுக்கினால் பெறமுடியும்   இவைகளின் வலதுபுற ஓரமாக இருக்கும் Visible Buttons என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து கூடுதலான கருவிகளை அல்லது கட்டளைகளை செயற்படுத்துவதற்காக பயன்படுத்திகொள்ளமுடியும்  
படம்-62-11

Monday, March 12, 2012

ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்-61- வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றி யமைத்தல்


 வாடிக்கையாளர் ஒருவர் தாம் விரும்பியவாறு ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் கோப்பில் மாறுதல் செய்து அமைத்து கொள்ளலாம் பொதுவாக ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் இவ்வாறான மாறுதல்களை செயல்படுத்துவதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => Options =>என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக  

 
படம்-61-1
   உடன் விரியும் options-Open Office.org என்ற திரையின் இடதுபுற பலகத்தில்  Open Office.org என்பதற்கருகிலுள்ள + கூட்டல் குறியை தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும் கட்டளைகள் ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து பயன்பாடுகளிலும் பயன் படக்கூடிய பொதுவான கட்டளைகளாகும் அவைகளுள் Appearance  என்ற கட்டளை யை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும்  options-Open Office.org-Appearance  என்ற (படம்-61-1 )திரையில் Drawing/Presentation என்ற  பகுதியை தேடிபிடித்து அதில் grid என்பதற்கு அருகிலுள்ள கீழிறங்கு பட்டியலின்மூலம் தேவையான வண்ணங்க ளின் வாய்ப்புகளை தெரிவுசெய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 பின்னர் இடதுபுறபலகத்தில்  Open Office.org Impress என்பதற்கருகிலுள்ள +  கூட்டல் குறியை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் கட்டளைகள் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில் மட்டும் பயன்படக்கூடிய  கட்டளைகளாகும் அவைகளுள் General  என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும்  options-Open Office.org-Impress- general  என்ற (படம்-61-2 )திரையில்
       படம்-61-2
 Text objects என்ற பகுதியில்உள்ள Allow quick editing என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது உடனடியாக உரைபதிப்பு செயலுக்கு மாறிகொள்வதற்கு உதவுகின்றது only text area selectable என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது  தெரிவுசெய்யபட்ட உரையை உள்ளீடு செய்யவேண்டிய பகுதியில் மட்டும் உரைபதிப்புசெயலை  அனுமதிக்கின்றது  இந்த இரு செயல்களையும் மேலே கருவிபட்டியிலுள்ள இவைகளுக்கான குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம்  செயல்படுத்திட முடியும்
   New document என்ற பகுதியில்உள்ள  Start with Wizard என்ற தேர்வுசெய் பெட்டியின் வாய்ப்பானது ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் இயங்கதொடங்கும் போது புதிய இம்பிரஸ் கோப்பினை உருவாக்குவதற்கான வழிகாட்டியை  தோன்ற செய்கின்றது  இதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள File => new=> presentaion=> என்றவாறு  கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் புதிய இம்ப்பிரஸ் கோப்பினை உருவாக்கமுடியும்
   Settings என்ற பகுதியில்உள்ள use background cashe என்ற வாய்ப்பானது  புதிய படவில்லையை உருவாக்கியவுடன் அதன்பின்புலத்தை தானாக உருவாக்கி கொள்கின்றது இதனை  தெரிவுசெய்யாது விடுத்தால்  ஒவ்வொரு முறை புதிய படவில்லை உருவாக்கும் போதும் நாமே அதன்பின்புலத்தை உருவாக்க வேண்டி யிருக்கும். copy when moving  objects always moveable என்ற வாய்ப்பு படவில்லை யின் படங்களை நகர்த்துதல் ,அளவை மாற்றியமைத்தல் ,சுழற்றியமைத்தல் ஆகிய செயலின்போது  தானாகவே நகலெடுத்து கொள்கின்றது  சரியாக அமையவில்லை எனும்போது ctrl என்ற விசையை அழுத்தி பழைய நிலைக்கு மாற்றியமைத்து கொள்ளலாம். unit of measurement என்பது தேவையான அளவை அமைப்பதற்கும் tab stop  என்பது தேவையான இடத்தில் காலி இடைவெளி விடுவதற்கும் பயன்படு கின்றது
  Start presentaion என்ற பகுதியில்உள்ள always with current page என்ற வாய்ப்பானது படவில்லையை உருவாக்கி முடித்தவுடன் அப்படவில்லையானது   திரையில் எவ்வாறு தோன்றும் என முன்னோட்டம் பார்ப்பதற்காக முயலும்போது நடப்பு படவில்லையிலிருந்து திரைகாட்சியை காண்பிப்பதற்கு உதவுகின்றது
  Compatability  என்ற பகுதியில்உள்ள  வாய்ப்புகள் நடப்பு  கோப்பில் மட்டும் அமைப்பதற்கு பயன்படுகின்றன Use printer metrics for document formattingஎன்ற வாய்ப்பானது கணினியுடன் இணைக்கபட்டுள்ள அச்சுபொறிக்கு ஏற்ப ஒத்திசைவு செய்து  திரையில் காட்சிகளை பிரதிபலிக்கசெய்கின்றது. Add spacing between paragraphs (in current document)என்ற வாய்ப்பானது உரையின் பத்திகளுக்கிடைய  இடைவெளி விடுவதற்கு உதவுகின்றது
 இதன் பின்னர் இடதுபுற பலகத்தின் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில் மட்டும் பயன்படக்கூடிய  கட்டளைகளுள் view  என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும்  options-Open Office.org-Impress- view  என்ற (படம்-61-3 )திரையில்
படம்-61-3
  Display  என்ற பகுதியில்உள்ள Rulers visible  என்ற வாய்ப்பானது திரையின் இடதுபுறத்திலும் மேல்பகுதியிலும் அளவுகோளை பிரதிபலிக்கசெய்கின்றது. Guides when movingஎன்ற வாய்ப்பானது  குறிப்பிட்ட பெட்டிக்கு வெளியே பணியிடம் முழுவதும் குறிப்பிட்ட பொருளை நகர்த்திடும் போது நமக்கு வழிகாட்டிட பயன்படுகின்றது  இதற்கு பதிலாக மேலே கருவிபட்டையிலுள்ள இதற்கான   குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் செயல்படுத்திடமுடியும்
All control points in Bézier editorஎன்ற வாய்ப்பானது  தெரிவுசெய்யபட்ட Bézier புள்ளியை பிரதிபலிக்க செய்கின்றது Contour of each individual objectஎன்ற வாய்ப்பானது தெரிவுசெய்யபட்ட பொருளின் Contour  கோட்டினை பிரதிபலிக்க செய்கின்றது
 பிறகு இடதுபுற பலகத்தின் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில் மட்டும் பயன்படக்கூடிய  கட்டளைகளுள் grid  என்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்கிய பின் விரியும்  options-Open Office.org-Impress- grid  என்ற (படம்-61-4 )திரையில்


படம்-61-4
   grid  என்ற பகுதியில்உள்ள snap to grid என்ற வாய்ப்பானது நொடிப்பு செய்யவும் visible grid என்ற வாய்ப்பானது திரையில் காண்பிக்கவும் பயன்படுகின்றது
  resolution என்ற பகுதியில்உள்ள synchronize என்ற வாய்ப்பானது திரைத்துல்லியத்தை ஒத்திசைவுசெய்ய பயன்படுகின்றது
  snap என்ற பகுதியில்உள்ள வாய்புகளை நமக்கு தேவையானவாறு பயன்படுத்தி கொள்ளலாம் அதற்கு பதிலாக இந்த செயல்களுக்கான Snap to Object Points , Snap to Object Border ,Snap to Page  Margins,Snap to Guides என்பது போன்றவைகளில்  தேவையான குறும்படத்தை மட்டும்  கருவிபட்டியிலிருந்து தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் செயல்படுத்தி கொள்ளலாம்
வாடிக்கையாளர் விரும்பியவாறு  கட்டளை பட்டையில்  மாறுதல் செய்வதற்கு
 இதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => customization => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்- 61-5 ல் உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்  அதில் menu என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக



படம்- 61-5
  உடன் விரியும் menu என்ற தாவியின் திரையில்  புதிய கட்டளை பட்டியலை சேர்ப்பதற்கு new என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  


 படம்- 61-6
  உடன் new menu  என்ற (படம்- 61-6)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் menu name என்பதில் நாம் உருவாக்கி சேர்க்க போகும் கட்டளைக்கு பெயர் ஒன்றை உள்ளீடு செய்க இந்த கட்டளையானது  எங்கிருக்கவேண்டும்  என்பதற்காக menu position என்பதன் கீழுள்ள வாய்ப்பில் தேவையானதை தெரிவுசெய்து கொண்டு ok என்ற பொத்தானையும் customizeஎன்ற உரையாடல் பெட்டியிலும் ok என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக 
  நடப்பு கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளை இடம் மாற்றம் செய்ய customizeஎன்ற உரையாடல் பெட்டியிலுள்ள move என்ற கட்டளை பயன்படுகின்றது 
 நடப்பிலிருக்கும் பட்டியில் புதிய கட்டளையை சேர்த்திட customizeஎன்ற உரையாடல் பெட்டியில் உள்ள Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்- 61-7 ல் category என்பதன் கீழ் தேவையான வகையையும் commands என்பதில் தேவையான கட்டளையையும் தெரிவுசெய்துகொண்டு add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   மேலும் இவ்வாறு தேவையான கட்டளைகளையும் வகைகளையும் தெரிவுசெய்யும்போது ஒவ்வொருமுறையும் add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  இறுதியாக close என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக. 
படம்- 61-7
 வாடிக்கையாளர் விரும்பியவாறு  கருவி  பட்டையில்  மாறுதல் செய்வதற்கு
அவ்வாறே கருவிபட்டையையும் வாடிக்கையாளர் விரும்பியவாறு மாறுதல் முடியும் அதற்காக  கருவிபட்டையின் முடிவிலிருக்கும் அம்புக்குறியை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் பட்டையில் Customize என்பதை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது  மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்View => Toolbars => Customize => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக  அல்லது  மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => Customize => Toolbars tab => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக  உடன் படம்- 61-8 ல் உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று Toolbars என்ற  தாவியின் திரையுடன் தோன்றிடும்

 
படம்- 61-8
இதில் மேலே கட்டளை பட்டையில் கூறியவாறு  செயற்படுத்தி கொள்க.
மிகமுக்கியமாக  குறும்படங்களுடன் கூடிய பொத்தான்களே இதிலுள்ளன அதனால்        அவ்வாறான குறும்படங்களுடன் கூடிய பொத்தான்களை உருவாக்கிட அல்லது  அவைகளை மாறுதல் செய்திடுவதற்காக Modify => Change icon=>என்றவாறு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குக
படம்- 61-9
உடன் தோன்றிடும் Change iconஎன்ற (படம்- 61-9) உரையாடல் பெட்டியில் தேவையான உருவத்தை தெரிவுசெய்து  okஎன்ற பொத்தானை சொடுக்குவதன்மூலம் ஒதுக்கீடு செய்து கொள்க. புதியதாக உருவாக்குவதற்கு எனில் import என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
வாடிக்கையாளர் விரும்பியவாறு விசைப்பலகையின் விசைகளை ஒதுக்கீடு செய்வதற்கு
  அதற்காக  மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => customization => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்- 61-10 ல் உள்ளவாறு customizeஎன்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்  அதில் keyboard என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
   படம்- 61-10
உடன் விரியும் keyboard என்ற தாவியின் திரையில் impress என்ற வாய்ப்பின் வானொலி பொத்தானை தெரிவுசெய்து கொள்க.  பின்னர் கீழே functions என்ற பகுதியிலுள்ள category என்பதன்கீழ் insertஎன்பதை தெரிவுசெய்து கொண்டு functions  என்பதன் கீழுள்ள duplicate slides என்பதை  தெரிவுசெய்க உடன்keys  என்பதன் கீழ்insert  என்பது சேர்ந்திருக்கும்
   இந்நிலையில் மேலே shortcutkeys என்ற பகுதியின் கீழ்insert duplicate  slides என்பதை தெரிவுசெய்து கொண்டு முதலில் modify என்ற பொத்தானையும்  பின்னர் ok  என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக .
   இவ்வாறே நாம் விரும்பியவாறு மற்ற விசைகளுக்கும் குறுக்கு வழி கட்டளைகளை ஒதுக்கீடு செய்து சேமித்துகொள்க. நடப்பிலிருக்கும் குறுக்கு வழி விசையை மாற்றியமைத்திடload என்ற பொத்தானும்  மறுஅமைவுசெய்திட reset என்ற பொத்தானும் பயன்படுகின்றன.
 ஓப்பன் ஆஃபிஸின் விரிவாக்க கட்டளைகளை பயன்படுத்தி மேலும் கூடுதலான விரிவாக்கத்தை http://extensions.services.openoffice.org/.என்ற இணையபக்கத்தில் தேடிபிடித்து பதிவிறக்கம்செய்து  கொள்க பின்னர் மேலே கட்டளை பட்டையிலுள்ள  கட்டளைகளில்Tools => Extension Manager => என்றவாறு  கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன் படம்- 61-11 ல் உள்ளவாறு Extension Manager என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதில் தேவையான விரிவாக்கத்தை தெரிவுசெய்து கொண்டு  Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  ஓப்பன் ஆஃபிஸில் நிறுவிகொண்டு கூடுதல் பயன் பெறுக 


படம்- 61-11