Monday, September 17, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -74-நிறுவனகட்டமைப்பின் படம் மற்றும் தொடர்நிலைவரைபடம் வரைதல்



 1 நிறுவனகட்டமைப்பின் படம் வரைதல்(Drawing an organization chart)
ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில்  நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதற்காகவென  தனியாக கட்டளை பட்டை இல்லை யென்றாலும்  இதிலுள்ள கனச்செவ்வகம் இணைப்பான்கள்(connectors) ஆகிவற்றை கொண்டு மிக எளிதாக நம்மால்  ஒரு நிறுவனகட்டமைப்பின் படத்தை வரையமுடியும் பின்னர் வண்ணத்தின் பிரதிபலிப்பு அளவைகொண்டு இந்நிறுவனகட்டமைப்பின் படிநிலையை மேலிருந்து கீழாக காண்பிக்கமுடியும் (படம்-74-5)  இந்த வண்ணபிரதிபலிப்பானது உரைக்கான வண்ணமும் பின்புலவண்ணமும்  எதிர்வினையாக  ஒன்றுக்கொன்று பிரதிபலிப்பின் தன்மையை பாதிக்காதவாறும் இதிலுள்ள எழுத்துகளை நம்மால் எளிதாக படித்தறியக் கூடியவாறும்  தெரிவுசெய்து கொள்வது நல்லது என பரிந்துரைக்க படுகின்றது  
 இந்த நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதற்கு முன்பு முதலில் ஒருபடம் வரைவதற்கான அமைவு பக்கம் (setup page)அல்லது வரைவு பக்கத்தை  பலஅடுக்கு நிறுவனகட்டமைப்பு ,பொறுப்பு வழிகள் ,அதனதன்  பெட்டிகள் ஆகியவற்றை படம் வரைவதற்காக பயன்படுத்தி கொள்வதற்கான வரியை ஒடித்தலை(line snap) (படம்-74-1) கொண்டு தயார்செய்துகொள்ள வேண்டும்
படம்-74-1
ஒட்டுமொத்த படத்தின் அளவானது அதன் உள்ளே வரையப்படும் பெட்டிகளின் எண்ணிக்கை, அவைகளின் அளவு ஆகியவற்றிற்கு ஏற்ப அமைத்து கொள்க. உள்ளமையும் பெட்டிகளின் மிகச்சரியான அளவு அவைகளின் அமைவிடம் ஆகியவற்றை நாம் பின்னர் தீர்மாணித்து கொள்வோம். இந்நிறுவனகட்டமைப்பு படத்தின் படிநிலையின் ஒருநிலையில் ஒரு பெட்டியை மட்டும் வரைவது எளிதான செயலாகும் பின்னர் அதேநிலையில் ஒன்றிற்கு மேற்பட்ட பெட்டியை நகலெடுத்து ஒட்டுதல்    தேவையான இடத்தில் நகர்த்தி அமைத்தல் போன்ற செயல்களை கொண்டு நம்மால் மேலும் கூடுதலான பெட்டிகளை எளிதாக வரைந்து கொள்ளமுடியும்
 படம்-74-2
 அவ்வாறு கூடுதலான பெட்டிகளை வரைவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெட்டிகளை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit => Duplicate=> என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துக உடன் தோன்றிடும் Duplicate என்ற (படம்-74-2) உரையாடல் பெட்டியிலுள்ள Number of copies என்பதன் எண்ணிக்கையை கொண்டு எத்தனை பெட்டிகள் அமைக்கவேண்டும் என்றும், X ,y அச்சுகளின் அளவுகள் அதன் இடஅமைவுகளையும்  நீளஅகல அளவு அப்பெட்டிகளின் அளவையும் தீர்மாணிக்கின்றன அவைகளை நாம்விரும்பியவாறு அமைத்து ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் படம்-74-3-ல் உள்ளவாறு அமையும் 
படம்-74-3
பிறகு மேலே கட்டளை பட்டையிலுள்ளoptionsஎன்ற  உரைபெட்டி வரைவதற்கான கருவியை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குவதன் வாயிலாக அல்லது விசைப்பலகையின் செயலி விசைகளில் உள்ள F2  என்ற செயலி விசையை அழுத்துவதன்மூலம் இந்த பெட்டிகளில் உரைபெட்டியை உருவாகுமாறுசெய்து அந்நிலைப்பெட்டிகளின் பெயர்களை தட்டச்சு செய்துகொள்க   பின்னர் நாம் தட்டச்சு செய்த உரையின் அளவிற்கேற்ப பெட்டியின் அளவை சரிசெய்துகொள்க அல்லது பெட்டியின் அளவிற்கேற்ப சுட்டியின் துனையுடன் அவ்வுரையை சரிசெய்து கொண்டு இவ்வெழுத்துகளுக்கான சரியான வண்ணத்தையும் சரிசெய்து அமைத்து கொள்க இந்த உரைபெட்டிக்கு பதிலாக இயக்கநேரஉரைச்சட்டங்கள்(dynamic text frames) (படம்-74-4)தானாகவே வரியானதுமடங்கி அமைதல் ,சுற்றெல்லை, பின்புலவண்ணம் ஆகியவற்றை கொண்டு உரையை தட்டச்சு செய்து அமைத்துகொள்வதற்காக பயன்படுத்தி கொள்க.

படம்-74-4
பின்  மேலே கருவிபட்டையிலுள்ள இணைப்பான்கள்(connectors)என்ற கருவியை கொண்டு இந்த பெட்டிகளை இணைத்து ஒருமுழுமையான நிறுவனகட்டமைப்பின் படத்தினை(படம்-74-5) அமைத்துகொள்க

படம்-74-5
தொடர்நிலைவரைபடம் வரைதல்(Drawing a flow diagram)
இந்த தொடர்நிலைவரைபடம் வரைவதற்காக மேலே  முக்கிய கருவிபட்டையிலுள்ள இதற்கான flowchart என்ற உருவகருவியை தெரிவசெய்து  சொடுக்கியவுடன்  இந்த பணிக்காக மட்டுமென தனியான கருவிபட்டை யொன்று திரையில் தோன்றிவிடும்  பின் இதிலுள்ள தேவையான குறியீடுள்ள கருவிகளை தெரிவுசெய்து சொடுக்கி ஒரு நிறுவனகட்டமைப்பின் படம் வரைவதை போன்றே  இதனை நம்மால் சுலபமாக  வரைந்து கொள்ளமுடியும்


படம்-74-6
 பின் மாறுதல் செய்யவிரும்பும் குறிப்பிட்ட பெட்டியில் இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளைபட்டையிலுள்ள  modify=>alignment=> centered=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக சரிசெய்து அமைத்து கொள்க
   அதன்பின் அவைகளில் உரை ,அவைகளுக்கான  வண்ணம் ஆகியவற்றை உள்ளீடு செய்து கொள்க அவ்வாறே இணைப்பான்களுக்கு கூட உரை ,அவைகளுக்கான  வண்ணம் ஆகியவற்றை உள்ளீடு செய்து கொள்ளமுடியும் 
 இந்த தொடர்நிலைவரைபடத்தில் பெட்டிகளை இணைப்பதற்காக இணைப்பு புள்ளி(Glue points) மற்றும் இணைப்பான்கள் (connectors) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளமுடியும்  
 இதில்  இணைப்பான்கள்(connectors)என்பது  கோடு அல்லது அம்புக்குறி கொண்டு இருபெட்டிகளை இணைப்பதாகும்   கருவிபட்டையிலுள்ள இதற்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் connectors என்ற கருவிபட்டை திரையில் தோன்றிடும் அதிலுள்ள தேவையான உருவகருவியை தெரிவுசெய்து சொடுக்கி இருபெட்டிகளுக்கிடையே தேவையான இணைப்புகளை உருவாக்கிகொள்க 
அவ்வாறே இணைப்பு புள்ளி(Glue points)க்கான உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்  இணைப்பு புள்ளி (Glue points)என்ற கருவிபட்டை திரையில் தோன்றிடும் அதிலுள்ள தேவையான உருவகருவியை  தெரிவுசெய்து சொடுக்கி இருபெட்டிகளுக்கிடையே தேவையான  இணைப்புகளை உருவாக்கிகொள்க தேவையெனில் மேலே கட்டளை பட்டையிலுள்ள  Edit => Glue Points=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக அவ்விணைப்பை  சரிசெய்து அமைத்து கொள்க 
 இணைப்பான்களில்(connectors) எழுத்துகளை உள்ளீடுசெய்வதற்காக அவ்விணைப்பான்களை  இடம்சுட்டியால் தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் அவ்விணைப்பானிற்குள் இடம்சுட்டி சென்றுபிரதிபலிக்கும் அதனுடன் கூடவே உரைவடிவமைப்பு கருவிபட்டையானது(text formatting tool bar)  திரையில் பிரதிபலிக்கும்
 தேவையான உரையை உள்ளீடுசெய்துபின் அவ்வுரையை தெரிவுசெய்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக  அல்லது இணைப்பானை தெரிவுசெய்து சொடுக்கியபின் மேலே கட்டளைபட்டையிலுள்ள Format => Text=>என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Text என்ற உரையாடல் பெட்டியொன்று(படம்-74-7) திரையில் தோன்றிடும்

படம்-74-7
அதில் உரையை தேவையானவாறு மாறுதல்  செய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இந்த இணைப்புக்கோடானது வளைவாகவோ அல்லது சாய்வாகவோ இருந்தால்  அதற்குள் உரையை எவ்வாறு மிகச்சரியாக அமரச்செய்வது என இப்போது காண்போம்

படம்-74-8
இதற்காக முதலில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Customize=>என்றவாறுகட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Customize என்ற உரையாடல் பெட்டியொன்று(படம்-74-8) திரையில் தோன்றிடும் அதன் Tool bar என்ற தாவியின் திரையில்   Tool bar என்பதற்கருகில் இருக்கும்  கீழிறங்கு பட்டியில் இருந்து Drawing என்பதை தெரிவுசெய்துகொண்டு Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்   Add commands என்ற (படம்-74-8)உரையாடல் பெட்டியின் இடதுபுற பட்டியலிலிருந்து  Format  என்பதையும் பின்னர் வலதுபுற பட்டியலில் Fontwork என்பதையும் தெரிவுசெய்து கொண்டு   Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக   அதன்பின்னர்closeஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக
இந்தCustomize என்ற உரையாடல் பெட்டியில்  Toolbar உள்ளடக்கத்தின் கீழ் உள்ள பட்டியலிலிருந்து Fontwork என்ற உருவபொத்தானை பிடித்து இழுத்துசென்று தேவையான இடத்தில் விட்டிடுக அதன்பின் okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு  இணைப்பானில் உள்ளீடுசெய்த உரையை தெரிவுசெய்துகொண்டுFontwork என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்  Fontwork என்ற (படம்-74-9)உரையாடல் பெட்டியிலுள்ள  Rotateஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி இணைப்பு கோட்டின் சாய்விற்கு ஏற்ப எழுத்துகளை சுழற்றி சரிசெய்து அமைத்து கொள்க


படம்-74-9