3D Efects – Textures ஒரு
இழைமம்( Textures) என்பது பரவு வரைவியல்(raster
graph) ஆகும் இது ஒரு வரைபொருளிற்காக அவ்வரைபொருளின் பண்பியல்பாக
பயன்படுத்தி கொள்ளபடுகின்றது ஒவ்வொரு வரைபொருளின் முப்பரிமான காட்சியும் தன்னுடைய
சொந்த இழைமத்தை( Textures) கொண்டதாகும் ஒரு இருபரிமான வரைபொருளை பயன்படுத்துவதை போன்றே Format
=> Area => Bitmaps =>அல்லது வரைபொருளின்
மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின்
தோன்றிடும் சூழ்நிலை பட்டியில் Area => Bitmaps =>என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்தி ஒரு முப்பரிமான வரைபொருளிற்காக பரவு வரைவியலை ஒரு இழைமமாக அமைத்து பயன்படுத்தமுடியும்
உடன் தோன்றிடும்
3D Efects என்ற உரையாடல்
பெட்டியின் Textures என்ற தாவியின் பொத்தானை (நான்காவதாக
உள்ளது) தெரிவுசெய்து சொடுக்கி Textures திரையை
தோன்றசெய்க அதில் Typeஎன்பதற்கருகிலுள்ள கருப்பு வெள்ளை
அல்லது வண்ண பொத்தான்கள் ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்குக உடன்
அதற்கேற்ப செந்தர வண்ணம் (படத்தின் இடதுபுறம்a),Textures color(படத்தின் இடதுபுறம்b), Textures கருப்பு வெள்ளை (படத்தின் இடதுபுறம்c)
படம்-73-1 -ல் உள்ளவாறு
அமையும் அதில் light and
shadows இல்லாமல் (படத்தின்
வலதுபுறம்a) , light and shadows சேர்ந்தது
(படத்தின் வலதுபுறம்b) நாம்
தெரிவுசெய்வதற்கேற்ப அமைகின்றது
படம்-73-1
அதே 3D Efects – Textures என்ற உரையாடல் பெட்டியின் Projection
X அல்லது Y ஆகிய இரண்டிலும் உள்ள மும்மூன்று
பொத்தான்களை பயன்படுத்தி Textures என்ற
உருவின் இடஅமைவை சரிசெய்து அமைத்து கொள்க
இவைகளின் கலவைகளாக செயற்படுத்தி ஒரு Z அச்சில்
சுழலும் உருளையின் தோற்றம் எவ்வாறு அமையும் என படம்73-2-ல் காட்டபட்டுள்ளன
படம்-73-2
இதில் ஏற்படும் தவறுகளை சரிசெய்து வடிகட்டி அமைப்பதற்கு இதே3D Efects – Textures
என்ற உரையாடல் பெட்டியில் உள்ள filterஎன்ற
பொத்தான் பயன்படுகின்றது
3D Efects – Material
3D Efects என்ற உரையாடல்
பெட்டியின் Material என்ற தாவியின் பொத்தானை (ஐந்தாவதாக
உள்ளது) தெரிவுசெய்து சொடுக்கி Material என்ற திரையைபடம்-73-3
தோன்றசெய்க இது ஒரு பொருளிற்கான முப்பரிமான தோற்றத்தை அமைக்க
பயன்படுகின்றது படம்-73-3-ன் கீழ்பகுதியில் Metal, Gold, Chrome, Plastic and Woodஆகிய பொருட்களின் முப்பரிமானம் தோற்றமாகும்
படம்-73-3
3D Efects Material என்ற தாவியின் திரையில் Material என்பதன் கீழுள்ள மூன்றுவகை
வாய்ப்புகளையும் ,Specularஎன்பதன் கீழுள்ள இருவகை
வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஒரு பொருளிற்கான முப்பரிமான தோற்றத்தினை
நாம்விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்ளமுடியும்.
ஒரு
3D உருவிற்கான 3D அமைவு வரைபொருளை
கையாளுவதற்கு மாறாக வேறுவகையில் அதே 3D உருவை முப்பரிமான
காட்சிக்காக கையாளவேண்டியுள்ளது இந்த 3D உருவின் முப்பரிமான
காட்சியை கையாள3D Efects என்ற
உரையாடல் பெட்டி பயன்படாது அதற்கு பதிலாக 3D-Settingsஎன்ற(படம்-73-4) கருவிபட்டை பயன்படுகின்றது
படம்-73-4
இந்த கருவி பட்டையை பயன்படுத்தி ஒரு முப்பரிமான
உருவிற்கான extrusion
depth andperspective, lighting and material properties ஆகியவற்றை அமைத்திடமுடியும்
எடுத்துகாட்டு முதலில் ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவின் கருவிபட்டையிலுள்ள
T என்ற கருவியை பயன்படுத்திஏதேனும்
எழுத்துகளை தட்டச்சு செய்து கொள்க பின்னர் மேலே கட்டளை பட்டையிலுள்ள modify=>
convert=>To Bitmap => modify=> என்றும் convert=>To 3D Rotation object => என்றும்
கட்டளைகளை செயற்படுத்துக அதன்பின் இந்த வரைபொருளின்மீது இடம்சுட்டியைவைத்து
சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும்
சூழ்நிலைபட்டியில் 3D Effects என்ற கட்டளையை தெரிவுசெய்து
சொடுக்குக பின்னர் தோன்றிடும் 3D
Effects என்ற உரையாடல் பெட்டியின் ஐந்தாவதாக உள்ளMaterial என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி 3D Effects என்ற
உரையாடல் பெட்டியின்Material என்ற திரையை தோன்றசெய்து
தேவையானவாறு அதிலுள்ள பொத்தான்களை சொடுக்கி அமைத்துகொண்டு இறுதியாக இதே
உரையாடல் பெட்டியின் மேலே வலதுபுறமூலையில் உள்ளassign என்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் உருவாக்கிய முப்பரிமான எழுத்துருவானது
படம் -73-5-ல் உள்ளவாறு அமையும் .இவ்வாறே
மற்ற முப்பரிமான தோற்றங்களை அமைத்துகொள்க.
படம்-73-5
No comments:
Post a Comment