ஓப்பன் ஆஃபிஸ் திறமூல பயன்பாடானது கடந்த ஆண்டு ஆரக்கிள் நிறுவனம் கையகபடுத்தியதை அடுத்து இந்த பயன்பாடு பொதுமக்களுக்கு தொடர்ந்து இலவசமாக கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயப்பாட்டினால் அல்லும் பகலும் அயராது எந்தவித எதிர்பார்ப்புமின்றி பாடுபடும் தன்னார்வலர்களுள் ஒரு குழுவினர் லிபர் ஆஃபிஸ் என்ற அச்சுஅசல் ஓப்பன் ஆஃபிஸைபோன்ற தோற்றத்துடனும் அதே திறனுடனும் உடைய இலவச திறமூல பயன்பாட்டினை உருவாக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட்டுள்ளனர் இதனை www.libreoffice.org என்ற வலைதளத்திலிருந்த பதிவிறக்கம் செய்து பயன்படுத்திகொள்க.
கடந்த 48 தொடர்வரை எம்எஸ்வேர்டுக்கு இணையான ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் பற்றியும் எம்எஸ் எக்செல்லுக்கு இணையான ஓப்பன்ஆஃபிஸ் கால்க் பற்றியும் பார்த்து வந்தோம் தற்போது இந்த தொடரிலிருந்து எம்எஸ் பவர்பாயின்ட்டிற்கு இணையான ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸ் பற்றி பார்ப்போம்
இந்த இம்ப்பிரஸ் என்பது ஓப்பன் ஆஃபிஸினுடைய படவில்லை காட்சியின் பயன்பாடாகும் இதில் உரை ,பொட்டு(bullet) அல்லது எண்வரிசை, அட்டவணை வரைபடம்,படத்தொகுப்பு என்பனபோன்றவாறு எண்ணற்ற இதனுடைய உறுப்புகளை கொண்டு படவில்லை காட்சி உருவாக்கபடுகின்றது
ஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸின் முகப்பு சாளரத்தோற்றம் படம்-1-ல் உள்ளவாறு 1.படவில்லை பலகம்(Slide pane), 2.பணியிடம் (Workspace) ,3.செயல்பலகம் (Task pane) ஆகிய மூன்று பகுதிகளாக அமையும்.
இந்த சாளரத்தின் அந்தந்த பலகத்தின் மேல்பகுதியிலிருக்கும் Xஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குவதன் வாயிலாக 1,3 ஆகிய இரண்டு பலகத்தையும் திரையிலிருந்து நீக்கம் செய்து விடலாம் இதனை மீண்டும் திரையில் தோன்ற செய்வதற்கு View => Slide Pane அல்லது View =>Tasks Pane=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
1.படவில்லை பலகம்(Slide pane) இது நம்முடைய நிகழ்த்துதலின்(presentation) குறுஞ்சின்ன(thumbnail) படங்களின் தொகுப்பாகும் இந்த படவில்லையின் வரிசையை நாம் விரும்பியவாறு மாற்றியமைக்கலாம் இதில் தேவையானதை தெரிவுசெய்து சொடுக்கினால் அதன் உள்ளடக்கம் பணியிடபகுதியில் மாறுதல் செய்வதற்கு தயாராக இருக்கும். இந்த பலகத்தில் புதியதாக படவில்லையை சேர்க்கலாம், நீக்கம் செய்யலாம் மறைக்கலாம் ஒருவில்லையின் உள்ளடக்கத்தை நகலெடுத்து புதியவில்லைக்குள் ஒட்டலாம்
ஒரு குழுவான படவில்லைகளுள் ஏதேனுமொரு வில்லையை நாம் விரும்பும் வில்லைக்கு முன்பாகவோ அல்லது பின்போ இருந்திடுமாறு மாறுகை செய்திடலாம் படவில்லைகளின் வரிசையை மாற்றி யமைக்கலாம் படவில்லையின் வடிவமைப்பை மாற்றியமைக்கலாம் படவில்லைகளின் இடஅமைவை(lay out) மாற்றியமைக்கலாம்
பணியிடம் (Workspace) இதில் 1.தனித்தனி படவில்லையின் உரை ,படம் ,அசைவூட்டம் போன்றவற்றை அமைத்திடNormal, 2.படவில்லையின் பெயர் ,தலைப்பு , பொட்டு அல்லது எண்வரிசை ஆகியவற்றை அமைத்திடவும் படவில்லைகளின் வரிசையை மாற்றியமைத்திடவும்Outline, 3.ஒவ்வொரு படவில்லையை பற்றிய விளக்கம் தருவதற்கான குறிப்பினை எழுதிட (இதனை படவில்லை காட்சியின்போது திரையில் காண்பிக்காது) Notes, 4.ஒருபக்கத்தில் ஒன்றுமுதல் ஆறு படவில்லைகள் வரை அச்சிட்டு பெறவும் ஒரு படவில்லையை செயல்பலகத்திலிருந்து இழுத்துவந்து விடுவதன்மூலம் வரிசையை மாற்றியமைத்திடவும் Handout, 5.திரையின் ஒரே பக்கத்தில் இந்த கோப்பிலுள்ள அனைத்து படவில்லைகளைகளையும் குறுஞ்சின்னமாக காட்சியளித்தி டவும் தேவையானால் அதன்வரிசையை மாற்றியமைத்திடவும்Slide Sorter ஆகிய ஐந்து காட்சி பொத்தான்கள்(View buttons) அடங்கிய தாவித்திரை உள்ளன அதுமட்டுமல்லாத படவில்லையை வடிவமைத்து உருவாக்கிட ஏராளமான கருவிகள் அடங்கிய கருவிகளின் பட்டியும்(toolbar) இப்பகுதியில் உள்ளன View => Toolbars=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இந்த கருவிகளின் பட்டியை(toolbar) திரையில் பிரதிபலிக்கசெய்யலாம்
செயல்பலகம் (Task pane) இது 1.ஒருபடவில்லையின் பாவணையை அமைத்திட Master Pages 2.ஒரு படவில்லையின் இடஅமைவை அல்லது வெளிப்புற அமைவை அமைத்திட Layout 3.ஒரு படவில்லையில் அட்டவணையை உருவாக்கி வடிவமைத்திட Table Design 4.படவில்லையின் அசைவூட்டத்தை நாம்விரும்பும் வகையில் அமைத்திட Custom Animation 5.படவில்லையை மாறுகை செய்ய Slide Transition ஆகிய ஐந்து பகுதிகளை கொண்டுள்ளது
நிலைபட்டி (Status bar) இது பணியிடம் (Workspace) கீழ் பகுதியிலுள்ளது இதனுடைய உறுப்புகள் படம்-2-ல் காண்பிக்கபட்டுள்ளன. தற்போது ஒரு நிகழ்த்துதல் கோப்பின நிலையென்னவென இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்
வழிகாட்டி (Navigator)ஒரு நிகழ்த்துதல் கோப்பில் இடம் சுட்டியை கொண்டு சென்று(படம்-3 ) செயல்படுவதற்கு இது பயன்படுகின்றது
முதன்முதலில் ஒரு படவில்லையை உருவாக்குவதற்கு இதற்கான வித்தகரின்(wizard) வாயிலாகவே செயல்படுவது நல்லது இந்த சாளரத்தின் மேல்பகுதியிலிருக்கும் கருவிபட்டியிலுள்ள Newஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் கீழிறங்கு பட்டியிலிருந்து தேவையான வகையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளைபட்டியிலிருந்து File => New => Presentation=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
1.உடன்presentation wizard என்ற வித்தகர் திரையில் (படம்-4)தோன்றுவார் புதியவர்கள் அவருடைய வழிகாட்டுதலின்படி செயல்படுவது நல்லது என பரிந்துறைக்க படுகின்றது இந்த திரையில் type என்பதன் கீழுள்ளempty presentation என்பதை தெரிவுசெய்து next என்ற பொத்தானை சொடுக்குக
2.பின்னர் தோன்றிடும் presentation wizard-இன் இரண்டாவது திரையில் (படம்-5)Select a slide design என்பதன் கீழுள்ள கீழிறங்கு பட்டியிலிருந்து Presentation Backgrounds,
Presentations ஆகிய இரண்டுவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்துகொள்க இவை ஒவ்வொன்றையும் தெரிவுசெய்தவுடன் அதனோடு தொடர்புடைய வாய்ப்புகள் அதன் கீழ்பகுதியில் தோன்றிடும் இங்கு Presentation Backgrounds என்பதை தெரிவுசெய்துள்ளதால் <Original>, Black and white, Blue baorder, blue lines and gradients, Introducing a New Product, Recommendation of a Strategy. ஆகிய வாய்ப்புகள் திரையில் தோன்றும் இதில் <Original> என்ற வாய்ப்பை தெரிவுசெய்க உடன் அதற்கான மாதிரி படவில்லை இதனுடைய வலதுபுறத்தின் முன்காட்சிபலகத்தில் தோன்றிடும் பின்னர் Select an output medium. என்பதன் கீழுள்ள screen ( பெரும்பாலும் முதலில் திரையில் காண்பதற்கே விரும்புவார்கள்) என்பதை தெரிவுசெய்துnext என்ற பொத்தானை சொடுக்குக
3..பின்னர் தோன்றிடும் presentation wizard-இன் மூன்றாவது திரையில்(படம்-6) select a slide transition என்பதன் கீழுள்ள effect என்பதன் கீழிறங்கு பட்டியை திறந்து தேவையான வாய்ப்பையும் அவ்வாறே speed என்பதில் தேவையான வாய்ப்பையும் தெரிவு செய்து கொள்க select presentation type என்பதன்கீழுள்ள default என்பதை தெரிவு செய்து கொண்டு create என்ற பொத்தானை சொடுக்குக .உடன் புதிய நிகழ்த்துதலின் படவில்லை ஒன்று உருவாகிவிடும்
இவ்வாறு முதலில் உருவாக்கிய படவில்லை தலைப்பு படவில்லையாகவே இருக்கும் அதற்கடுத்ததாக மேலும் படவில்லைகளை உள்ளிணைத்திடுவதற்கு
படிமுறை1. Insert => Slide =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் மூலம் அல்லது நடப்பு படவில்லையின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை சொடுக்குக உடன்விரியும் பட்டியிலிருந்து Slide => New Slide => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது மேலே Presentation toolbarஎன்ற கருவிபட்டியிலுள்ள Slideஎன்ற குறும்படத்தை( படம்-7) தெரிவுசெய்து சொடுக்குக.
படிமுறை2 பின்னர் தோன்றிடும் திரையில் நம்முடைய தேவைக்கேற்ற பொருத்தமான படவில்லையின் அமைவை (layout slide)தெரிவுசெய்து கொள்க
படிமுறை3 அதன்பின்னர் தோன்றிடும் திரையில்slide master என்பதன் உதவியுடன் படவில்லையின் உறுப்புகளான உரை, படம் ,அட்டவணை,போன்றவற்றை வடிவமைத்து உருவாக்கி சேர்த்துகொள்க
இதே படிமுறைகளை பின்பற்றி எத்தனை படவில்லை நமக்குத்தேவையோஅதற்கேற்ற எண்ணிக்கையில் படவில்லைகளை உருவாக்கி சேர்த்துகொள்க
பின்னர் இந்த படவில்லையை மாறுதல் செய்வதற்கு slide master என்பதை பயன்படுத்தி கொள்க இந்தslide master தான் மற்ற படவில்லைகளின் ஆரம்ப புள்ளியாகும் எழுத்து , உரை, பின்புலபடங்கள் போன்றஅடிப்படை வடிவமைப்பை கொண்டு முன்கூட்டியே கட்டமைக்கபட்ட ஏறத்தாழ 28 வகையான slide master கள் ஓப்பன் ஆஃபிஸின் இம்ப்பிரஸில் உள்ளன.அவற்றுள் நமக்கத்தேவையான கட்டமைவை தெரிவுசெய்து நம்முடைய படவில்லைக்கு செயற்படுத்திகொள்க
இந்த slide master ஆனது presentation styles , graphic styles.ஆகிய இரண்டு அடிப்படை பாவணைகளை கொண்டது இதில் முதல்வகை பாவணையை மாறுதல் மட்டுமே செய்யமுடியும் இரண்டாவது வகையில் மாறுதலையும்செய்யலாம் புதியதையும் உருவாக்கி சேர்த்திடலாம் இந்த பாவணையானதுbackground, background objects , text placed on the slide. ஆகிய மூன்று உறுப்புகளை கொண்டது இந்த Text stylesஉறுப்பானது ஆகிய Notes, Outline 1 through Outline 9, Subtitle, Title.ஆகியதுனை உறுப்புகளை கொண்டதாகும்
No comments:
Post a Comment