செயல்பலகத்தின்(Tasks Pane) முதன்மை பக்கங்களின் பகுதியில்(Master Pages section) முன் கூட்டியே கட்டமைக்கபட்ட 28 முதன்மை படவில்லைகள் உள்ளன என முந்தைய தொடரிலேயே தெரிந்துகொண்டோம். . இந்த பகுதியானது Used in This Presentation, Recently Used, Available for Use என்றவாறு (படம்-50-1)மூன்று துனைப்பகுதிகளை கொண்டது.
படம்-50-1
இந்த துனைப்பகுதிகளின் பெயருக்குஅருகிலுள்ள + என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் இதில் மறைந்துள்ள படவில்லைகளின் குறுஞ்சின்னங்களை(thumbnails) திரையில் தோன்றுமாறு செய்யலாம் அவ்வாறே துனைப்பகுதிகளின் பெயருக்குஅருகிலுள்ள - என்ற குறியை தெரிவுசெய்து சொடுக்குவதன் மூலம் திரையில் இருக்கும் படவில்லைகளின் குறுஞ்சின்னங்களின் காட்சியை மறையச்செய்யலாம்.
Available for Use என்ற பகுதியில் தயார் நிலையிலுள்ள முதன்மைபடவில்லையின் படிமஅச்சுகளில்(templates) தேவையானதை அதே பெயரில் நாம் பயன் படுத்தி கொள்ளலாம் அல்லது நாமே நம்முடைய சொந்த முதன்மைபடவில்லையின்(slide master) படிமஅச்சை உருவாக்கி இந்த பட்டியலில் சேர்த்துகொள்ளலாம்.
புதிய முதன்மைபடவில்லையை (slide master )உருவாக்குதல்
முதன்மைபடவில்லையை மாறுதல் செய்வதன்மூலம் நம்முடைய புதிய படவில்லையை உருவாக்கலாம் அதற்காக மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து View => Master => Slide Master=> என்றவாறு(படம்-50-2) கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Master View என்ற கருவிபட்டியில் New Master என்ற(படம்-50-2) குறும்படத்தை (icon)தெரிவுசெய்து சொடுக்குக உடன் இரண்டாவது முதன்மைபடவில்லை திரையில் தோன்றிடும் அதில் நம்முடைய விருப்பத்திற்கேற்ப மாறுதல்களை செய்துகொண்டு இதற்கு வேறொரு பெயரை சூட்டிடுக அதற்காக சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன்விரியும் மேல்மீட்பு பட்டியில் Rename master என்ற கட்டளையை தெரிவுசெய்து இந்த படவில்லைக்கு வேறொரு பெயரை தட்டச்சு செய்திடுக. பின்னர் வழக்கமான படவில்லை பதிப்பித்தல் நிலைக்கு(edit mode) மாறிவிடுக.
படம்-50-2
முதன்மைபடவில்லைகளில் பாவணையை (master slides styles)உருவாக்குதல்
செயல்பலகத்தின்(Tasks Pane) முதன்மை பக்கங்களின் பகுதி(Master Pages section)யானது திரையில் தோன்றுகின்றதாவென உறுதி செய்துகொள்க.அதில் Available for Use என்ற துனைப்பகுதியின் பட்டியலில் ஒன்றை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் அதனுடைய பாவணை (style)யானது நாம் புதியதாக உருவாக்கிய அனைத்து படவில்லைகளுக்கும் செயற்படுத்தபடும் .அவ்வாறு வேண்டாம் ஒவ்வொரு படவில்லைக்கும் தனித்தனி பாவணையாக இருந்தால் நில்லது எனஎண்ணிடும் நிலையில் படவில்லை பலகத்தில் (Slide Pane) நாம் விரும்பும் படவில்லையை ஒவ்வொன்றாக தெரிவு செய்து கொள்க பிறகு செயல்பலகத்தின்(Tasks Pane) முதன்மை பலகத்தின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக பின்னர் விரியும் மேல்மீட்பு பட்டியில் Apply to Selected Slides என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக.
கூடுதல் முதன்மைபடவில்லையை மேலேற்றுதல்
படவில்லை தொகுதியில் ஒவ்வொன்றிற்கும் வித்தியாசமான வெவ்வேறு படிமஅச்சின் வடிவமைப்பை கொண்டுவருவதற்கு மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Format => Slide design=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது தேவையான படவில்லையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் தோன்றிடும் slide design என்ற(படம்-50-3) உரையாடல் பெட்டியில் Load என்ற பொத்தானை சொடுக்குக. பின்னர் விரியும் Load slide design என்ற (படம்-50-3)உரையாடல் பெட்டியில் தேவையான படிமஅச்சை தெரிவுசெய்துகொண்டு OK என்ற பொத்தானையும் ,slide design என்ற உரையாடல்பெட்டியில் OK என்ற பொத்தானையும் சொடுக்குக
படம்-50-3
முதன்மைபடவில்லையை மாறுதல்செய்தல்
1.மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து View => Master=> Slide Master=> என்றவாறுவாறு கட்டளைகளை செயற்படுத்துக இவ்வாறான செயல் முதன்மை படவில்லை யின் பண்பியல்புகளை பதிப்பிக்க(edit) அனுமதிக்கும்
2.பிறகு செயல்பலகத்தின்(Tasks Pane) முதன்மை பக்கங்கள்(Master Pages section) என்பதை தெரிவுசெய்து சொடுக்குக .இவ்வாறான செயல் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட முதன்மை படவில்லையை பதிப்பிக்க(edit) அனுமதிக்கும்
3.தயாராக இருக்கும் முதன்மைபடவில்லைகளின் பட்டியலில் மாறுதல் செய்யவிரும்பும் முதன்மைபடவில்லையை தெரிவுசெய்து சொடுக்குக.
4.அதில் தேவையான மாறுதல்களை தெரிவுசெய்துகொண்டு Master View என்ற கருவிபட்டியில் Close Master View என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
5. மேலும் அடுத்த படிமுறைக்கு செல்வதற்குமுன்பு இந்த கோப்பிற்கு ஒரு பெயரிட்டு சேமித்துகொள்க
படவில்லையில் இயல்புநிலையில் உள்ளதை நாம் பின்னர் இயல்புநிலை காட்சித்திரையில் செய்யும் மாறுதல்களை ஏற்றுகொள்வதற்கு மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளி லிருந்து Format => Default Formatting=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
அனைத்து படவில்லைகளின் தலைப்பிலும் முடிவிலும்(header & footer) உரையை சேர்த்தல்
ஒருபடவில்லையில் உரையை சேர்ப்பதற்கு மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளி லிருந்து View => Master => Slide Master=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் திரையின் வரையும் கருவிபெட்டி (Drawing toolbar) யிலிருந்து Textஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி தேவையான உரைபெட்டியை வரைந்து கொள்க
பின்னர் அவ்வுரைபெட்டியில் உரையை தட்டச்சு செய்துகொண்டுமேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து View => Normal=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக இதில் மேலும் புலங்களை சேர்ப்பதற்கு மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Insert => Fields=> என்றவாறும் அப்புலங்களை திருத்துவதற்கு Edit => Fields=>என்றவாறும் கட்டளைகளை செயற்படுத்துக
படவில்லைகளின் உட்பகுதியில் உரையை சேர்த்தல்
இதற்காக உரைபெட்டி(Text box) பயன்படுகின்றது இந்த உரைபெட்டியை இரண்டுவழிகளில் உருவாக்க முடியும்
1. செயல்பலகத்தின் (Tasks pane)இடஅமைவுபகுதியில் (Layouts section)முன்கூட்டியே திட்டமிடபட்டஇடஅமைவை(predefined layout) தெரிவுசெய்துகொள்க இதனால் உருவாகும் உரைபெட்டியானது தானியங்கி இடஅமைவுஉரைபெட்டி(Auto Layout text boxes) என்பர் இவ்வாறான படவில்லையின் சாதாரண காட்சிதிரையில் Click to add text, Click to add an outline என்றவாறு சுட்டிகாட்டிடும் உரைபெட்டியை சொடுக்கி தேவையான உரையை தட்டச்சுசெய்து கொள்க
2. சாதாரண காட்சிதிரையில்வரையும் கருவிபெட்டி (Drawing toolbar)யிலிருந்து Textஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கி தேவையான உரைபெட்டியை வரைந்து உரையை தட்டச்சு செய்துகொள்க.
பொட்டும் எண்ணிடலும்(bullets and numbering)
படவில்லை வாயிலாக நம்முடைய முக்கிய கருத்துகளையும் அதனுடைய சாராம்சங்களையும் பட்டியலாக இட்டு கூறுவதற்கு பொட்டும் எண்ணிடலும் (bullets and numbering) வழி மிக முக்கிய பங்காற்றுகின்றது. இதனை பின்வரும் இருவழிகளில் உருவாக்கிடமுடியும்.
1.மேலே கூறிய முதல் வகையில் உரைப்பெட்டியில் உரையை ஒருவரியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக
2.இரண்டாவது வகையில் மேலேகட்டளைபெட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து View => Toolbar => Formatting=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
பின்னர் உரைவடிவமைப்பு கருவிபெட்டியி(text formatting toolbar) லிருந்துBullets On/Off என்ற பொத்தானை சொடுக்கி உரைபெட்டியில் உரையை ஒருவரியில் தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்துக மேலும் தேவையான முக்கிய கருத்துகளை இதேபோன்று பட்டியலாக தட்ச்சு செய்துகொள்க
அதன்பின்னர் இவ்வாறு தயார்செய்த பட்டியல் முழுவதையும் தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Format => Bullets and Numbering=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது மேலே கருவிபட்டியிலுள்ள Bullets and Numberingஎன்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக.
படம்-50-4
உடன் தோன்றிடும்Bullets and Numbering என்ற(படம்-50-4) உரையாடல்பெட்டியில் Bullets என்ற தாவியின் திரையில் தேவையான பொட்டுவகையை தெரிவுசெய்து கொள்க
Numbering typeஎன்ற தாவியின் திரையில் தேவையான எண்களின் வகையை தெரிவு செய்து கொள்க.
Graphicsஎன்ற தாவியின் திரையில் தேவையான வரைபடங்களின் வகையை தெரிவு செய்து கொள்க.
Customizeஎன்ற தாவியின் திரையில் நாம்விரும்பும் புதிய வகையை தெரிவுசெய்துகொள்க.
தானியங்கி இடஅமைவுஉரைபெட்டி(Auto Layout text boxes) வழியில் பட்டியலை உருவாக்கி யிருந்தால் முதலில்Outline styles என்ற மாற்றுவழியில் மாற்றியமைத்துகொண்டு அதன்பின்னர் பட்டியலுக்கு பொட்டும் எண்ணிடலும் உருவாக்குக
அட்டவணையை உருவாக்குதல்
நம்முடைய கருத்துகளை ஆதாரபூர்வமாக விளக்கமளிப்பதற்காக ஆங்காங்கே அட்டவணை யுடன் தகவல்களை அளிப்பது நல்லது அவ்வட்டவணையை பின்வரும் வழிகளில் உருவாக்கிட முடியும்
1.மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Insert =>Table =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது
2.மேலே கருவிபட்டியில் (toolbar)அட்டவணை (Table)என்ற பொத்தானை சொடுக்குவது அல்லது
3.அட்டவணையின் கருவிபட்டியி (table toolbar)லிருந்து Table Designஎன்ற பொத்தானை சொடுக்குவது அல்லது
4.செயல்பலகத்தில் (Tasks pane)அட்டவணைவடிவமைப்பு பகுதியில்(Table Design section) தேவையான வாய்ப்பை தெரிவுசெய்வது
படம்-50-5
உடன் Insert Tableஎன்ற (படம்-50-5)உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும் அதிலுள்ள Number of columns என்பதில் எத்தனை நெடுவரிசைஎன்றும் number of rows என்பதில் எத்தனை கிடைவரிசையென்றும் குறிப்பிட்டு okஎன்ற பொத்தானை சொடுக்குக.
மேலே கட்டளை பட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Insert Chart, அல்லது Insert => Spreadsheet=> என்றவாறுகட்டளைகளை செயற்படுத்துவதன்வாயிலாக ஒரு படவில்லையில் படங்களையும் விரிதாளையும் உள்ளிணைத்து கொள்ளமுடியும்
படவில்லை காட்சியை அமைத்தல்
இவ்வாறு உருவாக்கபட்ட படவில்லைகளைகொண்டு படவில்லைகாட்சியை அமைத்திட வேண்டும் அதற்காக மேலேகட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து View => Slide Sorter=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.உடன் தோன்றிடும் திரையில்Slide Sorter என்ற தாவியின் திரையை தோன்றசெய்க அதில் நாம்உருவாக்கிய அனைத்து படவில்லைகளும் குறுஞ்சின்னங்களின் பட்டியலாக காட்சியளித்திடும் இதில் இயல்புநிலையில் On mouse clickஎன்றவாறு ஒவ்வொரு படவில்லையும் சுட்டியை சொடுக்கினால் மட்டுமே அடுத்த படவில்லை காட்சித்திரையில் மாறிடுமாறு அமைக்கபட்டிருக்கும் தானாகவே மாறிட Automatically after என்பதை சொடுக்கியவுடன் தோன்றிடும் திரையில் தேவையான கால அவகாசஅளவை அமைத்து Apply to all slidesஎன்ற பொத்தானை சொடுக்குக
படவில்லை காட்சியை திரையில் தோன்றசெய்தல்
மேலேகூறியவாறு படவில்லைகளை உருவாக்கி காட்சியாக அமைத்தபின் அதனை திரையில் காட்சியாக காண பின்வரும் மூன்று வழிகளில் ஒன்றை பின்பற்றிடுக.
1.மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து Slide Show => Slide Show =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது
2.மேலே கட்டளைபட்டியிலுள்ள கட்டளைகளிலிருந்து view=>tools=>presentation=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி Presentationஎன்ற கருவிபட்டியை திரையில் தோன்றிடச்செய்து அதில்Slide Showஎன்ற பொத்தானை சொடுக்குக அல்லது
3.விசைப்பலகையிலுள்ள F5 அல்லது F9ஆகிய ஏதேனுமொரு செயலிவிசையை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் படவில்லை காட்சி நாம் அமைத்திட்டவாறு திரையில் தோன்றும் இந்த படவில்லை காட்சி முடிவுற்றதும் விசைப்பலகையிலிருந்து Esc என்றவிசையை அழுத்தி வழக்கமான இம்ப்பிரஸ் திரைக்கு திரும்பிவிடுக
நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.
ReplyDeleteTamil Baby Names