Tuesday, June 5, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -67-வரைபொருளின் தன்மையை மாற்றியமைத்தல்தொடர்ச்சி பாவணையை பயன்படுத்துதல்


ஒரு குழுவான வரைபொருளிற்கு ஒரே மாதிரியான area fll, line thickness, border போன்ற வற்றை கொண்டுவருவதற்கு பாவணை styles.என்பது பயன்படுகின்றது இதனை செயலுக்கு கொண்டு வருவதற்கு Line and Fillingஎன்ற கருவிபட்டையில் உள்ள styles and Formattingஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது  விசைப் பலகையில் F11 என்ற செயலி விசையை தெரிவுசெய்து சொடுக்குக உடன் styles and Formattingஎன்ற சாளரம் திரையில்(படம்-1) தோன்றிடும் அதனை நாம் விரும்பும் வகையில் திரையின் இடதுபுறம் அல்லது திரையின் வலதுபுறம் இணைத்து கொள்ளமுடியும்
      படம்-1
 பின்னர் வரைபொருளில் நாம் விரும்பியவாறு area fll, line thickness, border போன்றவற்றை அமைத்து திருப்தியுற்றால் இதிலுள்ளNew Style from Selectionஎன்ற உருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் தோன்றிடும் create styleஎன்ற உரையாடல் பெட்டியில் இந்த புதிய பாவணைக்கு ஒரு பெயரிட்டு okஎன்ற (படம்-1)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு புதியதொரு பாவணையை உருவாக்கியபின் மற்ற வரைபொருளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டு நாம் உருவாக்கிய பாவணையின் பெயரை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக
   ஏற்கனவே உருவாக்கியிருக்கும் பாவணையை மாறுதல் செய்வதற்கு முதலில் அதனை தெரிவுசெய்து அதில் தேவையான மாறுதல்களை செய்தபின்திருப்தியுற்றால் Update Style ன்ற உருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்குக இவ்வாறு மாறுதல் செய்தவுடன் ஏற்கனவே இந்த பாவணையை பயன்படுத்திய வரைபொருள் தானாகவே நிகழ்நிலை படுத்திகொள்ளும்
வரைபொருளிற்கு சிறப்பு தோற்றத்தை அளித்தல்
  படம்-2
இதனை திரையில் தோன்றிடசெய்வதற்கு முதலில் மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் View > Toolbars> Drawingஎன்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கிசெயற்படுத்துக பின்னர் இந்த  Drawingஎன்ற கருவிபட்டையில் Efects என்ற உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்   special efect tools படம்-2-ல்  உள்ளவாறு தோன்றிடும் 
  படம்-3
  ஒருவரைபொருளை சுழற்றி(படம்-3) அமைப்பதற்கு இதிலுள்ளRotate  என்ற கருவிபொத்தான் பயன்படுகின்றது
தேவையான வரைபொருளை தெரிவுசெய்து கொண்டு இந்த  special efect tools -ல் உள்ள Distortஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் convert selected object to curve?என்ற (படம்-4)கேள்வியுடன் சிறு பெட்டியொன்று தோன்றிடும் அதில்உள்ள Yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வரைபொருளின் ஏதேனுமொரு மூலையை தெரிவுசெய்தவுடன் இடம்சுட்டியானது கைபோன்று உருமாறி தோன்றிடும் அதனைபிடித்து தேவையானவாறு இழுத்துசென்று விட்டிடுக

படம்-4
அவ்வாறேதேவையான வரைபொருளை தெரிவுசெய்து கொண்டு இந்த  special efect tools -ல் உள்ள Set in Circle (perspective)என்ற (படம்-5)உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் convert selected object to curve?என்ற கேள்வியுடன் சிறு பெட்டியொன்று தோன்றிடும்அதில்உள்ள Yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வரைபொருளின் ஏதேனுமொரு பக்கத்தை தெரிவுசெய்தவுடன் இடம்சுட்டியானது பிறைபோன்று உருமாறி தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு இழுத்துசென்று விட்டிடுக
 
படம்-5

தேவையான வரைபொருளை தெரிவுசெய்து கொண்டு இந்த  special efect tools -ல் உள்ள Set to Circle (slant)என்ற (படம்-6)உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் convert selected object to curve?என்ற கேள்வியுடன் சிறு பெட்டியொன்று தோன்றிடும்அதில்உள்ள Yes என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் வரைபொருளின் ஏதேனுமொரு பக்கத்தை தெரிவுசெய்தவுடன் இடம்சுட்டியானது பிறைபோன்று உருமாறி தோன்றிடும் அதனை பிடித்து தேவையானவாறு இழுத்துசென்று விட்டிடுக
 படம்-6
இந்த  special efect tools -ல் உள்ள Transparencyஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்  Line and Fillingஎன்ற கருவிபட்டையில் உள்ள Transparencyஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக இதன்பின்னர்  புள்ளியுடன் கோடாக இரு சதுரம் வரைபொருளின்மீது தோன்றிடும் அவைகளை தேவையானவாறு நகர்த்தி அந்த வரைபொருளில்Dynamic gradients(படம்-7) அமைத்திடமுடியும்
  அதற்கு பதிலாக  Line and Fillingஎன்ற கருவிபட்டையில் உள்ள gradientsஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் இதேDynamic gradients(படம்-7) ஒரு வரைபொருளில் அமைத்திடமுடியும்
      படம்-7

No comments:

Post a Comment