ஒன்றுக்குமேற்பட்ட
வரைபொருட்களை குழுவாக சேர்த்தல் (grouping) ஒன்றாக இணைத்தல்(combining) ஆகிய இருவழிகளில் ஒரே தொகுதியாக ஆக்கலாம்
அல்லது புதிய வடிவத்திற்கு உருமாற்றலாம்
இந்த குழுவாக சேர்த்தல் (grouping) என்பது ஒரு
கூடைக்குள் வரைபொருட்களை ஒன்றாக குவித்து வைப்பதற்கு ஒப்பாகும் அவைகளை
ஒட்டுமொத்தமாகவும் அல்லது தனித்தனியாகவும் மாறுதல்கள் செய்யலாம் தேவையில்லையெனில்
தனிப்பட்ட வரைபொருளை இந்த குழுவிலிருந்து பிரித்து எடுக்கலாம் இதில் ஒரு தனிப்பட்ட
வரைபொருளின் line thickness, colors, area
propertiesஆகிய தனித்தன்மை மாறாமல்
அப்படியே இருக்கும்
ஆனால் ஒன்றாக இணைத்தல்(combining) என்பது
ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களை
ஒன்றுசேர்த்து புதிய நிலையான உருவத்தில் உருவாக்குவதாகும் இந்த வழிமுறையில்
வரைபொருட்கள் ஒன்றாக இணைத்தபின் தனித்தனியாக பிரிக்கமுடியாது தனிப்பட்ட
வரைபொருளின்line thickness, colors, area
propertiesஆகிய தனித்தன்மையும்
அதன்பின் இருக்காது
குழுவாக சேர்த்தல் (grouping):இவ்வாறு குழுவாக வரைபொருட்களை ஒன்று சேர்ப்பதற்கு முதலில்
1
shift விசையை அழுத்தி பிடித்துகொன்டு தேவையான வரைபொருட்களை தெரிவு செய்து சொடுக்குக அல்லது வரையும் கருவிபட்டையிலுள்ள selection என்பதை தெரிவு செய்து
சொடுக்கியபின் தேவையான வரைபொருளை உள்ளடக்கிய ஒரு செவ்வக உருவை வரைந்திடுக
2 அதன்பின்னர் அவைகளின் மீது
இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Group என்ற (படம்-1) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-1
அதற்கு பதிலாக மேலே
கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> Group => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது Control+Shift+Gஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக
இவ்வாறு உருவாக்கபட்ட குழுவை
பிரிப்பதற்காக குழுவாக சேர்க்கபட்ட பொருட்களின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் unGroup என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
அதற்கு பதிலாக மேலே
கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> unGroup => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
அல்லது Control+Shift+Gஆகிய மூன்று விசைகளை சேர்த்து
அழுத்துக
குழுவாக வரைபொருட்களை
சேர்த்தபின் தேவையெனில் குழுவிலுள்ள இவைகளை தனித்தனியாக மாறுதல்கள்
செய்யமுடியும் அதற்காக அக்குழுவின்மீது இடம்ச சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் EnterGroup
என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை
சொடுக்குக பின்னர் ஒவ்வொரு வரைபொருளாக தெரிவுசெய்து நாம்விரும்பியவாறு மாறுதல்கள்
செய்து கொள்க
இவ்வாறு மாறுதல்கள் செய்தபின் வெளியேறுவதற்கு
சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை
பட்டியில் Exit groupஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இந்த
குழுவிற்கு வெளியே இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை
சொடுக்குக வரை பொருட்களை ஒன்று சேர்த்து குழுவிற்குள் மற்றொறு குழு nested என்றவாறும் உருவாக்க முடியும்
ஒன்றாக இணைத்தல்(combining): மேலே குழுவாக சேர்ப்பதற்கான
முதல்படிமுறையை அப்படியே பின்பற்றுக
அதன்பின்னர்
அவைகளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை
தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் combine
என்ற (படம்-1)கட்டளையை
தெரிவுசெய்து சொடுக்குக
படம்-2
அதற்கு பதிலாக மேலே
கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=>combining => என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்துக இவ்வாறு
ஒருங்கிணைக்கும்போது அதன் உறுப்பு வரைபொருட்களாநது அவைகளுடைய தனித்தன்மை இழந்து
புதிய உருவின் (படம்-2) தன்மையாக
மாறிவிடும் பின்னர் மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களில் modify=>break
=> என்றவாறு கட்டளைகளை
செயற்படுத்தியவுடன் புதிய திலிருந்து பிரிந்து செல்லுமேதவிர ஒன்றாக சேருவதற்குமுன்
இருந்த line thickness, colors, area
propertiesஆகிய தனித்தன்மை
அப்படியே பிரிந்து செல்லாது
ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களை தெரிவுசெய்து
கொண்டு Merging, subtracting, intersecting ஆகிய மூன்று (படம்-3)வழிகளில் ஒன்றிணைத்தல் செயலை
செய்யமுடியும்
படம்-3
இதுoriginal இது Merg
இதுsubtract இதுintersect (படம்-3)ஆகும்
ஒரு நீள்வட்டத்தையும் செவ்வகத்தையும்
ஒன்றின்மீது ஒன்றாக ஏறியவாறு வரைந்தபின் அவைஇரண்டையும தெரிவு செய்துகொணடு
சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை
பட்டியில் shapes என்ற
கட்டளையையும் பின்னர் விரியும் சிறு பட்டியில்substract என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக அதன்பிறகு இறுதி உருவம் படம்-4-ல் உள்ளவாறு அமையும்
படம்-4
இவ்வாறு வரை பொருட்களை Combine
அல்லது merge செய்யும்போது அவ்வரை பொருட்கள் எது முன்பக்கம் உள்ளதோ அல்லது
எது பின்பக்கம் உள்ளதோ அதற்கேற்றாற்போன்று (படம்-5) இறுதி உருவம் அமையும்
படம்-5
அவைகளின் இருப்பிடத்தின் நிலையை
முன்பின் மாற்றியமைப்பதற்கு வரை கருவிகளின் பட்டையில் இருக்கும் position என்ற(படம்-6) கருவிகளின் பட்டை
பயன்படுகின்றது
படம்-6
வரைபொருட்களின்
இருப்பிடத்தை சரிசெய்து அமைப்பதற்குவரைகருவிகளின் பட்டையில் இருக்கும் align என்ற(படம்-7) கருவிகளின் பட்டை பயன்படுகின்றது
படம்-7
இருவரைபொருட்களுக்கிடையேயான
இடைவெளி எவ்வளவு இருக்கவேண்டும் எவ்வாறு இருக்கவேண்டும் என அமைப்பதற்கு Distribution
என்ற கட்டலை பயன்படுகின்றது
இதனை செயல்படுத்துவதற்காக குழுவாக சேர்க்கபட்ட பொருட்களின் மீது இடம்
சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Distribution என்ற தெரிவுசெய்து சொடுக்குக
அதற்கு பதிலாக மேலே
கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> Distribution => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
படம்-8
உடன் Distribution என்ற உரையாடல்
பெட்டியொன்று (படம்-8)திரையில்
தோன்றிடும் வரைபொருட்களுக்கிடையே இடைவெளி படுக்கைவசமாக தேவையெனில் அதிலுள்ள horizontal
என்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் ஒன்றினையும் வரைபொருட்களுக்கிடையே
இடைவெளி நெடுக்கைவசமாக தேவையெனில் அதிலுள்ள verticalஎன்பதன்கீழுள்ள
வாய்ப்புகளில் ஒன்றினையும் தெரிவுசெய்து
கொண்டுok என்ற
பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு
No comments:
Post a Comment