Monday, August 27, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -72-முப்பரிமான படங்களை கையாளுதல்-தொடர்ச்சி


முப்பரிமான உருவங்களை(3D bodies) சுழற்றியமைத்தல்
ஒரு இருபரிமான படத்தை சுழற்றியமைப்பதை போன்றே அதே கட்டளைகள், வழிமுறைகளை பின்பற்றி ஒரு முப்பரிமான உருவத்தில் எங்கு வேண்டுமானாலும் இடம் சுட்டியை வைத்து சுட்டியின்பொத்தானை அழுத்திபிடித்து கொண்டு இந்த முப்பரிமான படத்தின் X,Y ஆகிய அச்சுகளை சுழற்றி அமைக்கமுடியும் .கூடுதலாக மூன்றாவது பரிமான சுழற்றுதலுக்கானZ என்ற அச்சினை சுழற்றுவதற்காக படம்-72-1-உள்ளவாறு தோன்றிடும் விளிம்பில் உள்ள புள்ளிகளில் இடம் சுட்டியை வைத்து சுட்டியின் பொத்தானை அழுத்திபிடித்து கொண்டுசுழற்றி அமைக்கமுடியும் அதன் மையத்தில் ஒருங்கிணையும்  புள்ளியை (intersection point)வைத்தே இம்மூன்று அச்சுகளின் இருப்பை நம்மால்அறிந்து கொள்ளமுடியும்
 
படம்-72-1
முப்பரிமானவடிவங்களை(3D Shapes)சுழற்றியமைத்தல்
முப்பரிமான வடிவங்களையும் முன்பு கூறியவாறே  சுழற்றிஅமைக்கமுடியும் மேலும் மேலே கட்டளை பட்டையிலுள்ள Format => Position and Size => Rotation =>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துதல் அல்லது F4என்ற செயலி விசையை அழுத்துதல் ஆகியவற்றின் மூலம் இதனை சுழற்றி அமைக்கமுடியும் அதுமட்டுமல்லாமல் இந்த முப்பரிமான வடிவங்களுக்கென தனியான கருவிபட்டியை (படம்-72-2) பயன்படுத்தியும் சுழற்றிஅமைக்கமுடியும்

படம்-72-2
முப்பரிமான உருவங்களுக்கான(3D bodies)  முப்பரிமான அமைப்பு(3D Settings)

இதனை அமைப்பதற்கென  3D Efects என்ற (படம்-72-3) உரையாடல் பெட்டிஉள்ளது  மேலே கட்டளை பட்டையிலுள்ள Customize Toolbar => Add => Category Options => 3D Efects =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக இதனை திரையில் பிரதிபலி்க்கசெய்யலாம்  மற்ற உரையாடல் பெட்டிபோன்று திரையில் இதனை நிலையாக இருக்குமாறு வைத்து தேவையான செயலை அதற்கான தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவதன்மூலம் செயல்படுத்திகொள்ளமுடியும் மேலும் அதன்மேல்பகுதியிலிருக்கும்  
என்ற பொத்தானை செயல்படுத்துவதன்மூலம் இதனை முப்பரிமானசெயலில் இருக்குமாறும் அதே பொத்தானை பணிமுடிந்தபின் கண்டிப்பாக சொடுக்கி செயலற்றதாக(Deactive) செய்தபின் வெளியேறுமாறு பரிந்துரைக்கபடுகின்றது அதன் கீழ்பகுதியில்    உள்ள   
         ஆகிய மூன்று பொத்தான்கள்  மிகமுக்கிய பங்குவகிக்கின்றன
இதனுடைய முதல் பொத்தான் ஒரு இருபரிமான படத்தை extrusion bodyஆகஉருமாற்றிடவும் இரண்டாவது பொத்தான்  சுழலும் உருவங்களாக (rotation body)உருமாற்றிடவும் மூன்றாவது பொத்தான்central projection , perspective projection   ஆகியவைகளுக்கிடையே மாறுவதற்கும் பயன் படுகின்றன முதலிரண்டு பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குவதற்குபதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள Modify =>Convert  => To 3D / To 3D Rotation Object.=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அதே செயலை செய்யமுடியும்
3D Effects – Geometry
 
படம்-72-3
3D Effects உரையாடல் பெட்டியின் முதல்  தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் படம்-72-3-ல் உள்ளவாறு இந்த  உரையாடல் பெட்டியின் தோற்றம் அமைந்திடும்
 
படம்-72-4
ஒரு சாதாரண இருபரிமான வட்டம் முப்பரிமான உருவமாக முந்தைய தொடரான ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -71 என்ற பகுதியில் பார்த்தவாறு உருவாக்கியபின் இந்த  3D Efectsஎன்ற உரையாடல் பெட்டியின் Scaled depth     பயன்படுத்தி 10% ,30% ,50% (truncated cone), 0%ஆகியஉருளை உருவமாக உருமாற்றியபின் (படம்-72-4) இதே கட்டளை பெட்டியின் மேலே வலதுபுறமூலையில் உள்ள Assign 
     என்ற   உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தி நாம் செய்த மாறுதலை சேமித்துகொள்க
மேலும் இந்த  3D Efectsஎன்ற உரையாடல் பெட்டியின் rotation angles ஐ பயன்படுத்தி சுழலும்  கோணம் 360° க்கு குறைவாக  அமைத்துகொள்க  அதுமட்டுமின்றி இதிலுள்ள Horizontal , Verticalஆகியவற்றின் அளவுகள் படத்தின் துல்லியமாக அமைத்திட பயன்படுகின்றன இதன் அளவை அதிகமாக வைத்து அமைத்தால் முப்பரிமான படத்தை உருவாக்குவதற்காக கணினி அதிக நேரம் எடுத்துகொள்ளும்
  இந்த  உரையாடல் பெட்டியின் Normalஎன்பதின் கீழேமூன்றாவதாக உள்ள  Double-Sided     என்ற      உருவபொத்தானை பயன்படுத்தி படம்-72-5-ல்உள்ளவாறு ஒரு அரைஉருளையை முழுஉருளையாக அமைத்திடமுடியும்  
 
படம்-72-5
இதே Normalஎன்பதின் கீழ்உள்ள உருவபொத்தான்களை பயன்படுத்தி ஒரு முப்பரிமான படத்திற்கு தேவையான  colors, textures , lighting ஆகியவற்றை நாம் விரும்பிவாறு மாற்றியமைக்கமுடியும்
3D Effects – Shading
ஒருமுப்பரிமான உருவத்திற்கு இந்த 3D Effects உரையாடல் பெட்டியின் lighting  ஐ பயன்படுத்தி Flat, Phong ,Gouraud ஆகிய மூன்று வழிமுறைகளில் மாற்றியமைத்து தேவையான நிழலுருவருமாறு உருவாக்குமுடியும் அதற்காக இந்த 3D Effects உரையாடல் பெட்டியின் மேலே இடதுபுறம் இரண்டாவதாக உள்ளShading என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-72-6 -ல் உள்ளவாறு இந்த உரையாடல் பெட்டி தோன்றிடும்
               

படம்-72-6
பிறகு இதிலுள்ள shadow என்றஉருவபொத்தானை  தெரிவுசெய்து சொடுக்கியபின் surface angles  என்பதில் நாம் விரும்பும் கோணஅளவை அமைப்பதற்கேற்ப ஒரு கோளத்தின் நிழலுரு படம்72-7-ன் மேல்பகுதியில் உள்ளவாறு அமைகின்றது 


படம்-72-7
அவ்வாறே camera என்பதன் கீழுள்ள Distance ,Focal length ஆகியவற்றை வெவ்வேறுவகையில் camera settings அட்டவணை -72-1-ல் உள்ளவாறு அமைப்பதற்கேற்ப ஒரு கனசதுரத்தின் நிழலுருவானது    படம் 72-7-ன் கீழ்பகுதியிலுள்ளவாறு அமைகின்றது
camera settings அட்டவணை-72-1


a
b
c
d
Distance
0.81 cm
3.81 cm
0.81 cm
0.81 cm
Focal length
10 cm
10 cm
5 cm
15 cm
3D Effects – Illumination 
 இந்த 3D Effects என்ற உரையாடல் பெட்டியின் மேலே மூன்றாவதாகஉள்ள Illumination என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படம்-72-8 -ல் உள்ளவாறு இந்த உரையாடல் பெட்டி தோன்றிடும்  அதிலுள்ள light source , Ambient light ஆகியவற்றை நாம் விரும்பியவாறு மாற்றியமைப்பதன் மூலம் ஒரு முப்பரிமான உருவின் தோற்றத்தை  மாற்றியமைக்கமுடியும்   அவ்வாறு மாற்றியமைக்கபட்ட ஒருவளையத்தின்  தோற்றம் படம் 72-8-ன் வலதுபுறம் உள்ளவாறு அமைகின்றது


படம்-72-8

No comments:

Post a Comment