ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தில் கணித சமன்பாடுகளை பதிப்பித்தல் செய்வதற்காக ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா சாளரத்தை திறந்து பயன்படுத்திடும்போது இந்த மேத்ஸ் சாளரமானது திரைமுழுவதும் நிறைந்து இருக்கும் அதனால் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தில் நம்மால் சுலபமாக பணிபுரியஇயலாத சூழல் ஏற்படும் அதனை தவிர்ப் பதற்காக இந்த ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா சாளரத்தை ஒருசிறிய மிதக்கும் சாளரமாக மாற்றியமைத்திட்டால் ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் சாளரத்தின் முழுத்திரையில் நம்மால் எளிதாக பணிபுரியமுடியும் அதற்காக மேத்ஸ் சாளரத்தின் ஓரமாக இடம்சுட்டியை நகர்த்தி சென்று Ctrl விசையை அழுத்தி பிடித்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் படம்-1-ல் உள்ளவாறு சிறிய மிதக்கும் சாளரமாக மேத்ஸ் சாளரம் மாறியமையும் பின்னர் தேவையானால் முன்புபோலவே இந்த மிதக்கும் சாளரத்தின் ஓரமாக இடம்சுட்டியை நகர்த்தி சென்று Ctrl விசையை அழுத்தி பிடித்துகொண்டு சுட்டியின் பொத்தானை இருமுறை சொடுக்குக உடன் மேத்ஸ் சாளரம் முழுத்திரைக்கும் மாறியமையும்
ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில்
எழுத்தின் அளவை மாற்றியமைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன அவ்வாறே இந்த ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா சாளரத்தில்
உருவாக்கி பதிப்பிக்கபடும் கணித சூத்திரங்களின் எழுத்தின் அளவையும்
நாம்விரும்பியவாறு மாற்றியமைக்க முடியும்
அதற்காக மேத்ஸ் சாளரத்திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள கட்டளைகளில் Format =>
Font size=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்குக உடன்விரியும்Font sizeஎன்றஉரையாடல் பெட்டியில் base size என்பதில் தேவையான அளவை
மாற்றியமைத்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் கணித சூத்திரங்களின் எழுத்தின் அளவு நாம் குறிப்பிட்டபடி படம்-2-ல் உள்ளவாறு மாறியமையும்
2
இந்த மேத்ஸ் சாளரத்தில் மிக
சிக்கலான கணிதசூத்திரத்தினை எழுதுவதுதான் மிககடினமானமான பணியாக இருக்கின்றது அதனை
தவிர்த்து இந்தபணியை எளிதானதாக இருப்பதற்காக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றிடுக
1 மேத்ஸ் சாளரத்தில் ஒருகணக்கீட்டில் எதனை முதலில்
கணக்கீடுசெய்வது எதனை அதற்கடுத்து செய்வது என வரிசைகிரமம் எதுவும்
குறிப்பிடபடவில்லை ஆயினும் அவ்வாறாக செயல்படுத்துவதற்கு பிறையடைப்பு அல்லது இருதலை அடைப்பை பயன்படுத்தினால் போதும்
அடைப்பிற்குள் இருப்பதை முதலிலும் பின்னர்
வெளியில் இருப்பதையும் கணக்கீட்டிற்காக எடுத்துகொள்ளும் உதராணமாக(1)
2 over X+! என்பதை என்றும் 2 over (X+1) என்பதை என்றும் கணக்கீட்டிற்கு எடுத்துகொள்ளும்
இந்த மேத்ஸ் சாளரத்தில்
சூத்திரங்களை தொடர்ச்சியாக உள்ளீடு செய்யும் போது
ஒரேவரியிலேயே அமையும் அடுத்தவரிக்கு மாறவேண்டுமெனில் new lineஎன்ற கட்டளையை பயன்படுத்தவேண்டும்
உதராணமாக(2) என்பது என்றும் , என்பது என்றும் அமையும்
3 வகைகெழு தொகைகழு
சமன்பாடுகளை உருவாக்கிடும்போது கீழ்வரையைறை(lower
limits) மற்றும்
மேல்வரையரையை(upper limits) குறிப்பிடுவதற்காகfrom,
to ஆகிய இரு எடுகோள்களை
கொண்டு அதனை குறிப்பிடவேண்டும் அதன்மூலம் நாம் குறிப்பிடும் மதிப்பானது
கீழ்பகுதியிலும் (subscripts) ,மேல்பகுதியிலும்(superscripts) அதன்வரையறையாக படம்-3-ல்
உள்ளவாறுஅமையும்
4 கணிதத்தில்
மிகச்சரியாக அணிகளை குறிப்பிடுவதற்கு படம்-4-ல் மூன்றாவது வரியில் உள்ளவாறு குறிப்பிடவேண்டும்
5.வகைகெழுவில் பின்ன
வகைகெழுவான derivatives களை உருவாக்குவதற்கு over மற்றும் d அல்லது partial ஆகிய
கட்டளைகளுடன் சேர்த்து படம்--5-ல் உள்ளவாறு
குறிப்பிடவேண்டும்
7 குறிப்பிட்ட
எழுத்தினை வைத்து சமக்குறியை சரிசெய்து அமைப்பதற்கான கட்டளை வரிகள் எதுவும் ஓப்பன்
ஆஃபிஸ் மேத்ஸில் இல்லை ஆயினும் அணிகளை
குறிப்பிடு வதற்கான கட்டளையுடன் alignr ,alignl ஆகிய
கட்டளைகளையும் பயன்படுத்தி குறிப்பிட்ட
எழுத்துகளை வைத்து சமக்குறியை சரிசெய்து படம்-6ல் உள்ளவாறு
அமைத்திடமுடியும்
8ஓப்பன் ஆஃபிஸ்
மேத்ஸில் அணிகளை எழுதி வரையறுக்கும்போது அணி உறுப்பகளுக்கு இடையே எவ்வளவு இடைவெளி
இருக்கவேண்டும் என குறிப்பிடுவதற்கு இந்த
சாளரத்தின் மேலே கட்டளைபட்டையில் உள்ள கட்டளைகளில் Format => Spacing => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து
சொடுக்குக உடன் விரியும் Spacing என்ற உரையாடல்
பெட்டியில் category என்ற பொத்தானின் கீழிறங்கு பட்டியலில்matrices என்பதை தெரிவு செய்துகொண்டுok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்
படம்-7-ல் உள்ளவாறு அணி உறுப்புகளுக்கிடையே இடைவெளி
அமையும்
9 ஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸில் ஒவ்வொரு கணித சமன்பாட்டிற்கும்
ஒரு எண்ணிடுவது மிகத்திறன்மிகுந்த கலையாகும்
இதனை பின்வருமாறு செயல்படு்ததிடமுடியும்
fnஎன தட்டச்சுசெய்து
F3 என்ற செயலிவிசையை அழுத்துக உடன் இது E=mc2 என்ற கணித சமன்பாடாக உருமாறிவிடும்
இந்த கணித சமன்பாட்டிற்கு ஒருஎண்ணை குறிப்பிடு வதற்காக இந்த சாளரத்திரையின் மேலே கட்டளைபட்டையிலுள்ள Insert => Cross-reference=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் fields என்ற உரையாடல் பெட்டியின்cross
reference என்ற தாவியினுடைய திரையில் type என்பதன்
கீழ் text என்பதை யும் selection என்பதன்கீழ்
1 என்பதையும் insert reference to என்பதன்கீழ்
reference என்பதையும் தெரிவுசெய்து கொண்டு insert என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த கணித சமன்பாட்டிற்கு ஒரு
மேற்பார்வை எண்(reference number) உருவாகிவிடும்
மேலும் கணித சமன்பாடு தொடர்பாக
கட்டளைகள், செயலிகள் ,கணிதக்குறியீடுகள், இயக்கிகள் அதன் விளைவுகள்
போன்றவைகளை www.openoffice.org என்ற
தளத்தில் உள்ள இதற்கான maths guide என்ற பிடிஃப் கோப்பினை
பதிவிறக்கம் செய்து படித்து அறிந்துகொள்க
No comments:
Post a Comment