Sunday, December 23, 2012

ஓப்பன் ஆஃபிஸ் பேஸ் தொடர் பகுதி 79 பேஸ் ஒரு அறிமுகம்


ஓப்பன் ஆஃபிஸ் பேஸ் என்பது  தரவுகளை கையாளக்கூடிய ஒரு பயன்பாடாகும். இவ்வாறு தரவுகளை கையாளுவதற்காக இது  HSQLஎன்ற தரவுதள பொறியை பயன்படுத்தி கொள்கின்றது இந்த தரவுதள பொறியானது உருவாக்கப்படும் அனைத்து கோப்புகளையு_ம் சுருக்கிய கோப்புகளாக(Zipped files) தேக்கிவைக்கின்றது. பொதுவாக ஒரு தரவுதளம் என்பது அட்டவணை(Table), வினா(Query), படிவம்(Form),அறிக்கை(Report) ஆகிய நான்கு கட்டமைப்பை கொண்டதாகும் இவையனைத்தும் தனித்தனியான தரவுகளை உள்ளடக்கிய ஏராளமான புலங்களால் கட்டபட்ட தொகுதியாகும் .அதாவது எந்தவொரு தரவுதளத்திற்கும் புலங்களே அடிப்படையாகும்
 இந்த தரவுதளத்தில் குழுவான புலங்களையே ஒரு அட்டவணை (Table)என்பர் . எந்தவொரு அட்டவணையையும் உருவாக்குவதற்கு முன்பு அதனுடைய அடிப்படையாக விளங்கும் புலங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு இருக்கவேண்டும் அதன் வகை, பண்பியல்புகள் போன்றவிவரங்களை  முன்கூட்டியே நிர்ணயம்  செய்யவேண்டும்
  ஒரு வினா(Query) என்பது தரவுதளத்தில் நாம் சேமித்து வைத்துள்ள தரவுகளிலிருந்து நாம் கோரும் தகவலை மட்டும்  திரையில் பிரதிபலிக்க செய்ய உதவும் ஒரு அட்டவணையாகும் 
  ஒரு  படிவம்(Form) என்பது தரவுகளை  தரவுதளத்திற்குள் உள்ளீடு செய்ய உதவிடும் முன்கூட்டியே கட்டமைக்கபட்ட அட்டவணை போன்ற  உருவமாகும்
 ஒரு அறிக்கை(Report)  என்பது நம்மால் தரவுதளத்தில் சேமித்து வைக்கபட்டுள்ள தரவுகளிலிருந்து நாம்விரும்பியவாறு தகவல்களை  கணக்கிட்டு சரிசெய்து திரையில் ஒருஆவணமாக பிரதிபலிக்க செய்ய உதவுவதாகும்
 எச்சரிக்கை:இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸ்  என்ற பயன்பாடு நம்முடைய கணினியில் இயங்குவதற்கு  Java Runtime Environment (JRE). என்ற கோப்பு நம்முடைய கணினியில் நிறுவப்பட்டு இருக்கவேண்டும் இல்லையெனில் www.java.com என்ற தளத்திலிருந்து ஜாவா 5.0 அல்லது அதற்குபிந்தைய பதிப்பை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க
 இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸ் ஆனது மை எஸ்க்யூஎல் ,ஆரக்கிள் என்பன போன்ற உறவு தரவுதளங்களுடன்(relational databases) ஒத்தியங்கும் தன்மையுடன் விளங்குகின்றது  
 இது ஒரு உறவுதரவதளத்தை உருவாக்குவதால் நம்மால் மிகச்சுலபமாக  தரவு தளத்திலுள்ள புலங்களுக்கிடைய உள்ள உறவுகளால் எந்தவொரு தரவு தளத்தையும் உருவாக்கி பராமரிக்கமுடியும் 
 உதாரணமாக  ஒரு நூலகத்திலுள்ள புத்தகங்களை பற்றிய விவரங்களான புத்தகத்தின் எண் ,அதனுடைய பெயர், அதனை எழுதிய ஆசிரியரின் பெயர், பதிப்பித்த ஆண்டு என்பன போன்ற விவரங்களுடன்  உறவுதரவுதள அட்டவணையொன்றை உருவாக்கிடுவார்கள் இந்த  அட்டவணையை கொண்டு அவ்வாசிரியரின் பெயரை வைத்து one-to-many relationship  என்ற அடிப்படையில் அவர் எழுதிய புத்தகங்களின் விவரங்களையும்  புத்தகத்தின் பெயரை கொண்டு அதனை எழுதிய ஆசிரியரின் பெயரையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த   உறவுதரவதளம் உதவுகின்றது
 கணிதத்தில் பயன்படுத்தபடும் கணங்கள் எனப்படும் தொகுதியை (sets): elements, subsets, unions, intersections ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த உறவுதரவு தளத்தை விவரிக்கமுடியும்  எந்தவொரு தரவுதளத்திலும் புலங்களே elements ஆகும்  அட்டவணையானது subsets ஆகும் அவைகளுக்கு இடையேஉள்ள உறவே  unions, intersections ஆகும் இவையனைத்தும் அடங்கிய தொகுதியே  sets ஒரு தரவுதளமாகும் 
முதலில் ஒரு தரவுதள கோப்பினை உருவாக்குதற்கு முன்பு நம்கைவசம் என்னென்ன விரங்கள் உள்ளன அவைகளை எத்தனை புலங்களாக உருவாக்கமுடியும் அவற்றின்வகை, பண்பியல்பு, அடிப்படை கட்டமைப்பு ஆகியவை எவ்வாறு இருக்கவேண்டும் என முடிவு செய்து பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும்
 ஒரு புதிய தரவுதளத்தினை உருவாக்குதல்
 start=>openoffic.org3.3=>Database=>என்றவாறு கட்டளைகளை செயற் படுத்தியபின் தோன்றிடும் வழிகாட்டியின் உதவியால் முதன்முதலாக இந்த பயன்பாட்டினை திரையில் (படம்-1) தோன்றிட செய்யமுடியும்

 பின்னர் விசைப்பலகையில் உள்ள Ctrl+N  என்றவாறு விசைகளை தெரிவுசெய்து சேர்த்து  அழுத்துக அல்லது இந்த பயன்பாட்டு திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள  Newஎன்ற (படம்-2)உருவ பொத்தானிற்கு அருகிலுள்ள கீழிறங்கு பட்டியலை தோன்ற செய்தபின் அதிலுள்ள Databaseஎன்ற(படம்-2) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது  File => New => Database=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக

உடன் Data base wizard என்ற வழிகாட்டியானது  Welcome to the openoffice.org Database Wizard என்ற வரவேற்புடன் (படம்-3)திரையில் தோன்றிடும்
படிமுறை1:அதில் இடதுபுறத்தில் Steps என்பதன்கீழ் இயல்புநிலையில் select data base   என்ற வாய்ப்பு தெரிவுசெய்யபட்டிருக்கும் அதன் வலதுபுறத்தில் what do you want to do? என்ற கேள்வியின் கீழ் 1.Create a new database ,2.open an existing database files  ,3.connecting to an existing databaseஆகிய மூன்று வாய்ப்பகளின் வானொலி பொத்தான்கள் நாம் தெரிவு செய்வதற்காக தயார்நிலையில்  இருக்கும் இயல்புநிலையில் இந்த வாய்ப்பின் பொத்தான்களை தெரிவுசெய்யாமல் இருந்தாலும் நாம் இப்போதுதான் புதியதாக தரவுதள கோப்பினை உருவாக்கிட இருப்பதாலும் அவற்றுள்  Create a new database  என்ற முதல்வாய்ப்பின் வானொலி பொத்தானை மட்டும் தெரிவுசெய்து கொண்டு கீழ்பகுதியிலுள்ள next  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

 படிமுறை2: . உடன் Data base wizard என்ற (படம்-4)வழிகாட்டியானது Decide how to proceed after saving the data base என்ற தலைப்புடன் தோன்றிடும் திரையின் இடதுபுறத்தில் Steps என்பதன்கீழ் இயல்புநிலையில் save and proceed   என்ற வாய்ப்பு தெரிவு செய்யபட்டிருக்கும் அதன் வலதுபுறத்தில் Do you want to the wizard to register the database in openoffice.org? என்ற வினாவிற்கு  yes register the database for me என்ற வாய்ப்பு இயல்புநிலையில் தெரிவு செய்யபட்டிருக்கும் விரும்பினால் இதனை ஏற்றுக்கொள்க அல்லது இரண்டாவது வாய்ப்பான no do not register the databaseஎன்பதை  தெரிவுசெய்து கொள்க.அவ்வாறே  after the database file has been saved, what do you want to do?  என்ற வினாவிற்கு ஏற்கனவே உள்ள தரவுதளத்தினை மாறுதல் செய்வதெனில் இயல்புநிலையில் தெரிவு செய்யபட்டிருக்கும் வாய்ப்பினை ஏற்றுக்கொள்க இல்லையெனில் Open the database for editing என்ற முதல் வாய்ப்பினை தெரிவு செய்க அல்லது create tables using the table wizards  என்ற இரண்டாம் வாய்ப்பினை தெரிவு செய்துகொண்டு finish என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக


பின்னர் விரியும் திரையில் இந்தகோப்பிற்கு myfirstdatabase.odb என்றவாறு ஒரு பெயரிட்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்   myfirstdatabase.odb என்ற தரவுதளம்(படம்-5) திரையில் தோன்றிடும்   பின்னர் அதன் இடதுபுற பலகத்தில் Database  என்பதன் கீழ் தரவுதளத்தின் அடிப்படை கட்டமைவுகளான Tables Queries, Forms, Reports ஆகிய உருவபொத்தான்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக வரிசையாகஇருக்கும் அவற்றுள் Tables என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையில் Alt+a ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக உடன் இதன்  வலதுபுற பலகத்தில்  Tasks என்பதன்கீழ் 1.Create Table in Design view ,2.Use Wizard to create 3.,Table Create view   ஆகிய(படம்-5) மூன்றுசெயலிகளின் உருவபொத்தான்களுடன் தோன்றிடும்

Create Table in Design view என்ற முதல் வாய்ப்பானது (படம்-6)ஒரு அட்டவணையில் உருவாக்கப்போகும் புலங்களின் பெயர் (Field name) அதன் பண்பியல்புகள்(field properties) அதில் உள்ளீடு செய்யவிருக்கும் தரவுகளின் வகைகள்(Field types) அதனைபற்றிய விவரம்(Description) ஆகிய கட்டமைப்பை  நாம் அட்டவணையை உருவாக்குவதற்கு ஏதுவாக அதனுடைய வடிவமைப்புநிலையில் அமைந்து உதவதயாராக இருக்கின்றது

,Table Create view என்ற மூன்றாம் வாய்ப்பானது (படம்-7)நேரடியாக புலங்களை வினாவின் மூலம் Add tables என்ற உரையாடல் பெட்டியின் வாயிலாக Add  என்ற பொத்தானை சொடுக்கி உருவாக்கமுடியும்

2.Use Wizard to create என்ற இரண்டாம் வாய்ப்பானது (படம்-8) புதியவர்கள் ஒரு அட்டவணையை எவ்வாறு உருவாக்குவது என இந்த வழிகாட்டியினுடைய படிமுறைகளின் வாயிலாக நமக்கு வழிகாட்டுகின்றது

No comments:

Post a Comment