Monday, July 30, 2012

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா-69-பிட்மேப்பை கையாளுதல்


நாம் இதுவரையிலும் ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் நம்முடைய கைகளால் வரையப்படும் வெக்டர் வரைகலையை பற்றி பார்த்து வந்தோம் தற்போது பிட்மேப் எனப்படும் நிழற்படங்களை அல்லது வருடபட்ட படங்களை பதிவேற்றம் செய்தல், பதிவிறக்கம் செய்தல் , ஒரு வடிமைப்பிலிருந்து மற்றொரு வடிவமைப்பிற்கு மாறுதல் செய்தல் என்பன போன்ற எண்ணற்ற செயல்களை இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா வில் எவ்வாறு கையாளுவதுஎன இப்போது காண்போம்
இந்த பிட்மேப்படங்களை Adobe Photoshop , The Gimp போன்ற பயன் பாடுகளில் கையாளுவதை போன்று இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவிலும் கையாளமுடியும்.
பதிவிறக்கம்(import) செய்தல்
ஒரு சேமிக்கபட்ட வரை கலை கோப்பினை பதிவிறக்கம் செய்திட ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா திரையின் மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Insert => Picture =>File=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக அல்லது இதனுடைய உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Insert pictureஎன்ற உரையாடல் பெட்டியின் திரையில் *.svg என்ற செந்தர பின்னொட்டெனில் openஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் எளிதாக பதிவிறக்கம் ஆகும்
 
படம்-69-1
இல்லையெனில் இதேInsert pictureஎன்ற உரையாடல் பெட்டியிலுள்ள கோப்பின் வகைக்கான கீழிறங்கு பட்டியலை திறந்து தேவையான வடிவமைப்பை தெரிவுசெய்து கொண்டு openஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இவ்வாறு பதிவிறக்கம் செய்வதற்கான கோப்பினை தேடிடும்போது நாம் தெரிவுசெய்தது மிகச்சரியான கோப்புதானா என சரிபார்ப்பதற்கு இதே Insert pictureஎன்ற உரையாடல் பெட்டியிலுள்ள Preview என்ற (படம்-69-1) தேர்வுசெய்பெட்டியை தெரிவுசெய்து கொள்க உடன் அந்த படம் இதே உரையாடல் பெட்டியின் வலதுபுற பலகத்தில் முன்காட்சி யாக தோன்றிடும்
இவ்வாறு வரைபட கோப்பினை பதிவிறக்கம் செய்தால் அவை தற்போதைய கோப்பில் உட்பொதியபட்டு இந்த படம்PNG என்ற வடிவமைப்பிற்கு உருமாறிவிடும் இதனை நம்முடைய விருப்பபடி கையாளமுடியும் இதற்கு பதிலாக இதே உரையாடல் பெட்டியில் உள்ள Linksஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்தால் நடப்பு கோப்புடன் இணைப்பு ஏற்படுத்தபட்டு Edit Links என்ற உரையாடல் பெட்டியின்மூலம் வேறுஏதேனும் நாம் மாறுதல் செய்வதற்காக திரையில் காண்பிக்கும் இந்த வசதியினால் நடப்பு கோப்பின் அளவு மாறாது இணைக்கபட்ட கோப்பும்அதே இடத்தில் இருக்கும்
இவ்வாறு ஏற்படுத்தபட்ட இணைப்பினை நீக்கம் செய்வதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Edit => Links => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தோன்றிடும் Edit Links என்ற உரையாடல் பெட்டியில் இணைப்பை நீக்கம் செய்யவிரும்பும் கோப்பினை தெரிவுசெய்து கொண்டு Break Linkஎன்ற(படம்-69-2) பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-69-2
வருடுதல்(Scanning)
பெரும்பாலான வருடிகளை கொண்டுவருடபட்ட படங்களை நேரடியாக நம்முடைய கோப்பில் உள்ளிணைக்கமுடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Insert => Picture => Scan => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Scan என்ற கட்டளையின் துனைபட்டியில் select Source அல்லது select Request ஆகிய இரு கட்டளை வாய்ப்புகளில் ஒன்றினை தெரிவுசெய்து சொடுக்குக
இந்த Scan என்ற துனைபட்டியில் முதல் வாய்ப்பான select Source என்ற வாய்ப்பினை தெரிவுசெய்தவுடன் விரியும் திரையில் Scanner என்ற உரையாடல் பெட்டியில் Create Previewஎன்ற (படம்-69-3)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் preview என்ற முன்காட்சி பெட்டியில் வருடபட்ட படம் முன்காட்சியாக தோன்றிடும் சரியாக இருக்கின்றது என திருப்தியுற்றால் OK என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Insert => Picture => Scan => Request=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி இதனை நேரடியாக உள்ளிணைத்து கொள்க உடன் இந்த வருடபட்டபடம் தற்போதைய கோப்பில் PNG என்ற வடிவமைப்பிற்கு உருமாற்றபட்டு உட்பொதியபட்டுவிடும்.

படம்-69-3
clipboardஎனும் ஒட்டும் பெட்டிமூலம் படங்களை உள்ளிணைத்தல்
இந்த clipboard எனும் ஒட்டும் பெட்டி ஓப்பன் ஆஃபிஸ் ட்ராவில் வேறொரு வழியில் படங்களை உள்ளிணைத்திட பயன்படுகின்றது இந்த செயல் படங்களின் வடிவமைப்பு , இயக்கமுறைமை ஆகிய வற்றிற்கேற்ப மாறு பட்டு அமைகின்றது இதனை பயன்படுத்திட மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Edit => Paste Special => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயல்படுத்துக அல்லது மேலே கட்டளை பட்டையிலுள்ள Paste என்ற உருவ பொத்தானின் கீழிறங்கு பட்டியலை தெரிவுசெய்து சொடுக்குக உடன் paste special என்ற (படம்-69-4) சிறு உரையாடல்பெட்டி தோன்றிடும் அதில் selectionஎன்பதன் கீழுளள்ளவைகளில் தேவையான படவடி வமைப்பை மட்டும் தெரிவுசெய்துகொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-69-4

இழுத்து சென்று விடுதல் (Dragging and dropping)
படங்களை சேகரித்து வைத்துள்ள Gallery என்ற பகுதியிலிருந்து தேவையான படங்களை இடம்சுட்டியால் தெரிவுசெய்து பிடித்து அப்படியே இழுத்துசென்று நடப்பு கோப்பில் சுட்டியை வைத்து பிடித்திருந்த இடம்சுட்டியை விடுக
கோப்பிலிருந்து இணைத்தல்
இந்த வழிமுறையில் வேறு கோப்பிலிருக்கும்Draw அல்லது Impress படங்கள், Rich Text (RTF), HTMLஅல்லது plain text உரைகள் ஆகிய வடிவமைப்பிலிருக்கும் கோப்பினை உள்ளிணைக்க முடியும் இதனை செயற்படுத்திட மேலே கட்டளை பட்டையிலுள்ள பட்டியில் Insert= > File=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் insert slides/objects என்ற (படம்-69-5)உரையாடல் பெட்டியில் உள்ளிணைக்க விரும்புவது Draw அல்லது Impress கோப்பு எனில் special import என்ற உரையாடல் பெட்டிதோன்றிடும் அதில் +அல்லது முக்கோன வடிவத்தை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் படங்களில் தேவையான படத்தை தெரிவுசெய்க இந்நிலையில் சுட்டி நாம் விரும்பும் படத்தின்மீது இருக்கும்போது இடம்சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Renameஎன்ற கட்டளை தெரிவுசெய்து சொடுக்கி பெயரை மாற்றியமைத்துகொள்க அதன்பின்okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-69-5
படத்தை மட்டும் பதிவேற்றம் செய்தல்
பொதுவாக வரைபடத்திற்கான *.odg என்ற பின்னொட்டுடன் கூடிய ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா வடிவமைப்பு கோப்பினை மற்ற பயன்பாடுகளின் மூலம் கையாளமுடியாது அதனால் நாம் ஒப்பன் ஆஃபிஸ் ட்ராவில் உருவாக்கும் கோப்புகளை நாம் விரும்பும் வடிவமைப்பில் சேமிக்க முடியும் அதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள File => Export => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Export என்ற (படம்-69-6)உரையாடல் பெட்டியில் கீழிறங்கு பட்டியல் மூலம் தேவையான வடிவைப்பின் பின்னொட்டினை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-69-6
கோப்பு முழுவதையும் பதிவேற்றம் செய்தல்
இதற்காக Export என்ற உரையாடல் பெட்டியில் மேல்பகுதியின் கோப்பு வகை பெட்டியில் PDF,Flash, HTML ஆகியவற்றில் நாம் விரும்புவதையும் கீழ்பகுதியிலிருக்கும் Metafle வடிவமைப்பின் JPEG, PNG, TIFF, BMP ஆகியவற்றில் நாம் விரும்புவதையும் தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
ஒரு வரைபடத்தை மட்டும் பதிவேற்றம் செய்திட
குறிப்பிட்ட வரைபடத்தை மட்டும் தெரிவுசெய்து Export என்ற உரையாடல் பெட்டியின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்க ஒன்றுக்கு மேற்பட்ட வரைபடம் எனில் இதே Export என்ற உரையாடல் பெட்டியில் Selection என்ற வாய்ப்பை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்க.
வெக்டார் வரைபடம் எனில் DXF என்ற வடிவமைப்பில் உள்ள Autocad மற்றும் SVG வடிவமைப்பில் உள்ளவைகளை பதிவேற்றம் செய்ய இயலாது ஆனால் 2D வரைபடத்தை பதிவேற்றம் செய்யலாம் 3D வரைபடம் எனில் முன்காட்சிமட்டும் இயலும்
raster graphic-இன் பதிவேற்றம் செய்யும் படத்தினுடைய Metafle கோப்பின் image,compression, color , version ஆகியவற்றிற்கு தகுந்த வடிவமைப்பிற்கேற்ப அமையுமாறு வாய்ப்புகளை அமைத்திடமுடியும இதனால் பதிவிறக்கம் ஆகும் கோப்பின் வடிவமைப்பிற்கு ஏற்ப வரைபடத்தின் தன்மையும் மாறு பட்டு அமையும்
Export என்ற உரையாடல் பெட்டிமூலம் படத்தின் துல்லியத்தை அமைத்தால் அச்செயல் raster points இன் அளவை பாதிக்காது ஆனால் படத்தை மற்ற பயன்பாடுகளின் மூலம் திரையில் பிரதிபலிப்பு செய்வதற்கான புறஅமைப்பை இந்த raster points கட்டுபடுத்துகின்றது
மேலே கட்டளை பட்டையிலுள்ள Tools= > Options => OpenOfce.org Draw => General=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக pixels அளவை குறிப்பிட்டு அதன்மூலம் படத்தின் துல்லியத்தை கட்டுபடுத்தலாம்
raster graphics அல்லது objects ஆகியவற்றை ஒரு கோப்பில் உள்பொதிந்த பின் சூழ்நிலை பட்டியை தோன்றசெய்துஅதில் Convert => To Bitmap / To Metafle என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி bitmap அல்லது Metafle ஆக உருமாற்றம் செய்யலாம் அதன்பின் அதே சூழ்நிலை பட்டியின்மூலம் Save as Picture என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குவதன்வாயிலாக படமாக text elements, borders, shadows ஆகிய உறுப்புகள் இல்லாமல் சேமித்திடலாம்
இதில் உருவாக்கும் வரைபடத்தை மிகஎளிதாக ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ,கால்க் ,இம்ப்பிரஸ் ஆகிய பயன்பாடுகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நம்மால் அடிக்கடி பயன்படுத்திகொள்ளும் வரைபடங்களை Gallery அல்லது clipboard வசதிமூலம் பதிவிறக்கம் செய்து கொள்க. இதில் OLE வாயிலாகவும் இணைப்பு ஏற்படுத்திடலாம்
வரைபடத்தினை Format அல்லது context பட்டிமூலம் வடிவமைப்பை மாறுதல் செய்து கொள்ளலாம் அவ்வாறே ஒருவரைபடத்தின் Lines, Areas , Shadows ஆகிய பண்பியல்புகளை Picture toolbar என்பதை பயன் படுத்தி சரிசெய்து அமைத்து கொள்ளலாம் இந்த Picture toolbar ஐ திரையில் பிரதிபலிக்க செய்வதற்காக மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Toolbars =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த Picture toolbar ஆனது திரையில் தோன்றிடும் அதற்கு பதிலாக தேவையான படத்தை தெரிவுசெய்தவுடன் தானகவே இந்த கருவிபட்டி formatting toolbar இருக்கும் இடத்தில் அதற்கு பதிலாக அல்லது தனியானதொரு floating toolbar ஆக திரையில் தோன்றிடும்
ஒரு படத்தில் தேவையற்றவைகளை வெட்டி கத்தரித்து சரிசெய்து அழகுபடுத்துவதற்கு Crop என்ற கருவி பயன்படுகின்றது இதனை crop என்றவொரு உரையாடல் பெட்டிமூலம் செயற்படுத்துவதற்கு மேலே கருவிபட்டியிலுள்ள Format => Crop Picture=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கு உடன் தோன்றிடும் Cropஎன்ற(படம்-69-7) உரையாடல் பெட்டியில் தேவையானவாறு வாய்ப்புகளை அமைத்து படத்தை நன்கு அழகுபடுத்திகொள்க

படம்-69-7

Thursday, July 26, 2012

ஓப்பன்ஆஃபிஸ் ட்ரா-68-வரைபொருட்களை குழுவாக சேரத்தல்(grouping) ஒன்றாக இணைத்தல்(combining)


ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களை குழுவாக சேர்த்தல் (grouping) ஒன்றாக இணைத்தல்(combining) ஆகிய இருவழிகளில் ஒரே தொகுதியாக ஆக்கலாம் அல்லது புதிய வடிவத்திற்கு உருமாற்றலாம்

 இந்த குழுவாக சேர்த்தல் (grouping) என்பது ஒரு கூடைக்குள் வரைபொருட்களை ஒன்றாக குவித்து வைப்பதற்கு ஒப்பாகும் அவைகளை ஒட்டுமொத்தமாகவும் அல்லது தனித்தனியாகவும் மாறுதல்கள் செய்யலாம் தேவையில்லையெனில் தனிப்பட்ட வரைபொருளை இந்த குழுவிலிருந்து பிரித்து எடுக்கலாம் இதில் ஒரு தனிப்பட்ட வரைபொருளின் line thickness, colors, area propertiesஆகிய தனித்தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்
 ஆனால் ஒன்றாக இணைத்தல்(combining) என்பது ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களை  ஒன்றுசேர்த்து புதிய நிலையான உருவத்தில் உருவாக்குவதாகும் இந்த வழிமுறையில் வரைபொருட்கள் ஒன்றாக இணைத்தபின் தனித்தனியாக பிரிக்கமுடியாது தனிப்பட்ட வரைபொருளின்line thickness, colors, area propertiesஆகிய தனித்தன்மையும் அதன்பின் இருக்காது 
  குழுவாக சேர்த்தல் (grouping):இவ்வாறு குழுவாக வரைபொருட்களை ஒன்று சேர்ப்பதற்கு முதலில்
 1 shift விசையை அழுத்தி பிடித்துகொன்டு தேவையான வரைபொருட்களை  தெரிவு செய்து சொடுக்குக அல்லது  வரையும் கருவிபட்டையிலுள்ள selection என்பதை  தெரிவு செய்து சொடுக்கியபின் தேவையான வரைபொருளை உள்ளடக்கிய ஒரு செவ்வக உருவை வரைந்திடுக
  2 அதன்பின்னர் அவைகளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Group என்ற (படம்-1) கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
 
 

  படம்-1
  அதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> Group  =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது Control+Shift+Gஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக
  இவ்வாறு உருவாக்கபட்ட குழுவை பிரிப்பதற்காக குழுவாக சேர்க்கபட்ட பொருட்களின் மீது  இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் unGroup என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக
  அதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> unGroup  =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  அல்லது Control+Shift+Gஆகிய மூன்று விசைகளை சேர்த்து அழுத்துக
  குழுவாக வரைபொருட்களை சேர்த்தபின் தேவையெனில் குழுவிலுள்ள இவைகளை தனித்தனியாக மாறுதல்கள் செய்யமுடியும்   அதற்காக  அக்குழுவின்மீது   இடம்ச சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் EnterGroup என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக  அல்லது சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக பின்னர் ஒவ்வொரு வரைபொருளாக தெரிவுசெய்து நாம்விரும்பியவாறு மாறுதல்கள் செய்து கொள்க
 இவ்வாறு மாறுதல்கள் செய்தபின் வெளியேறுவதற்கு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில்  Exit groupஎன்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது இந்த குழுவிற்கு வெளியே இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக வரை பொருட்களை ஒன்று சேர்த்து குழுவிற்குள் மற்றொறு குழு nested என்றவாறும் உருவாக்க முடியும்
 ஒன்றாக இணைத்தல்(combining): மேலே குழுவாக சேர்ப்பதற்கான முதல்படிமுறையை அப்படியே பின்பற்றுக
 அதன்பின்னர்  அவைகளின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில்  combine என்ற (படம்-1)கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக

 படம்-2
  அதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=>combining =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக  இவ்வாறு ஒருங்கிணைக்கும்போது அதன் உறுப்பு வரைபொருட்களாநது அவைகளுடைய தனித்தன்மை இழந்து புதிய உருவின் (படம்-2) தன்மையாக மாறிவிடும்  பின்னர்   மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளை களில் modify=>break =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியவுடன் புதிய திலிருந்து பிரிந்து செல்லுமேதவிர ஒன்றாக சேருவதற்குமுன் இருந்த line thickness, colors, area propertiesஆகிய தனித்தன்மை அப்படியே பிரிந்து செல்லாது
 ஒன்றுக்குமேற்பட்ட வரைபொருட்களை தெரிவுசெய்து கொண்டு  Merging, subtracting, intersecting  ஆகிய மூன்று (படம்-3)வழிகளில்  ஒன்றிணைத்தல் செயலை செய்யமுடியும்
 
படம்-3

    இதுoriginal  இது Merg     இதுsubtract    இதுintersect  (படம்-3)ஆகும்
 ஒரு நீள்வட்டத்தையும் செவ்வகத்தையும் ஒன்றின்மீது ஒன்றாக ஏறியவாறு வரைந்தபின் அவைஇரண்டையும தெரிவு செய்துகொணடு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் shapes என்ற கட்டளையையும் பின்னர் விரியும் சிறு பட்டியில்substract  என்பதையும் தெரிவுசெய்து சொடுக்குக   அதன்பிறகு இறுதி உருவம் படம்-4-ல் உள்ளவாறு அமையும்

 
படம்-4
 இவ்வாறு வரை பொருட்களை Combine அல்லது merge செய்யும்போது  அவ்வரை பொருட்கள் எது முன்பக்கம் உள்ளதோ அல்லது எது பின்பக்கம் உள்ளதோ அதற்கேற்றாற்போன்று (படம்-5) இறுதி உருவம் அமையும்
       

 படம்-5
 அவைகளின் இருப்பிடத்தின் நிலையை முன்பின் மாற்றியமைப்பதற்கு வரை கருவிகளின் பட்டையில் இருக்கும் position என்ற(படம்-6) கருவிகளின் பட்டை பயன்படுகின்றது 

 படம்-6
வரைபொருட்களின் இருப்பிடத்தை சரிசெய்து அமைப்பதற்குவரைகருவிகளின் பட்டையில் இருக்கும் align என்ற(படம்-7) கருவிகளின் பட்டை பயன்படுகின்றது

 படம்-7
 இருவரைபொருட்களுக்கிடையேயான இடைவெளி எவ்வளவு இருக்கவேண்டும் எவ்வாறு இருக்கவேண்டும் என அமைப்பதற்கு Distribution என்ற கட்டலை பயன்படுகின்றது   இதனை செயல்படுத்துவதற்காக குழுவாக சேர்க்கபட்ட பொருட்களின் மீது  இடம்  சுட்டியை வைத்து சுட்டியன் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Distribution என்ற   தெரிவுசெய்து சொடுக்குக
  அதற்கு பதிலாக மேலே கட்டளைபட்டையிலுள்ள கட்டளைகளில் modify=> Distribution  =>  என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக
  
படம்-8
 உடன்  Distribution என்ற உரையாடல் பெட்டியொன்று (படம்-8)திரையில் தோன்றிடும் வரைபொருட்களுக்கிடையே இடைவெளி படுக்கைவசமாக தேவையெனில் அதிலுள்ள horizontal என்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் ஒன்றினையும் வரைபொருட்களுக்கிடையே இடைவெளி நெடுக்கைவசமாக தேவையெனில் அதிலுள்ள verticalஎன்பதன்கீழுள்ள வாய்ப்புகளில் ஒன்றினையும்  தெரிவுசெய்து கொண்டுok  என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கு