Wednesday, February 13, 2013

ஓப்பன் ஆஃபிஸ் தொடர்-பகுதி-82- ஓப்பன் ஆஃபிஸ் பேஸில் வினாவை உருவாக்குதல்


 நாம் முந்தைய தொடர்களில்கூறியவாறு ஓப்பன் ஆஃபிஸ் பேஸில் ஒரு அட்டவணையை உருவாக்கி அதில் தேவையான தரவுகளை சேமித்து வைத்துள்ளதாக கொள்வோம்
இதில் குறிப்பிட்ட தரவுகள் அல்லது நிபந்தனைக்குட்பட்ட தரவுகளை திரையில் காண்பதற்கு உதவுவதே இந்த வினா உருவாக்குவதாகும் முதலில் வினா உருவாக்கிடவிரும்பும் தரவுதளத்தை திறந்து கொள்க பின் இந்த வினா எழுப்புவதற்காக இடதுபுறபலகத்தின் Data baseஎன்பதன் கீழுள்ள பொருட்களில் queryஎன்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

படம்-1
உடன் வலதுபுறபலகத்தில் 1Create Query in Design view ,2 Use Wizard to Create query, 3 Create Query in SQL view ஆகிய மூன்று வகையான வாய்ப்புகளில் இந்த வினாவை உருவாக்க முடியும் என பட்டியலிடும்
அதில் முதல் வாய்ப்பான 1Create Query in Design view என்பதை தெரிவுசெய்து சொடுக்கிய வுடன் விரியும் Design view என்ற சாளரத்தின் கீழ்பகுதி பலகமானது வினாவை வடிவமைப்பதற்கானதாகும்
நாம் கீழ்பகுதியில் வடிவமைப்பதற்கேற்ப வினா உருவாகும் மேல் பகுதி பலகத்தில்Query Design பட்டை, Design பட்டை ஆகிய இரு பட்டைகள் உள்ளன முதன்முதல்வினாவை வடிவமைப்பு காட்சியில் உருவாக்கிட Add Tables என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-2

அல்லது நாம் அதிகமாக சிந்தித்து வினாஎழுப்புவதற்காக சிரமப்படாமல் ஏற்கனவே இருக்கும் அட்டவணையின் நெடுவரிசை உறுப்புகளை கொண்டு வினாவை உருவாக்குவதற்கு வசதியாக இதனோடு கூடவே Copy Table என்ற உரையாடல் பெட்டியும் தோன்றிடும் இதிலிருந்து தேவையான நெடுவரிசைகளை மட்டும் தெரிவுசெய்து Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கினால் குறிப்பிட்ட நெடுவரிசை உறுப்புகள் மட்டும் வினாவாக மேல்பகுதியின் பலகத்தில் உருவாகும்
இந்நிலையில் பின்வரும் அட்டவணையில் கண்டுள்ள விசைகளுக்கான செயல்களை தெரிந்து கொண்டு தேவையான செயல்களை செயல்படுத்தி கொள்க


செயலி விசை(Key)
ஏற்படும் செயல்கள் (Function)
F4
முன்காட்சி(Preview)
F5
வினாவை இயக்குதல்(Run Query)
F7
அட்டவணைஅல்லது வினாவை சேர்த்தல் (Add Table or Query)
இரண்டாவது வாய்ப்பான Use Wizard to Create query என்பதை தெரிவுசெய்து சொடுக்கியவுடன்
Query Wizardஎன்ற வழிகாட்டி திரையில் தோன்றிடும் இதன்மூலம் வினாவை எவ்வாறு உருவாக்குவதுஎன தெரியாத புதியவர்கள் இதில் உள்ளவைகளில் தேவையான அட்டவணையையும் அதில் தேவையான புலங்களையும் இந்த வழிகாட்டியின் எட்டு படிமுறைகளை பின்பற்றி உருவாக்கி பயன்படுத்தி கொள்க
படம்-3
மூன்றாவது வாய்ப்பு நேரடியாக SQL கூற்றினை SQL view என்ற திரையில் வினாவாக உருவாக்குவதாகும் இந்த வாய்ப்பை தரவுதளத்தை பற்றி சிறிது அனுபவம் பெற்ற பிறகு பயன்படுத்தி கொள்க
ஒரு அட்டவணையின் புலத்தின் பெயர் மற்றொரு அட்டவணையிலும் இருக்குமாயின் அதனை தொடர்பு அல்லது உறவு வினாவின் மூலம் காணலாம் அதாவது ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட பொருட்களை கொள்முதல் செய்வதாக கொள்வோம் இங்கு வாடிக்கையாளர் என ஒன்றும் கொள்முதல் செய்யும் பொருட்களின் பட்டியல் என இரண்டாவதும் ஆக இரு அட்டவணைகள் உள்ளன .உதாரணமாக Customer table என்ற அட்டவணையிலிருந்து Item-Number என்ற புலத்தினை இடம் சுட்டியால் தெரிவுசெய்து பிடித்துகொண்டு அப்படியே Item table இலில் இடம்சுட்டியை கொண்டு சென்று Item-Number என்ற புலத்தில் விட்டிடுக உடன் இரு அட்டவணையும் ஒரு தொடர்பு கோட்டின்மூலம் இணைக்கபடும்
பின் இந்த தொடர்பு கோட்டினை இடம்சுட்டியால் தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியிலிருந்து Insert=>New Relation =>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் Relations என்ற உரையாடல் பெட்டியில் புதிய உறவை/இணைப்பை உருவாக்கி கொள்க
மேலும் தேவையான புலங்களையும் AND என்பது போன்ற பூலியன்களையும் நாம் உருவாக்கவிருக்கும் வினாவில் பயன்படு்த்தி கொள்க
இந்த வினா உருவாக்குவதை ஒரு சிறு எடுத்துகாட்டின் மூலம் இப்போது காண்போம்
Item என்ற அட்டவணையில் Item_No என்ற புலமும் மேலும் பல புலங்களும் Suppliers என்ற அட்டவணையில் Supplier_Name என்ற புலமும் மேலும் பல புலங்களும் உள்ளதாகவும் கூடுதலாக இவ்விரு அட்டவணைகளிலும் Supplier_No என்ற புலம் பொதுவானதாக உள்ளதாக கொள்வோம் இந்த இரு அட்டவணைகளிலிருந்து வாடிக்கையாளர்களில் மூன்றிற்கு மேற்பட்ட பொருட்களை அனுப்பிவைப்பவர்களை காண பின்வரும் படிமுறைகளை பின்பற்றிடுக
1 வினா வடிவமைப்பு திரையில் Item Suppliers ஆகிய இரு அட்டவணைகளையும் உள்ளிணைத்துகொள்க
2 இரு அட்டவணைகளிலும் ஏற்கனவே தொடர்பு/உறவு குறிப்பிடபடாமல் இருந்தால் Supplier_No என்ற புலம் பொதுவானதாக உள்ளதாக இணைப்பு செய்திடுக
3 Item என்ற அட்டவணையில் Item_No என்ற புலத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்கியிபின் தோன்றிடும் சுழ்நிலை பட்டியை பயன்படுத்தி Function line ஐ தோன்ற செய்க பின்னர் Count function என்பதை இந்த புலத்திற்கு தெரிவுசெய்க
4 அதில் >3 என்ற நிபந்தனையை உள்ளீடுசெய்து காட்சியாக காணும் புலங்களை காண்பதற்கேற்ப disable என்பதை தெரிவுசெய்து கொள்க
5 Suppliers என்ற அட்டவணையில்Supplier_Nameஎன்ற புலத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்கியபின் தோன்றிடும் சுழ்நிலை பட்டியில் Group functionஐ தெரிவுசெய்து கொள்க
6 தற்போது நாம் உருவாக்கிய வினாவை இயக்கி பார்த்திடுக
பொருளின் விலையும் ( individual price of an article) பொருள் வழங்கியோர் எண்ணின் புலமும் (Supplier_No) மேலே கொடு்ததுள்ள இருஅட்டவணைகளில் Item என்ற அட்டவணையில் இருந்தால் பின்வரும் வினாமூலம் பொருளின் சராசரி விலையை காணலாம்
1 வினா வடிவமைப்பு திரையில் Item என்ற அட்டவணையை உள்ளிணைத்துகொள்க
2 "Price" , "Supplier_No" ஆகிய இரு புலங்களை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்குக
3 உடன் தோன்றிடும் சுழ்நிலை பட்டியை பயன்படுத்தி Function line ஐ தோன்ற செய்க பின்னர் Average functionPrice என்ற புலத்தில் தெரிவுசெய்க
4 அல்லது alias name என்பதை பயன்படுத்தியும் Average functionஐ தெரிவுசெய்து கொள்ளமுடியும்
5 Supplier_No என்ற புலத்தை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுற பொத்தானை இருமுறை சொடுக்கியபின் தோன்றிடும் சுழ்நிலை பட்டியில் Group functionஐ தெரிவுசெய்து கொள்க
6 தற்போது நாம் உருவாக்கிய வினாவை இயக்கி பார்த்திடுக

No comments:

Post a Comment