Thursday, May 23, 2013

ஓப்பன் ஆஃபிஸ் தொடர் -பகுதி -91 இணைய பக்கத்தை உருவாக்குதல்




  ஓப்பன் ஆஃபிஸின் ஆவணங்களில் உரையை அல்லது எழுத்துகளை கொண்டு இணைய முகவரியை அல்லது யூஆர்எல் முகவரியை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை அழுத்திடவுடன் அச்சொற்றொடரை இளநீலவண்ணமாகவும்கீழ்கோடிட்டும்  மேல்மீட்பு முகவரியாக தானாகவே உருமாறி தோன்றுமாறு செய்யவேண்டும் அவ்வாறு உருமாறவில்லையெனில் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => AutoCorrectOption =>Options => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக .உடன் தோன்றிடும் AutoCorrect என்ற உரையாடல் பெட்டியில்Options என்ற தாவிபொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி அந்த திரையை தோன்றசெய்க பின்னர் Options என்ற தாவியின் திரையில்(படம்-91-1) URL Recognition என்ற வாய்ப்பை தெரிவு செய்து கொண்டு okஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-91-1
இவ்வாறு தானாகவே உருமாறவேண்டாம் என எண்ணினால் உடன் மேலே கட்டளைபட்டையிலுள்ள Edit => Undo Insert=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து செயற்படுத்துக அல்லது Ctrl+Zஎன்றவாறு விசைப்பலகையிலுள்ள விசைகளை சேர்த்து அழுத்துக உடன் இந்த தானியிங்கி செயல் நிறுத்தம் செய்யபட்டுவிடும்
  அல்லது தற்போது ஆவணங்களில் உள்ள உரையை அல்லது எழுத்துகளை இணைய முகவரியாக அல்லது யூஆர்எல் முகவரியாக மாற்றம் செய்வதற்காக மேலே கருவிபட்டையிலுள்ள இதற்கான  

என்ற உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது மேலே கட்டளைபட்டையிலுள்ள Insert => Hyperlink=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக
உடன் திரையில் விரியும்(படம்-91-2) Hyperlink என்ற உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் உள்ள Internet,Mail & News,Document,New documentஆகியவாய்ப்புகளில் நாம் தெரிவுசெய்யும் வாய்ப்புகளுக்கேற்ப வலதுபுற பலகத்தின் தோற்றம் மாறியமையும் முதல் வாய்ப்பு http:// எனத்தொடங்கும்  ( Web, FTP , Telnet)ஆகிய இணயமுகவரி உள்ளீடு செய்வதாகும்.
 இரண்டாவது வாய்ப்பு Mail , News ஆகிய விவரங்களை குறிப்பதாகும்  மூன்றாவது வாய்ப்பு  ஆனது நடப்பிலுள்ள குறிப்பிட்ட ஆவணத்தோடு இணைப்பை ஏற்படுத்தஉதவும் வசதியாகும் நான்காவது வாய்ப்பு புதிய ஆவணத்திற்கான இணைப்பை ஏற்படுத்தஉதவும் வசதியாகும்
இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலிருக்கும் settings என்ற பகுதி மேலேகூறிய அனைத்து வாய்ப்பிற்கும் பொதுவான அமைப்பாகும்  இவைகளில் தேவையான வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்தி மேல் இணைப்பு உருவாக்கியபின் Apply,ok ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்கி  தற்போது ஆவணங்களில் உள்ள உரையை அல்லது எழுத்துகளை இணைய முகவரியாக அல்லது யூஆர்எல் முகவரியாக உருமாற்றம் செய்துகொள்க

படம்-91-2
ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தை ஒரு இணையபக்கமாக உருமாற்றுதல்
 ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தின் ஒற்றை பக்கத்தை இணையபக்கமாக உருமாற்றுவதற்கான மிக எளியவழி மேலே கட்டளை பட்டையிலுள்ள View => Web Layout=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துவதுதான் அல்லது மேலேகட்டளைபட்டையிலுள்ள File => SaveAs=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தியபின் தோன்றிடும்  Save As என்ற உரையாடல் பெட்டியில் HTML Document என்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவு செய்து கொண்ட பின்னர் வழக்கமாக கோப்பினை சேமிப்பதற்கான வழிமுறைகளை அப்படியே பின்பற்றிடுக 
ஒன்றுக்குமேற்பட்ட  ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டர் ஆவணத்தின் பக்கங்களை இணைய பக்கங்களாக உருமாற்றிட
முதலில் நாம் உருமாற்றிட விரும்பும் அந்த ஆவணத்தின்  தலைப்புகள் ஒரே பாவணையாக(style) இருக்கின்றதாவென உறுதிபடுத்திகொள்க
 பின்னர் மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Send => Create HTML Document=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
 உடன்தோன்றிடும் உரையாடல் பெட்டியில் (படம்-91-3)  இந்த கோப்பிற்கான பெயரை skwebpageஎன்றவாறு தெரிவுசெய்து கொள்க பிறகு படிமுறை 1-ல் கூறியவாறு இந்த ஆவணத்தின் பாவணையை(style) தெரிவுசெய்து கொள்க 
அதன்பின்னர் Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஒன்றுக்கு மேற்பட்டஇணைய பக்கங்களாக உருமாற்றி சேமித்து கொள்க

படம்-91-3
வித்தகரை(wizard) பயன்படுத்தி இணைய பக்கங்களாக உருமாற்றுதல்
 இதற்காக மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Wizards => Web Page=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக
 உடன் திரையில் தோன்றிடும் Web Wizards என்ற உரையாடல் பெட்டியில் இயல்புநிலையில் உள்ள அல்லது தேவையான அமைவை (settings) தெரிவுசெய்து கொண்டு Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
  அடுத்து தோன்றிடும் அடுத்த படிமுறையின் திரையில்(படம்-91-4) Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  தேவையான ஆவணத்தை  தேடிபிடித்து தெரிவுசெய்து கொண்டு Title, Summary, Author informationஆகிய விவரங்களை அந்த ஆவணத்தின் பண்பியல்பிலிருந்து    தெரிவு செய்து கொள்க தேவையெனில் இவைகளை மாறுதல் செய்து திருத்தி அமைத்துகொள்க பின்னர்Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக


படம்-91-4
 பின்னர் தோன்றிடும் திரையில் தேவையான புறவடிவமைப்பிற்காக(layout) தயார்நிலையில் இருக்கும் புறவடிவமைப்பு பெட்டிகளில்(layoutbox) நமக்கு விருப்பமான ஒன்றை தெரிவுசெய்து கொண்டு Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  
 அடுத்து தோன்றிடும் திரையில் பட்டியலிடப்படும் விவரங்கள் எவையெவை என்றும் திரையின் துல்லியத்தையும் தெரிவுசெய்துகொண்டு Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 பின்னர் விரியும் திரையில் இணைய பக்கத்தின் பாவணை(style) வண்ணங்களின் கலவை(color combinations)  ஆகிய விவரங்களை அதற்கான கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து தெரிவுசெய்து கொள்க அவ்வாறே இணைய பக்கத்தின் பின்புல வண்ணம், உருவதோற்றம் ஆகியவற்றை அதற்கான பட்டியல்களிலிருந்து தெரிவுசெய்துகொண்டு Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
 அடுத்து தோன்றிடும் திரையில் Title . HTML Metadataஆகிய பொது விவரங்களை உள்ளீடு செய்துகொண்டுNext.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
இறுதியாக தோன்றிடும் திரையில்(படம்-91-5) தேவையெனில் முன்காட்சியாக கண்டு திருப்பதியுற்றால் இந்த கோப்பினை சேமிக்கும் இடத்தை தெரிவுசெய்து கொண்டு  Finish.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக  

படம்-91-5
ஓப்பன் ஆஃபிஸின் கால்க் விரிதாளை  இணைய பக்கங்களாக உருமாற்றுதல்
 மேலேகட்டளைபட்டையிலுள்ள File => SaveAs=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தியபின் தோன்றிடும்  SaveAs என்ற உரையாடல் பெட்டியில் HTML Documentஎன்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவுசெய்துகொண்ட பின்னர் வழக்கமாக கோப்பினை சேமிப்பதற்கான வழிமுறைகளை அப்படியே பின்பற்றிடுக
 அல்லது மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Wizards => Web Page=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக பின்னர் ஒவ்வொரு படிமுறையிலும் Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் கூறிய படிமுறைகளை பின்பற்றிடுக
 ஓப்பன் ஆஃபிஸின் பிரஸன்டேசன் கோப்பினை இணைய பக்கங்களாக உருமாற்றுதல்
 மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Export=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்தியபின் தோன்றிடும்  Export என்ற உரையாடல் பெட்டியில் macromedia Flash (.sfh)என்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவுசெய்துகொண்ட பின்னர் வழக்கமாக கோப்பினை சேமிப்பதற்கான வழிமுறைகளை அப்படியே பின்பற்றிடுக
 அல்லது மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Export => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக பின்னர் தோன்றிடும் Export என்ற உரையாடல் பெட்டியில்   HTML Document என்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவுசெய்து கொள்க 
அதன் பின்னர் இந்த கோப்பு சேமிக்கவிருக்கும் மடிப்பகம்  கோப்பின் பெயர் ஆகியவற்றை தெரிவுசெய்து கொண்டு  Save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்  HTML Export என்ற வித்தகர் திரையில் நமக்கு வழிகாட்டிட தோன்றிடுவார்  பின்னர் ஒவ்வொரு படிமுறையிலும் Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் கூறிய படிமுறைகளை பின்பற்றிடுக  இறுதியாக  திருப்தியுற்றால் createஎன்ற (படம்-91-6)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  இணைய பக்கங்களாக உருமாற்றிகொள்க

படம்-91-6
ஓப்பன்ஆஃபிஸின் ட்ரா ஆவணத்தை இணைய பக்கங்களாக உருமாற்றுதல்
 மேலேகட்டளைபட்டையிலுள்ள File => Export => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக தோன்றிடும் Export என்ற உரையாடல் பெட்டியில்   HTML Document என்று கோப்பு அமைப்பின் வகையை அதற்கான வாய்ப்பில் தெரிவுசெய்து கொள்க
வித்தகரை பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு படிமுறையிலும் Next.என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி ஓப்பன் ஆஃபிஸ் ரைட்டரில் கூறிய படிமுறைகளை பின்பற்றிடுக  இறுதியாக  திருப்தியுற்றால் createஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி  இணைய பக்கங்களாக உருமாற்றிகொள்க

No comments:

Post a Comment