கடந்த ஓப்பன் ஆஃபிஸ்-94 தொடரில் கண்டவாறு கருவிபட்டியை நாம் விரும்பியவாறு மாற்றியமைக்கும்போது அதிலுள்ள தனித்தனி கருவிகளின் உருவபொத்தான்களின் உருவையும் (குறிப்பு. இவை கட்டளை பட்டி போன்று சொற்களாக இருக்காதவையாகும்) மாற்றியமைத்திடலாம் இங்கு தொலைநகல் அச்சுபொறி கட்டளைக்கான உருவபொத்தானை கருவிபட்டியில் சேர்ப்பதாக கொள்வோம் அதற்காக முதலில் நம்முடைய கணினியில் fax driver என்பது நிறுவ பட்டுள்ளதாவென்றும் fax modemஇணைக்கபட்டுள்ளதா என்றும் உறுதி செய்துகொள்க
பின்னர் மேலே கட்டளைபட்டையிலுள்ள Tools => Options => Open Office.org Writer => Print => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் விரியும் Options - Open Office.org Writer - Print என்ற (படம்-1)உரையாடல் பெட்டியில் fax என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் fax என்பதை தெரிவுசெய்துகொண்டு OKஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
படம்-1
பின்னர் நடப்பில் இருக்கும் கருவிபட்டியின் கடைசியாக இருக்கும் அம்புக்குறியை தெரிவு செய்துசொடுக்கியவுடன் விரியும் கட்டளைபட்டியிலிருந்து Customize Toolbar என்றவாறு கட்டளையை தெரிவுசெய்துசொடுக்குக அல்லது மேலேகட்டளை பட்டையிலிருந்து View => Toolbar => Customize=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலே கட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும்Customize என்ற திரையில் Toolbars என்ற திரையை தோன்றிடசெய்க
இதில் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன் விரியும் Add commands என்ற (படம்-2)உரையாடல் பெட்டியில் மேல்நோக்கு அல்லது கீழ்நோக்கு அம்புக்குறியை தேவையானவாறு பயன்படுத்தி நகர்த்தி Documents என்பதை category என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டும் Send Default Fax என்ற கட்டளையை commands என்றபகுதியிலிருந்து தெரிவு செய்து கொண்டும் Addஎன்ற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக
படம்-2
உடன் Customize என்ற திரையில் இந்த உருவபொத்தான் ஆனது கருவிபட்டியில் நாம் விரும்பும் இடத்தில் மிக்சசரியாக அமர்ந்திடுமாறு சரிசெய்து கொண்டுOKஎன்ற பொத்தானையும் பின்னர் Close என்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்கி இந்த உரையாடல் பெட்டியை மூடிவிடுக இப்போது கருவிபெட்டியில் நாம் சேர்த்த Send Default Fax என்ற (படம்-3)உருவபொத்தான் வீற்றிருப்பதை காணலாம்
படம்-3
அவ்வாறே நாம் செயற்படுத்திட விரும்பும் கட்டளையானது நாம் விரும்பிய குறுக்கு வழி விசையின் வாயிலாக செயற்படுத்திடுவதற்காக கட்டமைத்திட மேலேகட்டளை பட்டையிலிருந்து View => Toolbar => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக அல்லது திரையின் மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools => Customize=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் தோன்றிடும் Customize என்ற திரையில் Keyboard என்ற திரையை தோன்றிடசெய்க பின்னர் நாம் செய்திடும் மாறுதல்கள் ஓப்பன் ஆஃபிஸின் ரைட்டரில் மட்டுமெனில் writerஎன்ற வானொலி பொத்தானையும் ஓப்பன் ஆஃபிஸின் அனைத்து ஆவணங்களிலும் எனில் OpenOffice.org என்ற வானொலி பொத்தானையும் தெரிவுசெய்துகொள்க அதன்பின்னர் தேவையான செயலியை Functionsஎன்பதன்கீழுள்ள Category , Functionஆகியவற்றின் பட்டியலின் வாயிலாக தெரிவுசெய்துகொள்க மேலும் இதனை செயற்படுத்துவதற்கான குறுக்குவழிவிசையை தெரிவு செய்வதற்காக Shortcut keys என்பதன்கீழுள்ள Ctrl+3 என்றவாறு (படம்-4) ஏதேனுமொரு குறுக்குவழிவிசையை தெரிவு செய்து கொண்டு முதலில் Modify என்ற பொத்தானையும் பின்னர் OKஎன்ற பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக
படம்-4
இதன்பின்னர் இந்த மாறுதல்கள் வேறு ஆவணங்களிலும் செயல்படசெய்வதற்காக இதே உரையாடல் பெட்டியில் saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் விரியும் Save Keyboard Configurationஎன்ற உரையால் பெட்டியில் கோப்பின்வகை ,பெயர் ஆகியவற்றை தெரிவுசெய்துகொண்டு saveஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்துகொள்க
இந்த ஓப்பன் ஆஃபிஸில் மேலும் தேவையான புதிய வசதிகளை பெறவிரும்பினால் http://extensions.services.openoffice.org/.என்ற இணைய தளத்திற்கு சென்று கட்டணம் எதுவுமின்றி தேவையான புதிய விரிவாக்க வசதிகளை பதிவிறக்கம் செய்து நிறுவி பயன்படுத்திகொள்க
இவ்வாறான பதிவிறக்கம் செய்யபட்ட விரிவாக்க வசதிகளை நிறுவி பயன்படுத்திட மேலேகட்டளை பட்டையிலிருந்து Tools => Extension Manager => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்தோன்றிடும் Extension Manager என்ற திரையில் Addஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியபின் விரியும் திரையில் நாம் பதிவிறக்கம் செய்த விரிவாக்க வசதிக்கான பயன்பாட்டு கோப்பினை தெரிவுசெய்துகொண்டுopen என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த விரிவாக்க வசதி நம்முடைய ஓப்பன் ஆஃபிஸில் நிறுவபட்டுவிடும்
No comments:
Post a Comment