நாம் இதுவரையிலும் அதாவது ஓப்பன் ஆஃபிஸ் பற்றிய கடந்த 95 தொடர்களிலும் இந்த ஓப்பன் ஆஃபிஸ் என்ற பயன்பாட்டிலுள்ள நம்முடைய பல்வேறுபணிகளுக்காகஉதவிடும் பயன்பாடுகளை மட்டுமே பார்த்து வந்தோம் ஆயினும் விபிஏ போன்று ஒரு நிரல்தொடரை அல்லது கட்டளைகளின் குறிமுறைகளைகூட இந்த ஓப்பன் ஆஃபிஸின் OpenOffice.org Basic என்பதன் மூலம் உருவாக்கிடமுடியும் என்பதை இனிவரும் தொடர்களில் நாம் பார்க்கவிருக்கின்றோம்
விசுவல் பேஸிக் அல்லது விசுவல் பேஸிக் அப்ளிகேசன் ஆகியவற்றை பற்றி அறிமுகம் ஆனவர்கள் மிகஎளிதாக இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை உடனடியாக அறிந்து கொள்ளமுடியும் புதியவர்கள் மிகவிரைவாக இதனை அறிந்து கொண்டு தங்களின் நிரல்தொடர் எழுதும் திறனை வளர்த்துகொண்டு சிறந்த நிரல்தொடர்வல்லுநராக தங்களை மேம்படுத்திகொள்ளமுடியும்
இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது 1. மாறி, செயலி,கண்ணி ஆகியவற்றை வரையறுத்திட The language of OpenOffice.org Basic, 2. எண்களையும் சரங்களையும் தொகுத்திடும் செயலிகளை கொண்ட runtime library, 3.பயன்பாடுகளை மாறுதல் செய்ய, அச்சிட ,சேமித்திட இடைமுகம் செய்திட OpenOffice.org API (Application Programming Interface), 4.கட்டுப்பாடுகளையும் நிகழ்வுகளையும் கையாண்டிட Dialog Editor , ஆகிய நான்கு வகை உட்கட்டமைப்பை கொண்டதாகும்
பொதுவாக விபிஏ ஆனது இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் முதலிரண்டுடன் மட்டும் இடைமுகம் செய்ய அனுமதிக்கின்றது
இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கை பயன்படுத்தவிழைபவர்கள் விபிஏபோன்று அதற்கஎன தனியானதொரு பயன்பாட்டினை பதிவிறக்கம் செய்து அல்லது பணம் கொடுத்து வாங்கி நம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்திடவேண்டும் என கட்டுபாடு எதுவுமில்லாமல் இதிலேயே மேக்ரோவை உருவாக்கி பரிசோதித்து பார்ப்பதற்கு உதவும் (integrated development environment (IDE)), மேக்ரோவை இயக்கிபார்த்திட மொழிமாற்றி( interpreter),மற்ற ஆவணங்களுடன் இடைமுகம் செய்தல்( interfaces) ஆகிய பணிகளை சுலபமாக செய்திடமுடியும்
இது ஜாவா,சி++ போன்று சிக்கலானதன்று மிகஎளிதானது என்ற தகவலை மனதில் கொள்க
சிமொழிபேன்று GoTo and GoSub. என்பனபோன்ற தொடக்கநிலை கட்டபாட்டு கட்டமைப்புகள் எதுவும் இதில் இல்லை
பொருள் நோக்கு நிரல்தொடரின் (object-oriented programming) பயனை நாம் இதில் பெறமுடியும்
மேலும் ஜாவா, சி,சி++ போன்ற மொழிகளில் எழுதப்படும் கட்டளை வரிகளை முதலிலமொழிமாற்றம் செய்தபின் அந்த திரைக்கு வெளியே வந்து இதனை தனியாக இயக்கி சரியாக செயல்படுகின்றதாவென சரிபார்த்திடவேண்டும் ஆனால் இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் அவ்வாறான கட்டுபாடுகள் எதுவுமில்லாமல் கட்டளைவரிகளை மொழிமாற்றம் செய்தவுடன் தானாகவே இதே சாளரத்தில் அவை செயல்படுத்தபட்டால் என்ன விளைவுஏற்படும் என தானாகவே இயங்கிடசெய்து சரிபார்த்திடமுடியும் இது முதலில் குறிமுறைகளில் ஏதேனும் இலக்கண பிழை உள்ளதாவென சரிபார்த்தபின்னர் வரிவரியாக மொழிமாற்றம் செய்து இயக்கி சரிபார்க்கின்றது
இதில் ஒவ்வொரு வரியும் தனித்தனியானதொரு கட்டளையாக அதாவாது கணித வெளிப்பாடுகள் ,கண்ணிகள் செயலிகள், ஆகிய அனைத்தும் செயல்படுத்தபடுகின்றது
LongExpression = (Expression1 * Expression2) + _(Expression3 * Expression4) + _
(Expression5 * Expression6) + _(Expression7 * Expression8)
ஒரேவரிக்குள் ஒருகட்டளையானது முடிந்திட வேண்டும் என்பதே இந்த ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கிற்கும் ஜாவா, சி,சி++ போன்ற மொழிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடாகும் ஒருவரியில் குறிப்பிட்ட கட்டளை முடியவில்லையெனில் ஒரு சிறு அடிக்கோடுடன் அதேவரியின் கட்டளை அடுத்தவரியிலும் தொடரும் என்பதே இதன் தனித்தன்மையாகும்
இந்த அடிக்கோட்டினை தெடர்ந்து காலியான இடம் அல்லது தாவி,குறிப்புகள் இருக்ககூடாது அவ்வாறு இருந்தால் குறிப்பிட்ட வரியானது பிழையானது என காண்பித்துவிடும்
அந்த ஒரேவரியில் உள்ள பல கணித வெளிப்பாடுகளை முக்காற்புள்ளிகொண்டு பிரித்திடலாம்
a = 1 : a = a + 1 : a = a + 1
மேலும் இந்த கட்டளைவரிகளை பற்றிய விளக்ககுறிப்புகளை ஒற்றை மேற்கோள்குறியுடன் குறிப்பிடவேண்டும்
Dim A ' This is a comment for variable A
அல்லது Rem என்ற சொற்களுக்கு இடையில் குறிப்பிடவேண்டும்
Rem This comment is introduce by the keyword Rem
இந்த விளக்ககுறிப்புகள் ஒன்றிற்குமேற்பட்ட வரிகளுடன் இருந்தால் ஒவ்வொரு வரியும் ஒற்றை மேற்கோள்குறியுடன் குறிப்பிடவேண்டும்
Dim B ' This comment for variable B is relatively long
' and stretches over several lines.
ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கில் ஆயிரத்திற்கும் அதிகமான அடையாளக்குறியீடுகள் உள்ளன
பெரிய எழுத்து சிறியஎழுத்து என்ற வேறுபாடுகள் எதுவும் இதில் இல்லை அதிகபட்சம் 255 எழுத்துகள் இருக்கலாம் சிறப்பு குறியீடுகள் கொண்டதன்று இலத்தீன் எண்கள் அடிக்கோடுகள் மட்டுமே இந்த அடையாளக்குறியீட்டில் இருக்கும் மாதிரி அடையாளக்குறிகள் பின்வருமாறு
Surname ' Correct
Surname5 ' Correct (number 5 is not the first digit)
First Name ' Incorrect (spaces are not permitted)
DejaVu ' Incorrect (letters such as e, a are not permitted)
5Surnames ' Incorrect (the first character must not be a number)
First,Name ' Incorrect (commas and full stops are not permitted)
அடைப்புகுறிக்குள் காலிஇடமும் சிறப்புகுறியீடுகளும் அனுமதிக்கபடும்
Dim [First Name] As String 'Space accepted in square brackets
Dim [DejaVu] As Integer 'Special characters in square brackets
மாறியை வெளிப்படையாக ஒரு கட்டளை தொடருக்குள் அறிவிப்பது சிறந்தது
Dim MyVar1, MyVar2 As Integer
என்றவாறு பலமாறிகளை ஒரேவரிக்குள் அறிவிப்பு செய்யலாம்
No comments:
Post a Comment