பொதுவாக பெரும்பாலான செயலிகளின் வாயிலாக ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது விசுவல் பேஸிக்குடன்ஒத்தியங்குக்கின்றது. அவைகளுள் ஒருசில பின்வருமாறு
திரையின் உள்ளீட்டு வெளியீட்டு செயலிகள்
ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது அறிக்கைகளின் மூலமாகவும் செயலிகளின் மூலமாகவும் திரையில் தகவல்களை பிரதிபலிக்கசெய்தல் பயனாளரிடமிருந்து தகவல்களை பெறுதல் ஆகிய செயல்களை செய்கின்றது உதாரணமாக அச்சிடும்பணிக்கான செய்திகளை திரையில் பிரதிபலிக்கசெய்து பயனாளரிடமிருந்து பெறும் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல், செய்தி பெட்டியை (MsgBox) பிரதிபலிக்கசெய்து OK, Cancel, Yes ,No ஆகிய பொத்தான்களை பயனாளர்கள் தெரிவுசெய்து சொடுக்குவதற்கேற்ப செயல்படுதல் , அவ்வாறே உள்ளீட்டு பெட்டியை (InputBox )பிரதிபலிக்கசெய்து பயனாளர்கள் தெரிவுசெய்வதற்கேற்ப செயல்படுதல் ஆகிய செயல்கள் விசுவல் பேசிக்கின் செயலிகளுடன் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் செயலிகளும் ஒத்தியங்குமாறு செய்யபட்டுள்ளன
கோப்புகளின் உள்ளீட்டு வெளியீட்டு செயலிகள்
குறிப்பிட்ட இயக்கமுறைமையில்தான் இயங்கமுடியும் என்ற கட்டுப்பாடு எதுவுமில்லாமல் விசுவல் பேஸிக் போன்றே ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கும் Function Read Directories( ) ,Sub SaveDataToFile( ) ,Function LoadDataFromFile( ) , Function CreateFolder( ) என்பன போன்ற கோப்புகளை கையாளும் உள்ளீட்டு வெளியீட்டு செயல்களை மிக எளிதாக செயல்படுத்துகின்றது
அதுமட்டுமல்லாது copy, move , remove files folders, openFileRead(), openFileWrite(), openFileReadWrite()) என்பன போன்ற கோப்புகளை கையாளும் உள்ளீட்டு வெளியீட்டு செயல்களையும் மிக எளிதாகசெயல்படுத்துகின்றது
நாளிற்கும் நேரத்திற்குமான செயலிகள்
DateSerial, DateValue, Day, Month, WeekDay, Year, Hour, Now, Second, TimeSerial, TimeValue, Date, Time, and Timer என்பன போன்ற நாளிற்கும் நேரத்திற்குமான செயலிகளை விசுவல் பேஸிக் போன்றே ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கும் செயல் படுத்துகின்றது
எண் செயலிகள்
Cos,Sin ,Tan,Atn ,Exp,Log,Sqr,Abs,Sgn என்பன போன்ற முக்கோணவியல் செயலிகளையும், எண்களின் செயலிகளையும் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது விசுவல் பேஸிக் போன்றே செயல்படுத்துகின்றது
எழுத்துகளின் செயலிகள்
மேலும் பின்வரும் எழுத்துகளை கையாளும் செயலிகளையும் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் ஆனது விசுவல் பேஸிக் போன்றே செயல்படுத்துகின்றது Asc ,Chr ,Str,LCase ,UCase ,Left returns,Mid returns ,Right returns, Trim
இயக்கநேர செயலிகள்
அதுமட்டுமின்றி CreateUnoListener, CreateUnoService, GetProcessServiceManager, HasUnoInterfaces, IsUnoStruct, EqualUnoObjects என்பன பேன்ற இயக்கநேர செயலிகளையும் விசுவல் பேஸிக் போன்று ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கும் செயல்படுத்து கின்றது .
கட்டளை செயலிக்கான உதாரணம்
மேலும் MsgBox StarDesktop.Dbg_SupportedInterfaces என்ற ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் கட்டளை செயலியானது
Dim oDesktop
oDesktop = CreateUnoService( "com.sun.star.frame.Desktop" )
MsgBox oDesktop.Dbg_SupportedInterfaces
என்ற விசுவல் பேஸிக்கின் கட்டளை செயலியை போன்று செய்தி பெட்டியை திரையில் பிரதிபலிக்கசெய்கின்றது
அலுவலக பயன்பாடுகளை கையாளுதல்
அதுமட்டுமின்றி com.sun.star.text.XTextDocument., com.sun.star.sheet.Spreadsheet DocumentSettings , com.sun.star.drawing.DrawingDocument.,
என்பன போன்ற சேவைகளின் மூலமாக அலுவலக பயன்பாடுகளின் செயல்களையும் ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் கையாளுகின்றது
No comments:
Post a Comment