ஓப்பன் ஆஃபிஸின் திரையின் மேல் பகுதியின் கட்டளை பட்டியிலுள்ள Tools=> => Macros=> Organize Macros =>OpenOffice.org Basic=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் Open Office Basic.Macros என்ற உரையாடல் பெட்டியொன்று திரையில் தோன்றிடும்
இந்த உரையாடல் பெட்டியிலுள்ள பொத்தான்களில் Run என்ற பொத்தானை கொண்டு நடப்பு மேக்ரோவிலுள்ள நிகழ்வுகளையும் துனை நிகழ்வுகளையும் இயக்குதல்( Run Macros), Close என்ற பொத்தானை கொண்டு இந்த மேக்ரோவை உருவாக்கிடும் உரையாடல் பெட்டியை மூடுதல்(Close), New என்ற பொத்தானை கொண்டு புதிய மேக்ரோவை உருவாக்குதல்(Create Macros), Assign என்ற பொத்தானை கொண்டு குறிப்பிட்ட நிகழ்விற்கு தேவையான மேக்ரோவை ஒதுக்கீடு செய்தல் (Assign Macros), Edit என்ற பொத்தானை கொண்டு ஏற்கனவே உருவாக்கிய மேக்ரோவை பதிப்பித்தல்(Edit macros) , Delete என்ற பொத்தானை கொண்டு தேவையற்ற மேக்ரோவை நீக்கம்செய்தல் (Delete Macros), , ஆகிய செயல்களையும் ,தொடர்புடைய பேஸிக் உரையாடல் நூலகங்களையும் கையாளமுடியும்
Organizer . என்ற பொத்தானை கொண்டு OpenOffice.org Basic Macro Organizer என்ற மற்றொரு உரையாடல் பெட்டியை Modules என்ற தாவியின் திரையுடன் திரையில் தோன்றசெய்யமுடியும்
இந்த OpenOffice.org Basic Macro Organizer என்ற உரையாடல் பெட்டியிலுள்ள பொத்தான்களில் Edit என்ற பொத்தானை கொண்டு ஏற்கனவே உருவாக்கிய தகவமைவுகளை பதிப்பித்தல்(Edit Modules), Close என்ற பொத்தானை கொண்டு இந்த தகவமைவுகளை உருவாக்கிடும் உரையாடல் பெட்டியை மூடுதல்(Close Modules), New என்ற பொத்தானை கொண்டு புதிய தகவமைவுகளை உருவாக்குதல்(Create Modules), , Delete என்ற பொத்தானை கொண்டு தேவையற்ற தகவமைவுகளை நீக்கம்செய்தல் (Delete Modules), , ஆகிய செயல்களை கையாளமுடியும்.
அதற்கு பதிலாக ஓப்பன் ஆஃபிஸின் திரையின் மேல் பகுதியின் கட்டளை பட்டியிலுள்ள Tools=> Macros=> Organize Dialogs => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி இதே OpenOffice.org Basic Macro Organizer என்ற உரையாடல் பெட்டியை ஆனால் Dialogsஎன்ற தாவியின் திரையுடன் திரையில் தோன்றிட செய்யமுடியும்
இந்த திரையில் மேலே கூறியவாறு உருவாக்கியதை பதிப்பித்தல்,திரையில் தோன்றி யிருப்பதை மூடுதல், புதியதை உருவாக்குதல்,தேவையற்றதை நீக்கம் செய்தல் ஆகிய செயல்களை கையாளமுடியும்.
இதே OpenOffice.org Basic Macro Organizer என்ற உரையாடல் பெட்டியிலுள்ள Libraries என்ற தாவியின் திரையை திரையில் தோன்றசெய்க. இதில் வழக்கமான நூலகங்கள் கருப்பு வண்ணத்திலும் ,படிக்கமட்டும் என்பவை சாம்பல் வண்ணத்திலும் கடவுச்சொற்களுடன் இணைப்பில் உள்ளவை திறவுகோள் உருவுடனும் தோன்றிடும் மேலும் தொடர்புடைய நூலகமானது தற்போது இருக்கும் இடத்தின் இணைப்பு முகவரியுடன் இவை பிரதிபலிக்கும்
இந்த OpenOffice.org Basic Macro Organizer என்ற உரையாடல் பெட்டியின் Libraries என்ற தாவியின் திரையிலுள்ள பொத்தான்கள் பின்வருமாறு
Edit என்ற பொத்தானை கொண்டு ஏற்கனவே உருவாக்கிய நூலகங்களை பதிப்பித்தல்(Edit Libraries), Close என்ற பொத்தானை கொண்டு இந்த நூலகங்களை உருவாக்கிடும் உரையாடல் பெட்டியை மூடுதல்(Close Libraries), New என்ற பொத்தானை கொண்டு புதியநூலகங்களை உருவாக்குதல்(Create Libraries), , Delete என்ற பொத்தானை கொண்டு தேவையற்ற நூலகங்ககளை நீக்கம்செய்தல் (Delete Libraries), ஆகிய செயல்களை கையாளமுடியும்.
அதுமட்டுமின்றி கூடுதலாக Password என்ற பொத்தானை கொண்டு குறிப்பிட்ட நூலகத்திற்கு உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்கள் மறந்து விட்டதெனில் இந்த பொத்தானை அழுத்தியவுடன் தோன்றிடும் change password என்ற சிறு உரையாடல் பெட்டியில் தேவையான வாறு கடவுச்சொற்களை மாற்றியமைத்து கொண்டு ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்தபின் குறிப்பிட்ட கடவுசொற்களை கொண்டு மட்டுமே குறிப்பிட்ட நூலகத்திற்குஉள்நுழைவுசெய்யமுடியும்
மேலும் import என்ற பொத்தானை கொண்டு கூடுதலான நூலக்கங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும் நாம் உருவாக்கிய நூலகங்களை வேறு நிகழ்விற்கு பயன்படுத்தி கொள்வதற்காக Export என்ற பொத்தான் பயன்படுகின்றது அதற்காக தேவையான நூலகத்தை உருவாக்கிய பின் இந்த Export என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் Export Basic Library என்ற சிறு உரையாடல் பெட்டியில் Export as extension, Export as Basic library ஆகிய இருவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து கொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்துகொள்க
No comments:
Post a Comment