Sunday, March 9, 2014

ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்-106


பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் பேஸிக்கின் அனைத்து தரவுகளும் XML –ன் வடிவமைப்பில் தேக்கிவைக்கபடுகின்றன. XML –ன் வெவ்வேறுவகைகளில் உள்ள libraries.dtd, module.dtd., dialog.dtd என்பனபோன்ற DTD என்றபின்னொட்டுடன்கூடிய கோப்புகளுக்குள் இவைகளை வைத்து பயன்படுத்தி கொள்ளபடுகின்றது கூடுதலாக கடவுச்சொற்களுடன் இவை பாதுகாப்பாக தேக்கிவைக்கபடுகின்றன. மேலும் script.xlc , dialog.xlc ஆகிய library container indexஆக இவைகள்தேக்கி வைக்கபடுகின்றன இவைகளின் xlc என்ற பின்னொட்டில் உள்ள lc எனும்இரு எழுத்துகளும் library container என்பதை குறிக்கின்றன. OpenOffice.org ஐ நிறுவுகை செய்திடும்போது கோப்புகளை தேக்கிவைக்கபடும் இடமும் autopilot libraries என்பவை தேக்கி வைக்கபடும் ஒரேநினைவகஇடமாகும் அதனால் இதனுடைய மூலக்குறிமுறைவரிகளை யார்வேண்டுமானாலும் படித்துவிடலாம் என பயந்துவிடாதீர்கள் இவைகள் கடவுச்சொற்களுடன் மட்டுமே தேக்கிவைக்க படுகின்றன என்ற செய்தியை மனதில் கொள்க.

autopilot .xlb libraries ஆனது user/basic/*.xlc என்ற கோப்பிற்குள் பதிவுசெய்யபடுகின்றன ஆனால் இவை share/basic என்ற இடத்தில் தேக்கிவைக்கபடுகின்றன அதனால் ஒரு network ஐ நிறுவுகையின்போதுகூட இதனை நீக்கம் செய்திடவோ தற்காலிகமாக இதன்செயலை நிறுத்தம் செய்திடவோமுடியும்

அதுமட்டுமின்றி குழப்பமில்லாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக xlb , xba ஆகிய வெவ்வேறு பின்னொட்டு பெயர்களுடனும் SmallDialog,BigDialog ஆகிய வேவ்வேறு தனித்தனி துனை கோப்பகத்திற்குள்ளும் இவை தேக்கிவைக்கபடுகின்றன. Basic libraries மட்டும் கடவுச்சொற்களுடன் தேக்கிவைக்கபடுகின்றன. நூலகபயன்பாடுகள் நேரடியாக கோப்பு அமைவிற்குள் தேக்கிவைக்கபட்டால் இந்தஆவணநூலகமானது ஆவணத்தின் கட்டுகோப்பிற்குள் தேக்கிவைக்கின்றது. இந்த ஆவணங்களில் Basic library container, dialog library container ஆகிய இரண்டும் தனித்தனியே துனைக்கோப்பகத்திற்குள் தேக்கிவைக்கபடுகின்றன இந்நிலையில் கடவுச்சொற்களுடன் உள்ளகோப்புகள் அதே பெயரில் ஓரேஇடத்தில் தேக்கிவைக்கபட்டாலும் கடவுச்சொற்களுடன் கூடிய கோப்பானது கூடுதலாக code.bin என்ற வகை கோப்புடன் சேர்த்து தேக்கிவைக்கபடுகின்றது பொதுவாக OpenOffice.org ஐ நிறுவுகை செய்திடும்போது Basic libraries ஐ இதனுடன் சேர்த்திட முதலில் *.oxt என்ற பின்னொட்டு கோப்பு கட்டுகளாக ஆக்கிடுக பின்னர் Tools => Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் Extension Manager என்ற திரையில் Add என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பிறகு நாம் விரும்பும் extension package ஐ தெரிவுசெய்துகொண்டு Ok என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக

இவ்வாறு நிறுவுகை செயததை நீக்கம் செய்வதற்காக Tools => Extension Manager=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தியபின் தோன்றிடும் Extension Manager என்ற திரையில் நாம் விரும்பும் extension package ஐ தெரிவுசெய்துகொண்டு Remove என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. ஒரு விரிவாக்க கட்டுகளின் (extension package (*.oxt) )கோப்பானது ஒரு சுருக்கி கட்டபட்ட Basic libraries ஆகியவையடங்கிய சுருக்குகோப்பாகும். இந்த கோப்புகட்டினுடைய கோப்பகமானது uno-packages என இயல்புநிலையில் இருக்கும் இதனை சென்றடைவதற்கான வழியாக /share, அல்லது /user அல்லது /program. என இருக்கும் அவ்வாறே tool logs என்பதனுடைய செயல்களனைத்தும் /log.txt என்பதற்குள் இருக்கும் கோப்புகளை பயன்படுத்திடும்போது பிழைஏதேனும் உருவானால் tool logs ஆனது பின்புலத்தில் பார்த்து கொள்ளும். தற்காலிக நினைவகத்தை கையாளும் போது ஏற்படும் சிரமத்தை unopk ஐ மறுநிறுவுகை செய்து சரிசெய்துகொள்க

No comments:

Post a Comment