ஓப்பன் ஆஃபிஸின் பேஸிக் குறிமுறைவரிகளானது நூலகங்களுக்குள் தகவமைப்பு கூறாக(module) தேக்கிவைக்க படுகின்றது.இவ்வாறான ஒரு நூலகமானது மற்றவர்களுடன் பங்கிட்டு கொள்ளுமாறும், நடப்பு பயனாளர் பயன்படுத்தி கொள்ளுமாறும், நடப்பு ஆவனத்திற்குள் பயன்படுமாறும் இருக்கும் அதனால் இதிலிருந்து நாம் விரும்பிய குறிமுறைவரிகளை நகலெடுத்து கொள்ளவோ வேறு இடத்திற்கு நகர்த்தவோ செய்யலாம் இந்த நூலகங்கள் எந்த கோப்பகத்திற்குள் உள்ளது என Tools => Options=> OpenOffice.org => Paths => BASIC.=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன் வாயிலாக அறிந்து கொள்ளமுடியும் இந்த நூலகங்களுக்குள் ஒரு தகவமைப்புகூறின்(module) அதிகபட்ச எண்ணிக்கை16000 (modules)உம் அதன் கொள்ளளவானது 64kb ஆகும்.
முதன் முதல் இந்த ஒருங்கிணைந்த குறிமுறை சூழலை நாம் அனுகிட Tools => Macros => Organize macros => OpenOffice.org Basic=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக. பின்னர் தோன்றிடும் திரையில்புதிய குறிமுறைவரிகளின் பெயராக வழக்கமானHelloWorld என்றவாறு அமைத்துகொண்டும் Standard என்றவாறு தெரிவுசெய்து அமைத்து கொண்டும் New என்றவாறு பெயரிட்டுகொள்க
பொதுவாக இந்த குறிமுறைவரிகளானது பின்வருமாறு இருக்கும்
REM*****BASIC*****
Sub Main
End Sub
Sub HelloWorld
End Sub
இந்நிலையில் இடம்சுட்டியானது Sub HelloWorldஎன்ற வரியின் தொடக்கத்தில் இருக்கும் அடுத்தகாலியான வரிக்கு இடம்சுட்டியை நகர்த்திசென்று msgbox "Hello World!" என்றவாறு தட்டச்சு செய்திடுக பின்னர் மேக்ரோவினுடைய கருவிகளின்பட்டையிலுள்ள Run என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது கட்டளை பட்டையில் Tools => Macro => Run Macro=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக உடன் ஒரு சிறிய செய்திபெட்டியில் Hello World! என்றவாறான செய்தி திரையில் பிரதிபலிக்கும்.
இந்த குறிமுறைவரிகளாது மிகச்சரியாக செயல்படுகின்றது என அறிந்தவுடன் மேலே செந்தரசெயல்பட்டையிலுள்ள save என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கி சேமித்துகொள்க அல்லது OpenO ffice.org இலிருந்து வெளியேறினால் தானாகவே இந்த குறிமுறைவரிகளானதுசேமித்துகொள்ளும்.
மேலும் இந்த குறிமுறைவரிகளில் String,Boolean,Float,Double,Long,Currency Integer,Array,என்பன போன்ற மாறிகளை பயன்படுத்தி நாம் விரும்பும் விளைவுகளை பெற்றிடமுடியும் அதனை தொடர்ந்து
sub HelloWorld
dim i as integer 'This line is optional
for i = 0 to 2
next i
end sub
என்றவாறு மேலே கூறிய மாறிகளில் ஒன்றை பயன்படுத்தி அந்த HelloWorld என்பதன் குறிமுறைவரிகளை மாற்றியமைத்துகொள்ளமுடியும்
பொதுவாக ஒருமைக்ரோசாப்ட்டின் ஆஃபிஸ் பயன்பாடு போலல்லாது இந்த ஓப்பன் ஆஃபிஸானது ஒரே பயன்பாட்டிற்குள் பல்வேறு பயன்பாடுகளும் பயன்படுத்த ஏதுவாக தயாராக இருக்கும். அதாவது நாம் வழக்கமாக மைக்ரோசாப்ட் பயன்பாடு போன்று ஒவ்வொரு பயன்பாட்டினையும்
oDoc = StarDesktop.loadComponentFromURL("private:factory/swriter", "_blank", 0, Array())
என்றவாறான கட்டளை வரிகளின் மூலம் புதிய ஆவணத்தை உருவாக்கமுடியும்.
oDoc = StarDesktop.loadComponentFromURL("private:factory/scalc", "_blank", 0, Array())
என்றவாறான கட்டளை வரிகளின் மூலம் புதிய விரிதாளை உருவாக்கமுடியும். இவ்வாறு ஒவ்வொரு பயன்பாட்டினையும் தனித்தனியான குறிமுறைவரிகளின்மூலம் உருவாக்குவதற்கு பதிலாக மிகசுலபமாக,
function fnNewDoc(sDocType as string)
fnNewDoc = StarDesktop.loadComponentFromURL("private:factory/" & sDocType , "_blank", 0, Array())
end function
என்றவாறான சாதாரான செயலிகளின் வரிகளை அமைத்துகொண்டபின்னர்,
oDoc = fnNewDoc("swriter")
oDoc = fnNewDoc("scalc")
oDoc = fnNewDoc("simpress")
oDoc = fnNewDoc("sdraw")
oDoc = fnNewDoc("smath")
என்றவாறு மற்ற பயன்பாடுகளையும் ஒரே பயன்பாட்டின் திரையிலிருந்து மற்ற பயன்பாடுகளை உருவாக்கிடமுடியும். இதனை தொடர்ந்து இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள விழைபவர்கள் பின்வரும் இணைய முகவரிக்கு சென்று அறிந்துகொள்க
http://api.openoffice.org/docs/common/ref/com/sun/star/frame/XComponentLoader.html .
No comments:
Post a Comment