ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட ஒரு ஃபார்முலாவே ஃபங்சன் ஆகும் நம்மால் பயன்படுத்துவதற்காக ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் தற்போது நடைமுறையில் 350 இற்கும் மேற்பட்ட ஃபங்சன்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலானவை எண்களின் கணக்கீடுகளுக்காக பயன்படுகின்றன. மிகுதி இருப்பவை நாள் ,நேரம், உரை போன்றவைகளை கையாளுவதற்கு பயன்படுகின்றன.
பொதுவாக இந்த ஃபங்சன்களின் பெயர்கள் சுருக்கு பெயராகவே இருக்கும் உதாரனமாக FVஎன்பது Future Value என்பதன் சுருக்கு பெயராகும் முன்பெல்லாம் இந்த ஃபங்சன்கள் பெரிய எழுத்துகளிள் மட்டுமே எழுதப்பட்டு வந்தன ஆனால் தற்போது பெரிய எழுத்து சின்னஎழுத்து ஆகியவை தனித்தனியாகவோ கலந்தோ இருக்கின்றன. ஆயினும் இவை எப்படி இருந்தாலும் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் இந்த ஃபங்சன்கள் செயற்படுமாறு இவை கட்டமைக்க பட்டுள்ளன. இந்த ஃபங்சன்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தருமதிப்புகள்(arguments) நேரடியாக உள்ளீடு செய்வது அல்லது மற்ற கலன்களில்(cells) இருந்து படிப்பதன்மூலம் கணக்கிடுவதற்காக பயன்படுத்தி கொள்ளப் படுகின்றன.
பெரும்பாலன ஃபங்சன்கள் ஓப்பன் ஆஃபிஸ் கால்க் ,மைக்ரோ சாப்ட் எக்செல் ஆகிய இரண்டிலும் எந்தவொரு மாறுதலும் செய்யாமலேயே ஒன்றில் உருவாக்குவது மற்றொன்றில் நன்கு செயல்படும் தன்மையுடனேயே அமைந்துள்ளன. ஒரு ஃபங்சனுக்குள் தருமதிப்பிற்கு பதிலாக மற்றொரு ஃபங்சனையே வலைபின்னல் (nested function )போன்று =SUM(2;PRODUCT(5;7)) என்றவாறு பயன்படுத்த முடியும்
இந்த ஃபங்சனை உள்ளீடு செய்வதற்கு Function Wizard என்பதே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் வழியாகும். இதனை செயற்படுத்திட மேலே கட்டளை பட்டையிலிருந்து Insert => Function=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது Ctrl+F2 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவது அல்லது கருவிபட்டையிலிருந்து இதற்கான fx என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குவது ஆகிய ஏதேனுமொரு வழியை பின்பற்றுக..
படம்-36-1
இவ்வாறு செயற்படுத்தியவுடன் Function wizard என்ற வித்தகரின் உரையாடல் பெட்டி யொன்று (படம்-36-1) திரையில் தோன்றும் அதில்category என்பதன்கீழ் பொதுவாக பயன்பாட்டின் வகைக் கேற்றவாறு ஃபங்சன்கள் கணிதம், புள்ளியியல், உரை ,நிதி ,தரவுதளம் என பல்வேறுவகையாக பாகுபடுத்தி வகைபடுத்தபட்டுள்ளன இவற்றுள் நமக்கு தேவையானதை மட்டும் தேர்ந்து எடுப்பதற்கு இந்தcategory என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தொடர்பு டைய ஃபங்சன்களின் பெயர்கள் கீழிறங்கு பட்டியலாக தோன்றும் அவற்றுள் தேவையானவற்றை மட்டும் தெரிவுசெய்து சொடுக்கியவுடன் ஃபங்சனின் தருமதிப்பை உள்ளீடு செய்வதற்கான உரைபெட்டியொன்று திரையில் தோன்றும்.
கலன்களிலிருந்து இதனை தெரிவுசெய்யவிருப்பதால் இதனுடைய வலதுபுறமிருக்கும் சுருங்கும் (shrink)பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன் Function wizard என்ற வித்தகரின் உரையாடல் பெட்டியினுடைய தேவையற்ற சுற்றுபுறங்கள் மறைந்து இந்த உரைபெட்டி மட்டும் உள்ளீடு செய்வதற்காக(படம்-36-1) காட்சியளிக்கும் பின்னர் விரிதாளிலிருந்து இதில் உள்ளீடு செய்வதற்காக தேவையான கலன்களை தெரிவு செய்து கொண்டு மீண்டும் இதே சுருங்கும் பொத்தானை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக உடன் Function wizard என்ற வித்தகரின் உரையாடல் பெட்டி முன்பிருந்தாவாறே திரையில் தோன்றும்
இவ்வாறு தருமதிப்புகளை தெரிவுசெய்து உள்ளீடு செய்துவரும்போது இந்த ஃபங்சனின் விடை யானது function result என்ற பகுதியில் தோன்றும் இவ்வாறே தேவையான தருமதிப்புகளை தெரிவு செய்து கொண்டு இந்த உரையாடல்பெட்டியிலுள்ள ok என்ற பொத்தானை சொடுக்குக.
இந்த ஃபங்சன் விசார்டு இல்லாது நேரடியாக ஃபார்முலாவை ஒரு கலனில் உள்ளீடு செய்வது போன்றும் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து சரியாக இருந்தால் உள்ளீட்டு விசையை அழுத்துக அல்லது மேலே கருவிபட்டையிலுள்ள Accept என்ற (படம்-36-2)பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் இதற்கான விடை குறிப்பிட்ட கலனில் தோன்றும்
இந்த ஃபங்சனில் பயன்படுத்தபட்ட ஃபாரமுலா திரையில் தோன்றிட Tools => options=> open office.org calc => view => display என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக.
இந்த ஃபங்சன்களில் தவறான தருமதிப்பையோ அல்லது தவறான கணித குறியீட்டையோ பயன்படுத்திடும்போது இதனுடைய விடை தவறாகவும் பிழைசுட்டும் செய்தியும் திரையில் தோன்றிடும். இவ்வாறான நிலையில் இந்த பிழை ஏன்ஏற்பட்டது என அறிந்து அதனை சரிசெய்வதில் நமக்கு அதிக சிரமம் ஏற்படும் அதனை தவிர்ப்பதற்காக ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் error messages, color coding, Detective ஆகிய மூன்று கருவிகள் நமக்கு உதவிபுரிகின்றன.
பிழைச்செய்திகள் error messages இவ்வகையில் error 501 முதல் error 527 வரையில் பிழைசெய்திகள் திரையில் தோன்றிடும் பொதுவாக ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் சுட்டி காட்டபடும் பிழைச்செய்திகள் பின்வருமாறு,
1.error 502 இது ஒரு ஃபங்சனில் மேற்கோள் காட்டப்படும் நெடுவரிசை கலன்கள், கிடைவரிசை கலன்கள் ,விரிதாள் ஆகிய ஏதோவொன்று விடுபட்டுவிட்டது என்ற செய்தியை கூறுகின்றது
2.error 503 இது ஒரு ஃபங்சனில் வகுக்கும் எண் பூஜ்ஜியமாக இருக்கும்போது ஏற்படும் இதனை தவிர்த்திட =IF(C3>0, B3/C3, "0")என்றவாறு ஃபங்சனை அமைத்து கொள்வது நல்லது.
3.error 509 இது ஒரு ஃபங்சனில் கணக்கீட்டிற்கான = போன்ற கணித குறியீடு விடுபட்டுவிட்டது என்ற செய்தியை கூறுகின்றது
4.error 510 இது ஒரு ஃபங்சனில் தருமதிப்பு விடுபட்டுவிட்டது என்ற செய்தியை கூறுகின்றது
5..error 519VALUE இது ஒரு ஃபங்சனிற்கள் அளித்துள்ள தருமதிப்பு ஏற்புடைய வகையாக இல்லை என்ற செய்தியை கூறுகின்றது
6.error 525 REFஇது ஒரு ஃபங்சனில் மேற்கோள் காட்டப்படும் நெடுவரிசை கலன்கள், கிடைவரிசை கலன்கள், விரிதாள் ஆகியஏதோவொன்று விடுபட்டுவிட்டது என்ற செய்தியை கூறுகின்றது
7.error 525NAME? இது ஒரு ஃபங்சனில் மேற்கோள் காட்டப்படும் தரவுகள் ஏற்புடையதாக இல்லை என்ற செய்தியை கூறுகின்றது
வண்ணங்களில்பிரதிபலிக்கசெய்வது (color coding) இது ஒரு ஃபங்சனின் பிழையை பற்றி ஆய்வுசெய்திடும்போது குறிப்பிட்ட ஃபார்முலாவில் உள்ளீடிற்காக பயன்படுத்தி கொள்ளப்பட்ட கலன்கள் red, magenta, green, dark blue,brown, purple, yellow ஆகிய எட்டு வண்ணங்களில் பிரதி பலிக்கும்படி உடனடியாக அடையாளம் காண்பதற்கு வசதியாக திரையில் காண்பிக்கின்றது
துப்பறிதல் (Detective) இந்த கருவி ஒரு ஃபார்முலாவில் பயன்படுத்தபட்ட அதாவது முந்தைய (precedents) கலன்கள் எவையெவை ஃபார்முலாவை சார்ந்த (dependents)அதாவது பிந்தைய கலன்கள் எவையெவை என கண்டுபிடிப்பதற்கு பயன்படுகின்றது அதற்காக ஒரு ஃபங்சன் இருக்கும் கலன்மீது இடம்சுட்டியை வைத்துகொண்டு மேலே கட்டளைபட்டியிலுள்ள Tools => Detective => Trace Precedents => அல்லதுTrace dependents=>(படம்-36-3) என்றவாறு கட்டளைகளை செயற்படுத்து வது அல்லதுShift+F7 ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துவது ஆகியவற்றின் மூலம் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் உடன் மெல்லிய தொருகோடு அதன் முனைபகுதியில் ஒருவட்டத்துடன் தோன்றுவதை இந்த ஃபார்முலாவிற்கு முந்தையது(precedents) என்றும் அம்புக்குறியுடன் முடிவடையும் வேறு கோட்டினை(படம்-36-3) இந்த ஃபார்முலாவை சார்ந்தது(Dependents) என்றும் அறிந்து கொள்க.
மேலும் இந்த கருவியின் வாயிலாகTools => Detective => Trace Error=> என்றவாறு கட்டளை செயற்படுத்துவதன் மூலம் பிழையை கண்டுபிடித்தல், ஏற்புடையது அல்லாத தரவுகளை குறியீடுசெய்தல், ஃபார்முலாவிற்கு முந்தைய அல்லது பிந்தையதை நீக்கம்செய்தல் ஆகிய செயல்களை செயற்படுத்தலாம்.
படம்-36-3
இந்த ஃபங்சன்களின் விடை முழுஎண்களாக அல்லது தொகை எனில் பைசாவுடன் வருமாறு
செய்வதற்கு round என்ற ஃபங்சன் பயன்படுகின்றது உதாரணமாக இதனை கலன்எண்A3 -ல் =ROUND((SUM(A1;A2)) என்றவாறு பயன்படுத்தலாம். இதன் ROUNDUP or ROUNDDOWN என்பன போன்ற வகைகளில் நமக்கு தேவையான வகையை மட்டும் பயன்படுத்தி கொள்க. பொதுவாக ரூபாவை குறிப்பிடும் தொகைகளில் இயல்புநிலையில் பைசாவுடன் வருவதற்கு Tools > Options >Open Office.org Calc > Calculate > Decimal Places என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி அமைத்து கொள்வது நல்லது
SUMIF, COUNTIF, MATCH, SEARCH, LOOKUP, HLOOKUP, VLOOKUP,DCOUNT, DCOUNTA, DSUM, DPRODUCT, DMAX, DMIN, DAVERAGE,DSTDEV, DSTDEVP, DVAR, DVARP, DGET.என்பனபோன்ற ஃபங்சன்களில் வழக்கமான வெளிப்பாடை (expression) ஓப்பன்ஆஃபிஸ் கால்க் அனுமதிக்கின்றது இதற்காக Tools >Options > OpenOffice.org Calc > Calculateஎன்றவாறுகட்டளைகளை செற்படுத்துக
படம்-36-4
உடன் (படம்-36-4) உள்ளவாறு OpenOffice.org Calc -Calculateஎன்ற உரையாடல் பெட்டியொன்று தோன்றும் அதில்Enable regular expressions in formulas என்ற தேர்வுசெய் பெட்டியை தெரிவுசெய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக. உதாரணமாக =COUNTIF(A1:A6;"r.d")என்ற ஃபார்முலாவானது A1:A6ஆகிய கலன்களில் red ,ROD ஆகிய எழுத்துகள் உள்ளவைகளை மட்டும் கணக்கிட்டு காண்பிக்கும்
ஒரு பயனாளர் தாம் விரும்பியவாறான மேம்பட்ட ஃபங்சன்களையும் Basic IDE ,separate add-ins or extensions ஆகியவற்றை பயன்படுத்தி user-defined functions or add-ins என்றவாறு உருவாக்கமுடியும்