Sunday, March 13, 2011

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-34 பாவணைகளை (styles) அமைத்தல்


    ஓரு ஆவணத்தி்ன் தோற்றத்தை மிகவிரைவாக மாற்றுவதற்கு உதவிடும் ஒரு தொகுதி யான வடிவமைப்பையே பாவணை(Style) என அழைப்பார்கள். இவ்வாறான ஒரு பாவணை(Style)யை செயல்படுத்திடும்போது இதனுள் இருக்கும் குழுவான வடிவ மைப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயல்படுத்தபட்டு நாம் விரும்பும் தோற்றம் ஒரு ஆவணத்திற்கு உருவாகின்றது.
  பொதுவாக  விரிதாளில் தாம்வரும்பும் எழுத்துருவின் பெயர் (Font Name) Lathaஎன்றும் எழுத்துருவின் அளவு (Font's size) 16pt என்றும் அதன் தோற்றம் Bold  என்றும் அதன் இடஅமைவு Centered என்றும் தனித்தனியாக அமைப்பார்கள் இதற்கு பதிலாக தலைப்பு என்ற ஒரு பாவணையை(Style) உருவாக்கி கொண்டு இவையணைத்தையும் ஒரே சொடுக்கில் ஒரே நேரத்தில்  செயல்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.
  ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் 1.கலனின் பாவணைகள் (Cell styles)2.பக்கபாவணைகள் (Page styles) என இருவகை பாவணைகள் உள்ளனfonts, alignment, borders, background, number formats ஆகியவை கலனின் பாவணை (Cells styles) களாகும். margins, headers and footers, borders ஆகியவை பக்கபாவணை (Page styles) களாகும். page size,orientation ஆகிய இரண்டும் பக்கபாவணைகளாக இருந்தாலும் அச்சிடும்போது மட்டும்  இவைகளை பயன் படுத்தி கொள்வார்கள்.
                                  படம்-34.1.
Default, Heading, Heading1, Result, Result2. ஆகிய ஐந்தும் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் தயார் நிலையிலுள்ள.கலனின் பாவணை (Cell styles)களின் வகைகளாகும்.இவைகளின்  தோற்றம் படம்-34.1.-ல் உள்ளவாறு அமைந்திருக்கும்.
                              படம்-34.2
Default ,Report ஆகிய.இரண்டும்  ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் தயார்நிலையிலுள்ள பக்க பாவணை (Page styles)களாகும் இந்த Default -ல் landscape-orientedஎன்ற ஒருபக்க பாவணை (Page styles) மட்டுமே இருக்கும் அவ்வாறே Report -ல்  portrait-orientedஎன்ற ஒருபக்க பாவணை (Page styles) மட்டுமே இருக்கும் ஒரு விரிதாளிலுள்ள ஒவ்வொரு தாளுக்கும் தனித்தனி பக்கபாவணை(Page styles) யை அமைத்திடமுடியும்  நடைமுறையில் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கிலுள்ள பக்கபாவணை (Page styles)கள் திரையில் பிரதிபலிக்காது. அச்சிடும்போது மட்டுமே இவை பயன்படும்.
 விசைப்பலகையிலுள்ள F11என்ற செயலிவிசையை அழுத்துவது, Format => Styles and Formatting => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவது அல்லது கருவிபட்டை யிலுள்ள இதனுடைய குறும்படத்தை(icon) தெரிவுசெய்து சொடுக்குவது ஆகிய ஏதேனு மொருவழியை பின்பற்றியவுடன் படம்-34.2 ல்  உள்ளவாறு Styles and Formatting என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதில்  இடப்புறம் மேல்பகுதியில் முதலில் இருப்பது கலனின் பாவணைகள்(Cell styles)என்ற பொத்தானும் இரண்டாவதாக இருப்பது பக்க பாவணைகள்(Page styles) என்ற பொத்தானும் ஆகும்.
 1.Styles and Formatting சாளரத்தை பயன்படுத்துதல்,2.Fill Format mode ஐ பயன்படுத்துதல்.  3.Apply Style list ஐ பயன்படுத்துதல். 4.பாவணை(styles)களுக்கு குறுக்கு விசைகளை(shortcut keys) ஒதுக்கீடு செய்து செயல்படுத்துதல் ஆகிய நான்குவழிகளில் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் பாவணைகளை பயன்படுத்தி கொள்ளமுடியும்.
 கலனின் பாவணைகளை(Cell styles) செயல்படுத்துதல்
 1.Styles and Formatting என்ற சாளரத்தை பயன்படுத்துதல் விசைப்பலகையிலுள்ள F11என்ற செயலி விசையை அழுத்துக அல்லது, Format => Styles and Formatting=> என்ற வாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் படம்-34.2 ல்  உள்ளவாறு Styles and Formatting என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் பின்னர் அதில்இடப்புறம் மேல்பகுதியில் முதலில் உள்ள கலனின் பாவணைகள்(Cell styles) என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.அதன் பின்னர் தேவையான கலன்களை தெரிவுசெய்து கொண்டு திரையில் விரியும் கலனின் பாவணைகளின்(Cell styles)  வகைகளில் ஒன்றை தெரிவுசெய்து இருமுறை சொடுக்குக.
  2.Fill Format mode ஐ பயன்படுத்துதல் முந்தைய வழிமுறையின்படி செயல்பட்டு தேவையான பாவணையின் பெயரைதெரிவுசெய்துகொள்க.பின்னர் இந்த உரையாடல் பெட்டியின் மேலே வலதுபுறம் உள்ள Fill Format mode என்ற குறும்படத்தை(Icon) தெரிவு செய்து சொடு்க்குக உடன் இடம்சுட்டியின் தோற்றம்  Fill Format mode என்ற குறும் டத்தை(Icon) போன்று மாறிவிடும் எந்தெந்த கலன்களுக்கு இந்த பாவணை தேவையோ அவைகளுக்கு இடம்சுட்டியை நகர்த்திசென்று நிறுத்திகொண்டு சுட்டியி்ன் பொத்தானை சொடுக்குக மீண்டும் இந்த உரையாடல் பெட்டியின் மேலே வலதுபுறம் உள்ள Fill Format mode என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்கினால் இடம்சுட்டியின் உருவம் பழையவாறு மாறிவிடும்.
3.Apply Style list ஐ பயன்படுத்துதல். முதலில் வடிவமைப்பு செய்ய விரும்பும் கலன்களை தெரிவுசெய்து கொண்டு கருவிபட்டையின் வலதுபுற ஓரத்திலுள்ள கீழிறங்கு பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன்விரியும் கீழிறங்கு பட்டியலில் Visible Buttons என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் துனை பட்டியலிலிருந்து Apply Style என்பதை  தெரிவுசெய்து சொடுக்குக உடன் கருவிபட்டையில் எழுத்துருவின் பட்டியலுக்கும் வடிவமைப்பு குறும்படத்திற்குமிடையே படம்-34-3.ல் உள்ளவாறு Apply Style list விரிந்து அமையும்.
                                 படம்-34-3
 பக்க பாவணை(Page styles)களை செயல்படுத்துதல் ஓப்பன்ஆஃபிஸ் கால்க்கின் விரிதாள் ஒன்றை தெரிவுசெய்து கொள்க. பின்னர்விசைப்பலகையிலுள்ள F11என்ற செயலி விசையை அழுத்துக அல்லது, Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன் படம்-34.2 ல்  உள்ளவாறு Styles and Formatting என்ற உரையாடல் பெட்டி திரையில் தோன்றும் அதன் பின்னர் அதில்இடப்புறம் மேல் பகுதியில் இரண்டாவதாக உள்ள   பக்க பாவணை(Page styles)கள்  என்ற குறும்பட பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.பின்னர் விரியும்  பக்க பாவணை(Page styles)களின் பட்டியிலிலிருந்து தேவையான வகையை தெரிவு செய்து சுட்டியின்(mouse) பொத்தானை இருமுறை சொடுக்குக.
 இதன்பின்னர் விரிதாளின் நிலைபட்டையை பார்வையிட்டால் அதில் இந்த விரிதாளினுடைய பக்க பாவணை(Page styles) என்ன என படம்-34-4-ல் உள்ளவாறு இருப்பதை அறிந்துகொள்ளலாம்.
                                  படம்-34-4
 Styles and Formatting என்ற உரையாடல் பெட்டியின் பட்டியிலாகவுள்ள பாவணைகளின் பெயரை தெரிவுசெய்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன்விரியும் பட்டியலில் Modifyஎன்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் தேவையான மாறுதல்களை செய்துகொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக.
  அவ்வாறே இதே Styles and Formatting என்ற உரையாடல் பெட்டியின் மேல்பகுதியில் வலப்புறம் உள்ள new என்பதை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும்page style என்ற உரையாடல் பெட்டியின் படம்-34-3 – ல் உள்ளவாறுorganizer என்ற  தாவியின் திரையில்  Name என்பதற்கு சரியான பெயரையும் Linked with என்பதற்கு தொடுப்பையும் category என்பதற்கு இதன் வகையையும் இவ்வாறே மற்றதாவிகளின் திரையிலும் தேவையானவாறு புதிய பாவணையை உருவாக்கி அமைத்து கொண்டு ok என்ற பொத்தானை சொடுக்குக.
                                   படம்-34-5

No comments:

Post a Comment