Sunday, March 13, 2011

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-35 ஃபார்முலாவை பயன்படுத்துதல்


  ஒப்பன் ஆஃபிஸ் கால்க் பணித்தாளின் கலன்களில் உள்ள தரவுகளைகொண்டு அவைளுக்கிடையே தொடர்புபடுத்தி அவற்றின் விளைவை காண உதவுவதுதான் ஃபார்முலாவாகும். இந்த ஃபார்முலாவானது பொதுவாக =  ,+ , - ஆகிய குறிகளுடன் மட்டுமே தொடங்கி உள்ளீடு செய்யப்படும் என்பதை மனதில் கொள்க.
 உதாரணமாக ஒப்பன் ஆஃபிஸ் கால்க்கில் 15,46ஆகிய இரு எண்களை கூட்டி விடைகாண விழைவதாக கொள்வோம் இதனை ஒருபணித்தாளின் ஏதேனுமொரு கலனில் =15+46என்று (படம்-1) நேரடியாக உள்ளீடு செய்தும்  அல்லது அதற்குபதிலாக இந்த மதிப்பை இதே பணித்தாளின் b3 ,b4 ஆகிய இருகலன்களில் தனித்தனியாக உள்ளீடு செய்து  b5 -ல் =b3+b4 என்றவாறு(படம்-1) ஃபார்முலாவை உள்ளீடு செய்தும் இவைகளுக்கான கூடுதல் 61 என காணமுடியும்.
                                            படம்-1
  இந்த ஃபார்முலாவில்   + , - , * , / என்பன போன்ற கணக்கிடுவதற்கான கணித இயக்கிகள்(Arithmatic operators) , >,<  , >=, <= என்பன போன்ற சரியா தவறா என ஒப்பிட ஒப்பீட்டு இயக்கிகள்(Comparative operators)  & போன்ற உரைகளை இணைப்பதற்கு உதவிடும் உரை இயக்கிகள்(Text operators )  ஆகியவை பயன்படுகின்றன.
இந்த இயக்கிகள் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு உருவாக்கும்போது A2:B4 ! B3:D6 என்றவாறு இடையில் ஒரு ஆச்சரிய குறியுடன் எழுதப்படுகின்றன. கலன் எண்B5 -ல் =B3+B4என்றவாறு ஒரு ஃபார்முலா இருப்பதாக கொள்வோம் இதனை நகலெடுத்து கலன் எண்C5 -ல் ஒட்டும்போது இந்த நெடுவரிசைக்கு ஏற்றவாறு ஃபார்முலாவும் =B3+B4 என்பதற்கு பதிலாக =C3+C4என்றவாறு ஓப்பன் ஆஃபிஸ் கால்க் ஆனது  தானாகவே மாற்றியமைத்து கொள்கின்றது
 கலன் எண்D1 -ல் வட்டி சதவிகிதம் இருப்பதாக கொள்வோம் E2என்ற கலனில் வட்டி கணக்கீடு =D2*D1.என்று ஃபார்முலாவை அமைத்து E3என்ற கலனிற்கு நகலெடுத்து ஒட்டும்போது ஃபார்முலாவிலும் கலன்களின் எண்கள்=D3*D2 தகவமைத்துகொள்வதால் தவறான விடை கிடைக்கும்
 அதற்கு பதிலாக சதவிகிதத்தை காட்டிடும் கலன்எண்ணிற்கு மட்டும் $D$1என்றவாறு குறியீட்டை அமைத்த பின்னர் ஃபார்முலாவை E3என்ற கலனிற்கு நகலெடுத்து  =D2*$D$1என்றவாறு ஒட்டினால் சரியான விடை கிடைக்கும் இதனை  மாறிலி மேற்பார்வை (Absolute referencing)எனக்குறிப்பிடுவர்  இதில் இவ்வாறான டாலர் குறியீட்டிற்கு பின்னர் இருக்கும் எழுத்து அல்லது எண் நகலெடுத்து  ஒட்டிடும்போது மாறாமல் நிலையாக இருக்கும்.
 ஒருநீண்ட ஃபார்முலாவில் இயக்கிகள், குறியீடுகள் போன்றவைகள் அதிகஅளவில் பயன்படுத்திடும்போது எந்தவொரு ஃபார்முலாவின் கணக்கீடும்  இடது புறத்திலிருந்து தான் வலதுபுறத்திற்கு கணக்கிடு செய்யும் முன்னுரிமை அமையும்.அவ்வாறே முதலில் பெருக்கல் வகுத்தல் குறியீடும் அதன்பின்னர் கூட்டல் கழித்தல் குறியீடும் கணக்கீடு செய்யும் முன்னுரிமை அமையும்.
 தரவுகளை கிடைவரிசையில் அல்லது நெடுவரிசையில் உள்ளீடுசெய்து ஃபார்முலா அமைத்திடும்போது முதலில் அவைகளுக்கு பெயரிட்டு அதன்பின்னர் இந்த பெயர்களை ஃபார்முலாவில் பயன்படுத்திகொள்வது மிகஎளியவழியாகும்.
 இந்த வசதி பணித்தாட்களுக்கும் பயன்படுத்திகொள்ளமுடியும் உதாரணமாக.ஒரு நிறுவனத்தில் ஒன்றுக்குமேற்பட்ட  கிளைகளின் வருமானத்தை கணக்கிடும்போது ஒவ்வொரு கிளைக்கும் ஒவ்வொரு பணித்தாளும் அவைகளின் ஒட்டுமொத்தம் கணக்கிட தனியானதொரு பணித்தாளும் பயன்படுத்தி அறிக்கை தயார்செய்வதாக கொள்வோம்
 பணித்தாள்-1 -ல் தேவையானவாறு ஃபார்முலாவையும் இதர விவரங் களையும்  கட்டமைத்துகொண்டு பணித்தாள் தாவிபகுதியில்(worksheet tab) இடம் சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுறபொத்தானை சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலைபட்டியில் Rename என்ற கட்டளையை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Branch1என்றவாறு ஒரு பெயரை தட்டச்சு செய்து உள்ளீட்டு விசையை தட்டுக  இவ்வாறே பணித்தாள்-2 இற்கு Branch2என்றும் பணித்தாள்-3 இற்குBranch3 என்றும் பணித்தாள்-4 இற்கு Combinedஎன்றும் பெயரிட்டுகொள்க பிறகு பணித்தாள்-1 -ல் உள்ள பார்முலாவையும் இதர விவரங் களையும் நகலெடுத்து மற்ற பணித்தாட்களில் ஒட்டிகொள்க
  பணித்தாள்-4 இன் விவரம் கிளை விவரங்களின் ஒட்டுமொத்தம்(Combined) என்பதால் இதனுடைய கலன் எண்K7 -ல்  இடம் சுட்டியை வைத்து   வழக்கமான ஃபார்முலாவை உள்ளீடு செய்வதற்கான = என்ற குறியை தட்டச்சுசெய்து Branch1தாவியை தெரிவுசெய்து சொடுக்கி அந்த தாளின் கலன்எண் K7 ஐ தெரிவுசெய்து சொடுக்குக அவ்வாறே Branch2 , Branch3 ஆகியவற்றின்  தாவிகளையும் தெரிவுசெய்து சொடுக்கி அந்தந்த தாளின் கலன்எண் K7 ஐயும் தெரிவுசெய்து சொடுக்குக.
 இப்போது இந்த Combined பணித்தாளின்   கலன்எண் K7 ல்கிளைகளின் ஒட்டுமொத்த விவரமாக இருக்கும்  இதன்பின்னர் கலன்எண் K7 இன் ஃபார்முலாவை நகலெடுத்து கொண்டு இதே பணித்தாளின் கலன்களின் எண்களான K7..N17 ஆகியவற்றை தெரிவுசெய்துகொண்டு மேலே கட்டளை பட்டையிலுள்ள Edit =>Paste Special=> என்றவாறு(படம்-2) கட்டளைகளை சொடுக்கி செயற்படுத்துக
                                     படம்-2
உடன் தோன்றிடும் Paste Specialஎன்ற(படம்-2) உரையாடல் பெட்டியில் Paste All,Formats ஆகிய தேர்வுசெய்பெட்டிகள் தெரிவுசெய்யப்பட்டிருப்பதை நீக்கம்செய்து okஎன்ற பொத்தானை சொடுக்குக உடன் (படம்-3)-ல் உளி்ளவாறு  எச்சரிக்கை செய்தி பெட்டி யொன்று திரையில் தோன்றிடும்
                                    படம்-3
 அதில் Yes என்ற பொத்தானை சொடுக்குக  உடன் கலன்எண் K7 இன் ஃபார்முலா வானது   K7..N17ஆகிய கலன்களுக்கு நகலெடுத்து ஒட்டப்பட்டுவிடும்இப்போது பணித்தாளின் தோற்றம் படம்-4-ல் உள்ளவாறு இருக்கும்
                                   படம்-4
 பொதுவாக பலரும் நீண்ட சிக்கலான ஃபார்முலாவில் நிலையான மதிப்பை நேரடியாக C1 -ல் =0.75*B1என்றவாறு  பயன்படுத்துவார்கள்.இதற்கு பதிலாக இந்த நிலையான மாறிலி மதிப்பை தனியாக ஒரு கலன் A1-ல் உள்ளீடுசெய்துC1-ல்  =A1*B1 என்றவாறு ஃபார்முலாவை அமைத்து கொள்வது எளிதானதும் நல்லதும் ஆகும்ஏனெனில் பின்னாட்களில் இந்த நிலையான மதிப்பை மாற்றிட குறிப்பிட்ட கலனிற்கு மட்டும் சென்று மதிப்பை மாற்றியமைத்திட்டால் இதனை பயன்படுத்தி ஃபார்முலாஅமைத்திட்ட அனைத்து இடங்களிலும் மதிப்பு தானாக மாற்றியமைத்துகொள்ளும்
  ஒரு பணித்தாளில் பல்வேறு ஃபார்முலாவைகொண்டு மேம்படுத்திகொண்டே போகும்போது அவைகளுக்கான விளக்குறிப்பையும் அந்தந்த கலன்களில் பதிந்துவைத்துகொள்வது  பின்னாட்களில் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment