Sunday, April 3, 2011

ஓப்பன் ஆஃபிஸ் கால்க்-37- வரைபடமும் விளக்க படமும் வரைதல்


  நூற்றுக்குமேற்பட்ட சொற்களை கொண்டு பக்கம்பக்கமாக எழுதிய உரையைவிட காட்சியாக காணும் ஒருசிறிய விளக்கப்படமானது பார்வையாளர்களுக்கு நாம் கூற விழையும் கருத்துஎன்னவென எளிதில் புரிந்துகொள்ள வைப்பதில் அதிக திறன் வாய்ந்ததாகும்.
 அவ்வாறே ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் அட்டவணையாகவும் பட்டியலாகவும் தரவுகளின் விவரங்களை அளிப்பதைவிட வரை படமாகவோ விளக்கபடமாகவோ அளிப்பது நல்லது அவ்வாறு அளிப்பதற்காக  முதலில் ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கின்  சிறிய அட்டவணை யொன்றை தெரிவுசெய்துகொண்டு  மேலே கட்டளை பட்டை யிலுள்ள insert=>chart=>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செற்படுத்துக அல்லது மேலே கருவிபட்டையில் உள்ள chart என்ற குறும்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக
                                  படம்-37-1
 உடன்(படம்-37-1) உள்ளவாறு வலதுபுறம் chart wizard என்ற உரையாடல் பெட்டியும் இடதுபுறம் நாம்தெரிவுசெய்த வரைபடத்தின்  முன்காட்சிதோற்றமும் தோன்றும் இந்த உரையாடல் பெட்டியின் இடதுபுறம் steps என்பதன் கீழ் 1 chart types என்பது படிமுறை-1-ல் இயல்புநிலையில் தெரிவுசெய்யபட்டிருக்கும் மையத்தில் choose a chart type என்ற தலைப்பின்கீழ்  ஓப்பன் ஆஃபிஸ் கால்க்கில் தயார்நிலையிலுள்ள விளக்க வரை படங்களின் வகைகளின் பெயர் பட்டியலாக தோன்றும்
1.Column  chart  சிறிய அளவு தரவுகளான மாதாந்திர விற்பனை வரவு செலவு விவரங்களை இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
2.Bar chart  அதே போன்ற சிறியவிவரங்கள் ஆனால் முந்தைய வகையைவிட சிறிது அதிக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்பும் விவரங்களுக்கு இதனை பயன்படுத்துக
3.Pie chart  வரவு செலவுகளின் உட்தலைப்புகளின் விரங்களை ஒப்பிடுவதற்கும் அதனை சதவிகித்தில் ஒப்பிடுவதற்கும்  இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
4.Area chart  இது ஒரு கோடும் நெடுவரிசையும் சேர்ந்த  காட்சியாக விவரங்களை அளித்திட இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
5.Line chart  நீண்டகால நோக்கில் தரவுகள் எவ்வாறு இருக்கும் எனமுன்கூட்டியே கணித்திடுவதற்கு இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
6.XY or Scatter chart ஆய்வுசெய்வதற்கெல்லாம் நேரமில்லை ஆனால் ஆய்வுசெய்து கண்டுபிடித்தவாறு பார்வையாளர்களுக்கு இருக்கவேண்டுமென விரும்பும் தரவுகளுக்கு  இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
7.Bubble chart  முந்தையது போன்றே ஆனால் புள்ளிக்கு பதிலாக குமிழ்களாக தரவுகள் பிரதிபலித்திட இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
8.Net chart அறிவியல் ஆய்வுகூடத்தில் நடைபெறும் ஆராய்ச்சியின் விளைவுகள் வெவ்வேறு சூழ்நிலையில் எவ்வாறு இருக்கும் என அறிந்துகொள்ள இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
9.stock chart பங்கு மூலதன சந்தையின் விவரங்களை இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
10. Column and line chart  இரண்டு வெவ்வேறு தரவுகளை அதனுடயை தெடர்பு எவ்வாறு உள்ளதென அறிந்துகொள்வதற்கு உதாரணமாக விற்பணையுடன் இலாபத்தை ஒப்பிடுவது போன்ற வற்றிற்கு இந்த வகை வரைபடத்தின்மூலம் அமைத்திடுக
 இந்த வகைகளுள் ஒன்றை தெரிவுசெய்தால் அதன் துனைவகைகளின் பட்டியல்  இந்த உரையாடல் பெட்டியின் வலதுபுறம் தோன்றும் அவற்றுள் நாம் விரும்பியதை தெரிவு செய்து கொண்டு அடுத்த படிமுறைக்கு செல்லத்தேவையில்லையெனில் finish  என்ற பொத்தானை சொடுக்குக செல்லவேண்டுமெனில் next என்ற பொத்தானை சொடுக்குக
 அடுத்து steps என்பதன் கீழ் 2 Data range என்ற படிமுறையின்திரை தோன்றும் இதில் வரைபடத்திற்கான தரவுகளை தேவையெனில் மாற்றி தெரிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு இந்தஅட்டவணையின் எந்தவிவரம் வரைபடத்தில் கிடைவரிசையிலும் எந்தவிவரம் நெடுவரிசையிலும் அமையவேண்டும் எனஅதனதன் தேர்வுசெய் வானொலி பொத்தானை (இங்கு data series in column என்பதற்கு பதிலாக data series in row என்பதை தெரிவு செய்துள்ளோம்படம்-37-2  )  தெரிவுசெய்துகொண்டு அடுத்த படிமுறைக்கு செல்லத் தேவையில்லையெனில் finish  என்ற பொத்தானை சொடுக்குக ஆம் எனில் next என்ற பொத்தானை சொடுக்குக
                                  படம்-37-2
அடுத்து steps என்பதன் கீழ் 3 Data series  என்ற படிமுறையின்திரை தோன்றும்     வரைபடத்திற்கான துனைவிவர தரவுகளை தேவையெனில் மாற்றி தெரிவு செய்து கொண்டு அடுத்த படிமுறைக்கு செல்லத்தேவையில்லையெனில் finish  என்ற பொத்தானை சொடுக்குக ஆம் எனில் next என்ற பொத்தானை சொடுக்குக
                                   படம்-37-3
 அடுத்து steps என்பதன் கீழ் 4 chart elements  என்ற படிமுறையின்திரை தோன்றும் இதில்வலதுபுறம் choose titles, legend and grid settings என்ற தலைப்பின்கீழ் இந்த வரை படத்திற்கான தலைப்புகள் துனைத்தலைப்புகளைtitle, sub title  ஆகிய உரைபெட்டியில் தட்டச்சு செய்க.display legend என்பதன்கீழ் வரைபடத்தில் அட்டவணையின் விவரங்கள் எங்கு அமையவேண்டும் left என்றவாறுதேவையான வானொலிபெத்தானை தெரிவு செய்துகொள்க அவ்வாறு இந்த வரைபடத்தில்நெடுவரிசை கிடைவரிசை கோடுகள் தோன்றவேண்டுமெனில்  display grids  என்பதன்கீழ் எந்தஅச்சுக்குரிய விவரங்கள் எனx axis எந்றவாறு தெரிவுசெய்துகொள்க முடிவாக  finish  என்ற பொத்தானை சொடுக்குக உடன் இந்தஅட்டவணைக்கான வரைபடம் நாம்தெரிவுசெய்தவாறு அமையும்.
                                    படம்-37-4
 பொதுவாக ஒருவரைபடத்தின் கட்டமைப்பானது  படம்-37-4 -ல் உள்ளவாறு இருக்கும். இதன் மேல்பகுதியல் இந்த வரைபடத்திற்கான தலைப்பும்(Chart title) அட்டவணையின் தரவுகள் வரைபடமாக அமைந்திருப்பதை chart wall என்றும் இந்த அட்டவணையின் விவரங்களைlegend  என்றும் நெடுவரிசை கிடைவரிசை விவரம் எந்தெந்த அச்சில் axis labels  அமையவேண்டுவென்றும் இந்த வரைபடம் அமைந்துள்ள பகுதி chart area என்றும் அழைப்பார்கள்
 இந்த வரைபடத்தில் அட்டவணையின் தரவுகளும் ஆங்காங்கு பிரதிபலித்தால் நன்றாக இருக்கும் என எண்ணுவோம் அந்நிலையில் இந்த வரைபடத்தினை தெரிவு செய்து கொண்டு மேலே கட்டளைபட்டடையிலுள்ளinsert => data label என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்கி செயற்படுத்துக உடன்datalabels for data series என்ற உரையாடல் பெட்டி படம் 37-5-ல் உள்ளவாறு தோன்றும் அதில் அட்டவணையின் தரவுவிவரங்கள் எவ்வாறு வரைபடத்தில் பிரதிபலிக்க வேண்டுமோ அதற்கேற்றshow value as number என்றவாறு தேர்வுசெய்பெட்டியின்பொத்தானை தெரிவுசெய்துகொண்டுஇந்த தரவுகள்  எந்த கோணத்தில் தோன்றிடவேண்டும் என்பதற்கு degeree என்பதில் உள்ள சுழற்பொத்தானை 0 என்றவாறு தெரிவுசெய்து கொண்டுok என்ற பொத்தானை சொடுக்குக.
                                படம் 37-5

No comments:

Post a Comment